எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 25, 2010

108 தரம் சொன்னாப் புரியுமா??

மேற்கத்திய நாகரீகமும் சரி, விஞ்ஞானமும் சரி பல விஷயங்களை நமக்குச் சொல்லிக் கொடுப்பதாய்த் தான் நாம் அறிகிறோம். இந்தியர்களுக்கு எதுவுமே தெரியாது என்ற பொதுவானதொரு கோட்பாடு உலகமுழுதும் உள்ளது. இந்தியர்கள் உள்பட இவற்றை நம்புபவர்களே அதிகம். நம் நாட்டையும், நம் திறமையையும் பற்றி நமக்கே சந்தேகம், தாழ்வு மனப்பான்மை. சூரியன் பூமியில் இருந்து 93 மில்லியன் மைல்கள் தள்ளி இருக்கிறான் என்பதை நமக்குச் சொல்லிக்கொடுத்தது மேற்கத்திய விஞ்ஞானம் தானே என நம்புகிறோம். அதுக்கு முன்னால் நம்மில் யாருக்கு இது தெரிந்தது என்ற எண்ணமும் சிலருக்கு உண்டு. ஒளியின் வேகம் நொடிக்கு 186,000 மைல்கள் என்றும் அறிவியல் பாடங்கள் மூலம் அறிந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் என்ன இருக்கிறது இதெல்லாம் சொல்லிக் கொடுக்கும்படியாக?? பக்தி, ஞானம், யோகம் என்றுதானே சொல்கின்றனர்? பக்தி மனிதனின் அறிவைக் குறைக்கிறது என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம். அதிலும் அறிவுஜீவிகளும், நாத்திகர்கள் எனப்படும் பகுத்தறிவாளர்களும் பக்தி என்றாலே மூட நம்பிக்கை என்றே சொல்கின்றனர். பக்தி இருந்தாலே மூட நம்பிக்கையும் சேர்ந்தது என்பது அவர்கள் எண்ணம். ஏனெனில் கற்றறிந்த நம் யோகிகளும், ஞானிகளும், ரிஷி, முனிவர்களும் இறைவனுக்கு முன்னே தாங்கள் பலபடிகள் தாழ்ந்தவர்களே எனச் சொல்லிக்கொண்டதே காரணமாய் இருக்கலாம். ஆனால் இது பக்தியின் ஒரு பாகம், அல்லது ஞானத்தின் ஒரு பக்கம், அல்லது யோகக்கலையின் ஒரு பாடம் என எவரும் புரிந்து கொள்ளவில்லை. சரி யோகம் என்ன சொல்லிக் கொடுக்கிறது? நான் கூறுவது யோகா என இன்றைய நாட்களில் பிரபலம் அடைந்திருக்கும் ஆசனப் பயிற்சி இல்லை. அதற்கும் மேலே யோகத்தின் படிகள் உள்ளன. அவை நமக்குள்ளே இருக்கும் இறையை நமக்குக் காட்டுகின்றன. சரி, ஆனால் இவை வானவியலையோ, அறிவியலையோ நமக்குப் போதிக்கிறதா? மேலை நாட்டு விஞ்ஞானம் இல்லை என்று சொல்லவில்லை. நாம் தான் சொல்கிறோம். நம் யோகமும், ஞானமும், பக்தியும் அறிவியலையும், விஞ்ஞானத்தையும், வானவியலையும் கற்பிக்கவில்லை என நாம் தான் சொல்கிறோம். ஆனால் உண்மையில் அப்படியா???

இதோ உங்கள் மேலை நாட்டில் வாழும் பேராசிரியர் ஒருவர் மூலமாகவே நாம் உண்மையை அறிந்து கொள்வோமா?? யு.எஸ்.ஸில் லூசியானா மாகாணத்தின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுபாஷ் கக் என்பவர். ஒரு அருமையான செய்தியைக் கூறுகிறார். பதினான்காம் நூற்றாண்டின் இந்திய மாணாக்கன் ஒருவன் ரிக் வேதத்தின் ஒரு சின்ன ஸ்லோகத்தைப் பற்றிக் கூறும்போது அவன் சொன்னதாய்க் கூறப்படும் வார்த்தைகள் அவை. சயானா என்ற பெயருள்ள அந்த மாணவன் என்ன கூறினான் என்றால்:"

"என் மன ஆழத்திலிருந்து வரும் உள்ளார்ந்த மரியாதையுடனும், பக்தியுடனும், நான் அரை நிமிடத்தில் 2,202 யோஜனைகள் பிரயாணம் செய்யும் ஒளிக்கடவுள் சூரியனை வணங்குகிறேன். "

