மூன்று நாட்களாய் மழை வெளுத்து வாங்குது சென்னையிலே. கணினியும் புதுப் பிறவி எடுக்கிறதுக்காகப் போயிருந்தது. புத்தகங்கள், டிவியிலே சினிமானு பொழுது போக்க வேண்டியதா ஆயிடுச்சு. புத்தகங்கள் நிறையவே படிச்சேன், எப்போவும்போல். கணினி இருந்தாலும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்கிற மாதிரி டிவிக்கு நேரம் ஒதுக்க முடியறதில்லை. இப்போ வெளியேயும் போக முடியாமல் இருக்கிறதாலே டிவியும் பார்த்தேன். நேற்றுப் பார்த்த படம் மாதுரி தீட்சித், ரேகா, மனிஷா கொய்ராலா, ஜாக்கி ஷெராப், அஜய் தேவ்கன் இன்னும் பலர் நடிச்ச "லஜ்ஜா" திரைப்படம். ராஜ்குமார் சந்தோஷியின் படம்? தெரியலை. ஆனால் படத்தின் கருத்துக்களம் நல்லா இருந்தாலும், முடிவு வழக்கம் போல் சொதப்பல். மாதுரி தன் காதலனிடம் ஏமாந்து போக, திரைப்படக் கதையின் படி மேடை நாடகங்களில் நடிக்கும் கதாநாயகியான ஜானகி, (இதுதான் மாதுரியின் பெயர் படத்தில், நாடக இயக்குநர், மனிஷானு நினைக்கிறேன், பாதியிலே இருந்து சினிமா பார்க்கிறதே வழக்கமாப் போச்சு! :P) ராமாயணம் நாடகத்தில் சீதை தீக்குளிக்கும் காட்சியில் தன்னை மறந்து, தன் இயல்பு வாழ்க்கையையும் நாடகத்துடன் பிணைத்துப் பேசும் வசனங்கள் கூர்மை என்றால், கடைசிக் காட்சியில் மனிஷா வில்லனுக்குப் பாராட்டு விழாவில் பேசுவது அப்படி ஒண்ணும் பொருத்தமான ஒன்றாக இல்லாமல், கொஞ்சமும் இயல்பாய் இல்லாமல் செயற்கையாகவே தெரியுது. பெண்ணியம் பேசும் மனிஷா, பாதிக்கப் பட்ட பெண்களுக்கு என்ன செய்தார்னு தெரியலை. கணவன் மனம் மாறியதும், அவரோட வெளிநாடு போகிறார். ஜானகியை அங்கேயும் நாடகத்தில் நடிக்க வைக்கிறார்.
அடுத்தது உடனேயே ஸ்டார் உத்சவில் ஒரு படம் வந்துட்டு இருந்தது. பெயர் "அன்கஹி". இதிலே தெரிஞ்ச முகம்னு பார்த்தால் ஹேமமாலினியின் பெண்ணான இஷா டியோல் தான். வேறே யாரும் தெரியலை. பிரீத்திஷ் நந்தியின் தயாரிப்பில், விக்ரம் பட்டின் இயக்கத்தில் வந்திருக்கு. 4,5 வருஷங்களுக்குள் வந்திருக்கும்னு நினைக்கிறேன். வழக்கமான முக்கோணக் காதல் கதை தான். இதுவும் முதலில் இருந்து பார்க்கலை, என்றாலும் படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் தான் ஆகி இருந்தது. ஏற்கெனவேயே காவ்யா என்னும் பெண்ணைக் காதலித்துவிட்டுப் பின்னர் என்ன காரணம்னு புரியலை, வேறே பெண்ணை மணந்து ஒரு குழந்தையும் பிறந்து எட்டு வருஷங்கள் ஆன பின்னர் மீண்டும் காவ்யா புயல் மாதிரி கதாநாயகன் டாக்டர் சேகர் வாழ்க்கையில் நுழைகிறாள். புயல் என்றால் நிஜமாவே புயல் தான். காவ்யாவாக நடித்த இஷா டியோல் நடிக்கவே இல்லை. வாழ்ந்திருக்கிறார். உண்மையில் ஹேமமாலினியின் நடிப்பைப் பார்த்துவிட்டு இவரோட நடிப்பை ஒப்பிட்டால் இமயத்துக்கும், சிறு குன்றுக்கும் உள்ள