எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 31, 2013

வீடு, பார்க்கலையோ வீடு! எங்கள் ப்ளாகுக்குப் போட்டியோ போட்டி!

இது நிஜம்மாவே பல ஆண்டுகள், கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கும் மேல்???? இருக்கும். கண்ட இல்லம்  என் தாத்தா காலத்து வீடு இது. மேல்மங்கலம் கிராமத்தில் இன்னமும் இருக்கு. :))))) முன்னால் பதிவிட்டப்போ மேல்மங்கலத்தில் நாங்க தங்கின வீடுனு நினைச்சு மாத்திச் சொல்லி இருந்தேன்.  அப்புறமாப் பார்த்தா அந்த வீடு வேறே, இது வேறேனு வேறு சில படங்களின் மூலமாப் புரிஞ்சது.  அந்த வீடும் இது போல் தான் இருந்தது.  இப்போ இடிச்சு நவநாகரிக முறையில் கட்டி இருக்காங்க! :)))) 

Saturday, March 30, 2013

என்னோட "பவர்" என்னனு தெரியுமா?

இணையத்துக்கு வரதுக்கு முந்தியே பவர்ஃபுல் ஆள் தான் நான்.  வந்ததும் பவர் கூடித் தான் போச்சு! அதுவும் இப்போ சில மாதங்களாகப் பவர் எக்கச்சக்கமாக் கூடினதில் தலைகால் தெரியலை. ஒரு எழுத்துப் புரியாது.  ஏதோ உத்தேசமாத் தெரிஞ்சுப்பேன்.  தட்டச்சும்போதும் இந்தப் பவர் நினைப்பிலேயே இருந்ததாலேயோ என்னமோ ஏகப்பட்ட தட்டச்சுப் பிழை வரும்.  எப்போவுமே திருத்தற வழக்கம் இல்லையே!  மாட்டிப்பேன்.

அப்படியும் திருந்தலை.  தட்டச்சறதாவது கை விரல்களின் தொடுகை மூலம் ஒரு மாதிரியாப் புரிஞ்சுடும்.  சமாளிச்சுக்கலாம்.  படிக்கிறது? அதான் பெரிய பிரச்னையா இருந்தது.  ரொம்பக் கஷ்டப்பட்டுக் கழுத்தை வளைத்து, முகத்தை நிமிர்த்திக் கண்களைக் கீழே கொண்டு வந்துனு கஷ்டமாத் தான் இருந்தது.  கடந்த நான்கைந்து நாட்களாக சுத்தம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்னு நேத்திக்குச் சாயந்திரமா ரங்க்ஸ் கிட்டே சொல்லிட்டேன். அவர் மனசுக்குள்ளே எப்போவுமே உனக்குத் தானே பவர் ஜாஸ்தினு நினைச்சது புரிஞ்சாலும் வேறு வழியில்லை.  இன்னிக்குக் காலம்பரப் போகலாம்னு சொல்லி இருந்தார்.  காலம்பர  வீட்டு வேலைகள் நிறைய இருக்குமே!  ஒரு மாதிரித் தட்டிக் கழிக்கப் பார்த்தேன்.  எல்லாம் இந்த dilator பயம் தான். சென்னையிலே இருந்தவரைக்கும் இந்த பயம் இல்லாமல் இருந்தது. அந்தக் கண் மருத்துவர் சொல்லாமல் கொள்ளாமல் ஊத்த மாட்டார்.  அதோட அப்போல்லாம் இவ்வளவு பவரும் இல்லை. இப்போ இரண்டு வருஷங்களுக்கும் மேல் ஆகிப் பவர் எக்கச்சக்கமாக் கூடி இருக்குனு எனக்கே புரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

தட்டிக்கழிக்கிறதைப் பார்த்து ரங்க்ஸுக்கு பி.பி, ஷுகர் இரண்டும் எகிற போதுண்டா சாமினு வரேன்னு சொல்லிட்டேன்.  எக்கச்சக்க நிபந்தனைகள்.  வண்டியிலே ஏறி, ஏறி இறங்க மாட்டேன்.  நேரே போய்ப் பவர் செக்கப் பண்ணிட்டு, வீடு திரும்பணும்னு. சரி உன்னை விட்டுட்டு நான் போய் என் வேலைகளை முடிச்சுக்கறேன்னு சொல்லிட்டார்.  உள்ளே போனேனா?  முதல்லே ஒண்ணு, ரெண்டு எண்ணச் சொன்னாங்க.  எட்டு ஆறு மாதிரி இருக்கு.  ஆறு 0 மாதிரி இருக்கு.  ஐந்து ஆறு மாதிரித் தெரியுது.  இல்லைனா ரெண்டிரண்டாத் தெரியுது.  பசுமாடு எப்படி இருக்கும்னு தெரியுமானு கேட்காத குறை.  பகல்லே கண்டு பிடிச்சுடுவேன்னு மனசுக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

