எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 08, 2010

அநன்யா அக்கா மாட்டி விட்டுட்டாங்களே!

இது என் கணவரோட அப்பாவின் அப்பா. 1940கள் வரையிலும் பிரபலமானவராக இருந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர். இவரின் பெரிய மகனும், என் பெரிய மாமனாரும் ஆன பாபு என்ற வெங்கட்ராம ஐயரும் புல்லாங்குழல் இசைக்கலைஞரே. ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சில சோகங்களால் அப்புறம் வாசிக்கிறதையே விட்டுட்டார்னு சொல்வாங்க. எனக்குத் தெரிஞ்சு நான் கல்யாணம் ஆகி வந்ததும், அவங்க வீட்டுக்கு முதல் முறை போனப்போ வாசிச்சார். புதுசா குடும்பத்துக்கு முதல் முதலாய் மறுமகள் வந்திருப்பதால் வாசிச்சார்னு சொல்வாங்க. அதன் பின்னர் அவரும் புல்லாங்குழலைத் தொட்டதில்லை. நானோ அப்படி ஒண்ணும் சங்கீதம்னால் உயிரைக் கொடுக்கும் குடும்பத்தில் பிறக்கலைதான். வாழ்க்கைப்பட்டதோ சங்கீதக் குடும்பத்திலே. என் கணவரின் தாத்தா அந்தக் காலங்களிலே பிரபலமான சங்கீத மேதை. அந்தக் காலத்தில் பரவாக்கரை வேணுகானம் ஸ்ரீநிவாசையர் என்றால் தெரியாதவங்க இல்லைனு இப்போ எண்பது வயசுக்காரங்க எல்லாரும் சொல்லுவாங்க. இவரிடம் சங்கீதம் படித்த பிரபலங்களில் ஃப்ளுட் நவநீதம் அம்மாள், செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்(குருகுலவாசம்போல்), மஹாராஜபுரம் சந்தானம் (சில காலம் மட்டும்) என்று என் கணவரோட அத்தை மகன்கள் இப்போவும் கூறுகின்றனர். அதில் ஒருஅத்தை மகன் சங்கீதத்திற்கெனத் தளம் அமைத்து, மேலே கண்ட தாத்தாவின் படத்தை அதில் போட்டிருப்பதாய்க் கூறுகின்றார். ஆனால் எங்க கண்ணில் அந்தத் தளம் இன்று வரை படவில்லை. ஃப்ளூட் நவநீதம்மாள் மட்டுமே ஒரு முறை தினமணி கதிரில் சங்கீத மலரில் இவர் பெயரைக் குறிப்பிட்டு நன்றாகப்பிரபலம் ஆகிக்கொண்டிருந்த சமயம் திடீரென இறந்து போனதைக் குறிப்பிட்டிருக்கிறார். அம்மா வீட்டில்(அம்மாவின் பிறந்த வீடு) படிக்கவோ, பாடவோ, ஆடவோ எதற்கும் தடை இல்லை. ஆனால் அப்பாவைக் கல்யாணம் செய்துண்டு வந்ததும் அம்மா பாடினாள் என்றால் எனக்கு விபரம் தெரிஞ்சு என் தம்பியைத் தூங்க வைக்க மட்டுமே. அதுவும் அப்பா இல்லாத நேரம் மட்டும். அப்பாவோ வீட்டில் எங்களைப் பாடவேண்டாம்னு சொல்வாரே தவிர, கச்சேரிகளுக்கு அவர் மட்டும் போவார். சங்கீதத்தோடு எனக்குத் தொடர்பு இது தான். அம்மா பாடும் தாலாட்டுப் பாடல், "ஜகதீஸ்வரி நம்பினேன், ஜகதாம்பிகே!" என்று தொடங்கும் பாடல் தான். அம்மாவின் கெஞ்சும் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது.

அதுக்கப்புறமாய் நான் அதிகமாய்க் கேட்டது பெரியப்பாவின் பஜனைகளில் பாடும் பாட்டுகள். ஐயப்பன் சமாராதனைகளில் பாடும் பாடல்கள். வீரமணியெல்லாம் அப்போ பிரபலமே இல்லை. மதுரை மீனாக்ஷி கோயில் ந்வராத்திரி விழாக்களில் பாடப்படும் பாடகர்களின் பாடல்கள். அவற்றில் சீர்காழி கோவிந்த ராஜன் பாடும் "சின்னஞ்சிறு பெண்போலே" பாட்டு. அழ வைக்கும் பாட்டு அது. அதுவும் ஒரு முறை ஆடி வீதியில் பாடும்போது, "சிவகங்கைக் குளத்தருகே" என்பதைப் "பொற்றாமரைக் குளத்தருகே" என்றும் "அன்னை சிவகாமி"யை "அன்னை மீனாட்சி" என்றும் பாடினார். அப்போது கிடைத்த standing ovationஐ சமீபத்தில் அருணா சாயிராமிற்குக் கிடைத்ததோடு ஒப்பிடலாம். தினமும் விடிகாலையில் எங்க வீட்டிற்குப் பின்னர் மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி சேரும் இடத்தில் இருந்த மதுரை சோமு வீட்டில் இருந்து அவர் பாடுவது கேட்கலாம். நாங்க இருந்த தெருவிலே முதல் வீட்டிலே தான் சமீபத்தில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் பாடகர் ஜி.எஸ். மணி இருந்தார். அவரும் காலை,மாலை இரு வேளையும் சங்கீதப் பயிற்சி செய்வார். ஹரிதாஸ்கிரி மதுரை வரும்போதெல்லாம் இவங்க வீட்டிலே தான் தங்குவார். ஹரிதாஸ்கிரியின் பஜனைப்பாடல்கள் பற்றி தக்குடு எழுதி விட்டார். கொஞ்சம் தள்ளி வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளைத் தெருவில் சேதுராமன், பொன்னுச்சாமியின் நாதஸ்வர ஆலாபனையைக் கேட்டுண்டே பள்ளிக்குச் சென்ற நாட்கள் உண்டு. இத்தனையையும் மீறிக்கொண்டு தான் சங்கீதம் கேட்கும் ஆர்வம் வளர்ந்தது, அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல் தான். வீட்டிலே ரேடியோ எல்லாம் கிடையாது. பக்கத்து போர்ஷனில் வைப்பாங்க, அங்கே போய்ச் சத்தமா வைக்கச் சொல்லுவோம். பல சினிமாப் பாடல்களும் அப்படிக் கேட்டவையே.

