
முதலில் கே.எம்.முன்ஷி அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கலாம், என்றாலும் தெரியாதவங்களுக்காக. படம் கிடைக்கவில்லை, தேடிட்டேன். கூகிளாரும் உதவவில்லை. கனையாலால் மனேகாலால் முன்ஷி என்பது முழுப் பெயர். பல்முனைத் திறமைகள் படைத்தவர். 1887-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பரூச் நகரில் டிசம்பர் 3--ம் தேதி பிறந்தார். இவரின் படிப்பு பரோடாவில் நடந்தது. அரவிந்தரிடம் இவர் கல்லூரியில் பயின்றிருக்கின்றார். மும்பை ஹைகோர்ட்டில் வக்கீலாய்த் தொழிலைத் தொடங்கினார். காந்தியின் இந்திய வருகைக்குப் பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்து முழுமூச்சுடன் ஈடுபட்டார். பலமுறைகள் சிறை சென்றிருக்கும் இவர் உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் போது சர்தார் படேல் இவரைக் கவர்ந்தார். படேலின் தீரமும், மன உறுதியும் இவரைப் பெருமளவு ஈர்த்தது. 1930-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட செண்ட்ரல் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளியில் உறுப்பினராய் இருந்தார். 1938-ம் ஆண்டு மும்பையில் பாரதீய வித்யா பவனைத் தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்த சமஸ்தானங்களை படேல் இணைக்கும்போது அவருக்கு உறுதுணையாக இருந்து பல உதவிகள் புரிந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை அமைக்கும்போது அம்பேத்கர் தலைமையில் இருந்த குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அனைத்துக்கும் மேலே குஜராத்தில் சோம்நாத் சிவன் கோவிலைப் புனரமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடந்து மக்கள் தரிசனத்திற்குத் தயார் செய்யும் வேலையை சர்தார் படேல் செய்ய ஆரம்பிக்கும்போது இவர் பின்னிருந்து அதற்கு ஆவன செய்து கோயிலைச் சீரமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடித்து, சோம்நாத் கோயிலை மீண்டும் மக்களுக்கு அர்ப்பணித்தார்.
நேருவுடனான சிறு சிறு உரசல்களாலும், நேருவால் நிர்வாகம் செய்யப் பட்ட காங்கிரஸில் இருக்க இஷ்டம் இல்லாமலும், இவர் பின்னர் ராஜாஜி அவர்களால் ஏற்படுத்தப் பட்ட சுதந்திரா கட்சியில் சேர்ந்தார், என்றாலும் இந்தக் கட்சி மக்களிடையே அவ்வளவு முக்கியத்துவம் பெறாத காரணத்தால் பின்னர் ஜனசங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1952-57 வருஷங்களில் உத்தரப் பிரதேசத்தின் கவர்னராக இருந்து வந்தார். அரசியல் தவிர, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் இயற்கையை நேசிக்கும் ஒரு ரசிகரும் ஆவார். இவர் மத்திய அரசில் விவசாய மந்திரியாக இருந்தபோது இவரால் 1950-ல் தொடங்கப் பட்ட வன மகோத்சவம் பின்னர் பல வருடங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் ஜூலை மாதம் பல இடங்களிலும் பல்வேறு மரங்களை நட்டு மகிழும் ஒரு விழாவாக நடை பெற்று வந்தது.
இவற்றைத் தவிர இவர் ஒரு பெரும் இலக்கியவாதியாகவும் இருந்து வந்தார். தம் சொந்த மாநிலம் ஆன குஜராத்தின் மேல் பெரும் ஈடுபாட்டுடன் இவர் அதன் வரலாற்றையும் பதிவு செய்திருக்கின்றார். சிறு வயது முதல் கிருஷ்ணர் பற்றிய பல்வேறு கதைகளைக் கேட்டு வந்த இவர், அதன் அடிப்படையில் கிருஷ்ணாவதாரம் பற்றிய ஏழு புத்தகங்களை எழுதி உள்ளார். இவர் இறந்து விட்டதால் இவரால் இவற்றை முடிக்க முடியவில்லை. ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை. அதிலிருந்து சில பகுதிகளை மட்டுமே எனக்குப் புரிந்த கோணத்தில் பார்க்கப் போகின்றோம். ஒரு நாலைந்து நாட்களுக்கு உள்ளவற்றை முன்கூட்டியே போட்டு வச்சிருக்கேன். பின்னூட்டங்களுக்குப் பதில் வரலைனு நினைக்க வேண்டாம். கூடிய சீக்கிரமே கொடுப்பேன். நன்றி.
டிஸ்கி: கொத்தனாரும், திவாவும் அடிக்க வந்ததில் முன்ஷி படத்தைப் போட்டுட்டேன். இப்போ ஓகேயா கொத்து&திவா???? இவரைப் பற்றி நான் எழுதினது கொஞ்சம் தான். பதிவு பெரிசாப் போயிடும்ங்கறதாலேயும், நோக்கம் மாறிடும் என்பதாலேயும் அதிகம் எழுதவில்லை. இ.கொ. கொடுத்திருக்கும் சுட்டிகளுக்கு விஜயம் செய்யுங்கள். நன்றி.
முதலில் இந்த நேரத்தில் என்ன செய்யறீங்க?
