விநாயகப் பெருமான் அருளால் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் வேலை நிறைவாக முடிவடையப் பிரார்த்திக்கின்றேன். இப்போ எழுதப் போறது மகாபாரதத்தில் இருந்தும் பாகவதத்தில் இருந்தும் வரும் சில பகுதிகள் மட்டுமே. முக்கியமாய் திரெளபதி சுயம்வரம் பற்றியும், அது நடந்த போது இருந்த அரசியல் நிலைமை பற்றியும், எந்த ஒரு சூழ்நிலையில் திரெளபதி பஞ்ச பாண்டவர்கள் ஐவரையும் மணக்க நேர்ந்தது என்பது பற்றியும், அதற்கு அவளின் உண்மையான மன நிலைமை இருந்த விதம் பற்றியும் ஒரு அலசல். இது ஒரு முன்னுரை மட்டுமே. முழுக்க முழுக்க மகாபாரதம் எழுதவும் போறதில்லை. பயப்படாதீங்க! :P இதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்த திரு வெங்கட்ராம் திவாகருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திரு கே.எம்.முன்ஷியின் இந்தப் புத்தகங்கள் பற்றிக் கேட்டதோடு சரி. அதுவும் திரெளபதியின் திருமணம் பற்றிய கேள்விகள் எழும்போதெல்லாம் அப்பா குறிப்பிட்டதோடு சரி. ராஜாஜியின் வியாசர் விருந்து தான் படிச்சிருக்கேன்.
மகாபாரதம் படித்திருப்பது என்பது வேறு. இம்மாதிரியான உளவியல் ரீதியான புரிதலோடு படிப்பது வேறு. மகாபாரதம் பல முறை படித்திருப்போம் அனைவருமே. தொலைக்காட்சியில் தொடராகவும் பார்த்திருக்கின்றோம். அம்மாதிரியான நீதிகளோ, நியாயங்களோ, யுத்தங்களோ, மனவேற்றுமைகள், திருமணங்கள் என அனைத்துமே ஒரு வரலாற்றுக் கதையின் நோக்கத்தோடு ஆய்வு செய்து சொல்லப் பட்டிருப்பது இப்போதே படிக்கின்றேன். இதில் இன்னும் படிக்க மிச்சம் இருந்தாலும், நான் படித்தது முதலில் ஐந்து சகோதரர்களின், திரெளபதியின் திருமணம் எந்தவிதமான நிர்ப்பந்தங்களுக்கும், அரசியல் சூழ்நிலைகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றது என்பதை அறியும் ஆவலிலேயே.
சாண்டில்யன் அவர்களுக்குச் சற்றும் குறையாமல், கல்கி அவர்களின் எழுத்தைப் போல் சரளமாகவும் உள்ளார்ந்த கிருஷ்ண பக்தியுடனும் , கிருஷ்ணன் மேல் தான் கொண்ட பக்தியானது எவ்வாறு இம்மாதிரியான ஒரு தொடரைத் தர நேர்ந்திருக்கின்றது என்பதையும் விவரித்துள்ளார். கிருஷ்ணனின் பரம்பரையைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள திரு முன்ஷி அவர்கள் முதலில் எழுதியதில் கம்சனின் வதத்தோடு முடிவடைகின்றது. இரண்டாவது பாகம் ருக்மிணியை சுயம்வரத்தின் போது அவள் பூரண சம்மதத்துடன் கிருஷ்ணர் கவர்ந்து வந்தது பற்றியும், ஜராசந்தன் என்னும் மகத நாட்டுச் சக்கரவர்த்தியானவன் தன் மருமகன் ஆன கம்சனைக் கண்ணன் கொன்றதால் ஏற்பட்ட தீராப் பகைமை பற்றியும் விவரிக்கின்றது. அடுத்து உள்ள மூன்றாம் பகுதி ஐந்து சகோதரர்களையும் துரியோதனன் பிடிவாதத்தால் நாடு கடத்த