எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 22, 2010

புயலடிச்சு ஓய்ந்தது!

அம்பி அண்ட் கோ பட்டாசு வெடிச்சு, ஸ்வீட் எடு, கொண்டாடுனு கொண்டாடி இருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன?? எத்தனை நாளைக்கு?? அதான் வந்துட்டோமுல்ல??? "லைலா" புயல் ஆந்திராவில் அடிச்சாலும் அதன் தாக்கம் இங்கேயும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. செவ்வாய்க்கிழமையன்னிக்கு இருந்தே இணையம் சரியா இல்லாமல், புயல் அடிச்சதுதான் சாக்குனு கோமா நிலைமைக்குப் போயிட்டது. இத்தனைக்கும் முக்கியமான இணைப்புகளை ராத்திரி எடுத்துட்டுத் தான் படுத்தேன். அப்படியும் இடி இடிச்சதில் செர்வரில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கு. ஆனால் யாருக்கும் அதை முதலில் கண்டுபிடிக்கத் தோணலை. மோடம் தான் போயிடுச்சுனு சொல்லிட்டு அதை மாத்தித் தரோம்னு சொல்லிட்டாங்க. நான் ஒரு தொழில் நுட்ப நிபுணி மோடத்திலே எந்தப் பிரச்னையும் இல்லைனு சொல்றதைக் காதிலேயே போடலை. காது வலிச்சிருக்குமோ??

இங்கேயும் அதைச் சோதனை செய்யும் வல்லுநர் ஒருத்தரே எல்லா இடத்துக்கும். அம்பத்தூருக்கு எனத் தனியா இருந்தவரைத் தூக்கிட்டாங்களாம். பாவம், நல்ல பையர். கூப்பிட்டதும் ஓடி வருவார். :( இன்னிக்கு மதியம் பனிரண்டு மணிக்கு வந்தவங்க சாயந்திரம் நாலரை மணியோடு வேலையை முடிச்சாங்க. எங்கே கோளாறுனு கண்டுபிடிக்கவே ஒன்றரை மணி நேரம் ஆச்சு. ஆங்காங்கே வேலை இல்லாத் திண்டாட்டம், வேலையிலே இருந்து ஆள் எடுக்கறதுனு இருக்கு! என்னத்தைச் சொல்ல!!!! இதிலே ஒழுங்கா வேலை பார்க்கிற ஆளை எடுத்துட்டாங்க! எப்படியோ ஒரு நாலு நாளிலே(ஹிஹிஹி, இதுவே அதிகம் தான், இல்லாட்டிப் பதினைந்து நாளாவது ஆகி இருக்காது?) பிரச்னையைத் தீர்த்தாச்சு. இப்போ இதுக்கான கொண்டாட்டம் தனியா வச்சிருக்கேன்.

முன்னாடி முப்பெரும் விழா எடுக்கணும். என்னனு கண்டு பிடிங்க பார்ப்போம். அநன்யா அக்கா, உங்க ரங்க்ஸைத் தயார் பண்ணுங்க, அவர் தானே லேட்டஸ்ட் கு/ப/த, அதனாலே அவர் தான் அலகு குத்திண்டு, காவடி எடுத்து, அங்கப் பிரதக்ஷிணம் பண்ணி, மண் சோறு சாப்பிட்டுட்டு, ராத்திரி தீமிதியும் பண்ணணும், கூடவே உங்களுக்கு வேலை கிடைக்கிறதுக்காக நீங்களும் எல்லாப் பிரார்த்தனையும் செய்யணும்னு வேண்டிண்டிருக்கேன். எங்கே ரெண்டு பேரும் ஜோடியாக் களத்திலே இறங்குங்க பார்ப்போம்! ரெடி, ரெடி, ரெட்ட ரெடி, ஷ்டார்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் ம்யூஜிக்!

19 comments:

  1. உங்க அறுபதாம் கல்யாணம் வருதா ???

    ReplyDelete
  2. செம சிரிப்பு.. அந்த போடோவயும், உங்க கு ப தவையும் நினச்சி பார்த்தேன் ,. முடியல

    ReplyDelete
  3. ஹிஹிஹி, தாத்தா, எனக்கு அறுபது??? ஆகும்போது நிச்சயமா போஸ்ட் போடறதா இருக்கேன். செரியா! அப்புறமா அறுபதாம் கல்யாணம்னா முப்பெரும் விழா எப்படி வரும்?? க்ர்ர்ர்ர்ர்ர் இது கூடத் தெரியலை, ஒழுங்காப் பழைய பாடம்ல்லாம் படிச்சாத் தானே!