பெண்பார்க்க மாப்பிள்ளை வந்தபோது என் மாமனார் பாடத் தெரியுமானு கேட்க, குறைந்த பக்ஷம் மறுமகளுக்காவது சங்கீத ஞானம் இருக்கணுமேனு அவர் நினைச்சார் போல. அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் குடும்பம் நடத்தப் பாட்டு தெரியாட்டி என்ன?னு கொஞ்சம் பயத்தோடயே பச்சைக்கொடி காட்ட, நான் விடாமல், "ஆடுகின்றானடி தில்லையிலே" பாட்டை என் பெரியம்மா பெண்ணோடு பாடிக் காட்டிட்டுத் தான் விட்டேன். அப்புறமாய் அவர் பாட்டுனு எழுதிக் கூடக் காட்டக்கூடாதுனு என்கிட்டே வேண்டிக் கேட்டுட்டதெல்லாம் தனிக்கதை. தனியா வச்சுப்போம் அதை. அதுக்கப்புறம் இங்கே வந்ததும் சங்கீதம் கேட்கும் ஆர்வம் மட்டும் வளர்ந்ததே தவிர, குடும்பச் சூழ்நிலைகளால் சங்கீதம் கற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போவே ஐம்பது ரூபாய் ஃபீஸ் வாங்குவாங்க. எங்களுக்கு அது பெரிய தொகை. அதனால் கேட்பதோடு சரி. ஆனால் இங்கே சங்கீதம் கேட்கத் தடை இல்லை என்பது எனக்கு ஒரு வரமாக அமைந்தது. இந்தச் சூழலில் எனக்குத் தெரிந்த சில சங்கீத அற்புதங்கள் எத்தனையோ இருக்கு.

எம்.எஸ்.அம்மாவின் கச்சேரிகளைப் பற்றி எல்லாம் நான் சொல்வது சரியாக இருக்காது. அதே போல் எம்.எல்.வி. டி.கே.பட்டம்மாள் அம்மாள் போன்றவர்களின் கச்சேரிகளும் அருமையாக இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் தனித்தன்மையைக் காட்டி இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் விட அப்போது எனக்கு ரொம்பப் பிடிச்சது என்றால் என்.சி.வசந்தகோகிலம் அவர்களின் பாடல்களே. முன்னெல்லாம் அகில இந்திய வானொலியில் வாரம் ஒருநாள் இவங்களோட பாடல்களைப் போடுவாங்க. இன்றைய தலைமுறையினருக்கு இவங்க பேரு தெரியுமானே சந்தேகம். அப்புறமாய்த் தென்னிந்தியக் கல்யாணப் பாடல்களைத் தொகுத்து அகில இந்திய வானொலி வெளியிட்டதொரு தொகுப்பும் மிகப் பிடிக்கும். எம்.எஸ். அம்மா பாடிய ஸ்ரீநாமநவமணிமாலாவும் அற்புதமானதொரு தொகுப்பு. பின்னர் வந்த பாடகர்களில் பாம்பே சகோதரிகள், அருணா சாயிராம் போன்றவர்கள் பிடித்தமானவர்கள்.

அருணா சாயிராமின் "அபங்க்" கேட்டவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும். அந்த husky voiceல் அவர் தன்னை மறந்து இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு கண்ணை மூடிக் கொண்டு பாடும்போது, அதுவும் மராட்டி நன்கு தெரியுமாதலால், நன்கு பாவத்தோடு பாடுவார். அப்போது வரும் உணர்ச்சிப் பிரவாகத்தை வடிக்க வார்த்தைகள் கிடையாது. விஷமக்காரக் கண்ணன் பாடலையும் அருணா சாயிராம் போல் யாராலும் பாட முடியாது. கண்ணனின் விஷமங்களைக் கண்ணெதிரே காட்டுவார். அதே போல் மஹாராஜபுரம் சந்தானம் அவர்களின் "ஆடாது அசங்காது வா!" பாடலின் அழகை அவர் பாடுவது போல வேறு யாராலும் பரிபூரணமான உணர்வு பொங்க, கண்ணன் எதிரேயே வருவது போல் பாட முடியாது. கண்ணை மூடிக்கொண்டு அந்தப் பாடலைக் கேளுங்கள். மயில் பீலி அசைய, கால் சலங்கை சப்திக்க, தலையில் பின்னிய சடை அவிழ்ந்து தொங்க, நெற்றித் திலகம் கலைந்திருக்க, தூக்கக் கலக்கத்தில் கண்ணைக் கசக்கிக்கொண்டு, கண்ணன் தளர் நடை நடந்து வருவான்.

