எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 14, 2007

சுலபமாய் வழிபடலாம் விநாயகரை!




விநாயக புராணம் -தொடர்ச்சி!

விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் மிகவும் உகந்தது. பொதுவாக நம் முன்னோர்கள் வழிபாட்டை நம் உடல் ஆரோக்கியத்துடன் சேர்த்தே யோசித்து நமக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நம் உடலில் வாதம்-பித்தம்- சிலேத்துமம் எனப்படும் கபம் என்று மூன்றுவிதமான தோஷங்கள் இருக்கின்றன. வாதம் நீர்த்தன்மை கொண்டது. வாதம் உள்ளவர்கள் எப்போதும் வெயிலையே விரும்புவார்கள் எனச் சொல்லப் படுவது உண்டு. நாராயணன் நீர் மேல் இருப்பவன். அவன் எப்போதும் நீர் மேல் இருப்பதால் அவன் வழிபாட்டுக்குச் சூடு உள்ள துளசியை வைத்திருக்கிறார்கள். பரமசிவனோ என்றால் எரிக்கும் சுடுகாட்டில் வசிப்பவர். அங்கே இன்னும் சூடு உதவுமா? அவரின் வழிபாட்டுக்கு வில்வம், குளிர்ச்சியைக் கொடுக்கும். இந்த சிலேத்துமம் ஒரு இரண்டுங்கெட்டான் நிலைமை. அதற்காகத் தான் அருகம்புல். அருகம்புல் மூலிகை வைத்தியத்தில் முதன்முதல் பயன்படுத்தப் பட்டதாய்ச் சிலர் சொல்கிறார்கள். இது நம் உடலில் படிந்திருக்கும் அதிகப் படியான உப்பைக் கரைத்து வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தமாக்கி நீரின் அளவை மிதப் படுத்தும். அதனால் தான் விநாயகர் வழிபாட்டுக்கு அருகம்புல் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இதைத் தவிர நம் தமிழ்நாட்டில் விநாயகர் பிரம்மச்சாரி என்பதால் எருக்கம் பூ மாலையை அணிவிக்கிறார்கள். அது போல வன்னி மர இலைகளாலும் விநாயகரை வழிபடலாம். வன்னி மர இலைகளும் மருத்துவ குணம் மிகுந்தது. நச்சுத் தன்மையை முறியடிக்கும், அத்கோடு இல்லாமல சருமப் புண்களை இந்த மரத்தின் இடையே புகுந்து வரும் காற்று நீக்கும் தன்மை கொண்டது. விஷக்கடி, சொறி, சிரங்கு, அலர்ஜி போன்றவை குணமாக வன்னி மரத்தின் இலை, காய், பட்டை ஆகியவற்றை உலர்த்திப் பொடி செய்து தேனோடு கொடுப்பது உண்டு, அல்லது சொறி, சிரங்குகளில் தேங்காய் எண்ணெய் கலந்து தடவுவதும் உண்டு. இலையைச் சுத்தமான பசும்பாலில் அரைத்து உட்கொண்டால் கடும் நோய்கள் குணம் ஆகும்.

விநாயகரை வலம் வரும்போது ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. விநாயகரை வழிபடுவதால் ஏழரைச் சனி உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் குறைவாக இருக்கும். அது போல் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பதிலும் ஒரு பெரும் தத்துவம் அடங்கி இருப்பதாய்ப் பரமாச்சாரியார் அவர்கள் கூறி உள்ளார். தேங்காய்க்கு மூன்று கண்கள் உண்டு. இது ஈஸ்வரனுக்குச் சமமாகக் கருதப் படுகிறது. ஈஸ்வரனைப் போன்ற மூன்று கண்கள் உடைய காயை விநாயகருக்கு நிவேதனம் செய்வதின் மூலம் நம்மை விட உயர்ந்த ஒன்றை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் தத்துவமும், அதனாலும், நம் மனத்தில் உள்ள ஆணவம் அகன்று மனம் நிர்மலம் ஆகவும் சிதறுகாய் போடுகிறோம். மண்டை ஓட்டைப் போலக் கெட்டியான தேங்காயை உடைத்துச் சிதற அடிக்கிறோம் அல்லவா? அதன் அர்த்தமே நம் மனதில் உள்ள ஆணவமும் அதுபோல் சிதறிப் போய்த் தேங்காயின் உள்ளே உள்ள இனிப்பான நீர்போல் இனிமை நிரவ வேண்டும் என்பதற்கும் தான்.

