இன்று ஜெயா தொலைக்காட்சியில் விஜய் சிவா அவர்களின் "கல்யாணமே வைபோகமே" என்ற தலைப்புக்கான பாடல்கள் இடம் பெற்றன. கல்யாணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டு என்ற வார்த்தை ஏன் இடம்பெறுகின்றது என்பதற்கு அவர் சொன்ன காரணம் மிக மிக ஆச்சரியமாய் இருக்கின்றது. ஏனெனில் சாஸ்திரப் படி திருமணம் நடக்கிறது என்று போட்டால் அதற்கான சாஸ்திரங்கள் பின்பற்றப் படுவதில்லை என்று சொன்னார். உதாரணமாய் பெண்ணின் வயதை விட ஆணுக்கு மும்மடங்கு அதிகம் இருக்கவேண்டும் என்பது சாஸ்திரம் என்றும், பெரும்பாலும் அது கடைப்பிடிக்கப் படுவதில்லை என்றும் கூறினார். மேலும் ஜாதகப் பொருத்தங்கள் பார்த்துத் திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டதில்லை என்றும், கோத்திரமும், குலமுமே பார்க்கப் பட்டது எனவும், அதிசயமாக எப்போதாவது நட்சத்திரப் பொருத்தம் பார்க்கப் பட்டது எனவும் சொன்னார்.
முதல் பாட்டாக அவர் எடுத்துக் கொண்டது சீதா கல்யாணம் என்ற தலைப்பில். திருமணம் ஆவதற்கு முன்னால் பெரியவர்கள் சிலர் கல்யாணத்துக்குக் காத்திருக்கும் பெண்ணிடமோ, பிள்ளையிடமோ, அவர்களுக்கு வரப் போகும் கணவன் பற்றியோ, மனைவி பற்றியோ வர்ணிப்பது போல் சீதையிடம் ஒரு குறி சொல்லும் பெண் பாடுவது போல் பாட்டு. பின்னர் திருமண மண்டபத்திற்கு சீதை வருகின்றாள்.
அவளுக்கு ராமரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் வெட்கமும், பெரியவர்கள் இருக்கின்றார்கள் என்பதும் தடுக்கின்றது. அதையும் மீறி ஆவல் மீதூறத் தன் இடக்கையில் உள்ள வளைகளின் மேல் வெளிச்சம் படுமாறு தூக்கிக் கொள்ள, அந்தக் கை வளையல்களில் ராமரின் முகமானது பிரதிபலிக்க, சீதை தன்னிரு கடைக்கண்களால் ராமரைப் பார்க்கின்றாளாம். அருணாசலக் கவிராயரின் பாடல்களிலிருந்து பாடினார்.
அடுத்து ருக்மிணி கல்யாணப் பாடல்.பெண் சம்மதித்தால் பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்று, எதிர்த்து வருபவர்களையும் வென்றுவிட்டுத் திருமணம் செய்து கொள்ளுவதும் அனுமதிக்கப் பட்ட ஒன்று என்பதையும் சுட்டிக் காட்டினார். ருக்மிணியை கிருஷ்ணர் தூக்கிக்கொண்டு போய் ருக்மியையும் வென்றுவிட்டுத் திருமணம் செய்து கொள்ளுகின்றார். அந்த வகைத் திருமணம் பற்றிய பாடல் நாராயணீயத்தில் இருந்து. பின்னர் ராதா கல்யாணம். ராதா கல்யாணம் என்பது பாகவதத்தில் இல்லை என்பதையும், பரிட்சித்து ராஜாவுக்கு சுகர் பாகவதம் சொன்னபோது ராதா என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஏன் பண்ணவில்லை என்பது பற்றியும் மிக அழகாய் விளக்கிவிட்டு ஜெயதேவரின் அஷ்டபதிப் பாடல் (22வது அஷ்டபதி) ஒன்றையும் பாடினார்.
பின்னர் நாம் போக முடியாத கல்யாணங்களை வாழ்த்தும் பாடல் ஒன்றை தியாகராஜரின் கிருதியில் இருந்து பாடி முடித்தார். பாடல்களையும், இன்னும் விபரமாகவும் வழக்கம்போல் ஜீவா எழுதுவார் என நினைக்கிறேன். இது சிறு குறிப்பு மட்டுமே. இன்னிக்கு என்னோட ஆல்டைம் ஃபேவரிட் ஆன அருணா சாயிராம். கேட்டுட்டு வரேன்.
குறிப்புகள் எடுத்துவச்சுக்கலாம் தான். ஆனால் பாட்டை அனுபவிக்க முடியாது. குறிப்பிலேயே மனம் இருக்கும். அதனால் நினைவில் இருப்பவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. சில பாடல் பற்றிய தவறான குறிப்பும் இருக்கலாம். மன்னிக்கவும்.
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றியம்மா!
ReplyDeleteநான் இனிமேதான் இந்நிகழ்ச்சியைக் கேட்கணும்.
சுவைக்கு பஞ்சமில்லாமல் அருமையா இருக்கும் போல இருக்கு!
புது புது விஷயம்....ம்ம்ம்...ரைட்டு நோட் பண்ணிக்கிட்டேன் ;)
ReplyDelete//அதையும் மீறி ஆவல் மீதூறத் தன் இடக்கையில் உள்ள வளைகளின் மேல் வெளிச்சம் படுமாறு தூக்கிக் கொள்ள, அந்தக் கை வளையல்களில் ராமரின் முகமானது பிரதிபலிக்க,//
ReplyDeleteச்வீட் :)
//ராதா கல்யாணம் என்பது பாகவதத்தில் இல்லை என்பதையும், பரிட்சித்து ராஜாவுக்கு சுகர் பாகவதம் சொன்னபோது ராதா என்ற வார்த்தைப் பிரயோகத்தை ஏன் பண்ணவில்லை //
இது பற்றி நீங்கள் எழுதியிருக்கீங்களா அம்மா?
//இது பற்றி நீங்கள் எழுதியிருக்கீங்களா அம்மா?//
ReplyDelete//http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_24.html//
கவிநயா, மேலே கண்ட சுட்டியைப் பார்க்கவும். :)))))))) எழுதி ஒரு மாசத்துக்கு மேலே இருக்கும்னு நினைக்கிறேன்.
@ஜீவா, அருமையான நிகழ்ச்சிகள் அனைத்துமே, நான் குறிப்பிட நிகழ்ச்சிகளை மட்டுமே விமரிசிக்கின்றேன். உங்களோட விரிவான விளக்கத்துக்குக் காத்திருக்கேன்.
ReplyDelete@கோபி, பார்த்து வச்சுக்குங்க, தேவைப் படுமில்லை??? :P:P:P
"பெண்ணின் வயதை விட ஆணுக்கு மும்மடங்கு அதிகம் இருக்கவேண்டும் என்பது சாஸ்திரம்"- This is incorrect. As per Valmiki ramayan, Sita was 6 years old and Rama was 13 years old at the time of their marraige.
ReplyDelete