

பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் முன்னர் கீழே உள்ள திருவாவினன் குடிக்குச் செல்லுவோமென்றால், கூட்டம் உள்ளே செல்லவே விடவில்லை. சரி, முதலில் மலைக்கோயிலுக்குச் சென்று பார்ப்போம் என மலை ஏற முடியாது என்ற காரணத்தால், ரெயிலுக்குச் சென்றோம். வழியிலேயே பலவிதமான ஏஜெண்ட்கள். எங்க மூலம் போனால் ஒழிய சாமி தரிசனம் கிட்டாது எனப் பயமுறுத்தல்கள். எல்லாவற்றையும் தாண்டி மலைக்குச் செல்ல ரெயிலில் டிக்கெட் எடுக்கப் போனால், அதிலும் சீக்கிரம் செல்லச் சிறப்புக்கட்டணம் 50ரூ. மலைக்குப் போக மட்டும், இந்தக் கட்டணம், திரும்பி வர மீண்டும் வாங்கணுமாம். 10ரூ. சாதாரணக் கட்டணம். இரண்டிலும் கூட்டம் வழிந்தது. என்ன செய்யலாம் என யோசித்தால் 50 ரூ. கட்டணம் சீக்கிரம் போக முடியும் எனச் சில உள்ளூர்க்காரர்கள் சொன்னதின் பேரில் அந்த வரிசையில் நின்றோம், நின்றோம், நின்று கொண்டே இருந்தோம். எத்தனை யுகம் என்று தெரியாத ஒரு முடிவிற்குப் பின்னர் டிக்கெட் கொடுத்தனர். ஆனால் 10ரூ. வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது. பின்னர் 50 ரூ. எதுக்கு? புரியலை! பயணச்சீட்டு வாங்கி உள்ளே போயும் உடனேயே ரெயிலில் ஏற முடியவில்லை. ரெயில்கள் மூன்றுதான் இருந்தன. ஒன்று பராமரிப்புக்குக் காத்திருந்தது. மற்ற இரண்டும் பயணிகளை ஏற்றிச் சென்றாலும், அதிலேயே ஊழியர்கள் வேலை மாற்றத்துக்கும் செல்ல வேண்டும், பொருட்கள் செல்ல வேண்டும், கட்டுமானப் பணி நடப்பதால் அதற்கான பொருட்கள் செல்லவேண்டும். பயணிகளுக்கு இத்தனையும் மீறி இடம் கிடைப்பது ஒரு 30 பேருக்கு இருந்தால் அதிகம். :(((((((
பின்னர் ரெயில் வந்து நாங்கள் ஏறிக் கொண்டு மேலே போய்த் தரிசனத்துக்கு நின்றோம். கெட்ட வேளையிலும், நல்லவேளையாக எங்கள் சிறப்பு தரிசனக் கட்டணச் சீட்டு வரிசை கொஞ்சம் வேகமாகவே நகர்ந்தது. பால் அபிஷேகம் செய்பவர்களும் அந்த வரிசையில் விடுவதால் அவர்களும் செல்கின்றார்கள். அபிஷேகச் சீட்டும், பாலும் தான் அவர்கள் வாங்குவது. கட்டணம் ஏதும் இல்லை. சிறப்புக்கட்டணச் சீட்டு என்றதும் அர்ச்சகர்கள் கொஞ்சம் தரிசனத்துக்கு இடம் கொடுப்பது சற்றே ஆறுதல் அடைய வேண்டிய விஷயம். ஆனால் இந்த ரெயில் சேவை ரொம்பவே மோசம். இதே மாதிரியான inclined rail service யு.எஸ்ஸிலும் உள்ளது. அங்கே 1895-ல் இருந்தோ என்னமோ இந்த ரெயில் ஓடுவதாய்க் கேள்விப் பட்டேன். இங்கே இந்த புதிய நவீன யுகத்திலும் பாதி நாட்கள் ரயில் சேவை நடப்பதே இல்லை. சரியான, முறையான பராமரிப்பு இல்லை என்றே சொல்லலாம். ஒழுங்கு முறை இல்லை. நம் நாட்டிலேயே ஹரித்வாரில் இதே மாதிரியான மலையின் மேல் உள்ள மானசா தேவி கோயிலுக்கும், சண்டி தேவி கோயிலுக்கும் செல்ல தொங்கு பெட்டிகள்(வின்ச்?) மூலம் அழைத்துச் செல்கின்றார்கள். அருமையான ஏற்பாடுகள். இரண்டுக்கும் சேர்த்தே பயணச்சீட்டு வாங்கினால் சலுகை என்பதோடு அல்லாமல் போக, வர இரண்டுக்கும் சேர்த்தேதான் பயணச்சீட்டும் கொடுக்கிறார்கள். பயணத்தின்போது சிறு குழந்தைகளைக் கவரத் தொப்பி, கண்ணாடி, போன்றவைகளும், ஒவ்வொருவருக்கும் தண்ணீர் பாட்டிலும், அன்றைய செய்தித் தாளும் தருகிறார்கள். இங்கே அந்த மாதிரியான சேவை இல்லாவிட்டாலும் குறைந்த பட்சமாய் சரியான நேரத்துக்குச் சரியான முறையில் சேவையைக் கொடுத்து பக்தர்களை மணிக்கணக்காய்க் காத்திருக்க வைக்காமல் இருந்தாலே போதுமானது.
மீண்டும் சுற்றுப்பயணமா!!?
ReplyDeleteம்ம்ம்...காசு தான் கடவுள் ;)
//ம்ம்ம்...காசு தான் கடவுள் ;)//
ReplyDeleteஆமாம். இந்த கவருமென்டுக்கு காசு மட்டுமே கடவுள்.