அப்புறம் இருக்கவே இருக்கு நம்ம பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை" எப்போ கேளுங்க, எத்தனை முறை கேளுங்க, எங்கே கேளுங்க, பெருகி வரும் கண்ணீருக்கு அணை போட முடியாது. இதிலே வரும் "தேரே பின் ஜப் ஆயி திவாலி" என்ற வரிகளை நினைக்காத தீபாவளி இல்லை.

Chitthi Aayi Hai Aayi Hai
Chitthi Aayi Hai
Chitthi Aayi Hai Vatan Se
Chitthi Aayi Hai
Bade Dinon Ke Baad,
Hum Bevatnon Ko Yaad
Vatan Ki Mitti Aayi Hai,
Chitthi Aayi Hai ...

Upar Mera Naam Likha Hai,
Andar Ye Paigham Likha Hai
O Pardes Ko Jaane Vaale,
Laut Ke Phir Na Aane Vaale
Saat Samundar Paar Gaya Tu,
Humko Zinda Maar Gaya Tu
Khoon Ke Rishte Todh Gaya Tu,
Aankh Mein Aansoo Chhodh Gaya Tu
Kum Khaate Hain Kum Sote Hain,
Bahut Zyaada Hum Rote Hain
Chitthi Aayi Hai ...

Sooni Ho Gaeen Shehar Ki Galiyaan,
Kaante Ban Gaeen Baag Ki Kaliyaan
Kehte Hain Saawan Ke Jhule,
Bhool Gaya Tu Hum Nahin Bhoole
Tere Bin Jab Aayi Diwali,
Deep Nahin Dil Jale Hain Khaali
Tere Bin Jab Aayi Holi,
Pichkaari Se Chhooti Goli
Peepal Soona Panghat Soona
Ghar Shamshaan Ka Bana Namoona
Fasal Kati Aayi Baisakhi,
Tera Aana Reh Gaya Baaki
Chitthi Aai Hai ...

Pehle Jab Tu Khat Likhta Tha
Kaagaz Mein Chehra Dikhta Tha
Bund Hua Yeh Mel Bhi Ab To,
Khatam Hua Yeh Khel Bhi Ab To
Doli Mein Jab Baithi Behna,
Rasta Dekh Rahe The Naina
Maein To Baap Hoon Mera Kya Hai,
Teri Maan Ka Haal Bura Hai
Teri Biwi Karti Hai Seva,
Soorat Se Lagti Hai Bewa
Toone Paisa Bahut Kamaaya,
Is Paise Ne Desh Chhudaaya
Panchhi Pinjra Todh Ke Aaja, ஹிந்தியிலே போட்டால் எல்லாராலும் படிக்க முடியுமா தெரியலை, அதான் ஹிங்கிலீஷில் போட்டுட்டேன். கொஞ்சம் தப்பு இருக்கு சில வரிகளிலே, அதைச் சரி பண்ணறதுக்கு முடியலை. என்றாலும் கடைசி மூன்று வரிகள், "தூனே பைசா பஹுத் கமாயா, இஸ் பைசே நே தேஷ் சுடாயா, பஞ்சி பிஞ்சரா தோட் கே ஆஜா" கண்ணீர் கொட்ட வைக்கும் வரிகள். எப்போக் கேட்டாலும் அழுதுடுவேன், இப்போக் கூட அழுகையை அடக்க முடியாமல் தான் எழுதறேன்.அடுத்து ஆங்கிலப் பாடல்களில் எப்போவும்போல No New Years Day பாடலும் அதன் வரிகளும் இப்படியே கண்ணீரை வரவழைக்கும். இதே போல ஹிந்தித் திரைப்பட்ம் ஒன்றில் திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லப் போகும் பெண்ணுக்கு அவள் சகோதரிகள் பாடின பிதாயி என்னும் விடை கொடுக்கும் பாடலும் பிடிக்கும் என்றாலும் இப்போல்லாம் அந்தப் பாடலை அதிகம் கேட்கமுடியாததால் அதன் வரிகள் நினைவில் இல்லை. யாரது அங்கே செக்ரடரி?? நம்ம அதியமானைக் கேளுங்க சொல்லுவார்!

அடுத்து தக்குடு புகழறாப்போல விசாகா ஹரியெல்லாம் முழு நேரக் கச்சேரியிலே ஒண்ணும் சோபிக்கலை. கதா காலட்சேபம் வரையிலும் ஓகே. சமீபத்திய வரவில் சேலம் காயத்திரி நன்றாய்ப் பாடுகிறார். காயத்ரி வெங்கடராகவன், காயத்ரி கிரீஷ் போன்றவர்களின் கச்சேரிகளும் நன்றாக அமைகின்றன. என்றாலும் இளைய தலைமுறைக் கலைஞர்களை எடுத்துக்கொண்டால் செளம்யா, பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்களே நினைவில் நிற்கின்றனர். அதிலும் பாம்பே ஜெயஸ்ரீ இப்போதெல்லாம் பக்தியை உள்முகமாய் அநுபவித்துக்கொண்டு பாடுவதை நம்மால் உணர முடிகிறது. இங்கே செளம்யாவைப் பற்றி எழுதி இருக்கிறேன். பார்க்கவும். அடுத்து நித்யஸ்ரீ மஹாதேவன் அருமையாகத் தான் பாடுகிறார் என்றாலும் ஆரம்பகாலங்களில் ரொம்பவே மேல் ஸ்தாயியில் குரலை எடுத்துவிட்டுக் கொஞ்சம் சத்தம் அதிகமாவே இருந்து வந்தது. சமீப காலமாகக் குரல் நன்கு பண்பட்டு, அவரும் சிரமப் படாமல், நமக்கும் கேட்க சிரமமில்லாமல் பாடுகிறார். எனக்கு இவரோட குரலில் பாரதியார் பாடல்கள் அனைத்தும் கேட்கப்பிடிக்கும். உணர்ச்சி பொங்கப் பாடுவார்.

