இந்தப் பத்து நாட்களில் படித்த புத்தகங்கள்:
மலர்கள்- ராஜம் கிருஷ்ணன் - எத்தனாவது முறை? நினைவில்லை!
மானசரோவர் - அசோகமித்திரன் - முதல் முறை - மனதில் இன்னும் பாரம் இருக்கிறது.
ராஜத்தின் மனோரதம்
விச்சுவுக்குக் கடிதங்கள்
நடந்தது நடந்தபடியே
மிஸ்டர் வேதாந்தம்
கல்யாணி - தேவனின் படைப்புக்கள் -அலுக்காத ஒன்று. எத்தனை முறை படித்தாலும் புத்துணர்ச்சி ஊட்ட வல்லது.
விடாது கருப்பு - இந்திரா செளந்திர ராஜன், இன்னும் 2 புத்தகங்கள் பேர் நினைவில் இல்லாதது.
கடல்வேந்தன் - சாண்டில்யன் - சேரன் செங்குட்டுவன் காலத்தில் நடந்த கடல் போரைப் பற்றிக் கபிலர் பாடிய சங்கப் பாடலை ஒட்டி எழுதப் பட்ட கதை. வழக்கமான சாண்டில்யன் பாணி.
ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும் நந்திவர்ம பல்லவனும் நடத்திய "பெண்ணாகம்? பெண்ணாடம்? இந்த ஊரே இப்போ இல்லைனு சொல்லுகிறாரே?" போர் பற்றிய கதை ஒன்று, சாண்டில்யன் எழுதியதும், இதே கருத்தை வைத்து இந்திரா செளந்திரராஜன் எழுதியதும். இரண்டுமே சுமார். காதல் பற்றி மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ரோஜா இதழ்கள் - ராஜம் கிருஷ்ணன்
சென்ட்ரல் - பி.வி. ஆர்.
தெய்வத்தின் குரல் - ரா. கணபதி
சக்தி பீடங்களின் தொகுப்பு - எழுதினவர் பேர் மறந்து போச்சு.
திருமந்திரம் - கொஞ்சம்
ராம மூர்த்தி - எஸ்.வி.வி. - நல்ல சரளமான நடை
சம்பத்து - எஸ்.வி.வி.
கல்கியின் தியாக பூமி - பல முறை படித்தது தான் - அலுக்க வில்லை.
லட்சுமி. அனுத்தமாவின் சில புத்தகங்கள். "ஆல மண்டபம்" அநுத்தமாவுடையது தான் வல்லி, இந்திரா பார்த்தசாரதினு நான் சொன்னது தப்பு. :))))))))
தமிழ்வாணனின் சில புத்தகங்கள் - இப்போப் படிக்கும்போது சிரிப்பாய் வருது. தவிர்க்க முடியலை.
இன்னும் படிக்கக் காத்திருக்கும் புத்தக வரிசையில்
கல்லுக்குள் ஈரம் - ர.சு. நல்ல பெருமாள் 2 முறையோ என்னவோ படிச்சிருக்கேன் என்றாலும் சில புத்தகங்கள் படிக்கப் படிக்கப் புது அர்த்தம் வரும், இன்னும் நல்லாப் புரியும். அதில் இதுவும் ஒன்று.
இந்திரா செளந்திர ராஜனின் ஒரு புத்தகம்
இது தவிரவும் சில மனதில் நிற்காத எழுத்துக்கள்.
இது தவிரவும் சில புத்தகங்கள் படித்தாலும் மனதில் நிற்கவில்லை. :(
பார்த்த படங்கள்:
ப்ளாக் - சிறுவயது ராணி முகர்ஜியாக நடிக்கும் பெண் நடிக்கவே இல்லை வாழ்ந்திருக்கிறாள். வயதான அமிதாபின் மேக்கப்பில் சற்றுக்குறைபாடு இருந்தாலும், அமிதாபின் நடிப்பு அதை மறக்கடிக்கிறது. என்றாலும் கண் தெரியாத, காது கேளாத, அதனால் பேசவும் முடியாத ஒரு பெண்ணை இவ்வாறு அடித்துத் துன்புறுத்திப் படிய வைக்கலாமா என்னும் கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. பாதியிலேயே என்னோட மறுபாதி "ச்சீசீ, இந்தப் படம் பிடிக்கலை" என்று சொல்லி எழுந்து பொயிட்டார்.
