மகளிர் தினத்துக்கென்று மிச்சம் வைத்திருந்த பதிவைப் போடலாமா, வேண்டாமானு ஒரே யோசனை. மகளிர் தினம் என்னமோ போயிடுச்சு, இனிமேல் அடுத்த வருஷம் தான், ஆனால் மகளிர் நிலை என்ன மேம்பட்டு விட்டதானு தான் எனக்கு இன்னும் புரியலை. தொலைக்காட்சிகளும், அவங்க பங்குக்கு எல்லாரையும் கூப்பிட்டுப் பேட்டி கண்டு ஒளிபரப்பி, ஒலிபரப்பி, படங்கள் போட்டுக் கொண்டாடியாச்சு. "பொதிகை"மட்டுமே வழக்கம்போல் வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. ஆனால் என்னால் பார்க்க முடியலை. வழக்கம்போல் இதுவும் டாட்டாவின் சதியாகவே போனது. போன ஜன்மத்துப் பகையோ என்னமோ தெரியலை, டாட்டாவுக்கும் எனக்கும், சரியா வெள்ளிக்கிழமை அன்று பார்த்து, கேபிள் ஆபரேட்டர்கள் மெயிண்டனன்ஸ் வேலையை ஆரம்பிச்சாங்க. என்னடா ஒண்ணுமே வரலையேன்னு பார்த்தால், மெயிண்டனன்ஸ் என்று சொன்னார்கள். சரினு பொறுத்திருந்தால் கொஞ்ச நேரத்தில் "டாடா ஸ்கை" மூலம் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் வந்தது. "பொதிகை"யும் வந்துடும், வந்துடும்னு பார்த்தால் வரவே இல்லை, மறுநாள் மாலை வரை! காலையில் இருந்த முக்கியமான ஒரு நிகழ்ச்சி, ரொம்பவே ஆவலாய் எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சி பார்க்கவே முடியலை. இப்போ மறுபடி நேற்றில் இருந்து எஸ்சிவியின் ஒளிபரப்புத் தொடங்கி விட்டது. நான் நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கவே கூடாதுனு டாட்டா ஏற்பாடு செய்து நடந்த சதினு நினைக்கிறேன், வெள்ளியும், சனியும். கணேசன் தொலைபேசினப்போ கூடச் சொன்னேன், உங்க அண்ணா சதியா இருக்கும் போல் இருக்கேனு, அவரும் ஆமாம், நான் சொன்னேன்னு யார் கிட்டேயும் சொல்லவேண்டாம்னு சொல்லிட்டார். அம்பி, ஓகேயா? இதான் கணேசன் என்னோட பேசினதில் ஹைலைட்டான விஷயம்! :P ம்ம்ம்ம் பொதிகையின் டைரக்டர் ஸ்ரீதர் பற்றிய தொகுப்பும் குறிப்பிட்டுச் சொல்லும்படியா இருக்கு. இப்படி ஒரு அருமையான டைரக்டருக்கு வந்த கதியை நினைச்சா ரொம்ப வருத்தமாவும் இருக்கு. என்றாலும் மறக்காமல் பொதிகை மட்டுமே அவர் பற்றிய தகவல்களை விடாமல் தருகிறது.
ஒரு திரைப்படமாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது ஆரம்பத்தில் இருந்து பார்க்கணும்னு நினைச்சால், அன்னிக்குத் தான் அதைப் பார்க்கவே முடியாது. அன்னிக்குனு முக்கிய விருந்தாளி வருவாங்க, இல்லைனா மின்சாரம் இருக்காது, எல்லாம் இருந்தால் மறந்து போகும், இல்லைனா வெளியே போகவேண்டி வந்திருக்கும். போனவாரம் தப்பிப் போய்த் தொலைக்காட்சியை ஒவ்வொரு சானலாய் மாற்றிக் கொண்டே வந்தப்போ அப்போத் தான் டைடில் ஆரம்பிச்சிருந்த தெனாலி படம் ராஜில்? ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். படம் பார்த்தாச்சு, பாவத்தைப் போக்கிக் கொண்டாச்சு, என்றாலும், "ஆலங்கட்டி மழை" பாட்டுக்காக மறுமுறையும் பார்க்கலாமேனு பார்த்தேன், என்ன இருந்தாலும் கமல் நடிப்பை ஜெயராம் ரொம்ப அனாயாசமாய்த் தூக்கிச் சாப்பிட்டுட்டார்னே சொல்லலாம், குண்டு வைக்கிற காட்சிகளைத் தவிர, அதை மட்டும் இன்னும் என்னால் ஏத்துக்க முடியலை, ஒரு டாக்டர், அதிலும் குடும்பத்தில் பற்றும், பாசமும் அதிகம் உள்ள ஒரு மருத்துவரால் இந்த அளவுக்கு யோசிக்க முடியுமா என்று நகைச்சுவைக்காகக் கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை. டிவிடினால் அதை ஓஓஓஓஓட்டிடலாம், இப்போ வேறே சானல் மாத்திப் பார்க்கிறதைத் தவிர வேறே ஒண்ணும் செய்ய முடியலை.
