எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 16, 2007

விநாயகரின் மகத்துவம் தெரியுமா?



ஆதி சங்கரர் பத்தித் தெரிஞ்சிருக்கும் எல்லாருக்கும், இல்லையா? அவர் என்ன செய்தார்னால், சநாதன தர்மம் என்று சொல்லப் பட்ட, தற்காலத்தில் இந்து மதம் எனக் குறிப்பிடப் படும் நம் போன்றவர்களுக்காக வழிபாட்டு முறையை 6 விதமாய்ப் பிரித்தார். அதை "ஷண்மத வழிபாடு" எனச் சொல்லுவது உண்டு. அவை என்ன என்றால்:
பிள்ளையார் என்று நாம் அன்புடன் கூப்பிடும் விநாயகர் வழிபாடு= காணபத்தியம் என்று கணங்களுக்கு எல்லாம் அதிபதியான "கணபதி" வழிபாடு முதன்மையானது. மற்றவை
சிவனை வழிபடுபவர்கள் =சைவர்கள்
சக்தியை வழிபடுபவர்கள்= சாக்தர்கள்
விஷ்ணுவை வழிபடுபவர்கள்=வைணவர்கள்
முருகனை வழிபடுபவர்கள்=கெளமாரம், குமாரக் கடவுளின் பெயரில் இருந்து கெளமாரம் வந்தது.
சூரியனை வழிபடுபவர்கள்=செளரம் என்றும் பிரித்தார். இறைவன் ஒருவனே. அத்வைதம் எனப்படும் ஆதிசங்கரரின் கோட்பாடும் அது தான். என்றாலும் சாதாரண மக்களுக்காக ஏற்படுத்தப் பட்டது இது. விநாயகரை வைணவர்கள் "விஷ்வக்சேனர்" என்ற பெயரில் வழிபடுகிறார்கல். அத்வைதிகளுக்கு கடவுள் வேறுபாடு கிடையாது. ஹரியும், கரனும் ஒருத்தரே! என்றாலும் விநாயக வழிபாடு அனைவரிடமும் இடம் பெற்றிருக்கிறது.

விநாயகர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல. ஆடம்பரமே இல்லாமல் மஞ்சள் பொடியிலேயோ அல்லது, பசுஞ்சாணி உருண்டையிலேயோ விநாயகரை ஆவாஹனம் செய்து வைத்து அருகம்புல் சாத்தி வழிபட்டால் போதும். உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகர் தான் பூஜைக்கு ஏற்றவர். தற்காலங்களில் கிரிக்கெட் ஆடும் விநாயகர் முதல், கணினியை இயக்கும் விநாயகர் வரை விநாயக சதுர்த்தி அன்று பார்க்க முடிகிறது. அவை எல்லாம் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல. இவர் நம் உடலில் உள்ள ஆனந்த மய கோசத்துக்கு அதிபதியும் ஆவார். பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துவதின் உள்நோக்கமும் என்னவென்றால், அருகு நாம் நட்டால் ஒரு இடத்தில் இராமல் குறைந்தது ஆறு இடங்களில் வேரூன்றும். நம் உடலில் மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக் கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார். அது பற்றிப் பார்த்தால் நம் தலையின் உச்சியில் இருந்து உள்ளே உள்ள உள்ளொளியானது புருவம் வரையும், தலையின் பின் பகுதியிலும் இணைக்கிறது. இந்தக் கண்ணைத் தான் ஞானக் கண் என்று சொல்லுவார்கள். இந்த ஞானக் கண் விழிப்பு உண்டாவது மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரின் அருளால்தான்.




விநாயக சதுர்த்தி இங்கே இன்று கொண்டாடியதாலே காலையிலே இருந்து ஒண்ணும் எழுத முடியலை. நாளைக்கு மிச்சம் வரும். அனைவருக்கும் மனமார்ந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

15 comments:

  1. விநாயகரைப் பற்றிய தங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமை..பல அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

    விநாயகர் படத்திலும்,சிலைகளிலும் பெரும்பாலும் தும்பிக்கை வல்து பக்கம் தான் திரும்பி இருக்கும் ஆனால் சில விநாயகர் படத்திலும் சிலைகளிலும் தும்பிக்கை இடது பக்கம் திரும்பி இருப்பதை பார்த்து இருக்கிறேன்..இதற்கு எதுவும் காரணம் உண்டா?..இதை பற்றி தெரிந்து இருந்தால் கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்...


    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

    மகத்துவம் சுடர் விடுகிறது!

    ReplyDelete
  3. உள்ளேனம்மா....

    விஷ்வக்சேனரும், விக்னராஜனும் ஒன்று இல்லையாம் ரூபம் மட்டும்தான் ஒற்றுமை என்று குமரன் என் பதிவில் கூறியதைப் பார்த்துவிட்டு வந்தால், நீங்களும் நான் சொன்னதைப் போலவே சொல்லியிருக்கீங்க....எனிவே, அவர் வைணவதாசர், எனவே அவரிடம் மேலும் தகவல்/சுட்டி கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. கடவுள் ஒன்றுதான் என்பது மட்டுமா அத்வைதம்?.....இப்படிச் சொல்லிட்டீங்களே கீதாம்மா

    ReplyDelete
  5. @பாலர், ரொம்பவே நன்றி, தும்பிக்கை பத்தியும் எழுத முயற்சி செய்கிறேன்.