விஜய்சிவா பாடல்களை அநாயாசமாகப் பாடுவார். இவரின் கச்சேரி எப்போதுமே அருமை, இனிமை, எளிமை. எனக்கு இவர் குரலில் பிடிச்சது காவடிச் சிந்து தான். அதிலும், "கிளியேஏஏஏ' என்று ஏகாரம் கொடுத்துவிட்டுக் "குறுநகை போதுமடீஈஈஈஈ" என்று முடிக்கும்போது மறுபடி, மறுபடி கேட்க மாட்டோமா என்று இருக்கும். ஹிஹிஹி, டி.எம்.கிருஷ்ணா பாடினால், பக்கவாத்தியக் காரர்கள் எல்லாம் மேடை தனியே போடச் சொல்லுவாங்கனு நினைக்கிறேன். முதல்லே பார்க்கிறச்சே, அவர் மிருதங்கக்காரர்பக்கம் கையை நீட்டினாரா?? சரி, மிருதங்கத்தை வாங்கி வாசிக்கப் போறாரோனு நினைச்சேன். அடுத்துப் பார்த்தால் வயலினையும் கேட்டுட்டார். அதுக்கும் அடுத்து மைக் முன்னாடியே கையை நீட்டினார். ஒரு நிமிஷம் பயந்துட்டேன். நல்லவேளையா மைக் இடிக்கலை. மைக் அமைப்பாளர்கள் விஷயம் தெரிஞ்சவங்க போல. அவர் கையை நீட்டினால் இடிக்காத மாதிரி மைக் அமைச்சிருந்தாங்க. பக்க வாத்தியமும் அப்படிச் செய்யக் கூடாதோ? மற்றபடி அவர் குரலில் உள்ள கம்பீரமும், அநாயாசமாகப் பாடும் கீர்த்தனைகளையும் ஒரு பத்தடி தள்ளி நின்னு (டிவினால் கூட, பயம்மா இருக்கே? :P) ரசிப்பேன். தக்குடு அளவுக்கு ராகங்களை எல்லாம் நெட்டுருப் போட்டு வைச்சுண்டு எழுதாட்டியும் ஓரளவுக்காவது எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்.

இவ்வளவும் சொல்லிட்டுத் தமிழ் சினிமாப் பாடல்கள் பத்திச் சொல்லலைனு நினைக்கிறவங்களுக்கு. பழைய பாடல்கள் எல்லாமே பிடிக்கும். சமீபகாலமாய் சினிமா சங்கீதம் கேட்கறதில்லை. அல்லது என்னால் கேட்கமுடியலை. என்றாலும் கடந்த பத்து வருஷங்களுக்குள்ளாக வந்த படங்களில் கஜினி படத்தின், "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டும், சூர்யாவின் முதல் படம்??பூவெல்லாம் கேட்டுப் பார்?? தெரியலை எந்தப் படம்னு, ஆனால் பாட்டு மட்டும் நினைவில் இருக்கு."என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்," அதுக்கு மேலே சமீபகாலப் பாடல்கள் மனசில் எதுவும் நிற்கவே இல்லை. எனக்குத் தான் ரசனை இல்லையோ என்னமோ????????????


என்னிடம் மாட்டிக்கொண்டவர்கள்!

ஆஹா, அபி அப்பா ஒரு பின்னூட்டத்தைக் கொடுத்துட்டு மாட்டிக்கொண்டார்
அடுத்து நான் அழைக்க இருப்பது திரு சூரி சார் அவர்கள்,
அப்புறமாய் திராச அவர்களைக் கூப்பிட எண்ணம் ஆனால் அவர் வசதி என்னமோ தெரியலை. என்னது அம்பி அங்கிளா?? வேண்டாம், வேண்டாம், தக்குடுவுக்கு மேலே அலட்டல்! அம்பி அங்கிள் வேண்டாமே! வேறே யாரு இருக்காங்க??? ரா.ல.??? கேட்டுப் பார்க்கலாம், ம்ம்ம்ம்??? வல்லி சிம்ஹன்?? பதிவு போட நேரமிருக்குமா? குழலினிது, யாழினிது என்பர் தம் பேத்தி மழலைச் சொல் கேளாதவர்னு இருக்காங்களே? முடியுமா?? துளசி கோபால், அவங்க சென்னையிலே அநேகமா எல்லா சபாவுக்கும் போயிட்டு வந்துட்டாங்க. அவங்களைக்கூப்பிடலாம்/

அபி அப்பா நல்லா வசமா மாட்டிக்கிட்டார்
சூரி சார், தக்குடுவைப் புகழ்ந்ததுக்கு தண்டனை
திராச சார், சுப்புடுவோட சிஷ்யர்ங்கறதை நிரூபிங்க
ரா.ல. என்ன இஷ்டமோ எழுதுங்க.
வல்லி, முடிஞ்சதை ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
துளசி வெளுத்துக்கட்டுங்க!

