"சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்,
பாட்டினால் என் குரல் ஆழ்ந்து ஒலிப்பதால்,
இவ்வளவு நீண்ட காலம் என் வேதனையைப்
பொறுத்திருப்பதால் நான் துன்புறுகிறேன் என்று
நீ நினைக்காமல் போனாயா?
சிரிப்பினால் என் உதடுகள் அகன்றிருப்பதால்
என்னுள்ளிருந்து வருகின்ற அழுகை உனக்குக்
கேட்காமல் போயிற்றா?
நடனத்தில் என் பாதங்கள் திளைத்திருப்பதால்
நான் செத்துக் கொண்டிருக்கிறேன் என்று
உனக்குத் தெரியாமல் போயிற்றா?"
இந்தக் கவிதையை எழுதியது நீக்ரோக் கவிஞர் லாங்ஸ்டன் ஹ்யூஸ் என்பவர். இந்தக் கவிதை ஏற்கெனவே நாலு வருஷம் முன்னாடி ஒரு பதிவிலே போட்டுட்டேன், இப்போத் திரும்பப் போடணும்னு ஒரு ஆசை, அநன்யா கேட்ட சங்கிலிப் பதிவில் போடவேண்டிய பாடல்கள் தொகுக்கவேண்டிப் பழைய பதிவுகளிலே அது பற்றிக் குறித்திருந்ததைப் பார்க்கவேண்டிப் பழைய பதிவுகளைக் கிளறிப் பார்த்துக்கொண்டிருந்தப்போ கிடைச்சது. ஒரு விதத்தில் பொருத்தமாகவும் இருக்கு.
hmm nallaathan irukku
ReplyDeleteஹ்ம்ம் நல்லாத்தான் இருக்கு இல்லை, ரொம்ப நல்லாவே இருக்கு.
ReplyDeleteஆனா நமக்குத்தான் ஏனோ இப்படி எல்லாம் எழுத தெரியறதில்லை...