எல்லாப் பரிசோதனைகளும் முடிஞ்சு, கண்ணுக்கு அழுத்தமும் பார்த்தாச்சு.  சரி, அப்பாடா நிம்மதினு நினைக்கிறப்போ, உங்களுக்கு பிபி இருக்கில்ல, டைலேட்டர் ஊத்திப் பார்த்து மறுபடி உறுதி செய்துக்கணும்.  அதுக்கப்புறம்மாத் தான் போகலாம்னு சொல்லிட்டாங்க.  பகவானே, பிள்ளையாரப்பா, இது என்ன சோதனை!  ஏற்கெனவே கண்களில் ஊற்றின விதவிதமான மருந்துகளால் ஒரே எரிச்சல். டைலேட்டர் ஊத்திட்டு அரை மணி உட்காருனு சொல்லவே ரங்க்ஸ்தன்னோட வேலைகளைக் கவனிக்கப் போக, தேமேனு உட்கார்ந்திருந்தேன்.  ஒண்ணும் செய்யாமல் உட்கார்ந்திருந்தது வாழ்க்கையிலேயே முதல் தடவையோ?  ரயிலில், பேருந்தில் போகிறச்சே தவிர மற்ற நேரங்களில் ஏதாவது திரிசமன் (ஹிஹிஹி)  வேலை நடக்கும்.  புத்தகமானும் படிப்பேன்.

நல்லவேளையா டைலேட்டர் டெஸ்டிலும் பாஸ் செய்துட்டேனோ, பிழைச்சேனோ!  கண்ணாடி வரதுக்கு இன்னும் நான்கைந்து நாட்கள் ஆகும்.  "அதுவரைக்கும் மொக்கையா?????" னு யாருங்க அது அலறுகிறது!  அதெல்லாம் மொக்கை இல்லை.  கண் தெரிகிறதை வைச்சுண்டு எழுத மாட்டோமா என்ன? தட்டச்சறதிலே பிரச்னை இல்லை.  என்ன, கொஞ்சம் வேகம் குறைஞ்சிருக்கும்.  பரவாயில்லை.  தேர்வா எழுதப் போறேன். 

Thursday, March 28, 2013

நிலா, நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா!

இன்னிக்குக் காலம்பர நடைப்பயிற்சிக்கு மொட்டை மாடிக்குப் போனப்போ மேற்கே சூரியன். அட, காலம்பர சூரியன் மேற்கே உதிக்குமானு பார்த்தால், ஹிஹிஹி, நம்ம சந்திரனார். முழுசாக் காட்சி அளித்தார். சாதாரணமாப் பெளர்ணமிக்கு அப்புறமா இரண்டாம் நாளே  உப்புப்பார்க்க வேண்டி மூலையில் கிள்ளின தோசை போலக் காண்பவர் இன்னிக்கு முழுசா இருந்தார்.  சரி, படம் எடுத்துட வேண்டியது தான்னு, நடையை முடிச்சுட்டுக் கீழே போய்க் காமிரா எடுத்துட்டு வரதுக்குள்ளே மங்க ஆரம்பிச்சுட்டார். :(  ரொம்ப வருத்தமாப் போயிடுத்து.  இனிமே நடக்கப் போறச்சேயே காமிராவும் கையுமாப் போகணும் போல!  வெளிச்சமெல்லாம் ஃபோட்டோ ஷாப் பண்ணாமல் இயற்கையா இருந்ததோடு விட்டிருக்கேன். எடிட் பண்ணியும் ஒண்ணு போடறேன். :) பிகாசா என்னமோ திடீர்னு திறக்கவே இல்லை. :(  மறுபடி ரீ ஸ்டார்ட் பண்ணிட்டுத் திறந்தேன். :) வெளிச்சம் கொடுத்தேன்.  ம்ஹும், நல்லாவே இல்லை.  அப்புறமா அதை எடுத்துடறேன்.  இப்போதைக்குப் போட்டிருக்கேன், பாருங்க.

கொஞ்சம் மேகங்கள் வந்து மூட ஆரம்பிச்சதோட நிலாவே கரைஞ்சாப்போல் ஆயிடுச்சு! :)))))


Wednesday, March 27, 2013

ஜக்ஹெடும் ஆர்ச்சியும் படிச்சிருக்கீங்க தானே?




ரொம்பவே போர் அடிச்சதுன்னா, எல்லாரும் என்ன பண்ணுவீங்களோ தெரியலை.  எனக்கு ஆர்ச்சி/அல்லது ஆர்க்கி??? காமிக்ஸ் தான் கை கொடுக்கும். எல்லாம் பையரோட சேமிப்பு.  ஒரு பக்கம் காணோம்னாக் கூடப் பதறுவாங்க. அதை எடுத்துப் படிச்சுட்டுத் திரும்ப அவங்களோட சேமிப்புகளிலே வைச்சுடணும். இதிலே அவங்க பிரின்சிபல் வெதர்பீ படும்பாடு அருமையா இருக்கும்.



