எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Thursday, March 27, 2008
மன்னியுங்கள், சூரி சார், இது என் கண்ணோட்டம்!
என் கையில் விழுந்த சாக்லேட் பதிவுக்கு சூரி சாரின் பின்னூட்டத்தின் ஒரு பகுதி கீழே கொடுத்திருக்கேன். அதற்கான பதிலைக் கொடுக்கும் முன்னர், இதைப் பற்றி என் கணவரிடம் சொன்னபோது, அவர் சொன்ன ஒரே பதில், "உனக்குச் சொல்லத் தெரியவில்லை!" என்பதே! அது தான் உண்மையோனும் தோணுது. ஏனெனில், இதற்குப் பெருமளவில் பின்னூட்டங்களை எதிர்பார்க்காவிட்டாலும், இந்த மாதிரியான ஒரு புரிதலை நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. மிஸ்டர்& மிஸஸ் எக்ஸ் படம் பார்த்திருக்கேன், ஆனால் அதுக்கும் இந்த சம்பவத்துக்கும் துளிக்கூடச் சம்மந்தமே இல்லை. ஏனெனில் இந்தக் கோணமே வேறு. அதுக்கு முன்னாலே அவரோட பின்னூட்டத்துக்கு ஒரு பதில்.
//ஒரு கணம் நினைத்துப் பார்ப்போமா ?]
இதே எழுத்துக்கள் விகடனில் ஒரு 30 வருடங்களுக்கு முன்னால் வந்து அதை நீங்கள் அல்லது தங்கள் தாய் தந்தையர் படிக்க நேர்ந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள் ? அது இருக்கட்டும் ! இப்படிப்பட்ட ஒரு கட்டுரை அல்லது கதைதனை விகடனில் பிரசுரித்து இருப்பார்களா என்றே தோன்றுகிறது.//
தெரியலை, சார், ஆனால் நிச்சயமாய் என் கணவரோட இதைப் பத்திப் பேசி இருப்பேன் என்பது மட்டும் நிஜம். விகடன் பிரசுரித்திருக்கும் என்றே தோணுகிறது. இதை விட மோசமான கதைகள் எல்லாம் அப்போ விகடனில் வந்துட்டு இருந்தது. :((((((
//2008 ல் உங்களுக்கு " சாக்லேட் ..கையில் வந்துட்ட மாதிரி உணர்வு " ஒருவேளை
2028 அல்லது 2038 ல் ,
காட்சி காலத்துக்கேட்டவாறு மாறும்போது,
இது போன்ற வர்ணனை வரின் ? (சற்றே பாத்திரங்களை மாற்றி எழுதுங்கள் ! )//
இதைப் பற்றி முத்தமிழில் கூடப் பேசினாங்க, ஒரு பெண்ணால் இப்படிச் சொல்ல முடியுமா என்று. எத்தனை பெண்கள் அந்தக் காலம் தொட்டு, இன்று வரையிலும் சினிமா நடிகர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்? பேசுகிறார்கள். ஆனால் சொல்வதென்னமோ பெண்ணால் இப்படி எல்லாம் சொல்ல முடியாதுனு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//"..அந்தப் பெண்ணின் தெளிவான மனமும், கணவனிடம் இன்னொரு ஆணின் அழகைப் பற்றிச் சொல்லப்போவதையும், அவன் கொடுத்த சாக்லேட்டைப் பின்னர் தான் சாப்பிட வேண்டும் என வைத்திருப்பதும்....."
ஒரு வர்ணனை இப்படிப் போனால்,
எத்தனை ஆண்கள் பொறுமையுடன் கலை உணர்வுடன் இலக்கிய சுவையுடன் படிப்பார்களெனத்
தெரியவில்லை.//
இப்போதைய காலத்தில் ரசிப்பார்களா என்று தெரியலை, ஆனால் இப்போவும் பெண்கள் சினிமா நடிகர்கள் பத்தியும், தனக்கு வரவேண்டிய கணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்க விஜய் டிவியில் "நீயா, நானா" நிகழ்ச்சி பார்த்ததே இல்லைனு நினைக்கிறேன்.
Mr.& Mrs.X படம் பார்த்திருக்கிறீர்களா ?
