எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 02, 2007

காரணம் என்ன? தெரியலை!

காரணமே இல்லாமல் நட்பின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது, சிலரோட புறக்கணிப்புக்குக் காரணமே தெரியறதில்லை. என்னவோன்னு நினைச்சுப்பேன். பொதுவாக நான் மீள்பதிவு போட்டதே இல்லை. இருந்தாலும் இப்போதுள்ள மனநிலைமையில் மீள்பதிவு தான் அவசியமாப் படுகிறது.

"உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."

வள்ளுவர் வாக்கு. எனக்குச் சில நண்பர்கள் இடுக்கண் களைந்திருக்கிறார்கள். இந்த வலை உலகிற்கு வந்ததில் நான் பெற்ற பெரும் பயன் இது.
"அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான்" என்று முண்டாசுக் கவிஞன் சொன்னது போல எல்லாரும் வந்திருக்கிறார்கள். "புதிய நட்பைப் பெறாத ஒவ்வொரு நாளையும் நான் இழந்ததாகக் கருதுகிறேன்." என்று சாமுவேல் ஜான்ஸன் என்ற அறிஞர் கூறிய மாதிரி ஒவ்வொரு நாளும் புதுப் புது நண்பர்கள். அதற்காக பழைய நண்பர்களை விட முடியுமா? முடியாது. நாம் போனாலும் அவர்கள் பார்க்காத மாதிரி இருந்தால் என்ன செய்வது? புரியவில்லை. பொறுத்துப் பார்ப்பது ஒன்று தான் வழி. நட்பு நீடிக்க வேண்டும் என்பது தான் நாம் விரும்புவது.

"வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ பகையே-துள்ளி வருகுது வேல்" என்று முண்டாசுக் கவிஞன் பாடியது போலப் பகையை வெல்ல அந்த ஆறுமுகன் உதவுவான். என்றாலும் நட்பை இழந்து விட்டோமோ என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கும். மனம் மிகவும் வலிக்கும்.

எனக்கு வலிக்கிறது.

5 comments:

  1. கீதா, நாலைந்து நாட்களுக்கு முன்பு இதே மேட்டரை என் தோழி வருத்தப்பட்டு மெயில் அடித்திருந்தாள்.
    இது எல்லாருக்கும் ஏற்படும் அனுபவம்தான். பல நாட்கள் பழகி இருப்பார்கள், உற்ற நட்பு என்று
    மனம் பெருமிதப்படும், சட்டென்று ஒரு விலகல் தெரியும். என்ன ஏது, யாராவது நடுவில் புகுந்து
    குழப்பி விட்டார்களா என்று எந்த விவரமும் புரியாமல் மனம் அடித்துக் கொள்ளும். கேட்டதும்
    தைரியம் வராது ... சரியா?
    நான் என் தோழிக்கு சொன்னது ஓன்றேதான். என் பாலிசி "உனக்கு நான் வேண்டாம் என்றால்,
    எனக்கும் நீ தேவையில்லை" என்ற மனபான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று :-) வேறு
    வழி?
    பி.கு உங்கள் வலி தரும் வேதனையின் பின்புலம் அறியாமல் இந்த பின்னுட்டம் போடுகிறேன்.

    ReplyDelete
  2. ஒன்னும் புரியல சாமியோவ் ;-(((((

    ReplyDelete
  3. பின்புலம் தெரியாமலேயே வலியைப் புரிஞ்சுக்கிட்டீங்க இல்லை? அதுவே போதும் உஷா,
    இருந்தாலும் எனக்குள் இருக்கும் இந்த வேதனையின் பாரம் தாங்காமலேயே வலுவில் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி உங்களுக்கு. நானும் இப்போ எல்லாம் அப்படித் தான் ஒதுங்க ஆரம்பித்து உள்ளேன்.

    @கோபிநாத், புரியாட்டாலும், தேவை என்றபோது எட்டிப் பார்க்கிறீங்களே, நன்றி, அதுக்கு.

    @வேதா, உங்களுக்கு இல்லைனு உங்களுக்கு நல்லாவே தெரியும். :)))) பார்மாலிட்டீஸ் பார்க்காமல் நானே போய் என்னனு கேட்டதுக்கும் பதில் இல்லைனா என்ன செய்யறது? அதுக்கு அப்புறம் எழுதினது தான் இது. :(((((((

    ReplyDelete
  4. Geetha,
    ennaachchuppa.

    yaaraavathu Ethaavathu solli irunthaalum vittudunga.
    It is not worth it.
    We have got more in our favour than anything or anyword.
    take care.

    ReplyDelete
  5. aiyayo paatti enna achu? naanum illa naanum illa!

    ReplyDelete