வித்தியாசம் தான். மேக் அப் சரியாக எடுபடவில்லை இஷாவுக்கு, என்றாலும் அம்மாவின் கண்கள் இவருக்கு வரம் போல் வாய்த்திருக்கிறது. அந்தக் கண்களில் தான் என்ன ஒரு பாவங்கள் வெளிப்படுகிறது. காதலனிடம் காதல், அவன் மனைவியிடம் வெறுப்பு, கோபம், காதலையும், காதலனையும் தக்க வைத்துக் கொள்ள அவர் படும் பாடு. அவருடைய அதீதமான பொசசிவ்னெஸ், தனக்கே உரியவன் காதலன் என்ற எண்ணத்தைச் சற்றும் மறைக்காமல் அவர் காட்டும் பாங்கு, எல்லாம் ஒரு நிமிஷத்தில் கண்களாலேயே காட்டுகிறார்.
மனவியைப் பார்க்கப் போகிறான் என்று தெரிந்ததும் வரும் கோபம், தன்னைத் தனியே விட்டு விட்டுப் போகிறானே என்று தெரிந்து கெஞ்சும் கெஞ்சல், போகவில்லை, என்றதும் வரும் சந்தோஷம், காதலன், தன் பிடியினுள் இருப்பது தெரிந்து வரும் கர்வம் என்று மொத்தத்தில் ஒரே உணர்ச்சிக் குவியல். அதே போல் மனைவியிடம் செல்லும் காதலனைத் தடுக்க முடியாமல் தவிப்பதும், காதலனின் மனைவியைப் பார்க்க மறுப்பதும், அவள் திரும்பிச் சென்றதும் நீண்ட நாள் வேலக்காரனிடம் தன் மனம் திறந்து பேசுவதும், தன் மனதைப் புரிந்து கொள்ளவில்லை யாருமே என ஏங்குவதும், இஷா டியோல் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து காட்டி விட்டார். மனைவி நந்திதாவாக வரும் நடிகை யார்னு தெரியலை, பெயர் நினைவில்லை, நல்லாவே நடிச்சிருந்தாலும், அவங்க கணவனின் தடுமாற்றத்தைப் பார்த்துக் கூட வேறு பெண்ணின் நினைவு அலை மோதுகிறது கணவன் மனதில் என்பதைப் புரிந்து கொள்ளாத மனைவி. ரொம்பவே அப்பாவி. பத்திரிகைகளில் வரும் அளவுக்கு விஷயம் முத்திப் போய் விடும் வரைக்கும் அவங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் விஷயம் தெரிஞ்சதும் கணவனிடம், அவன் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறானா? என்று கேட்டுவிட்டுக் கணவன் "ஆம்" என்றதும், அறைகிறார் பாருங்க, ஒரு அறை, அந்த இடம் ஒரு மனைவியின் உள்ளார்ந்த தோல்வியின் வெளிப்பாடு.
குழந்தைக்காகக் கூட சமரசம் செய்துகொள்ளவில்லை தன் கணவன் என்பது தெரிந்தும், குழந்தையைச் சிரிக்கவைத்து விட்டுத் தான் அழுவதும், பள்ளியில், கணவனைப் பார்த்தும் கூடச் சற்றும் கலங்காமல், திரும்புவதும், நல்லா இருந்தது. ஆனால் காவ்யாவின் வற்புறுத்தலால், இரவு 2 மணிக்குக் கணவன் விவாகரத்துக் கேட்டதும், அதற்குச் சம்மதித்துவிட்டு, உடனேயே தன்னந்தனியாகக் குழந்தையை விட்டு விட்டுத் தன் பழைய முதலாளியை அந்த நடு இரவில் போய்ப் பார்த்து வேலை கேட்பது, ரொம்பவே அமெச்சூர்த் தனமாய் இருந்தது. தொலைபேசியிலேயே கேட்டிருக்கலாம். குழந்தைக்கு ஜுரம் வந்திருந்தபோதும் கணவனை அழைக்காமல் தான் தனியே இருந்து ஜெயிக்கவேண்டும் என்று நினப்பதும் சரியே. பின்னால் வயதான பெண்மணியாக வரும்போது இவரின் மேக்கப் நல்லா இல்லை.