ஆஹா, நானும் கூப்பிட்டுட்டேனே!

34 comments:

 1. //அவர் பாட்டுனு எழுதிக் கூடக் காட்டக்கூடாதுனு என்கிட்டே வேண்டிக் கேட்டுட்டதெல்லாம் தனிக்கதை//

  ஹிஹிஹி ...

  அருமை. அருணா சாய்ராம் அபங்க்ஸ் பத்தி நீங்க சொன்னது அத்தனையும் உண்மை..அதேபோல் விஷமக்கார கண்ணன் பாடும்.

  உங்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //. அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் குடும்பம் நடத்தப் பாட்டு தெரியாட்டி என்ன?னு கொஞ்சம் பயத்தோடயே பச்சைக்கொடி காட்ட, நான் விடாமல், "ஆடுகின்றானடி தில்லையிலே" பாட்டை என் பெரியம்மா பெண்ணோடு பாடிக் காட்டிட்டுத் தான் விட்டேன். அப்புறமாய் அவர் பாட்டுனு எழுதிக் கூடக் காட்டக்கூடாதுனு என்கிட்டே வேண்டிக் கேட்டுட்டதெல்லாம் தனிக்கதை.//

  சூப்பர் மாமி.. ரொம்ப ரசிச்சு சிரிச்சேன். நீங்கள் சொன்னாப்புல தான் நம்ம ரங்க்ஸ் சொன்னார். விஷாகா ஹரி எல்லாம் கர்நாடக சங்கீதத்தில் சோபிக்கவில்லை. என்ன மாமி நீங்க அவன் மடிசாரையும் குண்டலத்தையும் தானே நோட் பண்றான். அவா பாடினா என்ன பாடாட்டி என்னங்கறேன்? :))

  பாக்கி விஷயமெல்லாம் எனக்கு க்ரீக் அண்டு லேட்டினா இருந்தது. சமீபத்துல டீ.எம்.க்ருஷ்ணா கச்சேரி கேட்டப்போ அந்த உணர்ச்சி என்னன்னு சொல்ல தெரியலை. இங்கே அபுதாபில வந்து பாடினாங்க. செளம்யா, நித்யஸ்ரீ, டீ.எம்.க்ருஷ்ணா எல்லாரும் வந்திருந்தா. ஒரே ஒரு ஃபீலிங்க் மட்டும் எனக்கு அவாளைப்பார்த்து. பிரமிப்பு! கலக்கியுட்டா.

  என் வீட்டுத்தோட்டத்தில் நேக்கும் ரொம்ப இஷ்டம். நாத பிந்து கலாதி நமோ நம ட்யூன்னு எங்கம்மா சொல்லுவா.

  ReplyDelete
  Replies
  1. என் வீட்டுத் தோட்டத்தில் ----->செஞ்சுருட்டி ராகம்

   Delete
 3. பை தி வே, தொடர் பதிவு எழுதினதுக்கு ரொம்ப டாங்கீஸ்.

  ReplyDelete
 4. ""எங்க வீட்டிற்குப் பின்னர் மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி சேரும் இடத்தில் இருந்த மதுரை சோமு வீட்டில் இருந்து அவர் பாடுவது கேட்கலாம் ""
  !!!!!!!!!!!!!!!!!!
  உய்யோ!! எங்கப்பாதான் சொல்லுவார்னு நினைசேன் :)). so நீங்களும் அவரோட வீட்டு பக்கம் தான் இருந்திருக்கணும்!!:)) நீங்காளாவது simple and polite ஆ சொல்லீருக்கிறீர்கள். எங்கப்பா அப்போ படிச்சுண்டு இருந்த காலமாம். "காலங் கார்த்தால கரைய ஆரம்பிச்சுடுவார் தூங்க விடாம "" என்பார். ஆனா பாடறது என்னமோ அவரோட,M D ராமநாதன் !! :(( அவரோட பாட்டுக்கள் தான்!!

  அட்டஹாஸமான அருணா சாய்ராம்,

  பாம்பே ஜயஸ்ரீ - ப்ருந்தாவனி!!

  ஏன் எல்லாரும் ப்ரியா ஸிஸ்டர் விட்டுடறீங்க?

  சுந்தரமான சுதா

  சுகமான சௌம்யா

  ஒ !!போடவைக்கற ஒ எஸ் அருண். particularly Abhang and Bhajans.

  ஒலிச்சுண்டே இருக்க வைக்கற பாம்பே ஸிஸ்டர்ஸ்:)))

  இப்ப சின்ன குழந்தைகள் எல்லாம் எத்தனை நன்னா பாடறாங்க :) கேக்க சந்தோஷமா இருக்கு.

  ReplyDelete
 5. வாங்க தாத்தா, இந்தப்படம் ஓகே. உங்க கருத்துக்கும் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்னி ஹை.

  ReplyDelete
 6. வாங்க அநன்யா அக்கா, ரசிச்சதுக்கு நன்னி ஹை. ஏற்கெனவே இந்த மாதிரி சங்கிலிப் பதிவு நிறையப்போட்டாச்சே? அதனால் இது ஒண்ணும் கஷ்டமா இல்லை. பாடகர்கள் தேர்வு தான் கொஞ்சம் சிரமம், லிஸ்ட் ரொம்பப் பெரிசு. ஓரளவுக்குச் சுருக்கினேன்.

