எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 20, 2008

தமிழிசைக்கு ஒரு செளம்யா!

நேற்று மாலை ஜெயா தொலைக்காட்சியில் மார்கழி மஹோத்சவத்தில் திருமதி செளம்யா அவர்களின் இன்னிசைக் கச்சேரி நடந்தது. தன்னுடைய குருவான திரு ராமநாதனுக்கு வணக்கத்துடன் ஆரம்பித்த அவர், தமிழிசைக்குத் திரு ராமநாதன் செய்திருக்கும் அளப்பரிய தொண்டைப் பற்றியும் குறிப்பிட்டார். சிலப்பதிகாரத்தில் பெருமளவு இசை ஆய்வு செய்து அவர் வாங்கிய முனைவர் பட்டத்தையும் குறிப்பிட்டுவிட்டு, இன்று தானும் அவர் வழியைப் பின்பற்றித் தமிழ்ப் பாடல்களைச் சங்க காலத்தில் இருந்து பாபநாசம் சிவம், கவியோகி சுத்தானந்த பாரதியார் வரையிலும் உள்ள பாடல்களை எடுத்துக் காட்டப் போவதாய்க் குறிப்பிட்டார்.

முதல் பாடலாக சங்கப் பாடலில் அகநானூறுப் பாடலை எடுத்துக் கொண்ட செளம்யாவின் அகத்திலிருந்து உணர்வு பூர்வமாய்ப் பாட்டு வந்து அனைவரையும் சங்க காலத்துக்கே கூட்டிச் சென்றது. அடுத்ததாய்ச் சிலப்பதிகாரத்தில் அவர் எடுத்துக் கொண்ட ஆய்ச்சியர் குரவைப் பாடலும், அதை அடுத்த சோழர் காலப் பாடல்களும், அருணகிரிநாதரின் திருப்புகழும், அருணாசலக் கவிராயரின் பாடல்களும், ஒவ்வொன்றையும் அவர் பாடிக்காட்டி, சந்தேக விளக்கம் கொடுத்த முறையும், சிறிதும் தடுமாறாமல் தெளிவான உச்சரிப்புடன் பாடிய முறையும், ஒத்துழைத்த பக்கவாத்தியக் காரர்களும், பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆத்மார்த்தமாய் சங்கீதம் வருகின்றது என்பதை உணர முடிந்தது. ஒரு தவமே செய்கின்றார்.

தன்னுடைய ஐஐடி படிப்பை இம்மாதிரியான ஒரு ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு சிறிதும் நேரத்தையும் வீணாக்காமல், ரசிகர்களையும் ஏமாற்றாமல், சற்றேனும் அலட்டிக் கொள்ளாமலும் ஒவ்வொரு ராகமும் எந்த எந்தப் பண்ணில் அமைந்திருக்கவேண்டும் என்பதையும் அவற்றுக்கு உள்ள சிறு சிறு மாறுபாடுகளோடு பாடிக் காட்டியதையும் குறிப்பிடவேண்டும். தமிழிசை எவ்வாறு வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்பதை நன்றாகவே சுட்டிக் காட்டியதோடு அல்லாமல் சத்தம் போடாமல் ஒரு புரட்சியே பண்ணி இருக்கின்றார்.

கடைசியில் அவர் பாடிய "வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு, வாழிய வாழியவே! வந்தேமாதரம்!" ஒரு அருமையான எடுத்துக்காட்டு. இன்று காலையும் மறு ஒளிபரப்பைக் கேட்க வைத்த நிகழ்ச்சியை அளித்த ஜெயா தொலைக்காட்சிக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். செளம்யாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

வந்தேமாதரம்!

14 comments:

  1. இப்போதான் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தேன், அதைப்பற்றி எழுதலாம்ன்னு நினைச்சா, நீங்க சொல்லிட்டீங்க!
    ஆமாம்மா, தமிழிசைக்கு சௌம்யா!
    போனமுறை நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள், இந்த முறை தமிழிசை வரலாறு!
    அருமையா பண்ணினாங்க.
    அவர் பாடிய நம்மாழ்வார் பாசுரத்தை இசையமைத்தது
    வயலின் வாசித்த எம்பார் கண்ணன் அவர்களாம்!
    கண்ணனுக்கும் HatsOff!
    http://www.embarkannan.com/

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி கீதா.

