எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Sunday, May 16, 2010
உப்பு வாங்கலையோ உப்பு!
அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?
அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!
மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.
அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.
அன்ன தானம்
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.
குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.
பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.
எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகாமையில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பதிவு கீதாம்மா.
ReplyDeleteசுவர்க்கத்தில் பசி பிணி கிடையாது என்பார்களே? எல்லாருக்கும் தெரிந்த கதைனு ரொம்ப சாதாரணமா சொல்றீங்களே? நான் சுவர்க்கம் பார்த்ததில்லை :-).
ReplyDeleteஅன்னதானம், ஏழை உதவி, பூமி காப்பு இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
கீதா அக்கா...
ReplyDeleteதப்பா நினைச்சுக்காதீங்க ப்ளீஸ்...
இந்த பதிவு உங்களோட பரிசீலனைக்கு ...
http://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_15.html
any how...
அட்சய வணக்கங்கள் ...
அக்ஷயனா வளரறது தானே இல்லையா?பெருகும் நாள். நம்ம செய்யற தானங்கள் பலவான ஆசிர்வாதமா பபெருகும் நாள்னு ஒரு பெரியவர் சமீபத்தில் சொன்னார். இன்னிக்கு த்ரேதா யுகம் ஆரம்பிச்சதாவும், கங்கை பூமில 5 வழியா வந்ததாகவும் சொன்னார் . அது நான் கேட்டதில்லை இதுவரை.
ReplyDeleteஒரு வட நாள்காட்டில பரசுராமர் ஜயந்தி நு போட்டிருக்கு . எதுவோ, நல்லது செஞ்சு நல்லது நினைத்து நன்னா இருப்போம். we have every right to be happy as long as that happiness is not at the expense of others. நான் சமீபத்தில் சந்தித்த சித்தரின் அறிவுறை !! எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்.
தண்ணீர் பந்தல், நீர்மோர், பானகம், அன்ன தானம் ஆகியன தான் அட்சய திருதியை அன்று செய்ய சிறப்புத்தரும்ன்னு ரொம்ப அழகா விளக்கி இருக்கீங்க. அருமை..
ReplyDeleteவாங்க ரா.ல. ரொம்ப நாளா இந்த அன்னதானம் பத்தி எழுதணும்னு இருந்தேன். நேத்திக்கு ஒரு நண்பரும் சொன்னார், சரினு இன்னிக்கு நாள் ஒத்துவரவே போட்டேன், நினைச்சதிலே கால் பங்குதான் எழுத முடிஞ்சது! :)))))))
ReplyDeleteஅருமை.. ஆனால் நம்ம மக்களுக்கு எங்க இது புரியப் போது ???
ReplyDeleteஅப்பாதுரை,
ReplyDeleteமறு வரவுக்கு நன்றி. கர்ணன் எல்லாம் மனிதனாக வாழ்ந்து தானே தன் நன்னடத்தை, நற்காரியங்களுக்காகப் போனான்? அங்கே போனதும் உடனேயே தேவர்களோடு கலக்க முடியாதுனு சொல்வாங்க. கொஞ்சம் பூலோக உணர்வுகள் மீதி இருக்குமாம். (ஹிஹிஹி, நானும் இன்னும் போயெல்லாம் பார்க்கலை!) அப்போத் தான் அங்கே வந்தும் கர்ணனுக்குப் பசி தாங்கலை. அது கதையை விபரமா எழுதறேன் அப்புறமா!
உண்மையிலே பூமிக்குப் பூஜை செய்யும் நாள்தான்னு சொல்வாங்க. கடுங்கோடையிலே பூமித்தாயை வேண்டிக்கொண்டு வழிபட்டு ஆண்டு முழுதும் நல்ல மழை வரப் பிரார்த்தித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ததாய்க் கேள்வி!
ReplyDeleteவாங்க நியோ,
ReplyDeleteமுதல் வரவுக்கு நன்றி. தமிழ் ஓவியாவின் கட்டுரையையும் படிச்சேன். பக்தி இருந்தால் புத்தி இருக்காதுங்கற பகுத்தறிவாளர்கள் கிட்டே என்னத்தைச் சொல்றது? உண்மையான பக்தி எதையும் பகுத்து அறிந்து பார்க்கவே கற்றுக்கொடுக்கும். ஊடகங்களும், வியாபாரிகளும் சொந்த லாபத்துக்காகச் செய்வதை முட்டாள் தனமாய் பெருவாரியான மக்கள் நம்புகின்றார்கள். உண்மையான பக்தர்களில் எவரும் நம்புவதில்லை.
வாங்க தாத்தா, back to pavilion??? எப்படி இருந்துச்சு தலைநகரின் வெய்யில் எல்லாம்???
ReplyDeleteநம்மால் முடிஞ்சதை, உதவி தேவைப்படும் பிறருக்குத் தானமாக் கொடுக்கணும் என்றிருந்த நாளை, தங்கம் வாங்கிக்கோங்க சொல்லும் நிலை எப்போ எப்படி வந்துச்சு? யாரு கிளப்பிவிட்டாங்க இதையெல்லாம்?
ReplyDeleteஎனக்குத் தெரிஞ்சு ஒரு அஞ்சாறு வருசமாத்தான்...... இந்த வேதனையைப்[ பார்த்துக்கிட்டு இருக்கேன்.
நல்ல இடுகை. போய் உப்பு வாங்கிக்கிட்டு வரப்போறேன் கீதா.