படம் பார்த்திருக்கேன், சார், அந்த மாதிரியானத் தடுமாற்றம் எதுவுமே இதில் இல்லை. திரும்ப ஒருமுறை படிங்க, சார். தான் பார்த்த ஒரு பெண்ணை அவன் வர்ணிப்பதில் இருந்தே தெரியுது, அவன் எந்த விதமான வக்கிரக் கண்ணோட்டத்துடனும் பார்க்கலைனு. சங்க காலம் தொட்டிருந்தே பெண்கள் வர்ணிக்கப் பட்டே வருகிறார்கள். அபிராமி பட்டர் சொல்லாததா? நான் நியாயப்படுத்த வில்லை, ஆனால் என்னோட கோணத்தை மட்டுமே சொல்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் மாறுபடலாம், என்றாலும் தமிழில் மட்டுமில்லை, சம்ஸ்கிருதம், ஆங்கிலம், என்று எல்லா மொழிகளிலும். காளிதாசன் சாகுந்தலத்தில் சகுந்தலையை வர்ணிக்கிறது படிச்சிருப்பீங்க. இங்கே அப்படி எதுவும் இல்லையே? ஒண்ணும் வேணாம், பாரதியை எடுத்துக்குங்க, அவர் சொல்லலையா? கண்ணம்மாவின் அங்க வர்ணனையில் சொல்றார் பாருங்க:
"எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்
திங்களை மூடிய பாம்பினைப் போலவே
மங்களவாக்கு நித்யானந்த ஊற்று
மதுர வாய் அமிர்தம் இதழமிர்தம்
சங்கீதமென்குரல் ஸரஸ்வதி வீணை
சாயல் அரம்பை: சதுர் அயிராணி
இங்கித நாத நிலயம் இரு செவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்
மங்களக் கைகள் மஹா சக்தி வாஹம்
வயிறு ஆலிலை இடை அமிர்தவிடு
சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்
தாமரை இரு தாள்: லக்ஷ்மி பீடம்
பொங்கித் ததும்பித் திசை எங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம்"
இது பாரதியின் வரிகள். அந்தப் பையன் மட்டும் கவிஞனாய் இருந்திருந்தால் கிட்டத் தட்ட இப்படித் தான் சொல்லி இருப்பானோ என்னமோ? ஏனெனில் அவன் பார்த்ததும், பார்த்து மகிழ்ந்ததும் அப்படியான தெய்வீக அழகே. செளந்தரிய லஹரியில் ஆதிசங்கரர் சொல்லாத வர்ணனையா? அதுவும் என்ன சொல்றான், "அம்மன் கோயிலில் இருந்து அப்படியே பெயர்த்து எடுத்து வந்து," என்று ஆரம்பித்துக் கண், மூக்கு என்று சொல்கிறான். உண்மையாச் சொல்லப் போனால் எனக்கு எங்க ஊர் சர்வாங்க சுந்தரி தான் நினைவில் வந்தாள். அத்தனை உயரம், எடுப்பான தோற்றம், எந்தப் புடவை கட்டினாலும் நேரே நின்று பேசுகிறாப்போலவே இருப்பாள்.
இன்னும் சொல்கிறான், "அப்படியே கை எடுத்துக் கும்பிடணும் போல இருந்தது" என்று. இது ஒண்ணே போதாது? அப்புறமா வருது பாருங்க, "தொப்புனு, தண்ணிக்குள்ளே விழுந்து, விரால் அடிச்சுப் போய்ப் பறிச்சுட்டு வந்த தாமரைப் பூ"னு. தாமரைப் பூவே பூஜைக்கு மட்டுமே உரியது. ஏன் வேறே பூவை அவன் சொல்லவில்லை? தாமரைப் பூவை எந்தப் பெண்ணாவது சூடிக் கொள்கிறாளா? அவனோட இந்த உணர்வை அவள் புரிந்து கொண்டு தான் சாக்லேட் கொடுத்திருக்கிறாள். காசியில் அன்னபூர்ணி கோயிலில் அன்னபூரணி லட்டுத் தேரில் வருவதோடு அல்லாமல், பிரசாதமும் லட்டுத் தான். அதே போல ஹொரநாடு அன்னபூரணி கோயிலிலும் லட்டுத் தான் பிரசாதம். இங்கே சாக்லேட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான். அவன் மனைவியோடும் அவனுக்கு அந்தரங்கமான நட்பும், புரிதலும் இருப்பதாலேயே மனைவியிடமும் இதைப் பற்றித் தயக்கம் இல்லாமல் சொல்லவும் முடிகிறது. இது ஒரு தெய்வீகமான உணர்வு என்றநிலையிலேயே நான் இதைப் பார்த்தேன், பார்ப்பேன், பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்.
