எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Thursday, September 13, 2007
காயத்ரி மந்திரத்தை!
காயத்ரி மந்திரம் பற்றிப் பல பேர் சில நாட்களாய்ச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். பிரணவ மந்திரமான "ஓம்" என்ற வார்த்தைக்கு அடுத்தபடி இந்தக் காயத்ரி மந்திரம் தான் சொல்லப் படுகிறது. பரப்ரும்மத்தின் ஸ்வரூபமான இந்த மந்திரத்தின் அதி தேவதையான காயத்ரி மாதா, மூன்று தேவியரும், மும்மூர்த்திகளும் சேர்ந்த உருவமாகப் போற்றப் படுகிறாள். விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப் பட்டதான இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. வேதமாதாவான காயத்ரியை ப்ரப்ரும்ம சொரூபம் என்ற அளவில் மட்டுமில்லாமல், ஆத்ம ஞானத்தைக் கொடுக்கும் ஒரு சக்தியாகவும் கருதுகிறார்கள்.
செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் காயத்ரி தேவி செல்வத்துக்கு அதிபதியாகவும் கருதப் படுகிறாள். ஐந்து தலைகளுடனும், பத்துக் கண்களுடனும், எட்டுத் திசைகள் மட்டுமின்றி, ஆகாயத்தில் உதிக்கும் சூரிய, சந்திரரையும், கீழே பூமியையும் பார்க்கும் விதமாக இருக்கும் காயத்திரியின் , பத்துக் கரங்களும், அந்த விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் குறிக்கும். வெண்ணிற அன்னத்துடன் இருக்கும் இவளை வணங்கினால் அறிவு வளரும் எனவும், கல்விக்கும் இவள் அதிபதி எனவும் சொல்கிறார்கள். மேலும் இவளின் மூல மந்திரத்தை ஜெபிக்கும் முறைப்படி ஜெபித்து வந்தால் மனதில் அதைரியம் மறைந்து எதையும் எதிர்நோக்கும் மனம் தானாகவே ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். மனதில் தெய்வீக சக்தி அதிகரித்து, புத்தியும், மனமும் இணைந்து ஆத்ம ஞானத்தை அறிய முற்பட இந்த மந்திரம் உதவுகிறது.
முக்கியமாக மனச் சஞ்சலம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து வருவதால் மனச் சஞ்சலம் மறைந்து மன உறுதி தோன்றுவது நிச்சயம்.
"இவ்வுலகைப் படைத்த அந்த பிரபஞ்ச சக்தியைப் போற்றுவோம்! நம்முடைய மன இருள் அகன்று ஒளி பிறக்கட்டும்" என்பதே இதன் அர்த்தம். "ஓம்" என்னும் வார்த்தை, ஆரம்பத்திலும் முடிவிலும் சேர்க்கப் படும்.
எனக்குத் தெரிஞ்ச வரை விளக்கி உள்ளேன்.
உதவி: விக்கிபீடியா
Subscribe to:
Post Comments (Atom)
I think the post is incomplete or misleading in oneway or the other.
ReplyDeleteI will tell you my queries:
* Isn't there lot of gayathri manthras for every deity - from ganesha gayathri to saniswara gayathri? Then how this name "gayathri" would denote a certain goddess?
* The manthra actually talks about a god named "Savitha" (See: thath "savithur" varenyam...) - Savitha is a name for Sun god (See Adithya hrudayam - Adithya savitha soorya...)
* We can't just go ahead and meditate on a manthra like this (like saying 'seesame' or 'abrakadabra' - it is not magic) and hope it will give benefits. Every manthra has a set of activities (such as nyasa, beeja manthra japa etc) associated with it. Without controlling the mind, nothing will work, wouldn't you agree?
I can go on but I will stop with this. Please don't mistake me - this is not to discourage you or something - i am just voicing my views, thats all :)
@Srikanth, இன்னும் எழுத வேண்டி இருப்பது உண்மை. ஆனால் "தேவதா காயத்ரி" பத்தி நான் இங்கே குறிப்பிடவில்லை. மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பது தான் நான் சொல்ல நினைக்கும் கருத்தும் கூட. சில நாட்கள் முன்னர் சிலர் நானும் காயத்திரி சொன்னேன், ஒண்ணுமே நடக்கலை என்று கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அதனால் இந்த மந்திரத்தின் மகிமை பற்றியும் சும்மா உட்கார்ந்து கொண்டு சொல்வதால் பயன் வராது என்பது பற்றியும் விளக்கவே எழுத ஆரம்பித்தேன். நான் குறிப்பிட்டிருப்பதும் மனம் கட்டுப்பாடு வரும் , வரவேண்டும் என்பதற்குத் தான். தங்கள் உதவிக்கு நன்றி.