இதிலே இங்கே கவனிக்க வேண்டியது அரை நிமிஷத்தில் சூரியன் பிரயாணம் செய்யும் வேகம் 2,202 யோஜனைகள் எனத் தெரிவிக்கப் பட்டிருப்பது. அதுவும் இது எதிலே இருக்கு? ரிக் வேதத்தில் இருக்கிறது. மிகப் பழமையான வேதம் என்று சொல்லப் படுவது அது. ஒரு யோஜனை என்பது ஒன்பது மைல்கள் என்று சொல்லப் படுகிறது. ஒரு நிமிஷம் என்பது கண் இமை கொட்டும் காலம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். கண் இமைகொட்டும் காலத்தின் அரைப்பங்கு நேரத்தில் சூரியன் செல்லும் வேகமே மேலே சொல்லப் பட்டிருக்கிறது. அதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவே அந்த நிமிஷம் என்பது நாம் செகண்டுகள் என்று சொல்லும் விநாடியில் 16/75 பாகம் ஆகும் என்கின்றனர். இப்போக் கணக்குப் போட்டால்

2,202 யோஜனைகளை ஒன்பது மைல்களாலும், 75/8 நிமிஷங்களாலும் பெருக்கினால் வரும் விடை 185,794 m.p.s. இப்போ மேலே சயானா சொல்லி இருப்பது உத்தேசமாய் சூரியனின் பயணம் 186,000 மைல்கள் ஒவ்வொரு விநாடிக்கும் என்று கூறுகின்றான். இந்த வேதம் 1387 கி.மு. என்று சொல்லப் படும் கணக்கையே நாம் எடுத்துக்கொண்டாலும் எப்படித் தெரிஞ்சது அவங்களுக்கு என நாம் யோசிக்க வேண்டாமா? அதிலும் இவ்வளவு துல்லியமாய்க் கணக்கிட எப்படி முடிந்தது? சும்ம்ம்மா ஒரு ஊகம்னே வச்சுண்டாலும் எவ்வளவு சரியான ஊகம் இது??? ஆனால் உண்மையில் ரிக்வேதம் 9,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம்முடைய யோகப் பாரம்பரியம் இம்மாதிரியான பல நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இப்போ அடுத்து நாம் தெரிஞ்சுக்கப் போறது 108-ன் மகிமை பற்றி.

அநன்யா கூட பஸ்ஸிலே பேசும்போது 108 பத்தி இப்போத் தான் படிச்சேன்னு சொன்னேன். அவங்க உடனே எனக்கும் சொல்லுங்களேன்னு கேட்டாங்க. அவங்களுக்கு மட்டும் சொல்றதை விட பதிவாக எழுதினால் பலருக்கும் தெரியும் என்று தோன்றியது. அதனாலேயே இந்தப் பதிவு. இப்போது நாம் அனைவரும் ஜபமாலைகள் பற்றி நன்கு அறிவோம். பலவிதமான ஜபமாலைகள் உண்டு. என்றாலும் எல்லாவற்றிலும் 108 மணிகளே காணக் கிடைக்கும். அவை உருத்திராக்ஷம் ஆனாலும் சரி, துளசி மணியானாலும் சரி, மற்ற மணிகளானாலும் சரி. 108 இருக்கும். நாம் ஜபம் செய்யும் போது எண்ணிக்கைக் குறைவாக இல்லாமல் இருப்பதற்காகவும், எத்தனை முறை திரும்பித்திரும்பிச் சொல்கிறோம் எனப் புரியவும் தான் ஜபமாலையைக் கையில் வைத்துக்கொண்டு உருட்டுகிறோம். இதில் ஏன் 100 மட்டும் இருக்கக் கூடாது? ஏன் 108 இருக்கவேண்டும்?