ReplyDeleteஇரண்டாவது கூகிளாரிடம் எப்படி கேட்கணுமோ அப்படிக் கேட்கணும். தெரியலையா, கேட்கத் தெரிஞ்சவங்க கிட்டக் கேட்கணும். :))
நான் கேட்ட பொழுது வந்த 111,000 சுட்டிகளில் முதல் மூன்று
http://en.wikipedia.org/wiki/K.M._Munshi
http://www.liveindia.com/freedomfighters/15.html
http://www.whereincity.com/india/great-indians/freedom-fighters/kulapati.php
கண்ணன் வருகின்ற நேரம் நல்ல நேரம் :-))
ReplyDeleteகன்ஹய்யா என்றாலும் கண்ணனே. வடநாட்டு வழக்கு. மானுட கண்ணன் சொன்ன மானுடனாய் வந்த தெய்வத்தின் கதை.
ராமாயணம் சொல்லி புண்ணியம் சேர்த்துக் கொண்டது பத்தாதுன்னு முன்ஷியாரின் பாகவதமா !! சிறப்பாக வரும். வாழ்த்துகள்
நானே முன்பு ஒரு முறை இவரைப் பற்றி கொஞ்சம் படிக்கணுமுன்னு நினைத்தேன்...அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDelete//முதலில் இந்த நேரத்தில் என்ன செய்யறீங்க?//
ReplyDeleteஹையா, ஜாலி, ஜாலி, கொத்தனாருக்குக் கூடப் புரிபடாத தொழில் நுட்பத்தில் வலைப்பதிவு செய்த தனிப்பெரும் தலைவியாயிட்டேனே! :P:P:P:P
கொத்து, நானும் போய் "விக்கி"க் கிட்டே கேட்டேன், ஆனால் படம் இல்லைனு சொல்லிடுச்சு, விக்கின விக்கல்லே, அக்கம்பக்கம் எல்லாம் அதிர்ந்ததுனா பாருங்க! மத்தது பார்க்கிறதுக்குள்ளே ஆற்காட்டார் வழக்கம்போல வந்துட்டார், நேரமே கிடைக்கலை அப்புறமா! காலம்பர போடலாம்னா ஷெட்யூல் பண்ணி வச்சு பப்ளிஷும் ஆகி, நீங்களும் வந்து கல்லைத் தூக்கிப் போட்டு போணி பண்ணியாச்சு, சரினு விட்டுட்டேன்! ஓகேயா? :)))))))
வாங்க கபீரன்பன், நல்லபடியா எழுதணுமேனு கவலை தான் இப்போ அதிகமா ஆகி இருக்கு. விநாயகப் பெருமான் தான் எழுதணும் நிஜமாவே!
ReplyDeleteவாங்க மெளலி, மிரட்டினால் தானே வரீங்க?? போன பதிவின் பின்னூட்டத்துக்கும் சேர்த்து பதில் சொல்லிட்டேன். :P:P:P:P
ReplyDeleteகீதா! இவர் எழுதிய மறக்க முடியாத காவியம் "ஜெய் சோமநாத்". சின்ன வயதில் இதைப் படித்துவிட்டு, சமீபத்தில் வாசிப்பு தந்த ஈர்ப்பில் சோமநாத் போய் வந்தேன். சாமிக்கு ஒரு வணக்கம் போட்டு விட்டு, கோவிலையும், அதை ஒட்டிய கடற்கரையையும் பார்த்து பார்த்து கஜினி முகமது காலத்துக்கு போய் வந்தேன் :-) திரும்ப போகணும், இன்னும் ஒரு முறை புத்தகத்தை வாசித்துவிட்டு. இந்நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது அவருக்கு. கோவிலின் நுழை வாயிலில் பல முறை
ReplyDeleteஇடிக்கப்பட்ட கோவிலின் வரலாறும், அபூர்வ புகைப்படங்களும் இருந்தன. அங்கு தொழுகையே நடந்துக் கொண்டு இருந்தது,
ஆனால் குஜராத்தியரின் பெருமை என்று அழைக்கப்பட்ட கோவிலை, சத்தமில்லாமல் புனருதாரணம் செய்த பெருமை எம்.கே. முன்ஷி மற்றும் பட்டேலை சேரும்.அத்தனை செலவும் பொது மக்களிடம் வசூலித்த பணத்தில்!
வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி உஷா, குஜராத் ஜாம்நகரில் இருந்தப்போ 90-களிலேயே சோம்நாத் போயிட்டு வந்தோம். ஜெய் சோம்நாத் புத்தகமும் படிச்சிருக்கேன். அதைப் பத்தி எழுதறதுனா ஒரு பத்துப் பதிவுகளாவது எழுதறா போல் இருக்கும்.
ReplyDeleteகஜினி முகமதுவுக்கு முன்பிருந்த சோம்நாத்தில் இருந்து எழுதணும். ஆனால் முடியுமா தெரியலை! ரொம்ப நன்றி. எனக்கும் மறுபடியும் ஒரு முறை குஜராத், ராஜஸ்தான் வரணும்னு தான் இருக்கு. நேரமும், காலமும் ஒத்து வரணும், பார்ப்போம்!
// கேட்கத் தெரிஞ்சவங்க கிட்டக் கேட்கணும். :))//
ReplyDelete:)))
//கொத்தனாரும், திவாவும் அடிக்க வந்ததில் முன்ஷி படத்தைப் போட்டுட்டேன். இப்போ ஓகேயா கொத்து&திவா????//
ReplyDeleteஅக்கிரமம், அக்கிரமம்; நான் அடிக்க வந்தேனா? இன்னிக்கி சாப்பாடு கிடைக்கலையே உங்களுக்கு?
:P:P:P
//குலபதி கே.எம். முன்ஷி//
ReplyDeleteஇது குடும்பப் பெயரா இல்லை கெளரவிக்கப்பட்ட பெயரா கீதாம்மா?