பசிப்பிணியில் இருந்த ஒருத்தருக்கு மோர் சாதம் போட்டாச்சு இன்னிக்கு:-)
வாங்க துளசி, அந்தப் பசிப்பிணியோட இருந்தவர் பேரு என்னமோ கோபாலுனு சொல்றாங்களே? ஆமாவா??? :))))))))))
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteமனசுக்கு மிகவும் இதமாக இருந்தது.
உப்பு வாங்கப்போன இடத்தில் தமிழ்க்காரர் ஒருவரைச் சந்திச்சேன்.
ReplyDeleteஅம்பத்தூர்க்காரர்கள்!
வாங்க ஜீவி சார், பாராட்டுக்கு நன்றி
ReplyDeleteதுளசி, அம்பத்தூர்னா எங்கே?? கேட்டு வைக்கக் கூடாதோ?? :)))))))
கேக்காம இருப்பேனா? டி ஐ சைக்கிள்ஸ்க்கு அடுத்த கட்டிடமாம். அப்பா அங்கே 35 வருசம் சர்வீஸ் செஞ்சு ரிட்டயர் ஆகிட்டாராம். இவுங்க பெயர் வசந்தி. கணவர் ஏர்ஃபோர்ஸ்லே உத்தியோகம். வசந்தியின் கூடப் பிறந்தவங்க இன்னும் 2 பெண்கள்.
ReplyDeleteவசந்திக்கு ரெண்டு பொண்கள்.ராதா & ரம்யா. ராதா இந்த வருசம் +2 போறாள். ரம்யா 6 வது.
கணவர் ராஜசேகர், உள்ளூர் தமிழ்ச்சங்கக் காரியதரிசி & தலை. ஆல் இன் ஆல். கார்த்திக் ஸ்வாமி கோயிலைக் கட்டுவித்தவர். கோயிலைப்பற்றியும் இங்குவாழ் தமிழ் இனத்தைப் பற்றியும் எழுத அந்த கார்த்திகேயனே என்னை இங்கே அனுப்பிட்டான்னு ரொம்ப மகிழ்ச்சியோடு இருக்கார்!!!!
இவ்வளவுதான் முதல் அறிமுகத்தில் தெரிஞ்சுக்கிட்டது:-))
அருமையாகச் சொன்னீர்கள் கீதா. தங்கம் தேவைதான்.
ReplyDeleteஅதற்காக அக்ஷய த்ரிதையை அன்று மோதும் கும்பலை தொலைக்காட்சியில்
பார்க்கும்போதே அலுப்பாக இருக்கும்.
எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் மக்கள் என்று.
பாட்டி இன்னிக்கு நல்ல காரியங்களச் செய்யுங்கள் அத்தனையும் உங்கள் அக்ஷயமாகப் பெருகும் என்று சொல்வார்.
உப்பு வாங்குவதைப் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
உண்மைதான் கொஞ்சமாவது உயிர்ப்பு வேண்டும் இல்லையா:)
akhyatriyayi dhana note good
ReplyDeleteவாங்க வல்லி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்ததுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிம்மா.
ReplyDelete@Good thing happening around you//
தாங்கீஸ்ஸ்
அபி அப்பாவோட கமெண்ட் மெயிலில்.....
ReplyDeleteநல்ல பதிவு தான் கீதாம்மா! ஆனா பாருங்க எங்க வீட்டில தான் கொஞ்சம் காமடியா ஆகிடுச்சு. இந்த பதிவை படிக்கும் முன்னமே அட்சயதிருதிக்கு முதல் நாள் இரவு கிருஷ்ணா எனக்கு போன் செய்து "மறக்காக பாய் கடையிலே உப்பு ஒரு பாக்கெட் வாங்கி வைத்து பூஜை பண்ணவும்"ன்னு சொன்னாங்க.
நானும் காலை எழுந்த பின்னே கிருஷ்ணா சொன்ன மாதிரி பாய் கடைக்கும் போயாச்சு. ஆனா என்ன வாங்குவதுன்னு மறந்துட்டேன். கையிலே போனும் இல்லை. எத்தனையோ நியாபகம் செஞ்சும் ஊகூம் நடக்கலை.
ஒரு வழியா பெருங்காயம் ஒரு டப்பா வாங்கி வந்து சாமிகும்பிட்டு உட்காந்து இருந்த போது தான் கிருஷ்ணா வந்தது. கூடவே அவங்க சொந்த பந்தமெல்லாம். கிருஷ்ணா வரும் போதே அவங்க சொந்தபந்தங்கள் கிட்ட "அபிஅப்பா இந்த விஷயத்தில் எல்லாம் சூப்பராக்கும். பாருங்க உப்பு எல்லாம் வாங்கி பூஜை பண்ணியிருப்பார்"ன்னு அவங்களையும் பூஜை ரூமுக்கு அலட்டலா சொல்லிகிட்டே போக அங்க பெருங்காயம் உட்காந்து இருந்தது.
மானமே போயிடுச்சாம் கிருஷ்ணாவுக்கு. அவங்க எல்லாம் போஅன் பின்னே ஒரே கத்தல்.
பரவாயில்லை விடுடா அபிஅப்பா இதல்லாம் சகஜம்ன்னு நினைச்சுகிட்டேன். நல்லவேளை உப்புக்கு பதிலா பெருங்காயம் வாங்கினேன். கொஞ்சமாவது இரண்டுக்கும் சம்மந்தம் இருக்கு.