நிஷப்த்- இந்தப் படமும் பலருக்குப் பிடிக்கலை. வேதாவுடன் சாட்டும்போது வேதாவும் படம் பார்க்கவில்லை எனவும், படத்தின் ஸ்டில்களே தனக்குப் பிடிக்கவில்லை என்றே சொன்னாள். "முதல் மரியாதை" கதையின் கருத்தை ஒத்துக் கொண்டால் இதையும் ஒத்துக் கொள்ளலாம் என்றாலும் இதில் கதாநாயகியின் கண்ணை உறுத்தும் உடைகள் நம் மனதையும் உறுத்துகிறது. பொதுவாக ராம் கோபால் வர்மா படங்களிலேயே அவரின் கதாநாயகிக்கு உடைப் பஞ்சம் ஏற்படும் என்றாலும் இந்தப் பெண் கதைப் படி ஆஸ்த்ரேலியாவில் பிறந்து வளர்ந்த பெண். கதை முடிவு சொதப்பல் என்றாலும் படம் எடுத்திருக்கும் பாங்கும், ரேவதியும், அவரின் சகோதரர் ஆக வரும் நாசரும் நல்லாவே நடிச்சிருக்காங்க. இதுவும் நான் மட்டும் தான் பார்த்தேன்.
தோஷ்- கொஞ்சம் மர்மம், கொஞ்சம் அறுவை, என்றாலும் கதை நகரும் பாணியும், பிரானின் நடிப்பும் நல்லா இருக்கு.
இது தவிர சுமதி என் சுந்தரி- எத்தனை முறை? சவாலே சமாளி, அதே அதே, காதலிக்க நேரமில்லை, அலுக்கவே அலுக்காது, மூன்று தெய்வங்கள், கில்லி, வரலாறு, ஏய், நீ ரொம்ப அழகா இருக்கே(செம போர்), இதுக்கு மேலே நான் சொன்னால் அடிக்க வருவீங்க. அப்புறம வரேன்.4-ம் தேதி கிருஷ்ணன் பிறப்புக்காகப் படத்தை ஊருக்கு முன்னாலேயே சுட்டு, ஜி3 பண்ணி, 2 வரி எழுதி வச்சேன். மறந்து போய் பப்ளிஷ் பண்ணி இருக்கேன், ஹிஹிஹி, அ.வ.சி. அதுக்குக் கமென்டும் வந்துடுச்சு. பார்க்கறேன், கிருஷ்ணன் பிறப்புக்கு எழுத முடியுமா என்னனு! :P
நானே ஒத்துக்கிட்டேன், இதெல்லாம் ஒரு போஸ்டானு, சும்ம்மா ஒப்பேத்த எழுதி வச்சேன். அதை பப்ளிஷ் பண்ணி "யாம் பெற்ற துன்பம் இவ்வையம் பெறுக" என்ற நல்ல எண்ணம் தான் காரணம்.
ReplyDelete@அம்பி, இன்னிக்கும் பொங்கல், புளியோதரை எனக்குத் தான். பை தி பை, நேத்திக்கு நல்லா புத்துருக்கு நெய் ஊத்தி, நிறைய சர்க்கரை போட்டு, முந்திரிப் பருப்பு முழுசாப் போட்டுக் கேசரி பண்ணினேன், உங்களுக்குக் கேசரிக்குத் தனியா விளக்கெண்ணெய்க்குச் சொல்லி வச்சிருக்கேன். :P
//இதே கருத்தை வைத்து இந்திரா செளந்திரராஜன் எழுதியதும். இரண்டுமே சுமார். காதல் பற்றி மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது.//
ReplyDeleteசாண்டில்யன் கதை சுமாரா? இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். :p
//"ஆல மண்டபம்" அநுத்தமாவுடையது தான் வல்லி, இந்திரா பார்த்தசாரதினு நான் சொன்னது தப்பு.//
இது மட்டும் தானா? :)))
எங்களுக்கு முன்பே தெரியும்.
//நெய் ஊத்தி, நிறைய சர்க்கரை போட்டு, முந்திரிப் பருப்பு முழுசாப் போட்டுக் கேசரி பண்ணினேன்//
இப்படி ஏதாவது கேடித்தனம் பண்ணிவீங்கனு தெரிஞ்சு தானோ என்னவோ என் மாமியாரும் எனக்கு weekendla கேசரி செஞ்சு தந்தாங்க. :))))
மீதி மொக்கைஸ் எல்லாத்தையும் படிச்சாசு. ஆனா பின்னூட்டம் கிடையாது. :p
ReplyDelete//உங்களுக்குக் கேசரிக்குத் தனியா விளக்கெண்ணெய்க்குச் சொல்லி வச்சிருக்கேன். :P //
ReplyDeleteamarkalam
//என்ன தலைப்புக்கொடுக்கலாம்? தெரியலை! //
Mokkaiyin Mokkainu vechurukalaam :p
காதலிக்க நேரமில்லை - Kalakal padam, kanaku kidaiyadhu athanai thadava paarthurukaen
குடுத்து வெச்ச மகராசி ன்னுவாங்களே.. ஒரு வேளை அது நீங்கதானோ? :-)
ReplyDelete//மூன்று தெய்வங்கள்,//
வசந்தத்தில் ஓர் நாள் , மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளோ ன்னு ஒரு பாட்டு வருமே அந்தப் படம் தானே இது?
