சமீபத்தில் பார்த்த பட வரிசையில்
எங்கிருந்தோ வந்தாள் - பார்த்தது தான், இந்தி மூலம் இன்னும் நல்லா இருக்கும்.
பேரழகன் - அருமை, முதல் தரமாய்த் தான் பார்த்தேன்.
பம்மல்கே.சம்மந்தம் - படமா இது? கண்ணராவி! அந்தக் கோர்ட் காமெடி மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் ரஜினி ஏற்கெனவே இன்னொரு படத்தில் செய்துவிட்டார்.
புத்தகங்கள்:
சூர்ய காந்தம் - லஷ்மி
காஞ்சனையின் கனவு -லஷ்மி
ஆகாச வீடுகள் - வாசந்தி, அருமையான கதை, கதாநாயகி லலிதா மதிரி தான் என்னோட அம்மா! :(((((
பாரதியும் சமூகமும்,
பாரதியும் பெண்மையும் இரண்டுமே பெரியசாமி தூரன் எழுதினது.
மணிக்கொடி இதழ்களின் தொகுப்பு - (சிட்டி)சுந்தரராஜன், அசோகமித்திரன், முத்துக்குமாரசாமி தொகுத்தது. சுத்தானந்த பாரதியாரின் பிரசித்தி பெற்ற இரு கவிதைகளும் அடங்கி உள்ளது. இதில் தான் "ரசிகமணி" எழுதி உள்ள "கம்பனின் மாண்பு" என்ற கட்டுரையில் கம்பர் காலம் பற்றிய விவாதம் இருந்தது, இருக்கிறது எனத் தெரிந்து கொண்டேன். இவரின் கூற்றுப்படி "கம்பராமாயணம்" "திருவெண்ணெய்நல்லூரில்" அரங்கேறியது. கம்பர் வாழ்ந்த காலம் கி.பி.8 -ம் நூற்றாண்டு. என்று எடுத்துச் சொல்லுகிறார்.
வால்காவில் இருந்து கங்கை வரை -ஏற்கெனவே படிச்சது என்றாலும் அப்போது உள்ள வயசுக்கும் இப்போது உள்ள வயசுக்கும் வேறுபாடு இருப்பதால் எந்த அளவுக்கு என் கருத்து மாறப் போகிறது எனப் பார்க்க வேண்டும். இன்னும் மிச்சம் இருக்கு.
அகிலனின் வாழ்வு எங்கே?
இந்திரா செளந்திரராஜன் - சுற்றிச் சுற்றி வருவேன்! கதையும் சுற்றிச் சுற்றியே வருது! வழக்கமான பேய், பிசாசு, மறு ஜென்மம், பழி வாங்கல், ஜமீன் குடும்பம், மதுரைப்பக்கம் உள்ள உணர்ச்சிகளில் மூழுகும் மக்கள் படம் பிடித்துக் காட்டுகிறார்.
சி.சு.செல்லப்பாவின் "சுதந்திர தாகம்" வாங்கிட்டு வந்தாச்சு, ஆனால் கிளம்பும் முன்னர் படிக்க முடியுமா? தெரியலை, முதல் பாகம்தான் கொண்டு வந்தேன். அதுவே முடிக்க முடியுமா தெரியலை. பார்க்கணும்.
மேடம், எல்லாப்புறமும் தடைகள்.. அலுவலகத்தில் இணயத்தை மேய முடிவதில்லை.. பிராக்க்ஷி வலை வைத்து பிடிக்கிறார்கள்.. வீட்டிற்கு செல்லவே வெகுநேரமாகி விடுகிறது வேலைகளினால்.இதற்கிடையில் புதிய வீடு மாற்றம், வலை இணைப்பு மாற்றம், பழைய வீட்டை சுத்தம் செய்வது, கோடைகாலம் முடிவதால், சிகாகோ, நயகரா சுற்றுல என நாக்கு வெளியே தள்ளி விட்டது. இந்த வாரம் சரலோட்.. அநேகமாக அடுத்த வாரம் முதல் முழுதாக என்னால் பிளாக்கில் குதிக்க முடியும் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம்..
ReplyDeleteபதிவுக்கு அடிக்கடி வந்து (திட்டினாலும் :) ஸ்மைலி போட்டிருக்கேன்) உற்சாக மூட்டுவதற்கு நன்றிங்க மேடம்
மேடம், எல்லாப்புறமும் தடைகள்.. அலுவலகத்தில் இணயத்தை மேய முடிவதில்லை.. பிராக்க்ஷி வலை வைத்து பிடிக்கிறார்கள்.. வீட்டிற்கு செல்லவே வெகுநேரமாகி விடுகிறது வேலைகளினால்.இதற்கிடையில் புதிய வீடு மாற்றம், வலை இணைப்பு மாற்றம், பழைய வீட்டை சுத்தம் செய்வது, கோடைகாலம் முடிவதால், சிகாகோ, நயகரா சுற்றுல என நாக்கு வெளியே தள்ளி விட்டது. இந்த வாரம் சரலோட்.. அநேகமாக அடுத்த வாரம் முதல் முழுதாக என்னால் பிளாக்கில் குதிக்க முடியும் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம்..
ReplyDeleteபதிவுக்கு அடிக்கடி வந்து (திட்டினாலும் :) ஸ்மைலி போட்டிருக்கேன்) உற்சாக மூட்டுவதற்கு நன்றிங்க மேடம்
>> பம்மல்கே.சம்மந்தம் - படமா இது? கண்ணராவி!