மீண்டும் நம் சூரியனும், சந்திரனுமே வருகிறார்கள். சூரியனின் ஒளிப்பாதையும், சந்திரனின் ஒளிப்பாதையையும் அவற்றின் பிரயாணத்தையுமே குறிக்கும் இந்த ஜபமாலையும். அட? நாம் கையில் வைச்சிருக்கும் ஜபமாலை சூரியனையும், சந்திரனையுமா குறிக்குது?? ஆமாங்க, ஆமாம். இந்த ஒளிப்பாதை விண்ணில் இருந்து தானே பூமிக்கு வருது? அந்தப் பாதையானது 27 சமமான பாகங்களாய்ப் பிரிக்கப் பட்டிருக்கிறது நம் முன்னோர்களாலே. அவங்க வான சாஸ்திரங்களிலேயும் எவ்வளவு அருமையா, அறிவோட செயல்பட்டிருக்காங்க! இந்த 27 சமபாகங்கள் தான் 27 நக்ஷத்திரங்களாய்க் குறியீடு செய்யப் பட்டுள்ளது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் நான்கு சமபாகங்களாய்ப் பிரிக்கப் பட்டு அவை பாதங்கள் என்று சொல்லப் படுகிறது. 27ஐ நாலால் பெருக்குங்க. 108 வருதா? இவைதான் சூரியனும், சந்திரனும் விண்ணில் எடுத்து வைக்கும் 108 அடிகள்னு வச்சுப்போமா??

இந்த ஒவ்வொரு அடியும் சாமானியமானதோ, சாதாரணமானதோ அல்ல. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தேவதை அல்லது கடவுளரின் ஆசிகளோடு எடுத்து வைக்கப் படுகிறது. அதனாலே ஜபமாலையை உருட்டறவங்க கூடவே யார் தலையையும் உருட்டாமல் ஜபநாமாவை மட்டுமே உருட்டுங்க, சரியா?? 108 மணிகளையும் கோர்த்திருக்கும் சங்கிலியானது கடைசியில் ஒரு பெரிய உருத்திராக்ஷம் அல்லது மணியால் சேர்த்து இணைக்கப் பட்டிருக்கும். இந்தப் பெரிய மணியை குருமணி, அல்லது குருபீடம்னு சொல்லுவாங்க. இன்னும் யோகத்தில் தேர்ந்தவர்கள் இதையே மேருனும் சொல்றது உண்டு. மாலையை உருட்ட ஆரம்பிச்சதும் முதலில் முன்னோக்கிப் போனவங்க இந்த மேரு கிட்டே வந்ததும், பின்னோக்கி வர ஆரம்பிப்பாங்க. உங்க பாட்டியோ, தாத்தாவோ மாலையை உருட்டினால் கூர்ந்து பாருங்க, புரியும்.

இந்த மேருதான் கோடையையும், குளிரையும் சுட்டுவதோடு, அங்கே ஜபமாலையை மீண்டும் முன்னோக்கி உருட்டாமல் பின்னோக்கிச் செல்வது சூரியன் தன் பாதையை மாற்றிக்கொண்டு செல்வதையும் சுட்டிக் காட்டுகிறது. இப்படி நம் பிரார்த்தனைகளும், ஜபங்களும் இயற்கையையோடு இணைந்தே செயல்பட்டு வருகிறது. இந்த ஜபமாலையை நாம் பயன்படுத்துவது எதைக்குறிக்கிறதெனில் நாம் இயற்கையோடு முற்றிலும் ஆழமாகப் பிணைந்திருப்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, விண்ணுலகமும் நம்மை மேற்பார்வை செய்து வருகிறது என்பதையும் காட்டுகிறது. நாம் அண்டவெளியின் நாயகர்களோடும் பிணைந்து தான் செயல்படுகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இப்போது பேராசிரியர் சுபாஷ் கக் அவர்களின் சில குறிப்புகளில் இருந்து.

பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரத்தின் அளவு உத்தேசமாக சூரியனின் விட்டத்தில் இருந்து 108 முறைகள் இருக்கும். சூரியனின் விட்டமோ பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு பெரியது. பூமியிலிருந்து சந்திரனுக்கு உள்ள தூரமும் இதே போல் சந்திரனின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம். நம்முடைய சாதாரண அறிவுக்கும், தெய்வீக அறிவுக்கும் இடைவெளியை இது சுட்டுகிறது எனலாமா? நாம் 108 முறை ஒரு மந்திரத்தைச் சொல்லி ஜபமாலையை உருட்டுவதின் மூலம் நம்முள்ளே இருக்கும் தெய்வீக ஒளியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கிறோம் எனலாமா?

இந்த சூரிய சித்தாந்தம் நம்முடைய இந்தியப் பாரம்பரியக் கல்வி முறையில் மிகவும் பழமையான ஒன்று.