வழுக்கைத்தலையோட உச்சியிலே நாலு அல்லது ஐந்து முடியோடு காட்சி கொடுக்கும் வெதர்பீ   ஹேர்கட் சலூனுக்குப் போவதைப் பார்த்துத் திகிலடையும் ஆர்ச்சி அவரோட ஹேர் ஸ்டைல் எப்படி நடக்கப் போகிறது என்பதைப் பார்க்க ஆசைப்பட, அவரோ பள்ளியிலே தான் உன்னைச் சகிச்சுக்கப் பணம் வாங்கறேன். இங்கேயுமானு மறுக்க, அப்போ ஆர்ச்சியின் உயிர் நண்பன் ஜக்ஹெட் (இவன்  தீனி தின்னி க்ரூப்பிலே இருக்க வேண்டிய ஆள், எப்போப் பார்த்தாலும் சாப்பிட்டுட்டே இருப்பான். ) அங்கே வெதர்பீயைப் பார்த்துட்டு ஆச்சரியம் தாங்காமல் வருகிறான்.



இருவரும் சேர்ந்து சலூன்காரரிடம் வெதர்பீயின் ஐந்து முடிகளை எப்படி அலங்கரிக்கலாம்னு யோசனை சொல்வதும், ஹிஹிஹி, படிச்சுச் சிரிக்கணும். அப்புறமா வெதர்பீ இதெல்லாம் வேண்டாம்னுட்டு தலையிலே விக் வைச்சுட்டு ஸ்கூலுக்குப் போறார்.  பசங்களுக்கு ஒரு ஆச்சரியமா இருக்கணும்னு நினைக்கிறார்.  ஆனால் உண்மையில் அவருக்குத் தான் ஆச்சரியம் காத்திருக்கு.  ஹிஹி, தலையிலிருந்து ஹாட்டைக் கழட்டும் வெதர்பீயின் விக் ஹாட்டோடு சேர்ந்து ஹாட் ஸ்டான்டுக்குள் போயிடுது.  இது தெரியாமல் பசங்களைக் கூப்பிட்டு, "ஹேர் ஸ்டைல் எப்படி?  சைட் பர்ன்ஸ் எப்படி" னு கேட்டுட்டு இருப்பார்!  அவங்க  ரெண்டு பேரும் தலைமுடி எல்லாம் போயிட்டதிலே வெதர்பீக்கு ஏதோ ஆயிடுச்சுனு நினைப்பாங்க.ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரியாச் சொல்லலையோ!

இன்னும் இருக்காங்க ரெஜினால்ட், வெரோனிகா, பெட்டி கூப்பர், மிட்ஜ், மூஸ், மிஸ் க்ரன்டினு நிறையப் பேர். 

Tuesday, March 26, 2013

கோமதி அரசுவின் விளக்கங்கள்!

மறையோர் வழக்காகிய நூல்களில் எட்டுவகை மணத்துள், யாழை ஏந்தி இசைத்துறையில் வல்லவர்களாக, என்றும் பிரியாத இணையர்களின் (தலைவன், தலைவி) கர்தர்வ மணத்தைப் போன்றதாகும்.
அதாவது, களவு கந்தர்வ மணத்தை ஒத்ததாகும்.


மன்றல் எட்டு:

பிரமம்- பிரமச்சாரிகளுக்குத் தானமாக்க கொடுப்பது.
பிரசாபத்தியம்- இரு பெற்றோரும் இசைந்து கொடுப்பது.
ஆரிடம்- ஆவும் ஆனேறும் வாங்கிக் கொண்டு கொடுப்பது.
தெய்வம்- வேள்வி ஆசிரியனுக்குக் கொடுப்பது
காந்தர்வம்- மனம் ஒத்த இருவர் தாமே கூடுவது
அசுரம்- வில் போட்டியில் வென்றவர்க்குக் கொடுப்பது.
இராக்கதம்- விருப்பமில்லாத போது வலிந்து கூடுவது.
பைசாசம்- கள்ளுண்டு மயங்கி கிடக்கும் போதும், தூங்கும் போதும் கூடுவது.
இதனை வடநூலார் இலக்கியப்படுத்துவர். துணைமையோர் என்பது, ஒருவரை ஒருவர் இணை பிரியாத கர்தர்வர். கர்தர்வ முறை கற்பில்லாமலும் நிகழும். ஆனால், தமிழ் முறையில் கற்பின்றி களவே அமையாது என்று சொல்வார் நச்சினார்க்கினியர்./
http://arulalantamizh.blogspot.in/2012/09/1-1038-1047.html//

எங்கள் வீட்டில் உள்ள தமிழ் மொழி அகராதியில் மணம் 8 என்று போட்டு இருக்கும் குறிப்பு:

மணம் 8: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், 

இவற்றுட் பிரமசாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பதுபிரமமணம்.

