
கொஞ்சமும் யோசிக்காமல் இன்னிக்குக் கடலில் பிள்ளையார் கரைக்கப் படுவார்னு அறிவித்து விட்டேன். இன்னும் எழுத வேண்டியது நிறையவே இருக்கிறது.ஆனால் "விசர்ஜனம்"னு அறிவிச்சதாலே (அவசரக்குடுக்கை) வலுக்கட்டாயமாய் இந்தப் புராணத்தை முடிக்கவேண்டும். விநாயகருக்கு அருகம்புல் ஏன் சாத்துகிறார்கள் என்பதற்குப் புராணங்கள் சொல்லும் கதை என்னவென்றால், அனலாசுரனைத் தன் பேழை வயிற்றில் அடக்கிக் கொண்டதால் அவர் வயிற்றினுள் இருந்த மூவுலகமும் வெப்பம் தாங்கமாட்டாமல் தவித்த காரணத்தால் குளுமையைக் கொடுக்கும் அருகைச் சாற்றி வெப்பத்தைத் தணித்தார்கள் எனச் சொல்லுவது உண்டு. ஆனால் விஞ்ஞான பூர்வமாய்ப் பார்த்தோமானால் இந்த மண்ணில் முதன் முதல் தோன்றியது புல் தான். ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது. மண்ணின் நாயகர் ஆன அவர் இந்த மண்ணில் விளைந்த எளிய பொருட்களைக் கொடுத்தாலே போதும், திருப்தி அடைவார். அந்தப் பூமியையே வழிபடும்போது அதில் விளைந்த தானியங்களையும், பழங்களையும், உணவு வகைகளையும் தானே அவருக்கு நிவேதனமாய்ப் படைக்க வேண்டும்.
தவிர, யானைக்குக் கரும்பு பிடிக்கும். இனிப்பு வகைகளில் பிரியம் கொண்டது யானை. அதனாலேயே கரும்புத் துண்டங்களும், அரிசியில் செய்த அன்னம், பாயாசம், கொழுக்கட்டை போன்றவையும் படைக்கிறோம். மேலும் கொழுக்கட்டையானது நம் உடலின் உள்ளே உள்ள மகத்தான பூரணத்துவத்தையும் அதன் இனிமையையும் மறைமுகமாய் நமக்கு உணர்த்துகிறது. எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும். தேங்காய் உடைப்பது என்பதும் மிக அரிய ஒரு தத்துவத்தைக் காட்டுகிறது. அந்த ஈசனுக்கு எவ்வாறு மூன்று கண்களோ அவ்வாறே தேங்காய்க்கும் மூன்று கண்கள். ஈசனைப் போன்ற உயர்ந்த தேங்காயைப் பிள்ளையாருக்குப் படைப்பதின் மூலம் நம்மிடம் உள்ள எல்லாவற்றிலும் உயர்ந்த வஸ்துவை இறைவனுக்குக் கொடுக்கிறோம். மேலும் தேங்காயின் ஓடு மிகவும் கெட்டியாய் நம் மண்டை ஓட்டைப் போல் இருக்கிறது. அதன் பருப்பும், உள்ளே உள்ள இனிப்பான நீரும் நம் உடலினுள் மூளைக்கு மிக அருகில் அமைந்துள்ள அமிர்தமய கோசத்தைக் குறிக்கும். நம் மண்டையையே சிதற அடிக்க்கிற பாவனையிலும், நம் அகங்காரம் அதன் மூலம் அகன்று உள்ளே உள்ள அமிர்தானந்த மய நிலையை நாம் அடைய வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தவும் தேங்காய் உடைக்கப் படுகிறது.