    எங்க ஃபேவரிட் சௌம்யாதான்.

    அதுக்காக மத்தவங்களைக் கேக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன்:-)))

    இதுபோல சமயங்களில்தான் சென்னையை ரொம்பவே மிஸ் செய்கிறேன்ப்பா.

    போகட்டும், உங்களுக்குக் கிடைச்சதே அதுவே மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. ஆமாம், காலையில் கேட்க/பார்க்க கிடைத்தது. நல்ல நிகழ்ச்சி.

    ReplyDelete
  4. //தன்னுடைய ஐஐடி படிப்பை இம்மாதிரியான ஒரு ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு சிறிதும் நேரத்தையும் வீணாக்காமல், ரசிகர்களையும் ஏமாற்றாமல், சற்றேனும் அலட்டிக் கொள்ளாமலும்//

    இதுக்குப் பேர் தான் டெடிகேஷன் என்பதோ ...

    ReplyDelete
  5. மிக அருமையாக ரசனையுடன் வர்ணித்திருக்கிறீர்கள்.

    'சிலப்பதிகாரத்திலிருந்து (பாபநாசம்) சிவன்' வரை நாங்களும் கேட்டு
    ரசித்தோம்.

    ReplyDelete
  6. @ஜீவா, நன்றி, ஆமாம் எம்பார் கண்ணன் இசை அமைப்புனு கேள்விப் பட்டேன். குறிப்பிடவில்லை. ஆனால் காலை ஒளிபரப்பு அரை மணி நேரமே இருந்ததால் மாலை இடம் பெற்ற சில விடுபட்டுப் போய் விட்டது. :((((((

    ReplyDelete
  7. @ஜீவா, சுட்டிக்கு நன்றி.

    @துளசி, இணையத்திலேயே கேட்க முடியும் போலிருக்கே??? முயன்று பாருங்களேன். அருமை ங்கிற வார்த்தை அதுக்குப் பொருத்தமே இல்லை போங்க! எங்களுக்கும் செளம்யாவின் இன்னிசையே பிடிக்கும்.

    ReplyDelete
  8. @மெளலி, வாங்க, மதுரை எப்படி இருக்கு?? ரொம்பக் கூட்டமாமே? :)) அத்தனை கூட்டத்திலும் எப்படியோ போய்ட்டு வந்துடறீங்க!

    ReplyDelete
  9. @சதங்கா, முதல் வருகை இல்லைனு நம்பறேன், ஆமாம் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புத் தான் இது. அதுவும் ஒவ்வொரு பாடலும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருதே, எழுதும்போதே கண்ணில் நீர் வருது. அவ்வளவு அர்ப்பணிப்பு, நம்மையும் ஒன்றிப் போகச் செய்யும் இசை!

    ReplyDelete
  10. வாங்க ஜீவி ஐயா, ரொம்பவே அருமையான அற்புதமான நிகழ்ச்சி. மனதிற்கே நிறைவாய் இருந்தது. வந்ததுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. அட சங்கீதம் பத்தி எல்லாம் கூட நீங்க எழுதறீங்க? :))

    பாத்து, சென்னைல மறுபடி புயல் வர போகுது. :p

    ReplyDelete
  12. யாராவது யு ருயூப்பில் போட்டால்; நாங்களும் களிக்கலாம்.
    நன்கு அனுபவித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  13. @யோகன், இங்கே கேட்கவும், யூ ட்யூபில் கேட்கலாம், எனக்கு அவ்வளவு தொழில் நுட்பமும் தெரியாது. http://jeevagv.blogspot.com/2008/12/blog-post_9620.html

    ReplyDelete
  14. @அம்பி, உங்களை மாதிரி சங்கீத ரசனையே இல்லாதவள் என்று நினைச்சீங்களோ என்னையும்? :)))))))

    ReplyDelete