தலைமகளினத்தாருட் பட்டவளைத்தீமுன்னர்க் கொடுப்பது பிரசாபத்தியமணம்

ஒன்றிரண்டு பசுமெருதும் வாங்கிக் கொண்டு கன்னியை தீமுன்னர்க் கொடுப்பதாரிடமணம்.

வேள்வியால் வந்த கன்னியை தீ முன்னர்க் கொடுப்பது தெய்வமணம்.

கொடுப்பாருங் கேட்பாருமின்றி யிருவருந்தனியிடத்தெதிபட்டுத்தாமே கூடுவது காந்தருவமணம்.

பெண்ணுக்கு பொன்பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன்வேண்டுவனகொடுத்துக் கொள்வது அசரமணம்.

பெண்ணும், பெண்ணினத்தாருடன் படாமல் வலிதிற் கொள்வதிராக்கதமணம் துயின்றாளைச் சென்று ஊடுவது பைசாசமணம்.

நீங்கள் அழகாய் விரிவாக கூறிவிட்டீர்கள்.

உங்கள் திருமணங்கள் பற்றிய ஆய்வு கட்டுரையில் நானும் சிறு அணில் போல் சேர்ந்து கொள்கிறேன்.

Monday, March 25, 2013

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

நாம் கையோடு கை கோர்த்துக் கொள்ளலமா?



பெண் பார்த்தல் என்ற சடங்கு அந்த நாட்களில் இல்லை எனினும், அரசர்கள், பெருந்தனக்காரர்கள் சுயம்வரம் போன்ற ஒன்றை வைத்தும் பெண்ணுக்கேற்ற வரனைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் பார்த்தோம்.  இப்போப் பெண் பார்த்தாச்சு!  பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டாச்சு! பெண்ணின் தலைமயிரைப் பிடித்து இழுத்தாயிற்று.  உண்மையான தலைமயிர் தான் என்றும் உறுதியாகத் தெரிந்தாச்சு. பேசவும் பேசுகிறாள்.  கல்யாணமாகி வந்ததும் பேச்சை நிறுத்துவாளா என்பது வேறு விஷயம்.  இப்போதைக்குப் பெண் ஊமை இல்லை. நடை, உடை, பாவனை எல்லாம் சரி.  பெண்ணைப் பிடித்துவிட்டது.  அடுத்து என்ன?  நிச்சயம் செய்ய வேண்டும்.  இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம் என்னும் சடங்கே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது.  ஆனால் அந்த நாட்களில் பென்ணைப் பெற்றவர்களும், பிள்ளையைப் பெற்றவர்களும் ஊர்ப் பெரியவர்களில் சிலர் முன்னே அவர்கள் சாட்சியாக வெற்றிலை, பாக்குத் தட்டை மாற்றிக் கொள்வார்களாம். இதற்குப் பாக்கு, வெற்றிலை மாத்திக்கறதுனு பெயர்.  பெரும்பாலும் தஞ்சை ஜில்லாவில் இன்றளவும் பாக்கு, வெற்றிலை மாற்றினதாய்த் தான் சொல்வாங்க.  என் கல்யாணமும் என் அப்பாவும், அவரின் நண்பர் ஒருத்தர் மட்டுமே சாட்சியாக இருக்கப் பிள்ளை வீட்டுக்காரங்களோடு பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டே முடிவு செய்யப் பட்டது என்பதை ஏற்கெனவே எழுதி இருக்கேன். :))))

கல்யாணம் நிச்சயம் ஆனதும், கல்யாணத்துக்கு முதல்நாள் காலை விரதம் முடிந்ததும் அல்லது மாலை நல்லவேளையில் நடப்பதே உண்மையில் நிச்சயதார்த்தம் ஆகும்.  இதைப் பெரிய நிச்சயதார்த்தம் என்கின்றனர்.  கல்யாணத்துக்கு முன்னாடி பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொள்வதைச் சின்ன நிச்சியதார்த்தம் என்கின்றனர்.  இது இப்போதெல்லாம் குறைந்த பக்ஷமாகப் பெண்ணின், பிள்ளையின் செளகரியத்தை உத்தேசித்து ஒரு வருடம் முன்னேயே நிச்சயம் செய்து பின்னர் கல்யாணம் செய்கிற மாதிரி இருக்கிறது.  ஒரு சில கல்யாணங்களே நிச்சயம் முடிந்தவுடனேயோ அல்லது மூன்று மாதத்துக்குள்ளேயோ நடக்கின்றன.  திருமணத்தின் ஆரம்பமே நிச்சயதார்த்தம் தான் எப்போவுமே என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.  இதைப் பெண்ணின் தகப்பனார் அளிக்கும் வாக்குறுதி என்னலாம்.