ReplyDeleteஅதெல்லாம், ஆராயக்கூடாது. அனுபவிக்கணும் !
(பம்மல் K சம்பந்தம் டயலாக்குங்க...) :)
எனக்கு பிடித்த கமல் சொல்லும் பழமொழி
வால் இருக்கிறதனால பட்டம் பறக்குதேனு குரங்கு பறக்கமுடியுமா?
எங்கிருந்தோ வந்தாள்... அப்படினு ஒரு படம்.. யாரு நடிச்சது...
ReplyDeleteப.கே. ச.. படமானு கேட்குறீங்க... அது சரி... உங்களுக்கு அதுல வர டைமிங் காமெடி புரிஞ்சு இருக்காது.. அதான்....
@கார்த்திக், என்னத்தைச் சொல்றது? போங்க, எங்கே போனாலும் வேலை ஜாஸ்தி, புலம்பல் தான்! எல்லாம் ஒரே அழுகுணித் தொண்டரா ஆயிட்டாங்களே! :P
ReplyDelete@புலி, என்னது எனக்குப் படம் புரியலையா? க்ர்ர்ர்ர்., புரியறதுக்கு அதிலே என்ன இருக்கு? :P
@ஸ்ரீகாந்த், அது சரி, இந்த வசனம் ஒண்ணு மட்டும் இல்லைனா, இந்தப் படம், பப்படம் தான்! :P
எங்கிருந்தோ வந்தாள் தெரியாத புலி! சிவாஜி, ஜெயலலிதா நடிச்சது, இந்தியிலே "கிலோனா" என்ற பெயரிலே முதலில் வந்தது! இது தெரியலையே! :P :P
ReplyDeleteபம்மல் கே படத்தை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து தனது பெண் ஈய முகத்தைக் வெளிக் காண்பித்த கீதா அவர்களுக்கு எங்கள் வன்முறையான கண்டனங்கள்!
ReplyDeleteஎன்னது பம்மல் உவ்வே சம்மந்தம் பிடிக்கலையா அட கொடுமையே:-(((
ReplyDeleteகிலோனா இன்னும் நன்றாக எடுத்து இருந்தார்கள்.
ReplyDeleteதமிழில் கொஞ்சம் செயற்கை வாடை அடித்தது.
ஆனால் பாடல்கள் கேட்கும்படி இருக்கும்.
காஞ்சனையின் கனவு ம்ம்ம்
நல்ல கதை. அரக்கு மாளிகை ஞாபகம் இருக்கிறதா.
மஞ்சுளா,கிரிதரன் அது தனி உலகம்.:))0
ஒருவாரம் ரொம்ப பிசின்னது இதானா?, என்னமோ ஏதோன்னு நினைத்தேன்.
ReplyDelete\\கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஎங்கிருந்தோ வந்தாள் தெரியாத புலி! சிவாஜி, ஜெயலலிதா நடிச்சது, இந்தியிலே "கிலோனா" என்ற பெயரிலே முதலில் வந்தது! இது தெரியலையே! :P :P\\
அப்படியா தலைவி!!...நாங்க எல்லாம் சின்ன பசங்க இல்லையா அதான் தெரியல... :))
ennanga, Singathu thalaiya seepala vareegala!....
ReplyDeleteஎன்னது பம்மல் உவ்வே சம்மந்தம் பிடிக்கலையா!...
@இ.கொ. வாங்க, வாங்க, வழக்கமான பல்லவி பாடலை, அது சரி, அது என்னாங்க பெண் "ஈயம்" க்ர்ர்ர்ர்ர்ர், என் முகம் என்ன நசுங்கின ஈயச் சொம்பு மாதிரியா இருக்கு? அப்புறம் என்னதான் கண்டிச்சாலும் "பம்மல்கே.சம்மந்தம்" ஒரு படமா? :P :P
ReplyDelete@அபி அப்பா, நீங்க "நகைச்சுவை"ங்கிற பேரிலே அறுக்கிறீங்க இல்லை, அதான்! :P
@வல்லி, அதானே, படம் பார்க்கிறதுக்கும் வயசுக்கும் என்ன சம்மந்தம்னு இவங்களுக்குப் புரியவே புரியாதா? அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே நீங்க?
@மெளலி, நான் சொன்னது இப்போதைய இந்த வாரம், பிசினு சொன்னேன். என்னவோ போங்க, யாருமே படிச்சுட்டு கமென்டறதில்லைனு எனக்கு நல்லா புரியுது! :P திடீர்னு ஒரு நாள் எல்லாருக்கும் ஒரு டெஸ்ட் வைக்கப் போறேன், என்ன செய்யப் போறீங்களோ தெரியலை! :P :P
@கோபிநாத், வல்லிக்குக் கொடுத்திருக்கேன் பாருங்க பதில், உங்களை நினைச்சுட்டு!
ReplyDelete@ஆணி, என்ன டேஸ்டு போங்க! :P
@வேதா, வாங்க, வாங்க,எல்லாரையும் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கு, ஏதோ இந்த மாதிரி மொக்கை ஒண்ணு நடு நடுவிலே போடறேனோ, எல்லாரும் எட்டியாவது பார்க்கறீங்க? ஆனால் மத்தவங்க பதிவுலே மட்டும் எப்படிங்க கமென்ட் மழையா பொழியறீங்க? உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்., அச்சச்சோ, பக்கம் தீஞ்சு போச்சோ?