நேற்றுப் பொழுதுக்கு என்ன படம் பார்க்கிறதுன்னு ஒவ்வொரு சானலாய்த் திருப்பினால் தமிழ்ப்படங்கள் எதுவும் அப்படி ஒண்ணும் நல்லா இல்லை, கடைசியில் தூர்தர்ஷன் (நமக்கு இது ஒண்ணுதான் லாயக்கு போலிருக்குனு தோணுது!) நேஷனலில், "ரங்கீலா" படம் (எத்தனாவது முறைனு தெரியலை) ஒளிபரப்பிட்டு இருந்தாங்க, சரி பரவாயில்லைனு அதையே பார்த்தேன். பாவம் ஊர்மிளாவுக்கு டிரஸ் தைக்கத் துணி வாங்க நேரமே இல்லை தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும். என்றாலும் ஊர்மிளாவின் நடிப்புப் பாராட்டும்படியாகவே இருந்தது,சில காட்சிகளைத் தவிர. சில காட்சிகளில் ஸ்ரீதேவியையைக் காப்பி அடிக்கிறாங்கனு எண்ணம் எப்போவும் வரும், இப்போவும் வந்தது. முடிவு தெரிஞ்ச ஒன்று என்றாலும், சராசரிப் பெண்களைப் போல் நகைக்கும், நல்ல ஆடைக்கும், கொண்டாட்டங்களுக்கும் ஆசைப் படும் பெண்ணாக இருந்தாலும், வாழ்க்கை என்பது தனி, அதுக்குத் தேவை இவை இல்லை என்பதைச் சொன்னாலும், ஆமீர் கானைத் தேடி வந்து கண்டுபிடிக்கும் இடத்திலேயே படம் முடிஞ்சுடுது, என்னைப் பொறுத்தவரை. அதுக்குப் பின்னர் எல்லாமே மெலோ டிராமா தான். சராசரியான வெகு சாதாரணமான ஒரு ஆணுக்கும், கீழ் மத்தியதரக் குடும்பத்துப் (????) பெண்ணுக்கும், உள்ள காதலைக் காட்டுவது என்பதால் வசனங்களின் தேவை இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம், எனக்கு என்னமோ இதில் மணிரத்னம் கூட மெளனராகம் படத்தில் தப்புச் செய்து விட்டார்னு தோணும். (ஹை, நானும் அறிவுஜீவியாகி விட்டேனே?) இவர் நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு படத்தில் தான். ம்ம்ம்ம்ம்ம்??? மனோஜ் வாஜ்பாயுடன் ஜோடியாக இவர் நடிச்ச அந்தப் படம் பத்தி ஏற்கெனவே எழுதி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் படம் பேர் நினைவுக்கு வரதில்லை.