ReplyDeleteஎன் தாய் கூறுவார்கள் "தாய்க்குமேல் ஒரு தெய்வமும் இல்லை. காயத்ரிக்குமேல் ஒரு மந்திரமும் இல்லை"
ReplyDeleteமனக்கட்டுப்பாட்டுக்கு மிகவும் தேவை காயத்ரி மந்திரம்தான்.காயத்ரி சொல்லாமல் வேறே என்ன சொன்னாலும் பலன் இல்லை
Srikanth சொன்னது போல், நானும் இது சவிதா (சூரியன்) காயத்ரி என்றே நினைத்திருந்தேன்... (பூவுலக வாழ்க்கை இந்த சூரியன் இல்லாவிடில் ஏது என்ற அர்த்தத்தில்...) விக்கி-யில்,
ReplyDeletesavitúr of Savitr the god' (genitives of savitr-, 'stimulator, rouser; name of a sun-deity' and deva- 'god' or 'demi-god') என்று போட்டிருக்கீறது... அதுவும் சரி என்றே தோன்றுகிறது. (Sanksrit Spoken dictionary-இல், ஸவித்ர்=சூரியன் தான்....)
மற்றபடி, நீங்கள் சொல்வது சரி தான்...
//சும்மா உட்கார்ந்து கொண்டு சொல்வதால் பயன் வராது ...
நன்றி...
@தி.ரா.ச. சார், வாங்க, குருவாயூரப்பன் தரிசனம் எல்லாம் நல்லாக் கிடைச்சது போலிருக்கு. உங்களுக்குத் தெரியாத விஷயமா நான் சொல்லிடப் போறேன்?
ReplyDelete@கெக்கேபிக்குணி, போட்டி போட வருவீங்கனு பார்த்தால், ஒரு வருஷம் கழிச்சு சாவகாசமாக் கடையைத் திறந்துருக்கீங்க. மறுபடி அடுத்த வருஷம் பார்க்கலாமா? :P
பெயர்க் காரணம் தான் சொல்லிட்டீங்களே ஏற்கெனவே! அதனாலே திரும்பிக் கேக்கலை!:P :P
காயத்ரி மந்திரம் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தினை நோக்கி சொல்வதாக கூறுவதே தவறு என நினைக்கிறேன்...
ReplyDelete"எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல அனைத்தும் கடந்த தெய்வீகத்தினை நோக்கி சொல்லப்படுவதே காயத்ரி மந்திரம்....இப்படி எல்லாம் கடந்த தெய்வீகமேஎ சவிதா எனப்படும். சவிதா என்பதன் பொருள்...எதனின்று எல்லாப் பொருள்களும் பிறந்தனவோ அது என்பதே சவிதாவின் பொருளாகும்"
எனவே இத்தகைய உயர்ந்த நிலையினை...பத்து கண்கள்...இருபது கைகள் என உருவகித்து பேசுவது சரியில்லை என்பதே என் கருத்து.
மனக்கட்டுப்பாட்டுடன் எந்த மந்திரம் சொன்னாலும் பலன் உண்டு
ReplyDeleteஅதிலும் காயத்ரி மந்திரம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நல்லது முறையாக சொன்னால்.
நல்ல படம். ரத்தினச்சுருக்கமான விளக்கம்.
மந்திரத்தையும் பதிவில் போட்டிருக்கலாம்.
கீதா, வேலையிலே blogger எடுத்திட்டாங்க... வேலை முழி பிதுங்க வேறு இருந்தது.. தாங்க முடியல... இப்பா வேலைய விட்டுட்டேன்.. பாக்கலாம். அதான் ஒரு வருஷமா "நடக்கிறத பாத்துக்கிட்டுருந்"தேன்:-)
ReplyDeleteபங்காளி, கேள்வியும் அது தான்.
///சவிதா என்பதன் பொருள்...எதனின்று எல்லாப் பொருள்களும் பிறந்தனவோ அது என்பதே சவிதாவின் பொருளாகும்//
பூ: (புவி) புவ: (புவனம்) ஸுவ: என்று எல்லாவற்றிற்க்கும் இறை எதுவோ... இந்த stimulator/rouser என்ற பொருள் (சிவசக்தி?) போல நன்றாக இருக்கிறது...
என் சிற்றறிவுக்கு சவிதா என்றால் சூரியன் என்றே அறிந்திருந்தேன். ஸவித்ர் என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம் போல....
//உருவகித்து பேசுவது// நம் வழக்கம்.
உங்கள் பதிவுக்கு நன்றி
ReplyDeleteசில சைக்கோக்கள் திட்டுவதற்க்கேன்றே அலைவார்கள். அவர்களினின் பின்னோட்டதை அனுமதிக்க வேண்டாம்
பின்னூட்டத்தில் என்னென்வோ சொல்கிறீர்கள் ,அவ்வளவு தூரம் ஆழ்ந்து பார்க்கும் அறிவு என்னிடம் இல்லை.
ReplyDeleteஎன் தாத்தாவும் & சித்தப்பாவும், சந்தியாவந்தனம் முழுவதுமாக பண்ண முடியாவிட்டாலும் காயத்திரியாவது சொல் என்று சொன்னார்.
அதான் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.்
ஏதோ பலருக்கும் குழப்பத்தை உருவாக்கிவிட்ட மாதிரி இருக்கு?....குழப்பமும் நல்லதே....குழம்பினால்தான் தெளிவு பிறக்கும்......
