
திருக்கைலையில் சிவபெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆட்டத்தைத் தான் நிறுத்த முடியாதே! நிறுத்தினால் உலக இயக்கமும் நின்றுவிடும், பக்கத்தில் உமாதேவியாரும் நின்று கொண்டிருக்கிறார். சிவனின் ஆறு முகங்களும், ஆறு திசைகளை நோக்கி இருக்கிறது. ஆறாவது முகமான அதோமுகம், பாதாளத்தை நோக்கிக்கொண்டு கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈசான்ய முகம் ஆன ஐந்தாம் முகம் ஆகாயத்தையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. மற்ற நான்கு முகங்களும் நால்திசைகளையும் பார்க்க, தென் திசையில் இருந்து ஒரு பேரிரைச்சல், வருத்தம் கலந்த பேச்சு. திடீரென தெற்கு தாழ்ந்து போக வடக்கு உயருகிறது. என்ன இது? இப்போ சமீப காலத்தில் நாம் கல்யாணம் ஒண்ணும் செய்துக்கலையே? பூமியில் ஒரே சண்டையும், சச்சரவுமாக இல்லை இருக்கு? இந்த நாராயணனோ, பேசாமல் படுத்துட்டு, மனசுக்குள்ளே என் நடனத்தைப் பார்த்துச் சிரிச்சுட்டு இருக்கார், நடனத்தை நிறுத்தலாம்னா இன்னும் பிரளய காலமும் வரலை, இரண்டு பேரும் சேர்ந்து தானே எதுவா இருந்தாலும் செய்தாகணும், என்னுள்ளே அந்த நாராயணன் மூச்சுக் காற்றிலே இருந்துட்டு ஆட வைக்கிறான். ரெண்டு பேரும், நாங்க பிரிக்க முடியாதவங்கனு நிரூபிக்கிறதுக்காகவே, என் பேரில் இருந்தும், நாராயாணன் பேரில் இருந்தும், "ரா" வையும், "ம"வையும் சேர்த்து வச்சு, "ராம" னு பேரை பொதுப் பெயரா வச்சுட்டு இருக்கோம். ஆனால் எல்லாரும் ராம என்னமோ தனிப் பெயர்னு நினைச்சுக்கிறாங்க. அது இருக்கட்டும், இப்போ என்ன சத்தம், தென் திசை நோக்கிப் பார்க்கிறார், தட்சிணா மூர்த்தி ஆன ஈசன்.
ஏற்கெனவேயே குறுகிப் போயிருக்கும் அகத்திய முனி, தன் மனைவியான லோபாமுத்திரையுடன் அங்கே ஓட்டமாய் ஓடி வந்து கொண்டிருக்கிறார். என்ன ஆச்சுனு தெரியலையே? யாரோ துரத்துவது போன்ற பாவனையுடன் வேக வேகமாய் வருகிறாரே அகத்தியர்? என்ன ஆச்சு அவருக்கு? இந்த நாட்டை 4 பாகமாய்ப் பிரிச்சு, மேற்கே உள்ள பாகத்தை விதேகம் என்றும், கிழக்கே உள்ள பாகத்தை, ரேபதம் என்றும், இமயத்துக்கும், விந்தியத்துக்கும் மத்தியில் உள்ள பாகத்தை மத்தியம் என்றும், தென் பகுதியை பரதம் என்றும் பிரிச்சு, தென் பகுதிக்கு அகத்தியரை அனுப்பிச்சும் வச்சாச்சு. அங்கே போய்த் தமிழை வளர்க்க அவரால் ஆனது பண்ணவும் சொல்லியாச்சு, இன்னும் என்ன? அவன் தான் பொதிகைமலையில் போய் நல்ல குளிர்ச்சியான வாசஸ்தலத்தில் இடம் பிடிச்சுக் கொண்டு விட்டானே? ம்ம்ம்ம்ம்ம்???? அங்கே இருந்து தமிழ்க் காற்று நல்லாவே வீசுதுனும் சொன்னாங்க, இப்போ என்னனு புரியலையே? சிவபெருமான் உமாதேவியைக் கடைக் கண்ணால் பார்க்க உமாதேவியோ, பிள்ளையாரையும், முருகனையும் பார்க்கிறார்.
