எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 05, 2008

வ.வா.ச.வில் அம்பி? அந்நியன்? ரெமோ? (நான் இன்னும் படம் பார்க்கலை! :P)

முதலில் எனக்குத் தொலைபேசி உதவி செய்யறேன்னு சொன்ன திரு ஆகிரா, திவா,கைப்புள்ள இன்னும் மெயில் மூலமும், பின்னூட்டங்கள் மூலமும் உதவியான யோசனைகள் கொடுத்த அனைவருக்கும் என் நன்றி. பிரச்னை இன்னும் சரியாகவில்லை என்றாலும், வலைப்பக்கத்துக்கு வர முடிகிறது. அவ்வளவு தான் உங்க அதிர்ஷ்டம். என்ன செய்ய முடியும்????????? அதிலேயும் திவாவுக்கு, அவர் எழுதும் "கைவல்லிய நவநீதம்" தொடரின் ஒரே ரசிகையும், பின்னூட்டம் அளிக்கும் அளவு அறிவாளியும் ஆன நான் எங்கே வர முடியாமல் போயிடுமோனு ரொம்பவே கவலையாப் போச்சு. அதெல்லாம் இல்லை,
சும்மா எல்லாம் விடறதில்லைனு சொல்லிட்டேன். அப்புறம் சிவராத்திரிக்குப் பதிவு இல்லையே ஜாலினு ஒரே குதி! அதுவும் இல்லை, உண்டுனு சொல்லிட்டேன், லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாப் போட நமக்குத் தெரியாதா என்ன?

இந்த அபி அப்பா பாருங்க முத்துலட்சுமியை மிரட்டி வலைச்சரம் ஆசிரியர் ஆனதிலே இருந்து ஒரே பெருமை தாங்கலை. அதிலே இருந்து எல்லாரும் கூப்பிட்டுப் பாராட்டிட்டே இருக்காங்களாம். பத்தாதுக்கு அவங்க டாமேஜர் வேறே எனக்கும் ப்ளாக் எழுதச் சொல்லிக் குடுப்பா, நானும் உலகளவில் பிரபலம் ஆகணும்னு வேறே கேட்டுட்டாராம். ஸ்டேடஸ் மெசேஜே, இப்போ எல்லாம் 8 பேர் கூட சாட்டிங் அப்படினு தான் போட்டுக்கறார். நேத்திக்குப் பாருங்க காலையிலே இருந்து, மத்தியானம் வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு எட்டுப் பேர்னு ஆரம்பிச்சு சாட்டி இருக்கார். நான் 8888-வது ஆளாம். சொல்றார்.

அம்பி வேறே வ.வா.ச. அட்லாஸ் வாலிபர்னு ஒரே குதியல். அம்பியை வாலிபர்னு யார் சொன்னது? எனக்குப் புரியவே இல்லை. என்ன எழுதப் போறார்? அவருக்குத் தெரிஞ்சது தங்கமணி கிட்டே பூரிக்கட்டையிலே அடி வாங்கறதைப் பத்தியும், மாவு ஆட்டறதைப் பத்தியும் தான் தெரியும். இல்லைனா "கஜ கேசரி யோகம்" அப்படினு சொல்லிட்டு யானை வந்தால் கூட கேசரியை நினைச்சு ஜொல்லிட்டு இருப்பார். வேறே ஒண்ணும் இல்லைனா ஆபீஸிலே பஞ்சாப் குதிரை, ஹரியானா எருமை, குஜராத் புலி நு ஏதாவது பேத்திட்டு இருப்பார். அதை நான் போய் வேரே பார்க்கணுமாம். வேறே வேலை இல்லை? (ஹி, ஹி,உடனேயே போய்ப் பார்த்துட்டேனே? பின்னூட்டம் தான் போடலை, அம்பி கிட்டே சொல்ல வேண்டாம்.) எல்லாம் அஜித் லெட்டெர்.