விநாயகரை நாம் வழிபடுவது போல் விநாயகர் யாரையாவது வழிபட்டிருக்கிறாரா என்றால் ஆம். விநாயகரின் குரு சூரியன். அந்த சூரியனிடமே நேரில் வேத சாஸ்திரங்களைக் கற்றவர் இருவர். ஒருவர் விநாயகர், மற்றவர் அனுமன். வாயு புத்திரன் ஆன அனுமன் வாயு வேகத்தில் சுழன்று, சுழன்று சூரியனின் ரதத்திற்கு முன்னே கை கூப்பி நின்று கொண்டே அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து கொண்டும், பாடங்களைக் கற்றார் என்றால் விநாயகரோ சூரியன் ஸ்ரிமன்நாராயணனை வலம் வரும்போது, சூரியனை வலம் வந்து வேத சாஸ்திரங்களைப் பயின்றார். அதனால் தான் மஹா கணபதி ஹோமம் செய்பவர்கள் சூரியோதயத்தில் செய்வதும் வழக்கம். இதைக் காரணம் வைத்தே தான் எந்த ஒரு பூஜையோ, வழிபாடோ, பஜனையோ ஆரம்பிக்கும்போது விநாயகரில் ஆரம்பித்துப் பின்னர், அனுமனில் வந்து முடியும்.
நம் தமிழ் ஆண்டுகள் முற்காலத்தில் "ஆவணி" மாதத்துக்கு முன்னர் ஆரம்பித்ததாய்ச் சொல்லுவார்கள். இது பற்றி நேற்றுக் கூட ஒரு செய்தி படித்தேன். அது போல ஆவணி மாதம் வரும் விநாயக சதுர்த்தியுடன் நம் பண்டிகைகளும் ஆரம்பித்து ஆண்டு இறுதியில் ஹனுமத் ஜெயந்தியுடன் முடிவடையும். இதைத் தான் பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிக்கவேண்டும் என்பதை "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" எனச் சொல்லி இருக்கிறார்கள். காலப் போக்கில் பழமொழியின் அர்த்தம் மாறியதைப் போல் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடும் மாதமும் மார்கழிக்கு மாறி விட்டது. ஆனால் இங்கே அமெரிக்காவிலும், இன்னும் சில குறிப்பிட்ட இந்தியக் கோவில்களிலும், பங்குனி கடைசியிலோ அல்லது சித்திரை மாதத் தொடக்கத்திலோ தான் ஹனுமத் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இந்த வருஷம் மெம்பிஸ் கோவிலில் "மே"மாதம் தான் அனுமத் ஜெயந்தி மிக விமரிசையாக நடந்தது.
பிள்ளையாரைக் கடலிலோ அல்லது நீரிலோ கரைக்க வேண்டும். ஏன்? சமுத்திரங்களால் நிரப்பப் பட்டிருந்த் இந்த பூமியானது, சமுத்திரம் உள்ளே போனதால் தான் தெரிய ஆரம்பித்து உள்ளது. அந்த சமுத்திரம் மீண்டும் பொங்கினால்? இந்த பூமி எங்கே? சமுத்திரத்தில் இருந்து வந்த இந்தப் பூமி சமுத்திரத்துடன் மீண்டும் கலப்பது என்றோ ஒரு நாள் நடக்கப் போவது நிச்சயம். அந்த நிலையாமையைத் தெரிவிக்கவும், ஒரு வகையில் இன்றளவும் சமுத்திரம் தன் கட்டுப்பாட்டை மீறாமல் பூமித் தாயைக் காத்து வருவதற்கும் நன்றி சொல்லும்விதமாய், உன்னிலே இருந்து வந்தோம், உன்னிலேயே அடங்கவும் போகிறோம், அது வரை பொறுத்திரு என்று சொல்லி "விசர்ஜனம்" செய்கிறோம்.
கதையும் முடிஞ்சது, கத்திரிக்காயும் காச்சுது.
ஒரு நாளைக்கு எத்தனை போஸ்ட் தான் போடுவீங்க....
ReplyDeleteஎத்தனை போஸ்ட்????