  ReplyDelete
 7. வாங்க ஜெயஸ்ரீ, ஹிஹிஹி, உங்க அப்பா பேரு என்னங்க?? ஒருவேளை உங்க அம்மாவைப் பார்த்தால் புரியுமோ என்னமோ?? ப்ரியா சிஸ்டர்ஸ் நல்லாப் பாடினாலும் என்னைக் கவரலை. :D இத்தனைக்கும் சின்ன ப்ரியா என் பொண்ணோட காலேஜ் மேட். ஓ.எஸ். அருணும், சிக்கில் குருசரணும் கூட எனக்குப் பிடிக்கும், என்றாலும் அவங்களைச் சேர்க்கலை இதிலே.

  ReplyDelete
 8. இது தொடர் பதிவா கீதாம்மா!! ஆஹா என் குருநாதர் நவநீதம் அம்மா உங்க தாத்தாவின் சிஷ்யையா? என் குருநாதர் பத்தி முன்னமே பதிவு எழுதியிருக்கேனே!!!

  சூப்பரான பதிவு. இது என்ன சங்கிலி தொடரா? இதுக்கு எல்லாம் என்னை கூப்பிட கூடாதோ?

  இருங்க போன் பண்றேன்!!

  முடிஞ்சா மே 18\19 மாயவரம் வாங்க எங்க வீட்டு கல்யாணத்திலே நித்யஸ்ரீ, ஏ.கே.சி வரை பல கச்சேரி இருக்கு. பலமா ரசிக்கலாம்.

  ReplyDelete
 9. பழைய தஞ்சாவூர் ஜில்லாகாரங்களுக்கும், மதுரைபக்கத்துக்காரங்களுக்கும் இருக்கும் சங்கீதத் தொடர்பை லாவகமாச் சொல்லிட்டீங்க..:-).

  சாப்பிட உணவில்லாவிடினும் சங்கீதம் ஒன்றே போதும் என்று இருக்க நம்மால் எல்லாம் ஆகாது...அதுக்காக பாட்டைக் கேட்கவும், ரசிக்கவும் தெரியாதவங்க இல்லை நாம்...ஹிஹிஹி.

  எனக்கு என்னமோ பாம்பே ஜெயஸ்ரீ அவ்வளவு சிறப்பாத் தெரியல்லை..

  ReplyDelete
 10. அழகழகா எழுதிட்டு அடிக்கடி 'அழ வைக்குது'னு எழுதியிருக்கீங்களே? is that your metric for sensational?

  எத்தனையோ வித்வான்களைத் தெரியாமலே மறக்கிறோம். ('தெரிந்து மறப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்' என்று ஜெயகாந்தன் ஒரு முறை எழுதியதன் உண்மையான பொருளை இன்றைக்குத் தெரிந்து கொண்டேன்)

  ReplyDelete
 11. வாங்க அபி அப்பா, நினைப்பெல்லாம் இருக்கா?? உங்களை அழைச்சிருக்கேனே, தொடர் பதிவுக்கு, உங்க பின்னூட்டத்தைப் பார்த்ததும் கூப்பிட்டுட்டேன். :)))))))))

  ReplyDelete
 12. வாங்க மெளலி, பாம்பே ஜெயஸ்ரீ சமீபகாலமாய்ப் பாடுவதைக் கேட்டுப் பாருங்க. எனக்கு ப்ரியா சிஸ்டர்ஸ் அவ்வளவா ரசிக்காது. அது மாதிரியோ? :)))))

  ReplyDelete
 13. வாங்க அப்பாதுரை,முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  is that your metric for sensational?//

  இருக்கலாம், தெரியலை, ஆனாலும் கவிதையோ, பாடலோ சில வரிகள் கண்ணீர் வர வைக்கும் எப்போ எந்தச் சூழ்நிலையிலும், அப்படி ஒரு பாடல் சிட்டி ஆயி ஹை பாடலும், No new years day பாடலும்.

  //('தெரிந்து மறப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்' என்று ஜெயகாந்தன் ஒரு முறை எழுதியதன் உண்மையான பொருளை இன்றைக்குத் தெரிந்து கொண்டேன்)//

  ம்ம்ம்ம், புரியுது! :(

  ReplyDelete
 14. உங்க ரசனைக்கும் நமக்கும் சரிப்பட்டு வராது. ஒரு ஆஜர் போட்டுக்கறதோடு அப்பீட் ஆகிக்கிறேன்.