    @ஜீவா, ரொம்பவே நன்றி, உங்க பதிவும் பார்த்தேன். நல்லாவே இருக்கு. அருமையான பாடல்கள் தொகுத்து உள்ளீர்கள்.

    @மதுரை, ஆமாம், இது பத்தி ரொம்ப விரிவா எழுத குமரன் தான் ஏற்றவர். அவரிடமே விட்டு விடலாம் இந்த வேலையை.
    அப்புறம் இறைவன் ஒருத்தன் என்பதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து உண்டா என்ன? ம்ம்ம்ம்ம்? :)

    ReplyDelete
  6. நான் கேட்டது அத்வைதம் என்பது இறைவன் ஒருவன் என்பது மட்டும்தானா என்பதே....

    ReplyDelete
  7. அத்வைதம் என்பது இரண்டல்லாத எல்லாம் ஒன்றேயான ஒரு நிலை. இது ஒரே கடவுள் என்ற நிலையும் தாண்டி "அது" தவிர இங்கு வேரெதுவுமே இல்லை என்பதைத்தான் மதுரையம்பதி சொல்லவிழைகிறார் போலும்

    ReplyDelete
  8. வாவ்! எனக்கே தெரியாமல் கடந்த 1 வாரமாக கிடேசன் பார்க்கில் அருகம்புல் மண்டி போச்சுன்னு நானே காலைல தினமும் கொஞ்சம் பறிச்சு மலாஇயெல்லம் கட்டுவதில்லை அப்படியே பிள்லையார்பட்டி வினாயகர் படம் மேல் போட்டு வருகிறேன்.... அதுக்கு பின்ன தங்கமணிக்கிட்ட இருந்து போன் இது போல செய்ய சொல்லி...அதுக்கும் இதுக்கும் என்ன ஒரு ஒத்துமை.....ஆண்டவா....வினாயகா

    ReplyDelete
  9. enna ithu? marupadi copy, paste thakararu varuthu? enna achchu intha bloggerukku? grrrrrrrrr

    ReplyDelete
  10. மெளலி, அத்வைதம் என்பது ஒரு சித்தாந்தம், தத்துவம், சாமானிய மனிதனுக்குத் தேவை கடவுளின் உருவம் தான் இல்லையா? அந்தக் கடவுள்தான் ஒருவனே எங்கும் பல உருவத்திலும், பெயர்களிலும் வியாபித்திருக்கிறான் என்பது என் கருத்து.

    @கர்மா, உங்களுக்கும் மெளலிக்குச் சொன்ன அதே கருத்துப் பொருந்தும் என நினைக்கிறேன். விரிவாக எழுதுவது என்றால் நேரமும் இல்லை, புரிந்து கொள்வதுக்கும் எளிமையாக இருக்க வேண்டுமே!

    @அபி அப்பா, உங்களுக்குத் திரும்பத் திரும்ப "" கொடுத்தாலும் திருந்த மாட்டீங்க போலிருக்கு! எத்தனை தப்பு! :P :P

    ReplyDelete
  11. அப்பாடி, ரொம்பக் கஷ்டப் பட்டு இப்போ ஜி3 பண்ண முடிஞ்சது. ஒருவேளை அப்போ காபி, பேஸ்ட்னு சொல்லிட்டதாலே ஜி3 கோவிச்சுக்கிட்டாங்களோ, இருக்கும், இருக்கும்! :P :P

    ReplyDelete
  12. பல அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. :)


    பதிவு நீங்க எழுதினதுனால வழக்கம் போல சாம்பு மாமா தான் கொழுக்கட்டை இன்சார்ஜா? :p

    எங்க வீட்டுல நான் தான் ஒத்துக்கறேன்! அதே போல நீங்களும் உண்மையை ஒழுங்கா ஒத்துக்குங்க பார்ப்போம். :)))

    ReplyDelete
  13. விநாயகரைப் பற்றிய தங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமை..பல அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  14. தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    இன்னும் சீடையே வந்து சேரல, இதுல நீங்க அனுப்பின கொழுக்கட்டை எப்ப வந்து சேர போகுதோ?

    ReplyDelete
  15. @அம்மாஞ்சி, என்ன இது சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு? ம்ம்ம்ம்? நீங்க கொழுக்கட்டை செய்தால் எங்க வீட்டிலேயும் அப்படியேவா இருக்கும்? க்ர்ர்ர்ர்ர்ர்., கொழுக்கட்டை ஸ்பெஷலிஸ்ட் ஆன என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா? என் திறமையைப் பார்த்தும் சந்தேகமா?

    @டிடி அக்க்க்க்க்கா, என்ன ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் வரீங்க?

    @என்னா புலி, கரெக்டா கொழுக்கட்டைக்கு வந்தாச்சா? அதான் விளக்கெண்ணெயிலே ஸ்பெஷலாச் செய்து உங்களுக்கும், அம்பிக்கும் சீடை அனுப்பினேனே, இன்னுமா வரலை? அதுக்குக் கூட அடிச்சுக்க ஆளு இருக்காங்களா? :P :P

    ReplyDelete