ReplyDeleteசிவா இது ஒண்ணுதான் நான் பார்த்தேன்:)
@புலி, என்ன கண்ணு வைக்கிறீங்க? இதிலே சில மாற்றம் தான் கொஞ்சம் கஷ்டப் பட்டு செய்திருக்கேன். மத்தபடி "ட்ராஃப்ட்" முன்னாலேயே ரெடி. நம்ம கணினியை நம்பி அப்போ அப்போ புதுசா எங்கே இருந்து எழுதறது? இன்னும் "சிதம்பர ரகசியம்" தொட முடியலை, இன்னிக்காவது சரியா வருதா பார்க்கணும்! :(
ReplyDelete@சரியாப் போச்சு வல்லி, மத்தது எல்லாம் உங்களுக்குத் தெரியலையா? :P :P ம்ம்ம் வாங்க, வாங்க, வீட்டை ஒழுங்கு செய்தாச்சா? சாமான் எல்லாம் பிரிச்சாச்சா? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, வந்து மெதுவா இருந்து படிச்சுட்டுப் போங்க! :D
ReplyDeleteFirst time to your blog through Veda's blog. Good one. Felt like I read 'Gnanabhoomi'. I do not know whether it is being published nowadays. It used to be one of those group of 'Idhayam Publications'. You have a great talent in writing 'Umachi' stories. Keep it up!
ReplyDelete@பாலாஜி ராஜன், வாங்க, வாங்க முதல் வரவு, அதுவும் அந்தப் பிள்ளையார் ஆரம்பிச்சு வச்சிருக்கார், ரொம்பச் சின்னக் குழந்தை போலிருக்கு நீங்க, என்னை விடவோ? க்ர்ர்ர்ர்ர்.,.,.,., இன்னும் அதான் "உம்மாச்சி"னு சொல்லிட்டு இருக்கீங்க! :P :P
ReplyDelete@பாலாஜி ராஜன், ம்ம்ம்ம்ம்., உங்க வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு வந்தேன், என்னமோ "பீட்டர்" இல்லை விட்டிருக்கீங்க, நமக்கு அந்த பாஷை வராதுங்கோவ்! :P அது சரி, "வேதா" எப்போவிலிருந்து இங்கிலிபீஸில் எழுத ஆரம்பிச்சாங்க? இல்லைனா அவங்க எழுதறது உங்களுக்கு மட்டும் இங்கிலிபீஸாத் தெரியுதோ? :P :P
ReplyDelete@வேதா, அது ஸ்பெஷலாய் "அம்பி"க்காகக் காய்ச்சது, அதான் போலிருக்கு, அம்பி இன்னும் எட்டிக் கூடப் பார்க்கலை, நறநறநற, இது அம்பிக்குத் தான், உங்களுக்கு இல்லை! :D
ReplyDelete@வேதா, மத்தது ரெண்டும் இப்போத் தானே வந்துச்சு!
ReplyDeleteஹிஹி, அவர் தமிழ்ப் பதிவு படிக்கிறேன்னு ஒரு நாலே நாலு பதிவு மட்டும் போட்டிருக்காரா? மற்ற இங்கிலிபீஸு பதிவிலே உங்க பேரு இருக்கா? அதான் கேட்டேன், ம்ம்ம்ம்ம் பார்த்திருக்கேன் பேரை அடிக்கடி உங்க பதிவிலே! :P
எல்லாம் நேத்திக்கே வந்தேன். :)கத்ரிக்காய்க்கு எல்லாம் பின்னூட்டம் இட முடியாது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ReplyDelete//அவர் தமிழ்ப் பதிவு படிக்கிறேன்னு ஒரு நாலே நாலு பதிவு மட்டும் போட்டிருக்காரா? //
ReplyDeleteரொம்ப புகையுதே! ஹிஹி, யாருங்க அந்த நாலு பேரு? :p
ஹிஹிஹி, அம்பி, எனக்குத் தெரியாதா என்ன? கொழுக்கட்டை செய்யும்போது தற்செயலாகத் தவறி விழுந்த பூரிக்கட்டையால் உங்க கை, கால்,முகம் எல்லாமே கொழுக்கட்டை மாதிரி இருந்தது? அதான் வீடியோ, ஆடியோ வந்துச்சே! :P
ReplyDeleteஎனக்கா புகையுது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஒரு பெரிய வாசகர் வட்ட்ட்ட்ட்ட்ட்ட்டத்த்த்தையே உருவாக்கி வச்சிருக்கேனாக்கும்!