ReplyDeleteசிறு வயதில் என் அம்மா சொல்லிக் கொடுத்தது இன்றைக்கும் ஞாபகம் வருகிறது..இதற்குப் போட்டியாக என் அப்பா கந்த சஷ்டி கவசத்தை மனப்பாடம செய்.. என்பார்.. வீடு காமெடியாக இருக்கும்.. நானும் என் அக்காவும் ஆளுக்கொன்றாகப் பிடித்துக் கொள்ள.. அக்காவுக்கு காயத்ரி மந்திரமும், எனக்கு கந்த சஷ்ட கவசமும் பாடமாக ஆக்கப்பட்டது.. பசுமையான நினைவுகள்.. ஆனாலும் இந்த மந்திரத்தை என் அக்கா உச்சரிக்க அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.. மனதை ஒரு நிலைப்படுத்தும் சக்தி வாய்ந்தது என்கிறார் எனது அக்கா.. பழசை கிளறி விட்டீர்கள் அம்மா..
ReplyDeleteகெக்கேபிக்குணி, "சாவித்ரி, சரஸ்வதி, காயத்ரி," மூவரும் ஒருவருக்கே ஆன பெயர்கள்னு நான் நினைக்கிறேன். கொஞ்சம அவகாசம் கொடுங்கள், திரும்புவதற்கான ஏற்பாடுகள் வேறே, புத்தகங்களும் முக்கியமானதுக்கு இந்தியாவிலே தான் பார்க்கணும், பார்த்துச் சொல்றேன், மற்றபடி இந்தப் பதிவு இன்னும் முடியலை. அதுக்குள்ளே பிள்ளையார் வந்துட்டார். :)
ReplyDeleteபங்காளி, நீங்க சொல்றது ஒரு வித்தத்தில் உண்மைதான். மனம் ஒருமுகப் பட்டு உள்ஜோதியில் ஐக்கியம் அடைய உதவும் மந்திரம் எனவே சொல்லலாம் என்பது என் கருத்து. உருவகம் ஏன் செய்யப் பட்டது என்றால் அனைத்தும் இதில் அடக்கம் என்பதைக் காட்டுவதற்கே அன்றி வேறு இல்லை.
@மடல்காரரரே, மந்திரமும் விளக்கமும் இன்னும் தொடரணும்.
@கெக்கே, பேர் ரொம்பப் பெரிசா இருக்கா சுருக்கிட்டேன், செல்லமா, ம்ம்ம்ம், உங்களுக்கு வரவேற்பு காத்துட்டு இருக்கு! தனியா வச்சுக்கலாம்.
@ரெக்கி, ரொம்பவே நன்றி, உங்க பின்னூட்டம் ஒட்டிக்கிட்டு வரவே அடம் பிடிச்சது, ஒரு வழியா எடுத்துட்டேன். :))))
@வாங்க வடுவூர், அர்த்தம் தெரிஞ்சு சொல்லுங்க, ஆழ்ந்து பார்க்கும் அறிவு இல்லைன்னு எல்லாம் பெருந்தன்மையாச் சொல்லாதீங்க.
மதுரையம்பதி, குழப்பம் எல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மிச்சம் எழுத வேண்டி இருக்கு. ரொம்பப் பெரிசா ஆயிடுமேன்னு நினைச்சு நிறுத்தி வச்சேன். அதுக்குள்ளே பிள்ளையார் வந்துட்டார். :)
ReplyDeleteஇரண்டாம் சாணக்கியரே, பேர் கொஞ்சம் சின்னதா இருக்கலாம். போகட்டும், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிகள். உங்களோட பதிவுகளை அப்போ அப்போ படிச்சுப் பார்க்கிறேன்.
@இரண்டாம் சாணக்கியரே, சொல்ல மறந்துட்டேன், ஹிஹி, நீங்க எந்த ஊரிலே இருக்கீங்கனு தெரியலை, அதனாலே என்னா? மதுரை பார்க்கலைன்னா கூட்டிட்டுப் போங்க உங்க குடும்பத்தை, சுங்கடிப் புடவையும், சல்வார், குர்த்தாவுக்கான உடைவகைகளும், செட்டிநாட்டுப் புடவைகளும் ரொம்பவே பிரசித்தி, நீங்க இப்படிப் போய் பக்கத்துச் சந்தில் உங்க பையனோட "ஜிகிர்தண்டா"வும் குடிச்சுக்கலாம், வேறே என்னா? பில்லைப் பார்த்துக் கொதிக்கும் மனத்தை ஆறுதல் செய்விக்கத் தான். :P
ReplyDelete"நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த
ReplyDeleteமறைமொழி தானே மந்திரம் என்பர்"--
என்பார் திருமூலர்.
இது காயத்ரி மந்தரத்திற்கு முற்றிலும் பொருந்தும்.
எழுதிப் பரப்புவது அன்று காயத்ரி மந்திரம்.
சொல்லித் தெரிவது.
திருப்பித் திருப்பி தனக்குள் சொல்லச் சொல்ல பல பலன்களை உடலுக்கும் உள்ளத்திற்கும் கொடுக்கக் கூடியது.
மேன்மைமிக்கது.