  ReplyDelete
 15. மிக அருமையாக உள்ளது. பெரும்பாலானோரின் கருத்துகள் உங்கள் கருத்துக்களையே ஒத்து இருக்கும் என நினைக்கின்றேன்.
  உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடல் - சின்னஞ்சிறு பெண் போலே. அதை இங்கே கேளுங்கள் - http://www.youtube.com/watch?v=bEH4G1A8P8I
  - சீர்காழி கோவிந்தராஜனின் குரலில். இந்தப் பாடல் சிதம்பரத்தின் தில்லைக்காளி கோயிலுக்கு மேற்படி இருவரும் வந்த போது, யாரோ ஒருவர் பாடல் எழுதக் கேட்க, அச்சமயத்திலேயே இயற்றி இசையமத்துப் பாடியது (இருவரும் உறவுக்காரர்கள் என நினைக்கின்றேன்).
  அதே போல் "மின்னலிடைப் பெண் அணங்கின் மேனி குங்குமம்...கண்ணை மட்டும் காட்டி என்னைக் கவர்ந்து சென்றவள்.. சொக்கனுக்கு இணையாக நர்த்தனம் ஆடுபவள்" எனும் தில்லைக் காளியைப் பற்றிய பாடல் மிகவும் பிரசித்தம். மிகவும் அற்புதமாக இருக்கும். ஆடியோ இங்கே போட இயலவில்லை.
  எங்கும் நிறைந்திருப்போன் - http://www.youtube.com/watch?v=fvjgydtoIfc &
  http://kanaga_sritharan.tripod.com/valli.htm - காவடி சிந்து அருமையானது. அதே போல உன்னிகிருஷ்ணன் குரலில் "அண்ணாமலை ரெட்டியாரின்" காவடி சிந்து மிகவும் அற்புதமாக இருந்தது. சென்னி குல நகர் வாசன் - மிக அழகிய பாடல். மிகவும் அற்புதமாக பாடியிருப்பார். மிக அருமையான, உள்ளம் குழைந்த பதிவு.
  www.natarajadeekshidhar.blogspot.com

  ReplyDelete
 16. காபிக்கு பதிலாக சங்கீதத்தை குடிக்கும் வம்சத்தில் வந்த சாம்பு மாமாவோட கை சமையல் காரணமாய் நீங்கள் எழுதிய சங்கீதம் பற்றிய பதிவுக்கு எங்கள் சாம்பு மாமாவுக்கு பாராட்டுக்கள்.

  விசாகா ஹரி எனக்கு பிடிக்கும்னுதான் சொன்னேன், அதுவும் போக முறையான சங்கீதம் படிக்க 13 வருஷம் கடுமையான குருகுலவாசம் பண்ணியிருக்கா, அதனாலதான் மார்கழி மகா உத்ஸவத்துலேந்து க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை மாதிரியான முக்கியமான இசை நிகழ்ச்சிகளில் முதல் நாள் பாடுகிறார்.வெறும் மடிசாரையும், குண்டலத்தையும் வச்சுண்டு எல்லாம் படம் ஓட்ட முடியாது.

  தங்களுடைய அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாட்டி!!!!!

  ReplyDelete
 17. இ.கொ. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க??? :D
  நீங்க இப்போப் பதிவே போடறதில்லை, இல்லாட்டி என்னோட லிஸ்ட்லே நீங்களும் இருந்தீங்க! தொந்திரவு பண்ண வேணாம்னு விட்டுட்டேன்! :(

  ReplyDelete
 18. வாங்க தீக்ஷிதரே, நீங்களும் லிஸ்ட்லே இருந்தீங்க, ஆனால் பூஜை,ஹோமம்னு நேரமில்லாமத் தவிக்கிறதாலே வேணாம்னு விட்டுட்டேன். உங்க கருத்துகளுக்கு நன்றி. எனக்கு இன்னும் இந்த ஆடியோ, வீடியோ, யூ ட்யூப் சேர்க்கிறது சரியா வரலை. ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு விட்டுட்டேன். :)))))))))))))

  ReplyDelete
 19. வெறும் மடிசாரையும், குண்டலத்தையும் வச்சுண்டு எல்லாம் படம் ஓட்ட முடியாது.//

  தக்குடு, அப்படி எங்கே சொன்னேன்?? என்னோட கருத்து முழுநேரக் கச்சேரின்னால் விசாகா ஹரிக்குச் சரியாய் வரலைனு தான். மற்றபடி சங்கீத உபந்நியாசங்கள் ஓகே. அவங்க உபந்நியாசம் பண்ண ஆரம்பிச்சதிலே இருந்து கேட்டுண்டு தான் இருக்கேன். முழு நேரக் கச்சேரியின் சொதப்பலையும் தான் கேட்டிருக்கேன், போதுமா?? :P:P:P க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சங்கீத ஞாநம் வேணா எனக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் ரசிப்பு பொது இல்லையா??

  ReplyDelete
 20. //காபிக்கு பதிலாக சங்கீதத்தை குடிக்கும் வம்சத்தில் வந்த சாம்பு மாமாவோட கை சமையல் காரணமாய் நீங்கள் எழுதிய சங்கீதம் பற்றிய பதிவுக்கு எங்கள் சாம்பு மாமாவுக்கு பாராட்டுக்கள்.//

  அம்பத்தூருக்கு வா, உனக்கு இருக்கு! அவரை விட்டே வெந்நீர் போட்டுத் தரச் சொல்றேன். குடிச்சுப் பாரு, அப்புறம் புரியும்! :P:P:P

  ReplyDelete
 21. //அநன்யா அக்கா//
  நீங்க இந்தவயசில சொன்ன இந்த வார்த்தைக்கு உங்க வாயில ஒரு கிலோ சர்க்கரை கொட்டணும்.
  உங்களுக்கு அவங்க அக்கான்னா, எனக்கு என்ன பெரியம்மாவா?

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 22. என்றும் அன்புடன், பாஸ்டன் ஸ்ரீராம், முதல் வரவுக்கு முதல்லே நன்னி. அப்புறமா அநன்யா எனக்கு அக்காதான். ஹிஹிஹி, அது என்ன "இந்த வயசிலே"???? அக்கிரமமா இல்லை?? :D
  உங்களுக்குப் பெரியம்மாவா, சித்தியா?? அவங்களைத் தான் கேட்கணும்! :))))))

  யக்கோவ், அநன்யா யக்கோவ், உதவி, ஹெல்ப், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 23. நல்லாயிருக்கு பகிர்வு + பதிவு !!