விநாயக வழிபாடு நம் நாட்டில் மட்டும் இல்லாமல் வடமாநிலங்களிலும் உண்டு என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். அது தவிர, பர்மாவில் "மகாபிணி" என்றும், மங்கோலியாவில் "தோட்கர்" என்றும், திபெத்தில் "சோக்ப்ராக்" என்றும், (நேரிலேயே பார்த்திருக்கேன் இந்த வழிபாட்டை), கம்போடியாவில் "பிரசகணேஷ்" என்றும், சீனாவில் "க்வான்ஷிடியாக்" என்றும், ஜப்பானில் "விநாயக் ஷா" என்றும் வணங்கப் படுகிறார். சயாமில் விநாயகருக்கு ஆமை வாகனமும், இந்தோனேஷியாவில் சதுர்முக கணபதி என்றும், ஜப்பானிலும், சீனாவிலும் அர்த்தநாரி (பாதி பெண், பாதி ஆண்) உருவத்திலும் விநாயக வழிபாடு நடைபெறுகிறது.

8 comments:

  1. so much info!!Thanks Maami.
    After a long interval today I've got time to read.How do you do?Will mail you soon.kovichukadheenga.Neengadhan chinna ponnachae..kovamae varadhu .Illaiya?

    ReplyDelete
  2. Nice Post. You know what, as you were telling about vinayakar in other countries, reminds me - in chennai near thiruvanmiyur, there is "New York Ganapthy" temple. You would have known "Cricket Ganesh". I have heard about "Maangani Pillayar"... Pillayar is the most worshipped God it seems!

    ReplyDelete
  3. @skm ஆஹா வந்துட்டாங்க ஐயா வந்துட்டாங்க! அவ்வளவுதான் இனிமேல் களைகட்டிவிடும். அப்படியே நம்ப பதிவுக்கும் வாங்க.

    விநாயகரைப் பற்றி இவ்வளவு விஷ்யமா.நம்ப வீட்டு பூஜைக்கும் வாங்க.

    ReplyDelete
  4. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான விஷயங்கள். நன்றி தலைவி. கொழக்கட்டை எல்லாம் சாப்பிட்டச்சா?

    ReplyDelete
  5. நல்ல செய்திகள்....நன்றி கீதாம்மா..

    ReplyDelete
  6. அருமை.. இது போன்ற உண்மைகளை வெளியில் யாரும் சொல்வதில்லை. பக்தியை கேலியும், கிண்டலும் செய்பவர்கள் இதில் இருக்கும் சில உண்மைகளையாவது தெரிந்து கொள்வது நலம்.. எனக்கும் இந்த விஷயங்கள் தெரியாது.. ஏதோ அருகம்புல், வில்வம், துளசி என்பார்கள். அவ்வளவுதான்.. புரிய வைத்ததற்கு நன்றி.. நன்றி.. நன்றி..

    ReplyDelete
  7. அட, எஸ்கேஎம், ஆச்சரியமா இருக்கே? ம்ம்ம்ம், சரி பார்க்கலாம். கோபம் தனி, அதுக்காக நான் சின்னப் பொண்ணு இல்லைன்னு ஆயிடுமா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்.,

    @ஸ்ரீகாந்து, ரொம்பவே நன்றி, முதலில் உங்களை கிரிக்கெட் ப்ளேயர்னு தான் நினைச்சேன், ம்ம்ம்ம்ம்ம் ஆனால் அவர் இல்லை போலிருக்கு நீங்க, :P

    @தி.ரா.ச. சார், தங்கை வந்ததும் தெரிஞ்சுக்கிட்டு வந்தீங்க போலிருக்கு? ம்ம்ம்ம் இருக்கட்டும் சார். :P

    @மணிப்பயல், நான் வரப்போ எல்லாம் ஒண்ணுமெ எழுதலை, ஒரு 2 நாள் வரலை, அதுக்குள்ளே 3 போஸ்ட் போட்டு இருக்கீங்க!

    @மதுரை, நன்றி,

    @சாணக்கியரே, ரொம்பவே நன்றி, எத்தனையோ கதா காலட்சேபங்களில் காலம் காலமாய்ச் சொல்லிக் கொண்டு வருவது தான் இவை எல்லாம். பக்தியின் உள்ளார்ந்த தத்துவமே நல்ல உடல் ஆரோக்கியத்துக்கும், மனோ பலம் கொடுப்பதற்கும், ஆத்ம சக்தியை உணருவதற்கும் தானே!

    ReplyDelete
  8. இந்த முறை தேங்காயை உடைக்கும்போது, சிதறி விடுமோ என்ற அச்சத்திலேயே இருந்தேன். நல்லவேளை விநாயகன் அருளால், என் அன்னை சொல்லிக்கொடுத்த 'தேங்காய் உடைக்கும் முறையாலும்' தேங்காய் அழகாக இரண்டு துண்டுகளாக பிளந்து கொண்டு அவனக்கு நிவேதனம் செய்ய முடிந்தது!

    ReplyDelete