தாம்பூலம் நம் வாழ்க்கையில் மிக உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறது.  அந்தத் தாம்பூலத்தில் பொருளையோ, பண்டமோ வைக்கிறோமோ இல்லையோ, வெறும் வெற்றிலை, பாக்கு, பழம் என்றாலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறது.  ஒரு வெத்திலை, பாக்குக்கு வழியில்லை;  கல்யாணம் பண்ணினாங்களாம்னு சொல்றவங்களைப் பார்த்திருக்கலாம்.  வெற்றிலையின் பசுமை நிறம், சுண்ணாம்பின் தூய வெண்மையோடு, பாக்கின் பழுப்பு நிறம் சேர்ந்து சிவப்பாக மாறுகிறது.  பசுமையான வெற்றிலையில் வைக்கப் படும் கொட்டைப்பாக்கு, ஆவுடையாரையும் பாணத்தையும் குறிப்பதாகச் சொல்கின்றனர்.  உமாமகேசுவரருக்கு ப்ரீதி என வெற்றிலையையும், பாக்கையும் கூறுகின்றனர். திருமணத்தை உறுதி செய்ய மட்டும் தாம்பூலம் பயன்படுவதில்லை.  திருமணம் ஆனதும் முகூர்த்தத் தாம்பூலம் மிக முக்கியம்.  அதோடு பலத்த விருந்துச் சாப்பாடு ஜீரணம் ஆகவும் தாம்பூலம் தரிக்கின்றோம்.  தெய்வ வழிபாட்டிலும் வெற்றிலை, பாக்கு இல்லாமல் செய்ய மாட்டோம். சுமங்கலிகளுக்கு நாள், கிழமைகளிலும் சும்மா வீட்டுக்கு வந்துட்டுப் போனாலுமே தாம்பூலம் கொடுப்போம்.

சம்பந்திகளுக்கு பதில் மரியாதையில் தாம்பூலம் இடம் பெறு,ம்.  பெண்ணின் மாமன்மார், அத்தைமார், பையரின் மாமன்மார், அத்தைமார் போன்றோருக்கும் தாம்பூலம் விட்டுப்போகாமல் நினைவாய்க் கொடுக்க வேண்டும். அவ்வளவு ஏன்?  திருமணச் சடங்குகளிலேயே பெண் மணமகனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுப்பாள்.  பெண்ணின் சகோதரன் பக்குவமாகச் சுண்ணாம்பு, பாக்கு வைத்த தாம்பூலத்தை மடித்துத் தர அதைப் பெண் வாங்கித் தன் கணவனுக்குக் கொடுப்பாள். இதைப் பின்னால் பார்க்கலாம்.  ஆனால் இப்படியாகத் தாம்பூலம் என்பது நம் வாழ்க்கையில் இன்றளவும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  பெண்ணின் பெற்றோரும், பையரின் பெற்றோரும் மிக மிக முக்கியமான உறவினர், ஊர் மக்கள் முன்னிலையில் இன்னாருடைய பெண்ணை, இன்னாருடைய பையருக்குக் கன்யாதானம் செய்து கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துத் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொள்வதே நிச்சயதார்த்தம்.  பல சினிமாக்களிலும் பார்த்தாச்சு இல்லையா? :))))

வெற்றிலையின் நுனியில் மஹாலக்ஷ்மி, நடுவில் சரஸ்வதி என்னும் வாக்தேவி, காம்பில் ஜ்யேஷ்டா தேவி, இடப்பக்கம் மஹாசக்தி, வலப்பக்கம் பூமி தேவி, உள்ளே மஹாவிஷ்ணு,, வெளியே சந்திரன், ஓரங்களில் ஈசன், பிரம்மா, மேலே இந்திரன், ஆதவன், எல்லாப் பக்கங்களிலும் மன்மதன்  என தேவதைகளின் இருப்பிடமாகக் கூறுகின்றனர்.  இதில் காம்பான ஜ்யேஷ்டாதேவியைக் கிள்ளி எறிந்துவிடுகிறோம். அதோடு தொடர்புடைய நரம்புகளையும் அகற்றிவிட்டே வெற்றிலை தரிக்கிறோம்.  வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு.  சின்னக் குழந்தை வயிற்றுப் பொருமலில் அழுது கொண்டே இருந்தால், வெற்றிலை ஒன்றோடு, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை உப்பு, பெருங்காயம் வைத்து அம்மியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டிக் குடிக்கக் கொடுத்தால் சரியாகும்.  இது என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி விளக்கில் காட்டி வாட்டிப் பொறுக்கும் பதத்தில் தொப்புளில் வைத்தாலும் வயிற்று வலி சரியாகும். வெற்றிலையின் மகத்துவம் இன்னும் நிறைய என்றாலும் நாம் பார்க்க வேண்டியது நிச்சயதார்த்தம் இல்லையோ?

