எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 02, 2010

கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்!

என்னமோ ஆயிடுச்சுஇங்கே பாருங்க. கடைசியிலே நானே தொழில்நுட்ப நிபுணியா மாறி என்ன பிரச்னைனு கண்டு பிடிச்சுட்டேன். என்னோட பேசும் பொற்சித்திரமேஇந்தப் பதிவிலே நான் படம் காட்டறச்சே எல்லாம் ரா.ல. தான் எங்கேயோ இருந்து மோப்பம் பிடிச்சுட்டு வந்து பார்த்து ஊக்கு வித்துட்டுப் போவார். ஒரு ஊக்கும் அழுத்தமா இல்லை. எல்லாம் முனை முறிஞ்சு போச்சு! இப்போப் பாருங்க, அங்கே ஒரு நாளைக்கு எங்க ஊரு வராஹ நதியைப் பத்திப் போட்டால் திடீர்னு வல்லி வந்து பார்த்துட்டுப் போனாங்க. அவங்களுக்கு அப்படி ஒரு பதிவு இருக்கிறதே தெரியுமானு சந்தேகமா இருக்கிறச்சே எப்படி வந்தாங்க??

அன்னிக்கே வல்லியோட கமெண்ட் தி.வா.வுக்குப் போய் அவர் தனியா மடல் கொடுத்து இப்படி ஒரு பதிவே என் கிட்டே இல்லையே, ஆனால் இது என்னோட பதிவுனு சொல்லுதேனு கேட்டிருந்தார். எல்லாம் தலை எழுத்துனு நொந்து நூலாகிப் போனால் அவரோட பின்னூட்டம் மெளலிக்குப் போக, அப்புறமா சாவகாசமா ரா.ல. வந்து பின்னூட்டினாங்க. அவங்க பின்னூட்டினாங்களோ இல்லையோ, உடனே அது அவசரம் அவசரமா கவிநயா கிட்டே போயிடுச்சு. அவங்க வந்து என்னம்மானு அன்போட விசாரிக்கிறாங்க. நான் எட்டிக் கூடப் பார்க்கலையே? ஆனால் எல்லாப் பின்னூட்டமும் எனக்கு வருதேனு கேட்கவே, மெளலி வந்து ஆமோதிக்கிறார். கறுப்பு கிட்டே நான் தான் சொல்லிட்டேனாம். என்னவோ பண்ணிடுச்சாம் கறுப்பு. என்னத்தைச் சொல்றது??

மண்டையை உடைச்சுட்டு எல்லா செட்டிங்க்ஸ்லேயும் போய்ப் பார்த்துட்டே இருந்தேன். புரியவே இல்லை. நேத்திக்கு சாயந்திரம் போதிமரத்தடியில் உட்கார்ந்து பேசிட்டு இருந்தேனா? அப்போ ஞானோதயம் வந்துடுச்சு. உடனே போய்ப் பார்த்தேன் கமெண்ட்ஸ் பகுதியிலே. அங்கே கமெண்ட்ஸ் எல்லாம் எனக்கு வரணும்னு என்னோட மெயில் ஐடியை நான் கொடுத்திருக்க எல்லா கமெண்ட்ஸும் ரேவதிக்கு, திவாவுக்கு, மெளலிக்கு, அம்பிக்கு, கவிநயாவுக்கு, திராசவுக்குனு போயிட்டிருக்கு. என்ன அநியாயம் பாருங்க?? எல்லாரும் இதுக்கு பதில்கமெண்ட் கொடுத்தும் அம்பியும், திராச சாரும் எல்லாத்தையும் வாங்கி வச்சுட்டு திருப்பியே கொடுக்கலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போகட்டும். எல்லாத்தையும் எடுத்துட்டேன். இனிமேலே அந்தப் பதிவுகளிலே எனக்கு யாரானும் கமெண்டினாங்கன்னா யாருக்கும் வராது. எல்லாம் போய் நிம்மதியாத் தூங்குங்கப்பா! எப்போவோ அபூர்வமா வர ஒண்ணு ரெண்டு கமெண்டையும் கெடுத்து வச்சுட்டீங்க! :P

16 comments:

  1. உங்க ப்ளாகுலேயா கமெண்டுக்கு பஞ்சம்.. நல்லா அடிக்கிறாங்க ஜோக்கு!!!

    உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். இங்கே பார்க்கவும்:
    http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post.html

    ReplyDelete
  2. பாவம் கறுப்பு:))))!

    எப்படியோ எல்லாம் சுபமே:)!

    ReplyDelete
  3. இன்னிக்கி தான் உங்க ப்ளாக்க்கு மொதல் வாட்டி வந்தேன்.... இப்படி மெரட்டினா என்ன செய்ய? கடசீல இந்த கமெண்ட் ஆச்சும் உங்களுக்கு வருதா இல்லையான்னு அடுத்த போஸ்ட்ல சொல்லுங்க. வரலேனா எப்படி வரலேன்னு சொல்றதுன்னு கேக்கறீங்களா? அதாவது கமெண்ட் வந்தாலும் எப்படி நீங்க வராதுன்னு போஸ்ட் போட்டீங்களோ அதே மாதிரி கமெண்ட் வரலைனாலும் வரலைன்னு போஸ்ட் போடணும். புரிஞ்சதோ? புரியலையா? எனக்கும் தான் புரியல, நான் பீல் பண்ணினேனா.... இல்லையே..... நான் என்ன சொல்ல வரேன்னா.....அதானே... என்ன சொல்ல வந்தேன்.... ஐயோ..... உங்க ப்ளாக்க்கு வந்ததுக்கு என்னை இப்படி செஞ்சுட்டீங்களே.... ஞாயமா? (நீங்க தான் கொழப்புவீங்களா....நாங்களும் கொதறுவோமே... இப்ப என்ன பண்ணுவீங்க.... இப்ப என்ன பண்ணுவீங்க?)