எல்லாம் வல்ல விநாயகனோ அனைத்தும் அறிந்து அமைதியாய் நிற்க, இறைவனின் ஆறாவது முகமான "அதோமுகத்தோடு" சேர்ந்து, அவற்றின் நெற்றிக் கண்களில் இருந்து தோன்றி நெருப்புப் பொறிகளில் உதயம் ஆன முருகனோ என்றால், தமிழ்க்கடவுள் என்று பெயர் பெற்றவன், ஆண்டியாக, சேனாபதியாக, வேலனாக, விருத்தனாக இருந்தவன் இப்போ என்ன செய்யறதுனு தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறானே? என்னதான் ஆச்சு? அகத்தியர் வருகிறார். ஈசனின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறுகிறார். "என்ன அகத்தியரே? ஏன் இந்த அழுகை? கொஞ்சம் சொல்லுங்களேன்," ஈசன் கேட்க, "ஈசா, தமிழ்நாட்டில் உன் கோயில்களில் தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்ப்பாடல்கள் ஒலிக்கவில்லை என்று போராட்டம் நடக்கிறதே? அதான்!" என்று அகத்தியர் தயங்கினார். "என்ன? தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கவில்லையா? இல்லையே? ஒவ்வொரு காலத்துக்கும் என் காதுகளில் விழுகின்றனவே, அவை என்ன பின்னர்? என்னோட ஐந்து முகங்களில் இருந்து பிறந்த 28 ஆகமங்களின் முறைப்படிக் கட்டி வழிபாடு நடத்தப் படும் கோயில்களில் ஒலிக்கிறதே? இது யார் சொன்னது ஒலிக்கவில்லை என்று?" ஈசன் கேட்கின்றார். "சொல்கின்றவர்களும் என் அடியார்கள் தானோ?" ஈசனின் கேள்வி. அப்படித் தான் சொல்கின்றார்கள், என்றார் அகத்தியர்.
;))
ReplyDeleteஆட்டத்தைத் தான் நிறுத்த முடியாதே! நிறுத்தினால் உலக இயக்கமும் நின்றுவிடும், பக்கத்தில் உமாதேவியாரும் நின்று கொண்டிருக்கிறார்.
ReplyDeleteஅங்கேயுமா/
This comment has been removed by the author.
ReplyDelete@கோபி, என்ன இது, எல்லாரும் சிரிக்கிறீங்க? சீரியசான விஷயம்ங்க இது! :P
ReplyDelete@திராச, சார், உங்க வீட்டு விஷயம் இது, எனக்கு என்ன சார் தெரியும்? :P
எனக்கு ஒண்ணுமே புரியல்ல.... :-)
ReplyDeleteஎனக்கு ஒண்ணுமே புரியல்ல.... :-)
ReplyDeleteநாடகம் எழுதத் தொடங்குனது பாதியில இருக்கா? அடுத்தப் பகுதி எப்ப வரும்?
ReplyDeleteஅடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஅது சரி... நீங்க பாட்டுக்க முருகனைத் தமிழ்க்கடவுள்னு சொல்லீட்டீங்க. அதுல ஒரு பிரச்சனை ஓடிக்கிட்டிருக்குதுன்னு தெரியலையா :)
முருகனைத் தமிழ்க்கடவுள்ன்னு சொல்றதுல எந்தப் பிரச்சனையும் இருக்கிறதா தெரியலையே இராகவன். ஏதாவது கனவு கண்டீங்களா? :-)
ReplyDeleteஹரியும் ஹரனும் ஒன்றே என்று அறியாதவரும் உளறோ?
ReplyDeleteபன்னக சயணன்--ஹரி
ReplyDeleteபன்னகாபரணன்--ஹரன்
கொத்ஸ். நீங்க சொன்னதை நான் இரண்டு விதமா புரிஞ்சுக்கிறேன். இரண்டுமே சரியான்னு சொல்லுங்க. :-)
ReplyDeleteஹரியும் சிவனும் ஒன்றே என்று அறியாதவரும் 'உளரோ'? - இப்படி கேக்குறீங்க.
ஹரியும் சிவனும் ஒன்றே என்று அறியாதவர் சொல்வதும் 'உளறலோ'? - இப்படி சொல்றீங்க.
:-)