  Chitthi Aayi Hai எனக்கும் பிடிக்கும்.

  உங்க அன்பிலே மாட்டிக்கிட்டதே சந்தோசம்! முயற்சிக்கிறேன்:)!

  ReplyDelete
 24. வாங்க ரா.ல. ரொம்ப சந்தோஷம், சீக்கிரமாப் போடுங்க. நன்றி, ஒத்துக்கொண்டதுக்கு.

  ReplyDelete
 25. அருணா சாய்ராம் பாடல் கேட்கும் போது மதுரை சோமு காட்டும் அற்புதங்கள் ஞாபகம் வரும். சமீபத்தில் அவர் பாடலில் ரசித்தது "மாடு மேய்க்கும் கண்ணே .."
  N C வசந்தகோகிலம் நீண்ட காலம் உயிரோடு இருந்திருந்தால் M S க்கு இணையாகவோ அதற்கும் மேலோ கூட பேசப் பட்டிருப்பார் என்று அவர் பாடல்கள் கேட்கும்போது தோன்றும்.
  சமீபத்தில் கேள்விப்பட்ட விஷயம் ஒன்று உண்மையோ பொய்யோ மேல அனுமந்தராயன் கோவில் தெருவில் தண்ணீர் பிடித்துத் தந்து வயிற்றைக் கழுவும் ஒரு பெண்மணி மதுரை சோமுவின் குடும்பத்தினர் என்று சொன்னார்கள்...

  ReplyDelete
 26. வாங்க வெறும் ஸ்ரீராம்,
  முதல் வரவுக்கு நன்றி. என்.சி. வசந்தகோகிலம் பற்றிய உங்கள் கருத்து உண்மையாகவே பேசப்பட்ட ஒன்று. அவர் பாடல் அத்தனை அநாயாசமாக இருக்கும். கமலாவின் நாட்டியம் போல. எனக்குத் தெரிஞ்சு கமலா மாதிரி யாரும் ஆடிப்பார்க்கலை. அந்த உடலையே ஆண்டவன் நாட்டியம் ஆடவென்றே தனி அமைப்பில் வார்த்தெடுத்திருக்கிறன் என்று தோன்றும்படியான அபிநயங்கள், பாவங்கள், கைகளின் வளைவுகள், உடலே வில்லாக வளைந்தது என்று சொல்வதே மிகை. அது போல் என்.சி. வசந்தகோகிலம் பாடல்கள். சோமுவின் குடும்பத்தினரைப் பத்தித் தெரியலை, ஆனால் காமராஜரின் அண்ணன் மகள் இங்கே வீட்டு வேலைகள் செய்து வயிறு வளர்க்கிறார். அது நல்லாத தெரியும். :(((((((

  ReplyDelete
 27. "என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்" ஜெண்டில்மேன் படம்னு நினைகின்றேன்.

  ReplyDelete
 28. @சபரிநாதன், பாட்டுத் தான் கேட்டிருக்கேன், படம் எதுனு தெரியாது. பூவெல்லாம் கேட்டுப் பார்னு வரதாலே அந்தப் படமோனு ஒரு எண்ணம்! :)))))))))))

  ReplyDelete
 29. அழைக்காதே அவைதனிலே என்னை நீ ...... இந்தபாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பறம் எந்தக் கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை....நல்லவே பிடிக்கும்
  உங்களது பாட்டுத் தேர்வுகள் அமர்க்களம். அழைப்புக்கு நன்றி. முயற்சிக்கிறேன் .கச்சேரியில் லோலாக்கு ஜிமிக்கி பார்க்கிற பசங்கஎல்லாம் சங்கீதத்தை பத்திஎழுதும்போது நம்ப எழுதினா என்னா ஆயிடும்

  ReplyDelete
  Replies
  1. அழைக்காதே அவைதனிலே என்னை நீ .---படம் "மணாளனே மங்கையின் பாக்கியம் "
   >>எந்தக் கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை.<< என்ன கவி பாடினாலும் .... இயற்றியவர் ஆதிசே ஷய்யர்

   Delete
 30. @திராச, வாங்க சார், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தக்குடுவைக் குட்டினதுக்கு முதல்லே நன்னிஹை! அப்புறமா உங்க பாடகர்கள் லிஸ்டை நீங்களும் எழுதுங்க. சுப்புடுவோட உங்க அநுபவங்களும் சேர்ந்து வரும்னு எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 31. அநன்யா க்ரீக் அண்ட் லட்டீன்னு சொன்னதும் முதல்லே கொஞ்சம் கவலையாப் போச்சு, என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு, அப்புறம் பார்த்தா ஸ்ரீராம் அண்ணா(:P) வசந்த கோகிலத்தைப் பத்திப் புட்டுப் புட்டு வைக்கிறார். ரா.ல.வும் சிட்டி ஆயி ஹை பாட்டுத் தெரியும்னாங்களா?? அப்பாடா!!!!!!!!!!!!!

  ReplyDelete
 32. //அழைக்காதே அவைதனிலே என்னை நீ , எந்தக் கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை....நல்லவே பிடிக்கும்
  உங்களது பாட்டுத் தேர்வுகள் அமர்க்களம்// TRC mama, kalakkittel poongo, ulkuthu pramatham...:)

  ReplyDelete