சமீப காலங்களில் தான் இந்த நிச்சயதார்த்தத்தில் தட்டுத் தட்டாக சீர் வரிசை வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   நிச்சயத்தின் போதே பிள்ளைக்கு, பெண்ணுக்கு நகைகள், ஆபரணங்கள் போடுவதும் வழக்கமாகி இருக்கிறது. இதை வைத்துப் பெண்ணின், பிள்ளையின் அந்தஸ்தையும் நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.  முன் காலத்தில் எத்தனை பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் வெறும், வெற்றிலை, பாக்கு, பழம் உள்ள தட்டு மட்டுமே! :)))) நிச்சயதார்த்தம் முடிச்சாச்சு.  அடுத்துக் கல்யாண வேலை நிறைய பாக்கி இருக்கே!  சீர் வரிசைகள் பத்திச் சொல்ல  வேணுமா?  கல்யாணம் பத்தி விளக்கம் கொடுத்தால் மட்டும் போதுமா?  கல்யாணம் பத்தி மட்டும் போதும்னு நினைக்கிறேன். :))))

படம்: சொந்தமோ சொந்தம்! :))))))

Saturday, March 23, 2013

ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கதேரிலே!


அடுத்து ஆஸுரம் என்னும் முறை ஆகும்.  ஆஸுரம் என்றால் ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத மாப்பிள்ளை/வரன் பணக்காரனாக இருப்பான்.  நிறையப் பணத்தைப் பெண் வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்துப் பெண்ணைத் தனக்குக் கொடுக்கும்படி செய்வது தான் ஆஸுரம்.  இங்கே பெண்ணின் சம்மதம் கேட்கப் படுவது இல்லை. பணத்தைக் கொடுத்துப் பெண்ணை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகத் திருமணம் செய்து கொள்வான்.  மேலே சொன்னவற்றில் மூன்றாவதான ஆர்ஷத்தில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றது போல் தான் இதுவும் என நினைத்தீர்களானால் தப்பு. ஆர்ஷ முறைப்படி கல்யாணம் செய்துக்கிறவங்க அநேகமாய் தவ வாழ்க்கையில் ஈடுபட்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தவ வாழ்க்கைக்கு உதவக் கூடிய பெண்ணாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் அப்படிப் பட்ட பெண் எனில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து கன்யாதானம் பெறுவார்கள்.  ஆனால் இங்கேயோ பணத்தைக் காட்டி ஆசை காட்டி வசியம் செய்து பெண்ணைப் பெறுவது என்பது நடப்பதால் இதையும் இரண்டாம்பட்சமாகவே கருத வேண்டும்.

சுமார் முந்நூறு வருடங்கள் முன்பிருந்து சமீப காலம் வரையிலும் பலரும் முதல் மனைவி இறந்து போய்ப் பல வருடங்கள் வயது வித்தியாசத்தில் இரண்டாம் கல்யாணம், மூன்றாம் கல்யாணம் என்றெல்லாம் பண்ணிக் கொண்டது ஆஸுர வகையைச் சேர்ந்தது தான்.



அடுத்தது காந்தர்வ விவாஹம். இதில் பெண்ணும், பையரும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு மனம் ஒன்றிப் போய் அவர்களாகவே பெரியவர்கள் துணையோ, அவர்கள் சம்மதமோ இல்லாமல் பண்ணிக் கொள்வது ஆகும். இந்த காந்தர்வ விவாஹம் என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது துஷ்யந்தனும், சகுந்தலையும் செய்து கொண்ட காந்தர்வ விவாஹம் தான்.  எவருக்கும் தெரியாமல் இருவரும் செய்து கொண்ட திருமணம் காந்தர்வ விவாஹம் எனப்படும்.  தற்காலங்களில் பெண்ணும், பிள்ளையும் வீட்டை விட்டு ஓடிப் போய்க் கோயில்களில், திருமணப் பதிவு அலுவலகங்களில் செய்து கொள்ளும் திருமணங்கள் கூட ஒரு வகையில் காந்தர்வ விவாஹமே ஆகும்.