நேற்றைய தினமலரில் புத்தக விமரிசனத்தில் "நரசையா" அவர்களின் நீண்ட புத்தக விமரிசனம் அந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது. நரசையாவின் எழுத்துக்கள் தான் என்னைச் சுதந்திரப் போராட்டத்தின் மறுபக்கத்தைத் தேடிப் பிடித்துப் படிக்க வைத்தது. இப்போதும் அவர் எழுதி உள்ள இந்தப்புத்தகம் ஆவலைத் தூண்டுகிறது. எப்போ கிடைக்குமோ தெரியலை! விவேகானந்தா கேந்திரம் வெளியீடான இந்தப் புத்தகத்தைப் படித்தவங்க யாராவது இருக்காங்களானும் தெரியலை. இது மாதிரியாக நான் படிக்கக் காத்துட்டு இருக்கும் புத்தகங்கள் நிறையவே இருக்கு. முக்கியமாய் சீனி.விஸ்வநாதனின், பாரதி பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களின் தொகுப்பு. ஏற்கெனவேயே பெரியசாமி தூரன் எழுதி இருக்கின்றார் என்றாலும் இவ்வளவு விவரங்களின் தொகுப்பு அதில் இல்லை. மிகச் சிறிய அளவிலான புத்தகங்களே அவை. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல்களைப் பற்றி மட்டுமே இருக்கும். இப்போது மீண்டும் பாரதியின், "மெல்லத் தமிழினிச் சாகும்" பற்றிய கேள்வி எழுந்திருக்கும் நிலையில், மீண்டும், மீண்டும் படிக்க ஆசைப் படுவது சீனி.விஸ்வநாதன் அது பற்றி என்ன கருத்துச் சொல்லி இருக்கார் என்பதும் தான். மற்றபடி இந்தப் பதிவு ஒரு உரத்த சிந்தனை தான். குறிப்பாய் எதுவும் இல்லை.
\\எல்லாம் இருந்தால் மறந்து போகும், \\
ReplyDeleteசுத்தம் அம்பிண்ணே வந்து கும்ம போறாரு ;))
நானும் போன் பண்ணலாம்னு தான் இருந்தேன், நல்ல வேளை பண்ணலை. :p
ReplyDeleteபல சமயம் பொதிகை நிகழ்ச்சிகள் கலக்கலா இருக்கும், பாவம், ஆனா மார்கெட்டிங்க் தான் பண்ண தெரியாது. :))
ஹலோ தலைவி,
ReplyDeleteஅது சரி, இந்த பொதிகையில் மைக்ரோவேவ் சமயல்குறிப்புகல் லாம் பாக்க மாட்டீங்களா?
பிரசண்ட் டீச்சர்..:))
ReplyDelete(epidi thamingalishla ezuthinaathaan spelling kandupudikka maattaanga:P )
//ambi said...
ReplyDeleteநானும் போன் பண்ணலாம்னு தான் இருந்தேன், நல்ல வேளை பண்ணலை. :p
பல சமயம் பொதிகை நிகழ்ச்சிகள் கலக்கலா இருக்கும், பாவம், ஆனா மார்கெட்டிங்க் தான் பண்ண தெரியாது. :))//
namma thalaiviya marketing managera akki paakka sollunga.. appuram paarunga "thanipaerum chennal"a varum pothikai:P
//கணேசன் தொலைபேசினப்போ கூடச் சொன்னேன், உங்க அண்ணா சதியா இருக்கும் போல் இருக்கேனு, அவரும் ஆமாம், நான் சொன்னேன்னு யார் கிட்டேயும் சொல்லவேண்டாம்னு சொல்லிட்டார்//
ReplyDeleteகணேசனா இப்பிடிச் சொன்னாரு?
கணேசனா இப்பிடிச் சொன்னாரு?
கணேசனா இப்பிடிச் சொன்னாரு?
கணேசனா இப்பிடிச் சொன்னாரு?
கணேசனா இப்பிடிச் சொன்னாரு?
:-))))
பொதிகைக்கு இந்தப் பதிவே நல்ல விளம்பரம் தான் கீதா:)
ReplyDeleteஎனக்கும் ஸ்ரீதரோட நிகழ்ச்சி பார்க்கப் பிடிக்கும். முன்ன தங்கவேலு சரோஜா நிகழ்ச்சி போட்ட போதும் நினைச்சுப்பேன். பழசை மறக்காமல் இருக்ககங்களேன்னு.
இப்பவும் கதை கதையாம் காரணமாம் ,பழைய சினிமாக்கள் பத்தி வந்து கொண்டு இருக்கு.
பொன் விளையும் பூமி யிலிருந்து எல்லாமே நன்றாகத்தான் இருக்கு.