ஹிஹிஹி, முதலிலே யாருக்கும் பதில் சொல்ல முடியலை, மன்னிக்கவும். எல்லாம் இந்த ஜி3 பண்ணறப்போ வர தகராறுலே தான் பதில் சொல்லலை. போஸ்ட் மட்டும் எப்படிப் போடறேன்னு கேட்கறீங்களா? போஸ்ட் ஜி3 ஆகறதும் அந்த தெய்வச் செயல் தான். வந்தால் போச்சு. இல்லைனால் மீண்டும் மீண்டும், விடா முயற்சிதான். வரவரைக்கும் விட முடியாதே! கமென்டுக்குப் பதில் சொல்றது அப்படி இல்லையே! இருந்தாலும் சிலருக்குச் சந்தேகம், சொல்லித் தான் ஆகணும். வடுவூர் குமார் எந்த டீச்சர்னு கேட்டிருக்கார், இது குழந்தைகளுக்குனு தனியா எழுதினதா, அதை அப்படியே ஜி3 பண்ணிப் போட்டு இருக்கேன். :)))) நான் தான் எடிட் செய்யறதோ அல்லது இந்த ப்ரீவியூனு ஒண்ணு இருக்கே அதைப் பார்க்கிறதோ வழக்கமே இல்லையா, அப்படியே ஜி3 பண்ணினேன், அதிலே வந்த வினை.
அப்புறம் எந்த ராமராஜன் படம்னு நம்ம "நிமோஉலகம்" கேட்டிருக்கார். எந்த நிமோ சார் நீங்க? "Finding Nemo"விலே வர நிமோ மீனா? நமக்கு எல்லாம் புரியாத ஒரு விஷயத்தை எப்படி சுலபமாக் கேட்டிருக்கீங்க? விநாயகர் அவதாரம் பத்திப் பல்வேறு கதைகள் இருந்தாலும் "பார்கவ புராணம்" லெ இருக்கிறதைக் கொஞ்சம் பசங்களுக்காக எளிமையாத் தர முயற்சி பண்ணினேன்.. தேவைன்னால் மத்தக் கதைகளும் வரும். அப்புறம் சின்ன அம்மிணி, "நான் கிருஷ்ண தேவராயன் - 2" எடுத்துட்டு வந்தாச்சு. இன்னும் படிக்க ஆரம்பிக்கலை. இந்தியாவிலே எங்கே கேட்டீங்க நீங்கனு புரியலை. "வானதி பதிப்பகம்" வெளியீடுனு நம்பறேன்.
அம்பி, எனக்கு ஒண்ணும் பிள்ளையாரைக் காக்காயோ குருவியோ பிடிக்க வேணாம். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர், அவரோட பிறந்த நாளைக் கொண்டாடறதிலே என்ன உங்களுக்குக் கஷ்டம்? உங்களுக்குக் "கணேசன்" தயவு இல்லாமல் சமைக்க முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதுக்காக எல்லாரும் அப்படியா? இங்கே "தன் கையே தனக்கு உதவி" தெரியுமா?
அப்புறம் மதுரையம்பதிக்கு என்னோட அனுபவங்களைப் பார்த்தால் சிரிப்பு வருது? க்ர்ர்ர்ர்ர்., இருங்க, அதான் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்"னு எழுதி உங்களையும் விடறதில்லையே? கோபிநாத்துக்கும், சின்ன அம்மிணிக்கும் "மாயாவி" பார்க்க இத்தனை வருஷமான்னு கேள்வி. யாரு, இந்தியாவிலே சினிமாவெல்லாம் போறாங்க? டி.வியிலே போடற சினிமாவே பார்க்க மாட்டோம். இங்கே வந்து வேறே வழி இல்லை, வீட்டிலே உட்கார்ந்து என்ன செய்யறது? ராத்திரி ஒரு 2 மணி நேரம் பார்க்கிறது, அதிலே பார்த்த படங்கள் தான் இவை எல்லாம். இந்த வாரம் ஜாஸ்தி இல்லை.
மைக்கேல், மதன,காம,ராஜன் - எத்தனாவது முறைன்னு சொல்ல முடியாது. ஆனால் ஒரு முறையும் பூராவும் பார்த்தது இல்லை.
அவ்வை ஷண்முகி _ டிட்டோ, டிட்டோ, டிட்டோ, ஒரிஜினல் இன்னும் நல்லாவே இருக்கும், ஒரு காலத்தில் ஸ்டார் எல்லாம் பணம் வாங்காமல் இருந்தப்போ பார்த்தது., ம்ம்ம்ம்ம் இப்போ ஸ்டார் வானத்தில் மட்டும் தான்.