அடுத்தது ராக்ஷஸம்.  நம்ம கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் நடந்தது ராக்ஷஸ விவாஹமே.  என்ன ஆச்சரியமாப் பார்க்கிறீங்களா?  பெண்ணுக்குத் தாய், தந்தை ஏற்பாடு செய்யும் வரன் பிடிக்காமல் வேறொருவரை மணக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து, அந்தக் குறிப்பிட்ட நபருக்குத் தன் ஆசையையும் தெரிவித்துத் தன்னைத் தன் பெற்றோர் நிச்சயித்திருக்கும் வரனிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போகும்படி வேண்டிக் கொண்டாள் எனில் அந்த ஆண் அவள் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும். தனக்குப் பிடிக்காத இடத்தில் பெண் திருமணம் ஆகிச் செல்வதை ஒருபோதும் நம் சமூகம் அனுமதிக்கவே இல்லை.  ஆகவே ருக்மிணிக்கு சிசுபாலனைப் பிடிக்கவில்லை என்றும் சுயம்வரம் என்பது பெயருக்குத் தான் வைத்திருக்கிறார்கள் என்பதையும் ருக்மிணி கடிதம் மூலம் கண்ணனுக்குத் தெரிவித்ததுமே கண்ணன் ஓடோடியும் வந்து ருக்மிணியைத் தூக்கிச் செல்கிறான்.  இதற்கு நடுவில் தன்னை எதிர்க்க வந்த ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மியையும் மற்ற வீரர்களையும்,  சொந்தங்களையும் யுத்தம் செய்து வெல்கிறான்.  இப்படிப் பெண் வீட்டுக்காரர்களோடு போர் புரிந்து ஜெயித்துப் பெண்ணைத் தூக்கிச் சென்று கல்யாணம் செய்து கொள்வது ராக்ஷஸ விவாஹம் ஆகும். இதிலே பெண்ணின் சம்மதம் மிக முக்கியம்.  பெண் தன்னைத் தூக்கிச் செல்பவனோடு செல்ல முழுச் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும்.

அடுத்துப் பைசாசம். இது மிகவும் அசுரத் தனம்.  ஆஸுரம் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற மாதிரியானது.  ஆஸுரத்திலே பெண்ணின் சம்மதத்தைக் கேட்காவிட்டாலும் பெண் வீட்டுக்காரர்களைப் பணத்தாலே குளிப்பாட்டி சந்தோஷப் படுத்துவான்.  ஆனால் இதிலே பெண்ணின் சம்மதமும் முக்கியமில்லை.  அவளின் உறவினர்களோ, பெற்றோர்களோ எவருமே முக்கியமில்லை.  ஆணின் விருப்பம் ஒன்றே குறியாக அனைவரையும் பகைத்துக் கொண்டு பெண்ணையும் பலவந்தப் படுத்தித் திருமணம் செய்து கொள்வது பைசாசம் ஆகும்.  இதுவும் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கோம்.  இன்னமும் பார்க்கிறோம்.

இதிலே ராக்ஷஸம், பைசாசம் போன்ற விவாஹ முறைகளைக் காட்டு வாசிகளுக்கும், காந்தர்வ விவாஹ முறையை க்ஷத்திரியர்களுக்கும் அனுமதித்திருந்தார்கள்.  என்றாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி எட்டுவிதமான விவாஹங்களிலும் மந்திரபூர்வமாக விவாஹம் நடைபெறவும் உரிமை உண்டு.  பொதுவாக பிராம்ம விவாஹம் உயர்ந்தது  எனப்பட்டாலும் பல பெண்களுக்கும் பிள்ளை தேடி வந்து கல்யாணம் நடப்பதில்லை.  வயது ஆகிவிட்டால் தைவமாகவோ, ஆர்ஷமாகவோ, பிராஜாபத்யமாகவோ திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.  இவை நான்குமே பிராமணருக்கு என ஏற்பட்டவை எனினும் மற்றவர்களுக்கும் பெரும்பாலும் இப்படித் தான் இருந்து வருகிறது.  ஆனால் பெண்ணே சுயமாகத் தேர்ந்தெடுக்கும் முறை அரசகுலத்தில் உண்டு.  அதே போல் காந்தர்வ விவாஹமும் க்ஷத்திரியர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தது.

சரி, இப்போக் கல்யாணங்களின் வகையைத் தெரிந்து கொண்டு விட்டோம். இந்தக் காலத்தில் பெரும்பாலும் தைவமோ, பிராஜாபத்யமாகவோ தான் திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆகையால் பெண் பார்த்து நிச்சயம் செய்வதிலிருந்து படிப்படியாக ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.


படம் உதவி கூகிளார்: ருக்மிணி, கண்ணன் படம் வெங்கட் நாகராஜ் பதிவிலிருந்து. :)))))

சகுந்தலை படம் உதவி கூகிளார்

எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய குறிப்பு எழுத உதவியது

தெய்வத்தின் குரல்.

Thursday, March 21, 2013

பொன்னொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை!



என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

பூவொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை,
என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?