நேர்ந்ததையும், அவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பி ஒளிந்து வாழ்ந்ததையும், திரெளபதி சுயம்வரத்தோடு அது முடிவதையும் குறிக்கின்றது. என்றாலும் அதற்குள் தான் எத்தனை எத்தனை பிரச்னைகள், சண்டைகள், ஒளிந்து வாழ்ந்தவர்களைக் கண்டு பிடிக்கக் கிருஷ்ணர் பட்ட கஷ்டம், ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்து, அந்த அந்த நிலைமைக்கும், அரசியல் சூழ்நிலைக்கும் ஏற்ற வாறு முடிவெடுத்தல் என அனைத்துக் கிருஷ்ணரைச் சுற்றியே பின்னப் பட்டிருக்கின்றது. இதில் கிருஷ்ணர் ஒரு அவதாரமாய்ச் சொல்லப் படவில்லை. ஒரு மரியாதைக்குரிய யாதவ இளவலாகவே காட்டப் பட்டிருக்கின்றார். என்றாலும் அவரின் தோற்றமும், பேச்சும், உடல் மொழியும், அனைவரையும் கவரும் உடை அலங்காரமும், சிரிப்பும், எதற்கும் யோசித்து முடிவெடுக்கும் தன்மையும், எது வந்தாலும் தர்மம் என்பது என்ன என்று யோசித்து அதன் வழியிலே செல்ல முடிவெடுப்பதும், அதனாலேயே மக்களால் புகழப் படுவதும், ஒரு சக்கரவர்த்திக்குக் கொடுக்கும் மரியாதையை விடக் கூடுதலாய் மக்கள் கிருஷ்ணருக்குக் கொடுப்பதும், அதைக் கண்டு சிலர் புழுங்குவதுமாக முற்றிலும் மனித மனத்தின் போராட்டங்களை விவரிக்கும் ஒரு கதையாகவே இது திகழும் என நினைக்கின்றேன்.
எல்லாரும் பிசி, பிசிங்கறாங்க, நாமளும் சொல்லவேண்டாமா?? ஆகவே கொஞ்சம் பிசி, பதில் கொடுக்க முடியலை. இன்னிக்கு முடிஞ்சால் கொடுக்கிறேன். ஆற்காட்டார் வேறே நினைச்ச நேரம், வந்து ஒரே தொந்திரவு! :P:P:P
//ஒளிந்து வாழ்ந்தவர்களைக் கண்டு பிடிக்கக் கிருஷ்ணர் பட்ட கஷ்டம், //
ReplyDeleteகிருஷ்ணர் கடவுளாகக் காட்டப்படவில்லை.....
ஆஹா.... அப்படியா விஷயம்.
சுவாரசியமாக இருக்குமுன்னு (கிருஷ்ணப்)பருந்து சொல்லுது.
வாங்க துளசி, எனக்குத் தான் வர முடியலை, ஒரு மாசமா ரொம்பவே பிசி. இன்னும் ஒரு வாரத்துக்கு அப்புறம் மூச்சு விடலாம்னு நம்பறேன்.
ReplyDeleteம்ம்ம்ம்??? சுவாரசியமா இருக்குமா?? தெரியலை, ஆனால் வித்தியாசம்னு சொல்லப் போறதில்லை. பார்க்கலாம்!!!! ஒரு சாதாரண மனிதன், ஆனால் வீரன், அரசகுமாரன் செய்யக் கூடிய காரியங்களாகவே செய்த கிருஷ்ணரை மக்கள் எவ்வாறு கடவுளாய் ஏற்றார்கள் என்பதை எனக்குப் புரிந்த வகையில் சொல்லணும், முடியுமா?????????
கண்ணன் கதையா...சொல்லுங்க சொல்லுங்க ;))
ReplyDeleteஉள்ளேனய்யா போட்டுடறேன்...மிரட்டாதீங்க....:-)
ReplyDelete//ஒரு சாதாரண மனிதன், ஆனால் வீரன், அரசகுமாரன் செய்யக் கூடிய காரியங்களாகவே செய்த கிருஷ்ணரை மக்கள் எவ்வாறு கடவுளாய் ஏற்றார்கள் என்பதை எனக்குப் புரிந்த வகையில் சொல்லணும், முடியுமா?????????//
ReplyDelete:))))
முடியும்! முடியும்! முடியும்!
சொல்லுங்க கீதாம்மா. கண்ணன் துணையிருப்பான் :)
ReplyDelete