மேஜர் சந்திரகாந்த்- ரொம்பவே லாஜிகல் ஆன படம். நல்ல யதார்த்தமான முடிவும் கூட. பலமுறை பார்த்தது தான்.
கல்லுக்குள் ஈரம் முடிச்சாச்சு. கண்ணீர் இன்னும் காயவில்லை. எப்போப் படிச்சாலும் கண்ணீர் வரும்.
மிஸ் ஜானகி - தேவன்
கோமதியின் காதலன் - தேவன்
நளபாகம் - தி.ஜானகி ராமன்,
என்ன கதை, என்ன எழுத்து, இது? உயிரோட்டம்னு சொல்றது இதைத் தானோ? இதைப் படிக்கிறவரை, எனக்கு ஜானகிராமன் எழுதினதிலே "அன்பே, ஆரமுதே!" தான் ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்போ இதுவும்.
//"அன்பே, ஆரமுதே!" ....
ReplyDeleteNice title, i think SJSurya idhai paarthu thaan title vechchaaroh...! who knows... never mind
//மாயாவி" பார்க்க இத்தனை வருஷமான்னு கேள்வி. யாரு, இந்தியாவிலே சினிமாவெல்லாம் போறாங்க//
ReplyDeleteBy the way, sivaji padam innum paarkala, appadi paarkanumnu potah computer hang aagiduthu, saripohnu paarkaradhu vitutaen...Eppavadhu TVla podamaatana ....:p
வாங்க ஆணி, சரியா இந்தப் பதிவுக்கு வந்துட்டீங்க? :P ம்ம்ம்ம் நான் கூட "படையப்பா" பார்க்காத தோஷத்தை இங்கே வந்து போக்கிக் கொண்டேன். ! :)))))))))
ReplyDeleteஎன்னளவில் தமிழ் எழுத்தாளர்களில் தேவன் போல நகைச்சுவையாக எழுதியவர் யாருமே இல்லை. மீண்டும் மீண்டும் படித்து சிரிக்கும் கதைகள் அவருடயவை.
ReplyDeleteEnnunga,
ReplyDeleteAppadiyeh namma blog pakkam vandhu thala kaamichutu pogalaam ellaiyah, (cha eppadi ellam aal sekaranyahnu sollakudadhu)
Valarndhu varum oru blog, adhuvum niraiyah Suttu podara blog listla namma Aani thaan first idam pidikumnu oru aim...
வாங்க இ.கொ. என்ன இந்தப் பக்கம் கூட அப்போ அப்போ நினைப்பு வருது போலிருக்கு? :P
ReplyDelete@வேதா, ரயிலா, நான் விமானத்தில் இல்லை வரணும்? :)))))
@ஆணி, இதானா உங்க ப்ளாகைக் கவனிக்கிற லட்சணம், ஏற்கெனவே வந்திருக்கேன், இப்போவும் வந்துட்டுப்போயிருக்கேன், என்னங்க நீங்க! :P
//வாங்க இ.கொ. என்ன இந்தப் பக்கம் கூட அப்போ அப்போ நினைப்பு வருது போலிருக்கு? :P//
ReplyDeleteநான் எப்ப வந்தாலும் இதை ஒண்ணு ஸ்டாண்டார்டா சொல்லிடுங்க. என்ன, உங்களுக்குத்தான் நம்ம பக்கம் வழியே தெரியலை!! :))
ஹிஹி இ.கொ. நான் வரேனே அப்போ அப்போ, என்சிற்றறிவுக்கு எட்டினதுக்கு மட்டும் கமென்டுவேன். :P
ReplyDeleteசிற்றறிவா? உங்களுக்கா? ஏனுங்க இப்பிடி சொல்லிட்டீங்க. 187 அடிச்சிருக்கீங்க. ரொம்ப தன்னடக்கம் தான். :)
ReplyDelete@காட்டாறு, 187 எது அடிச்சிருக்கேனு என்னோட சிற்றறிவுக்கு எட்டலங்கோவ்! பதிவா? பதிவுன்னா நீங்க கணக்கிலே வீக், மொத்தப் பின்னூட்டமே அவ்வளவுதான்னா, வேலை மெனக்கெட்டு எண்ணின உங்களை என்ன சொல்லறது?
ReplyDeleteஅப்புறம் இது எல்லாம் எண்ணி உங்களை யாரு வெளியிட்டு மொத்த மானத்தையும் சபையிலே வச்சு வாங்கச் சொன்னாங்க? நறநறநறநற