நான் மிக அதிக தடவை படித்தது இராஜியின் வியசர் விருந்து.இன்னமும் படிப்பேன்.
ReplyDeleteதேவன்நாவல்களை மொத்தமும் அல்லையன்ஸ் பதிப்பகம் போய் வாங்கிவந்தேன்.
@ஆப்பு, நல்லா இருந்தாத் தான் நல்லா இருக்குனு சொல்ல முடியும், சாண்டில்யன் எழுதினதுன்னா எல்லாமே நல்லா இருக்குனு கண்ணை மூடிட்டுச் சொல்லிட முடியுமா? ம்ம்ம்"நீள்விழி" அந்த நாவல் பேர், சுமார் ரகம் தான் அது, நீங்க வ"ண்"மையாக் கண்டிச்சாலும் சரி, வன்மையாக் கண்டிச்சாலும் சரி,
ReplyDelete@ஆப்பு, விளக்கெண்ணெய் இங்கே இருந்தே கொண்டு வரலாமான்னு பார்க்கிறேன்.
@ஆணி பிடுங்கணும், நிறைய ஆணி லண்டனில் இருக்குப் போலிருக்கு!
@ஐகாரஸ் பிரகாஷ், வழி தவறி வந்துட்டீங்கனு நம்பறேன். :P தமிழ் எழுத ஆரம்பிச்சதும் உங்க பதிவிலே வந்து பின்னூட்டம் தமிழிலே கொடுத்தேன் நினைவு இருக்கு.
எனிவே, வாங்க, வாங்க, நீங்க சொல்ற படம் தான், சிவாஜி, முத்துராமன், நாகேஷ், மூன்று தெய்வங்கள். சிவாஜி கொஞ்சம் இயல்பா நடிச்ச வெகுசில படங்களில் இதுவும் ஒன்று.
தி.ரா.ச. சார்,வாங்க, தேவன் புத்தகம் இந்தியாவிலே சிலது வச்சிருக்கேன். இங்கே போனமுறை கொண்டு வந்தேன். இந்த முறை லக்கேஜ் வெயிட் ஜாஸ்தியாகுதுனு என்னோட மறுபாதி கொண்டுவரத் "தடா"! :P அதான் நூலகத்தில் வாங்கிப் படிக்கிறேன். பை தி பை, என் கிட்டே இல்லாத தேவன் புத்தகங்களை உங்க வீட்டுகு வந்து சுட்டுக்கறேன். தகவலுக்கு நன்றி. :)))))))
என்னிடமும் சில தேவன் புத்தகங்கள் இருக்கு. எத்தனை முறை படித்தாலும் அருமையான எழுத்து.
ReplyDelete// நிறைய ஆணி லண்டனில் இருக்குப் போலிருக்கு//
ReplyDeleteAthai yen kekaringa, summa ella aaniyum pidinginaalum, pakkathu seatla irukaravanga aaniya aadichutu pidungunu sollaraanga... idhuku neduvula E verah adikanum, ethana vellai thaan oru manushan pannuvaan
@மதுரையம்பதி, சொல்லிட்டீங்க இல்லை? பங்களூரு வரும்போது சுட்டுடலாம்! :))))))))
ReplyDelete@ஆணி பிடுங்கணும், நல்லா அனுபவம் போலிருக்கு, ஆணி பிடுங்கறதிலே. வாழ்க! வளர்க! பக்கத்து சீட்டுக்காரங்களுக்கு என்னோட நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்க!
@aani pidungganum, HAPPY AANI! :p
ReplyDeleteயம்மாடியோவ்...இவ்ளோ புத்தகங்களையும் பத்து நாள்ல படிச்சி முடிச்சிட்டீங்களா...செம ஸ்பீடு தான்.
ReplyDeleteஇதுல ஒன்னைக் கூட நான் படிச்சதில்லை. :(
படங்கள்ல ப்ளாக் பாத்துருக்கேன் - நல்ல படம். அப்படியே ஹெலன் கெல்லர் கதை. எட்டாவது இங்கிலீஷ் புக்ல வந்த ஒரு பாடத்தை நினைவு படுத்தி விட்டது.
அங்கிள் நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டார்.
நிஷப்த் - ஏக் தம் பேகார் பிக்சர். செம மொக்கை. 150 ரூ குடுத்து பாத்தது தண்டம். அங்கிள் வாஸ் இண்டெலிஜெண்ட்...ஆண்ட்டி உங்களுக்கு(சாரி 16 வயசு சின்னப் பொண்ணுக்கு)அனுபவம் பத்தலை.
//என்ன தலைப்புக்கொடுக்கலாம்? தெரியலை!"//
அம்மே! ஞான் பிராந்து ஆயி :)
(அவ்ளோ புஸ்தகத்தையும் படத்தையும் பத்து நாள்ல பாத்தா என்னாகும்?)
:)