இதுக்கு மேலே சொல்ல ஒண்ணும் இல்லை. :(
Subscribe to:
Post Comments (Atom)
அப்பப்பா !
ReplyDeleteஎன்ன வேகம் ! நான் இதற்காக ஒரு பதிவினை எதிர்பார்க்கவில்லை. பாரதியின் "என் கண்ணம்மா" பாட்டா அது!
காளியின் வேகத்துடன் அல்லவா இருக்கிறது.
Relax. Relax .
நீங்கள் எடுத்து எழுதியிருக்கும் கட்டுரை மீதான விமர்சனம் அல்ல எனது. மேலும்,
மனித மன உணர்வுகளை, நீங்கள் குறிப்பிட்ட ஆசிரியர் எவ்வாறு நளினமாக இதமாக இனியதாகக் கையாண்டிருக்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இருப்பதாகவும் நான் சொல்லவில்லை.
நிற்க.
1. நான் தான் என்னிலைதனைச் சரியாக விளக்கவில்லை எனத் தோன்றுகிறது.
//இதைப் பற்றி என் கணவரிடம் சொன்னபோது, அவர் சொன்ன ஒரே பதில், "உனக்குச் சொல்லத் தெரியவில்லை!" என்பதே// Here also the same case. என் மனைவி ( அவளும் என்னைப் போல் முழுக்கிழம்- 66 ) யிடம் இதைப்பற்றி சொன்னபோது, அவள் சொன்ன பதிலும் அதுவே." உங்களுக்குச் சொல்லத் தெரியவில்லை !" அதோட
நிறுத்தினாளா ! இல்லையே ! "உங்களுக்கு என்னிக்குத் தான் சரியா சொல்லத் தெரிஞ்சிருக்கு " என்றும்
சொல்கிறாள்.
2. நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் விஜய் டி.வி.ஷோ நான் பார்த்ததில்லை. சீரியல்கள் நான் பார்ப்பதில்லை.
3. நான் சொல்ல முயற்சித்தது :
Impact of Gender in approaches towards psychological problems and solutions ;
and Evolutionary patterns in managing conflicts.
அடிப்படைகளிலேயே வித்தியாசங்கள் ( Differences in hypothesis) நமது பொருளிலும்
புரிதலிலும் ( understanding thereof ) இருப்பதால் மேலே தொடர்வது சரியாக இருக்காது.
//இதுக்கு மேலே சொல்ல ஒண்ணும் இல்லை. :(//
எனக்கும் இல்லை.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: தங்களது ஈ மெயில் கிடைத்தால் பொருளடங்கிய வாதத்திற்கு ( meaningful discussion )
வித்தாகும். என் வீட்டுக் கிழவி ஒரு வெப் காம் டிஸ்கஷனுக்குத் தான் தயார் என்கிறாள்.
sellidathu kaapaan sinam kaappan ; allidathu kaakkil en kaavakkal en.
ReplyDelete//அடிப்படைகளிலேயே வித்தியாசங்கள் ( Differences in hypothesis) நமது பொருளிலும்
ReplyDeleteபுரிதலிலும் ( understanding thereof ) இருப்பதால் மேலே தொடர்வது சரியாக இருக்காது.//
நீங்க சொல்வது புரியுது என்றாலும், உங்களைப் புண்படுத்திவிட்டேனோ என்ற வருத்தமாயும் இருக்கிறது. May be generation gap? I do not know. But my husband used to say,"you might have born after 20 years." :((((((((((((((( I am really feeling sorry Sir.
//அவர் சொன்ன ஒரே பதில், "உனக்குச் சொல்லத் தெரியவில்லை!" என்பதே!//
ReplyDelete@geetha madam, அடடா! இப்ப தான் சாம்பு மாமா தைரியமா ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லி இருக்கார். :))
இதுக்கு தான் மொக்கை போட்டுட்டு முழிக்க கூடாதுனு சொல்றது.
யாகவாராயினும் (மொக்கை)பதிவு காக்க
காவாக்கால் சோகாப்பர் பின்னூட்ட இழுக்கு பட்டு! :)))
@சூரி சார், மேடம் ஈமெயில் ஐடி தானே? ஊருக்கே தெரியுமே இன்னுமா உங்களுக்கு தெரியாது? :))
அப்போதும் இப்படிதான் பதிவிலேயே பதில் சொல்வீர்களா?
ReplyDeleteஎப்போதுமே அப்படித்தான்! :))))))))))
Delete