    ReplyDelete
  4. வாங்க அநன்யா அக்கா, ரொம்ப நாளாக் காணாமப் போயிட்டீங்க! கமெண்டுக்கு நம்ம ப்ளாகிலே தாங்க பஞ்சம், சாதாரணப் பஞ்சம் இல்லை, முன்னே வந்ததாமே தாது வருஷப் பஞ்சம், அப்படி ஒரு பஞ்சம்! :)))))

    ம்ம்ம் பார்த்துட்டேன், நிறையப் பேரைக் கூப்பிட்டிருக்கீங்க, அதோட நானும்??? ஓகே, உங்க விதி உங்களைச் சும்மா விடுமா?? என்னாலே யூ ட்யூப், ஒய், குழாய் எல்லாம் போட முடியாது! அது இல்லாமல்!

    ReplyDelete
  5. வாங்க கோபி, வேறே வார்த்தை எப்போக் கத்துப்பீங்க? :P

    ReplyDelete
  6. ரா.ல. அதானே, கறுப்பைப் போய் அநாவசியமாச் சொல்லிட்டு இருந்தேனே!

    ReplyDelete
  7. ஒண்ணும் இல்லை ஜெயஸ்ரீ, இதை ஆரம்பிச்சா பாரதத்தை விடப் பெரிசா இருக்கும், சுருக்கமா எனக்கு வர கமெண்ட்ஸ் எல்லாம் என்னைத் தவிர மத்தவங்களுக்குப் போச்சு. :)))))))

    ReplyDelete
  8. வாங்க "அப்"பாவி, நினைச்சேன், இப்படி யாரானும் குழப்புவாங்கனு, நீங்க பொறுப்பெடுத்தாச்சா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மொதல் வாட்டியா?? கறுப்பை வைச்சு மிரட்டீ இருப்பேனே?? :))))))

    ReplyDelete
  9. நான் போடற கமெண்ட் வந்தாலும் வரலாம், வராமலும் போகலாம் வந்துட்டு வரல்லைன்னும் சொல்லலாம் வராமலே வந்ததுன்னும் சொல்லலாம் வந்த கமெண்ட் வேறபதிவுக்கும் போகலாம் அவங்க கமெண்ட் உங்க பதிவுக்கும் வரலாம் கமெண்ட் வரல்லைங்கிறதுக்காக போடல்லைன்னும் அர்த்தமில்லை, வந்ததுங்கிறதுக்காக போட்டதுன்னும் அர்த்தமில்லை..விடாது கமெண்ட் கருப்பு.. ஐயோ..ஐயோ.. நா இப்போ எங்க இருக்கேன்.

    ReplyDelete
  10. இப்ப எல்லாம் கமென்ட்ஸ் பண்றவா மார்க்கெட் எல்லாம் தக்குடி பாண்டி பக்கம் தான் . ஓஹோன்னு சாஞ்சிருக்கு.என்னதான் ஜோக்கு எழுதினாலும் அது தக்குடி பாண்டி எழுதறதுக்கு ஈடாகுமா என்ன !!
    அது தெரிஞ்சுண்டு நானெல்லாம் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாச்சு.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  11. அது என்னது !! கருப்பு கருப்புன்னு சொல்றாளே !!
    நம்மாத்துக்கு வந்த புள்ள மூக்கும் முழியும் அழகா இருந்ததே !!

    மீனாட்சி பாட்டி.

    " நீ சத்த வாய மூடிட்டு சும்மா இருக்க மாட்டே !! கீதா அம்மா சொன்னா ரைட்டாதான்
    சொல்லுவாங்க.."

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  12. வாங்க சாரல், சாரல்னு பெயரை வச்சுட்டுப் புயல் மாதிரி அடிச்சு ஆடி இருக்கீங்க?? ஹிஹிஹி, எல்லாரையும் குழப்பியாச்சு போல, ஏதோ நம்மாலானது! :))))))

    ReplyDelete
  13. @சூரி சார், அது சரி, தக்குடு என்ன மாயம், மந்திரம் பண்ணினான்? தெரியலையே?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கிரமமா இல்லை இருக்கு! அதெல்லாம் ஒரு பதிவா?? மறைமுகமா கல்யாணம் பண்ணி வைங்கறான். அம்புடுதேன் விஷயம்! கல்லிடைக்குறிச்சிக்குத் தொலைபேசியாச்சே!

    ReplyDelete
  14. //அது என்னது !! கருப்பு கருப்புன்னு சொல்றாளே !!
    நம்மாத்துக்கு வந்த புள்ள மூக்கும் முழியும் அழகா இருந்ததே//

    ஹிஹிஹி, தக்குடுதானே, ஆமாம், ஆமாம், மூக்கும் இருக்கும், முழியும் இருக்கும்! சரிதான் நீங்க சொல்றது! :P:P:P

    ReplyDelete