டிஸ்கி: தினமும் நிறைய மடல்கள் பலரால் அனுப்பப் படுகின்றன. என்றாலும் எல்லாமுமே நல்ல செய்திகளோ, விஷயங்களோ இருப்பதில்லை. அபூர்வமாய் இன்று வந்த மடலில் காணப்பட்ட செய்தி என்னைக் கவர்ந்தது. அதைக் கொஞ்சம் தமிழாக்கம் செய்யலாம்னு நினைச்சேன். அப்புறமா முழுசும் செய்யாமல் முக்கியமான கருத்தை மட்டும் எனக்குப் புரிஞ்ச அளவில் எழுதி இருக்கிறேன். இதை எனக்கு அனுப்பி வைத்த என் மைத்துனருக்கு என் நன்றி.

படங்கள் கூகிளாண்டவர் தயவிலே. நன்றி.

14 comments:

  1. arumai paatti.migap payanulla thagaval

    ReplyDelete
  2. எவ்ளோ இன்ஃபர்மேஷன்! அருமை அருமை! நேத்திக்கி தான் காயத்ரி ஜபத்தை பத்தி ரங்கு டீட்டெயில்டா பேசிண்டு இருந்தார். இன்னும் சொல்லப்போனா அவர் சொன்ன உதாஹரணத்தை வெச்சுண்டு ஒரு சுவாரஸ்யமான பதிவு போடலாம்ன்னு கூட நினைச்சேன். சூப்பர் மாத்தா.. மாத்தாவின் அருளே அருள் அருளே அருள் அருளே அருள்!!!

    ReplyDelete
  3. நன்றி.

    நாங்களும் படிச்சுட்டோம். பரவாயில்லையா?:-)))

    ReplyDelete
  4. எதையும் வெளி நாட்டுக் காரங்க சொன்னாதான் நம்பும் நம் நாடு..உண்மைதான். நல்லதொரு பதிவு. நூற்றி எட்டு பற்றி தெரிந்து கொண்டேன்..நன்றி.

    ReplyDelete
  5. ஸ்ரீமதி,
    அருமையான விஷயங்கள்.
    வேதத்தின் ஐதரேய பிரமாணத்திலும் மற்றும் சில இடங்களிலும் கிரையோஜெனிக் என்ஜின் பற்றிய (மித்ரன் - ஆக்ஸிஜன், வருணன் - தண்ணீர், வாயு - காற்று) போன்ற விபரங்கள் எல்லாம் வருகின்றன.
    கணிதம் பற்றிய விபரம் நிறைய உள்ளன. ருத்ரம் சமகத்தின் கடைசி பகுதி எண்களின் பெயர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.
    அடியேனின் கால கணிதம் பதிவு வேதங்களின் விளக்கத்தின் படியே ஆரம்பித்தேன்.
    இந்தப் பதிவைப் பார்த்தால், தாங்கள் ஒன்றும் கணிதத்தில் வீக் மாதிரி தெரியவில்லையே?
    www.natarajadeekshidhar.blogspot.com

    ReplyDelete
  6. எல்கே தாத்தா, ரொம்ப நன்றி.

    ReplyDelete
  7. அநன்யா அக்கா, சீக்கிரமாப் போடுங்க காயத்ரியைப் பத்தி, நானும் ஒண்ணு வச்சிருக்கேனா? உங்களோடதைப் பார்த்துட்டு அதைப் போடச் சரியா இருக்குமுல்ல?? :))))))))

    ReplyDelete
  8. வாங்க துளசி, "சண்டி" ரொம்பவே ஆட்டி வைக்கிறா போல! :)))) ஆளையே பார்க்க முடியலை!

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், உண்மைதான், எதையுமே வெளிநாட்டுக்காரங்க சொன்னால் தான் நம் நாட்டின் அறிவு ஜீவிகள் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

    ReplyDelete
  10. வாங்க தீக்ஷிதரே, அதுக்காக அல்ஜீப்ராவிலே ஒரு ப்ராப்ளத்தைக் கொடுத்து, போடுனு சொல்லிடாதீங்க! மானம் போயிடும்! :)))))))))))))

    ReplyDelete
  11. அருமையான பயனுள்ள தகவல்கள் கீதாம்மா.

    ReplyDelete
  12. அநன்யா நிச்சயமா அந்த பதிவு போடுங்கோ!

    ReplyDelete
  13. வாங்க சாரல், நன்றிம்மா/

    @அநன்யா, உங்களுக்கு ரிக்வெஸ்ட் வந்தாச்சு, சீக்கிரம் போடுங்க, காயத்ரி பத்தி.

    ReplyDelete
  14. அருமையான பயனுள்ள தகவல்கள் கீதா paatti!!

    ReplyDelete