(சும்மா உள உளாக் கட்டிக்குத் தான், நம்பிடாதீங்க யாரும்)
கீதா உங்க எழுத்து முஹூர்த்தம் இன்னிக்கு நம்ம வீட்டுப் பிள்ளையார் விசர்ஜனமும் நல்ல படியா ஆச்சு. நான் போட்ட இன்னோரு பின்னூட்டம் காணொமே:((
ReplyDeleteஎனிவே
பிள்ளையார்,குரங்கு இவ்வளவு அர்த்தம் இருக்குன்னு இப்போதான் தெரியறது. நன்றிம்மா.
இந்தப் பதிவிலேயே நீங்க போட்ட பின்னூட்டம் மேலே இருக்கு, வேறே பின்னூட்டம் ஏதும் இல்லையே? சாதாரணமாய் ஒண்ணு, இரண்டு பின்னூட்டங்கள் ஒட்டிட்டு வராமல் அடம் பிடிக்கும், கொஞ்ச நாளாய் சமர்த்தா எல்லாமே வந்துடுதே? ம்ம்ம்ம்ம்ம்ம்., தெரியலை வல்லி! :(
ReplyDelete//ரொம்பச் சின்னக் குழந்தை போலிருக்கு நீங்க, என்னை விடவோ? //
ReplyDeleteEnnunga ,
then & there neengaleh ippadi confirm pannaringa,
Naangaleh neenga rombha chinnavanganu ninaichalum, ippadi solliverah niyabagapaduthuringa original ennanu....
@ஆணி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteகதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
ReplyDeleteஅதை அழகழகா சொல்லிடுவார் கீதா மேடம்
சிந்தாமணி வினாயகர் படத்தைப் போட்டீங்களே, அவரைப் பற்றியும் எழுதியிருக்கலாம் தானே?
ReplyDeleteபிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிக்கவேண்டும் என்பதை "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" எனச் சொல்லி இருக்கிறார்கள்
ReplyDeleteஅப்படியா சேதி எனக்கு தெரிந்தவரை பஜனை சம்ப்ரதாயத்தில் ஜெய கணேஷ என்று ஆரம்பித்து ஜெய மருதி என்று முடிப்பார்கள். அதற்கும் இது பொருந்தும்
@மணிப்பயல், மூன்று நாளாக வேறே மடிக்கணினி இருந்துச்சா? அதிலே தமிழ் எழுத்துக்கள் வராமல், நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். ஏதோ ஒப்பேத்தினேன். அதான் பதில் கொடுக்கவே இல்லை யாருக்கும்.
ReplyDelete@மெளலி, சிந்தாமணி கதை மட்டுமில்லை, அருகம்புல் மகத்துவம் பத்திய கெளண்டின்ய முனிவர், ஆசிரியை பத்திக் கூட எழுதணும்னு தான். ஆனால் அது எல்லாம் புதுசா எழுதணும், அதுக்கு நேரம் இல்லை, இது நான் ஏற்கெனவே வேறே ஒருத்தருக்கு (ஹிஹிஹி) எழுதி வச்சிருந்தது, சமயத்துக்கு ஏத்தாப்பல கொஞ்சம் மாத்திச் சில வரி சேர்த்து விட்டுப் போட்டேன்.
@தி.ரா.ச.சார், இந்தப் "பிள்ளையார் பிடிக்கிற" பழமொழியே இதனால்தான் ஏற்பட்டதுன்னு உபன்யாசத்தில் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வாரியார் ஸ்வாமிகளும் இதை உறுதிப் படுத்தி இருக்கிறார். இது பஜனை சம்பிரதாயம் மட்டும் இல்லாமல் தினசரி நாம் சொல்லும் ஸ்லோகங்கள், வழிபாட்டுப் பாடல்களுக்கும் பொருந்தும்னு அவர் சொல்லுவார்.