
விநாயகருக்கு ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், உள்ளன. ஆறு எழுத்துக்கள் உடையவர். அவரை வழிபட்டால், ஏழு பிறவிகளும் நீங்கி, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று , சம்"பத்து"டன் வாழ்வார்கள். அவருடைய திருமேனியோ என்றால், கீழே பூத உடல், இடைக்கு மேல் கழுத்துவரை, தேவ உடல், தலை யானை என்ற மிருகத் தலை, ஒரு கொம்பு, இந்த ஒற்றைக் கொம்பு ஆண்தன்மையையும், கொம்பில்லாத மற்றொரு பகுதி பெண் தன்மையையும் குறிக்கிறது.
யானைத் தலை என்பது அஃறிணையைக் குறிக்கும். தேவ உடலோ என்றால் உயர்திணை. இவ்வாறு, அவர் அஃறிணையும் தானே, உயர் திணையும் தானே என்கிறார். தேவராய், விலங்காய், பூதமாய், பெண்ணாய், ஆணாய் எல்லாமாய் விளங்குபவர் விநாயகர். "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் சொரூபம் ஆவார் விநாயகர். அவருடைய காதுகளும், வளைந்த துதிக்கையும், அகன்ற தலையும் இந்த "ஓம்" என்ற எழுத்தின் வடிவைக் காட்டுகிறது. இரு திருவடிகளும், ஞான சக்தியையும், கிரியா சக்தியையும் குறிக்கும். இவருடைய பேழை வயிற்றில் அகில அண்டமும் அடங்கும். துதிக்கையைச் சேர்த்த ஐந்து கரங்களும் ஐந்து திருத் தொழில்களைச் செய்யும்.
எழுத்தாணி பிடித்த கரம் படைப்புத் தொழிலையும், மோதகம் ஏந்திய கை காத்தல் தொழிலையும், அங்குசம் கொண்ட கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருக்கும் கரம் மறைத்தல் தொழிலையும், அமுத கலசம் ஏWதிய துதிக்கையானது அருள்தலையும் குறிக்கிறது. மூன்று கண்கள் முறையே சூரியன், சந்திரன், அக்னியைக் குறிக்கும். இவரின் உருவ அமைப்பில அனைத்துத் தெய்வங்களும் இணைந்திருக்கிறார்கள். நாடி பிரம்ம ரூபம், முகம் விஷ்ணு ரூபம், கண் சிவ ரூபம், இடப்பாகம் சக்தி ரூபம், வலப்பாகம் சூரிய ரூபம் ஆகும்.
யாராக இருந்தாலும் ஒரு நல்ல காரியம் துவங்கும்போது விநாயகரை வழிபட்டு ஆரம்பித்தால் அந்தக் காரியத்துக்கு இடையூறு வராது என்பது ஆன்றோர் வாக்கு. விநாயகர் என்றால் தனக்கு நிகரில்லாதவர் என்றும் பொருள் கொள்ளலாம். "வி"என்றால் தனக்கு நிகர் எவருமில்லாதவர் என்றும், "நாயகர்" என்பது தலைவனையும் குறிக்கும்.
காஞ்சிக்கும் விநாயகருக்கும் உள்ள தொடர்பினையும் எழுதுங்களேன்....
ReplyDeleteசொல்ல மறந்துட்டேன்....படம் அருமை...எங்க சுட்டீங்க?
ReplyDeleteஹிஹிஹி, மதுரையம்பதி, வாங்க, சுட்டது எல்லாம் நினைவு இல்லை, ஏதோ கிடைச்சது போட்டிருக்கேன். இந்த அளவாவது போட முடிஞ்சதேன்னு ஒரு சந்தோஷம் அவ்வளவு தான்.
ReplyDeleteம்ம்ம்., காஞ்சிக்கும் பிள்ளையாருக்கும் சம்மந்தமா? இருங்க வரேன்!