    நான் தமிழில் இணையத்தில் எழுத ஆரம்பிச்ச தினம், என்னோட க.நா. பி.நா. எல்லாத்தையும் சேர்த்து நம்ம சிஷ்ய கேடிங்க முப்பெரும்விழாவாக் கொண்டாடுவாங்க. அதைச் சொன்னேனாக்கும்! :))))))))

    ReplyDelete
  4. ஹிஹிஹி, கு.ப.தா.னா ஒல்லியாத் தான் இருக்கணும்கறது எழுதப் படாத விதி! :P அதானாகும் கணேசன் முன்னாடி இருந்தான், துரோகம் பண்ணினதாலேயாக்கும் நீக்கினேன்! :)))))))

    ReplyDelete
  5. வன்மையா கண்டிக்கிறேன் அந்த பி எஸ் என் எல் ஆபீசர்களை. என்ன இத்தன சீக்கிரம் சரி பண்ணி கொடுத்துட்டாங்க:-)

    ReplyDelete
  6. கரெக்ட் அபி அப்பா, பிஎஸ் என் எல்காரங்கன்னா கிட்டேயே வந்திருக்க மாட்டாங்க. அலட்டல் ஜாஸ்தி, நாம் தான் தலைவி ஆச்சே, அதிகாரம் பண்ணுவோமில்ல?? அதான் டாட்டா இண்டிகாம். ஆட்டி வச்சுடமாட்டோம்??? :P:P:P:P
    பிஎஸ் என் எல்னு நினைச்சு ஏமாந்ததுக்கு வாழ்த்துகள். :P

    ReplyDelete
  7. நானும் நினச்சேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. என்ன நினைச்சீங்க தாத்தா???

    ReplyDelete
  9. மாமி,
    என்ன கொடுமை இது? எனக்கு வேலை கிடைக்கணும்ன்னு நானும் ஜோதியில சேரணுமா? பேசாம ரங்குவையே மொத்தத்தையும் பண்ண சொல்லிடுங்கோ.. அக்கான்!

    ReplyDelete
  10. உங்க பதிவுலக பிரவேசமோ என்று

    ReplyDelete
  11. அநன்யா அக்கா, என்னதிது??ம்ம்ம்ம்?? கொஞ்சங்கூட நன்னாயில்லையே???
    நாலு நாளைக்கு நான் வரலைனா அதுக்காக இப்படியா??? நந்நாயிட்டு இல்லை, கேட்டேளா???

    ReplyDelete
  12. தாத்தா, நான் இணையப் பிரவேசத்துக்கு ஒரு பதிவே போட்டாச்சு, நீங்க தூங்கி இருக்கீங்க. ஏப்ரல் இரண்டாம் தேதிக்குப் போய்ப் பாருங்க! :P

    ReplyDelete
  13. கீதாம்மா! பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. வாங்க ஜீவி சார், ரொம்ப நன்றி, அது சரி, யாரு சொன்னா????????????

    ReplyDelete
  15. யாரு சொன்னா?.. வேறோர் இடத்தில் மின்மினியாய் தமிழில் போட்டிருந்தார்கள். தலைவியாரின் பெருமை சொல்லவும் வேண்டுமோ?..

    ReplyDelete
  16. எங்கேனு சுட்டி கொடுங்க ஜீவி சார், போய் நன்றி சொல்லிட்டு வரலாம்! :D

    ReplyDelete
  17. அட, நெஜமாவே தெரியாதா?.. ஒருவிதத்தில் இதுதான் உண்மையான பெருமை.
    'க்ளு' கூடக் கொடுத்திருக்கேனே?..
    'மின்மினியாய் தமிழில்'-- 'மின்தமிழ்'
    இல்லையோ?.. மே.22 updates.
    பெரியவர்கள் வெங்கட்சாமிநாதன், நரசய்யா போன்றோரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  18. ஓ, மின் தமிழிலேயா?? நீங்க இருக்கீங்கனு தெரியாது நிஜமாவே. ஆனால் சுபாஷிணி போட்டதும் எல்லாரும் வாழ்த்தினதும் நான் பதிலும் சொல்லி இருக்கேன். அன்னிக்குச் சாயங்காலமாத் தான் இணைய இணைப்பே வந்தது. அதனால் அதிக மடல்களா? மறந்திருக்கேன். தெரியாதுனு சொன்னது தப்புத் தான். :))))))))) நீங்க என்ன பேரிலே எழுதறீங்கனும் தெரியாது. இது நிஜம்மாவே! :D

    ReplyDelete
  19. //நீங்க என்ன பேரிலே எழுதறீங்கனும் தெரியாது. இது நிஜமாகவே//

    எங்கெணும் ஜீவி தான்!

    ReplyDelete