அப்புறம் வேதா(ள்)வுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு. இதை அவங்களே அவங்க பதிவிலே சொல்லி இருப்பாங்க, என்றாலும், நானும் சொல்றேன். போன வாரம் தான் எனக்கே தெரியும். ஆனாலும் அவங்க அம்மா ஒரு மாதிரியாச் சொல்லி இருந்தாங்க, இந்த மாதிரி விஷயம்னு, வேதா மாட்டிக்கவே இல்லை, ஆன்லைனிலேயும் வரதில்லை, ஒரே பிசியாம்! :P வேதாவோட கல்யாண நாளும், என்னோட கல்யாண நாளும் ஒரு விதத்தில் ஒரே நாள். அதாவது ஆங்கிலத் தேதி, தமிழ் மாதத் தேதி, இரண்டு வரதில்லையா, இந்த இரண்டில் ஒன்று ஒரே நாள் எங்க ரெண்டு பேருக்கும். வேதாவின் கல்யாண நாளைச் சரியாகச் சொல்பவர்களுக்கு, தொண்டர் படை வந்து பின்னூட்ட மழை பொழிவாங்க.

10 comments:

  1. //சிவராத்திரிக்குப் பதிவு இல்லையே ஜாலினு ஒரே குதி! அதுவும் இல்லை, உண்டுனு சொல்லிட்டேன், லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாப் போட நமக்குத் தெரியாதா என்ன?//

    விதி வலியது!

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்., இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, முதல் ஆளா வந்து பின்னூட்டம் போட்டதில் இருந்தே தெரியலை? :P

    ReplyDelete
  3. @geetha madam, அதானே! உங்கள மாதிரி மொக்கை போட எனக்கு வரவே வராது. :p

    @veda, வாழ்த்துக்கள் வேதா. அவங்க பிளாக்ல ஒன்னும் காணோம்.

    ReplyDelete
  4. கல்யாண நாள் தானே? ரொம்ப ஈசி.

    உங்க திருமண நாள் கி.மு. வேதவோடது கி.பி. :))

    அவ்ளோ தான் வித்யாசம்.

    ReplyDelete
  5. \\ஆனாலும் அவங்க அம்மா ஒரு மாதிரியாச் சொல்லி இருந்தாங்க, இந்த மாதிரி விஷயம்னு, வேதா மாட்டிக்கவே இல்லை, ஆன்லைனிலேயும் வரதில்லை, ஒரே பிசியாம்! :P \\

    ஆகா...அப்படியா...வாழ்த்துக்கள் வேதா ;))

    அதான் கவிதை எல்லாம் காணோமா!!!


    @ அம்பி அண்ணே

    சூப்பரு ;))

    ReplyDelete
  6. அப்புறம் தலைவி...இன்னொரு பிரபலமான பதிவருக்கும் திருமணம்...யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் ;))

    ReplyDelete
  7. //திவா(தொ.கி.)//
    இந்த அநியாயத்தை பாருங்க! நானே நேத்துதான் பொறந்தேன். இதுல தொகி வாம்!
    ஹும்ம்!

    ReplyDelete
  8. @திவா, தொ.கியை தொ.கி னு தான் சொல்லணும். அதுவும் "கை வல்லிய நவநீதம்" உ.வே.சா. காலத்துத் தமிழில் எழுதறதினாலே தொ.கி. தான் நீங்க. :P

    ReplyDelete
  9. அத எழுதினது தாண்டவராய ஸ்வாமிகள் - 600 வருஷம் முன்னால.
    நான் என்ன பண்ணுவேன்?

    ReplyDelete
  10. @அம்பி, நீங்க எழுதறதா? கணேசன் எழுதிக் கொடுக்கறதா? ஒண்ணுமே புரியலையே? க்ர்ர்ர்ர்ர்ர்., எனக்கும் வேதாவுக்கும் உள்ள இணை பிரியா நட்பைப் பார்த்துப் பொறாமைப் படாதீங்க!

    @கோபிநாத், அவங்க இப்போ ரொம்ப பிசி, அதான் சொல்லலை, எழுதவும் இல்லைனு நினைக்கிறேன், நம்ம மாதிரி ஓ.வா. இல்லையே எல்லாரும். ஹிஹிஹி, மனசுக்குள்ளே அபி அப்பாவுக்குப் போட்டினு நினைக்கிறது புரியுது! :P
    இன்னும் இரண்டு பேர் இல்லை கல்யாணம் ஆகப் போறவங்க, நீங்க ஒருத்தர்னு எழுதி இருக்கீங்க? அய்யனார் கல்யாணமும் இருக்கே?

    ReplyDelete