ஆனால் டாக்டர் சேகர் குழந்தையை பார்க்கக் கிளம்பும்போது காவ்யா தடுப்பதும், அதை மீறிச் செல்ல நினைத்தும் முடியாமல் டாக்டர் சேகர் தடுமாறுவதும் பின்னர் ஒரு பக்கம் மனைவியின் நிலை, குழந்தையின் உடல் நிலை, மறுபக்கம் காதலியின் வேண்டுகோள் என்று தவித்துவிட்டுப் பின்னர் பொங்கிக் கத்துவதும் இயல்பாகவே இருக்கிறது.டாக்டர் சேகர் காவ்யாவின் தவறுகளைச் சுட்டிக் காட்டியதும் பின்னர் காவ்யா உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டதுமே கதை முடிந்து விடுகிறது. ஆனால் அதுக்குப் பின்னரும் டாக்டர் சேகர் சந்தேகத்துடன் உள்ளே போய்ப் பார்த்ததும் ஒரு நீண்ட வசனம பேசிவிட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறாள் காவ்யா. இதை அறைக்குள் நுழைந்ததுமே செய்திருக்கணும். அந்த நேரம் வசனத்துக்கு இடமே இல்லை. கடைசியில் வழக்கம் போல் கதாநாயகன் மனைவியிடம் திரும்பி வர, சுய மரியாதையுள்ள அந்தப் பெண் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்கிறாள். ஆகவே தனிவாழ்க்கை வாழும் கதாநாயகன் தன் இறுதி நாட்களில் தன் பெண்ணைப் பார்த்துத் தன் கதையைச் சொல்லுவது தான் படம்.
டாக்டர் சேகராக நடிக்கும் நபர் தன் தர்ம சங்கடமான மன நிலையை நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். மனைவியையும் விட முடியாமல், காதலியையும் விட முடியாமல் தவிப்பதும், தூக்கம் வராமல் தவிப்பதும், குழந்தையின் ஆண்டுவிழாவின் பங்கெடுக்க முடியாமல் போனதும் வருந்துவதும்,பள்ளியில் தலைமை ஆசிரியர் குழந்தையின் மனநிலை அப்பா, அம்மா பிரிவால் கெட்டுவிட்டதாய்ச் சொல்லுவதைக் கேட்டு வருந்துவதும் ஆனால் தன்னால் காதலியை விட முடியாது என்று உணர்ந்து வருந்துவதும், பின்னர் குழந்தையின் உடல் நலம் குறித்துக் கவலைப் படுவதும், பின்னர் தன் பெண்ணிடமே தன் நிலையைச் சொல்லுவிட்டுப் பெண்ணாவது புரிந்து கொண்டாளே என்ற ஆறுதலோடு இறப்பதும், நன்கு நடித்துள்ளார். வயதானவர் மேக்கப் இவருக்கு நன்றாகவே பொருந்துகிறது.
வழக்கமான பட் குடும்பத்துப் படம். முன்னர் மகேஷ் பட் "டாடி" எடுத்து பூஜா பட்டை அறிமுகம் செய்தார். இந்தக் கதையும் கிட்டத் தட்ட தன் பெண்ணிடமே தன் கதையை அப்பா தன் கடைசி நாட்களில் சொல்வதாய் அமைகிறது. டாடியில் அனுபம் கேர், பூஜா பட் இருவரும் தந்தை, மகளாக நடித்து இருந்தனர். முடிவு சுபம். இதிலும் டாக்டர் சேகர், நந்திதா இருவருக்கும் பெண்ணாக நடிக்கும் இளம்பெண் பட் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். தன் பெண்ணிடமே தான் மனைவியையும், காதலியையும் தான் பிரிய நேர்ந்த விதத்தைச் சொல்லிவிட்டு இறக்கும் தந்தையை மன்னிக்கச் சொல்லித் தன் தாயிடம் வந்து கேட்கிறாள் அந்தப் பெண். நந்திதா தான் எப்போவோ மன்னிச்சுட்டதாய்ச் சொல்லுவதோடு படம் முடிகிறது. இன்று "ராத்" என்று ரேவதி, ரோஹிணி ஹட்டங்கடி, ஆனந்த நாக், ஓம்புரி நடிச்ச திகில் படம். பேயாய் வந்து ரேவதியின் உடலில் புகுந்து கொண்டு பழிவாங்கும் பெண்ணைப் பற்றியது. மின்சாரம் வேறே போயிட்டுப் போயிட்டு வந்தது. கேபிள் சரியாவே வரலை மழையால். படம் விட்டு விட்டுத் தான் பார்க்க முடிஞ்சது. கதை, வசனம் ராம் கோபால் வர்மா னு போட்டிருந்தது, அதிசயமா இருந்தது, ராம் கோபால் வர்மாவுக்கு இப்படியும் கதை எழுத வருமானு. தமிழில் "சிதம்பர ரகசியம்" லட்சத்துப் பதின்மூன்றாம் முறையாக ராஜ் டிவியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதுக்குள்ளே கதையும் முடிஞ்சு, கத்திரிக்காயும் காய்த்துவிட்டது. ஆகவே கணினிக்கு வந்துட்டேன். இனிமேல் எப்போப் படம் பார்த்து விமரிசனம் எழுதுவேன்னு தெரியலை. உங்க அதிர்ஷ்டம்.
இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? மின்னல் இருந்தா ப்ரௌசிங் செய்யாதீங்க.
ReplyDelete\\லஜ்ஜா" திரைப்படம்\\
ReplyDeleteஇந்த படத்துக்கு பின்னனி இசை நம்ம இளையாராஜா ;))
@திவா, மழை வேணும்தான், ஆனால் அந்த அந்தக் காலத்தில் பெய்யும்போது மட்டும், இப்போ???? :(((((((
ReplyDelete@கோபி, அப்படியா, முதலில் இருந்து பார்க்கலை, அதனால் தெரியலை! என்றாலும் ரேகா போன்ற நடிகையை வீணடித்திருக்க வேண்டாம்! :((((((
மாசம் மும்மாரி பொழிய வேண்டாமா? வயலா இருந்த இடத்தில் எல்லாம் வீடு கட்டிட்டு தண்ணீ தேங்குதனா என்ன அர்த்தம்?
ReplyDelete@திவா, என்ன செய்யறது சொல்லுங்க, எத்தனை இடம் இருந்தாலும் மக்களுக்குப் பத்தலை, வீடுகளையே இடிச்சுட்டுப் புதுசா அடுக்கு மாடிக் குடி இருப்புக்கள் வருது, அதுக்கு என்ன செய்யறது? :((((((
ReplyDelete@திவா, ரோடு போடறதுனு ஒரு வேலை இருக்கு, அதை இந்த ஊரிலே முனிசிபாலிட்டியிலே மறந்தே போயிட்டாங்க, அந்த ரோடு மட்டும் கொஞ்சமாவது ஒழுங்கா இருந்தால், ம்ஹும் கனவு தான் காணறேன். :(
ReplyDeleteமொக்கையோ, மொக்கைன்னு இருக்கு பதிவு...:-)
ReplyDeleteshekar doctor - Aftab Shivdasani
ReplyDeleteWife of shekar - Amisha patel.. Tamizhla nadichirukanga
pudiya geethai padathula amisha patel vijayoda nadichirukaanga
ReplyDelete