அவ்வளவு ஏன்?  நம் தமிழ்நாட்டிலேயே ஒரு சில மாவட்டங்களில் பெண்ணை மாலை மாற்றுகையில் மட்டுமே முதல் முறையாகப் பார்க்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.  இது குறித்து திருமதி கோமதி அரசுவும் கூறி உள்ளார்.  ஆகவே பெண் பார்த்தல் என்னும் நிகழ்வே பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது.  மிகப் பழைய காலங்களில் பெண்ணை சீக்கிரமாகவே விவாஹம் செய்து கொடுக்கும் வழக்கமே இருந்து வந்திருக்கிறது.  அப்படிப் பெண்ணைச் சீக்கிரம் விவாஹம் செய்து கொடுக்க இயலாமல் அந்தப் பெண்ணானவள் வயதுக்கும் வந்துவிட்டால் மூன்று வருஷம் வரையிலும் பெற்றோர் மாப்பிள்ளை தேடித் தருகிறார்களா?  அல்லது அந்தக் கால வழக்கப்படி வரனே தேடி வருகிறானா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  அப்படி வராவிட்டால் அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்கிறது.  அவளுக்கேற்ற மணமகனை அவளே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  இது ஆச்சரியமா இருக்கிறதா?  ஆனால் இது நடந்த உண்மையே.  அதுவும் இது மநுஸ்ம்ருதியில் வருகிறது.  மநுநீதியில் பெண்ணுக்கு அக்கிரமம், அநியாயம் செய்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள் என்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது.  அதோடு விதவை மறுமணத்தையும் மநுநீதி ஆதரிக்கவே செய்கிறது என்றும் படித்துள்ளேன்.  அதுக்கான ஆதாரபூர்வமான தகவல் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.  கணவன் மோசமானவனாக இருந்தால் அவனை விட்டுப் பிரியவும் இடம் கொடுக்கிறது. இத்தனையும் மநுநீதியில் உள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தப் பெண் பார்த்தல் என்னும் நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்ததும், பெண்ணைப் பார்க்கும் வரனின் வீட்டுக்காரர்கள் பெண்ணைப் பாடச் சொல்லி, நடக்கச் சொல்லி எல்லாம் சோதனை செய்வார்களாம். பாடச் சொல்வது பெண்ணுக்குப் பேச்சு நன்றாக வருகிறதா என்று அறியவும், நடக்கச் சொல்வது பெண் நொண்டியோ, முடமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்கும் ஆகும் என்பார்கள்.  இன்னும் ஒரு படி மேலே போய்ச் சிலர் பெண்ணை விளக்கு ஏற்றச் சொல்வார்களாம்.  ஒரே குச்சியில் பெண் விளக்கை ஏற்றினால் சிக்கனமாய்க் குடும்பம் நடத்துவாள் எனக் கொள்வார்களாம்.  வேறு சிலர் தண்ணீர் நிறைந்த பாத்திரத்தைக் கொடுத்து எதையானும் கழுவி எடுத்துவரச் சொல்வார்களாம்.  தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்து கழுவியும் எடுத்துத் தண்ணீரையும் மீதம் வைத்த பெண் எனில் குடும்பத்துக்கு ஏற்ற பெண் என முடிவு செய்வார்களாம்.  வேறு சிலர் பெண் பார்க்கையில் சாப்பிடும்போது பெண் இலையில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதைக் கவனித்துப் பரிமாறத் தெரிகிறதா என சோதனை செய்வார்களாம்.  ஆகப் பெண் பார்த்தல் என்பது வெறும் சடங்காக இல்லாமல் பெண்ணானவள் ஒரு சோதனை எலியாகவும் இருந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. இப்போதெல்லாம் கோயில் அல்லது ஹோட்டலில் சகஜமாய்ப் பார்த்துக்கொள்வதே நடைமுறையாக இருக்கிறது. அதன் பின்னரே விவாஹம்.

விவாஹங்கள் எட்டுவகைப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  அவை பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்தியம், ஆஸூரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என எட்டுவகைப்படும்.

குருகுலவாசம் முடிந்து குருவின் ஆசிகளைப் பெற்றுக் காசியாத்திரையும் சென்று சமாவர்த்தனம் முடிந்த உத்தம பிரம்மசாரிக்காக அவனுடைய பெற்றோர் நல்ல குலத்துப் பெண்ணைத் தேர்ந்தெடுத்துப் பெண்ணின் பெற்றோர்களிடம் தங்கள் பிரம்மசாரி மகனுக்கு அவர்கள் குமாரியைக் கன்யாதானம் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுப்பது ஆகும்.  கவனிக்கவும்.  பெண்ணைக் கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் தான் பையர் வீட்டார் விடுகின்றனர்.  வரதக்ஷணை என்பதெல்லாம் இல்லை.  இந்த பேரம் எல்லாம் பிற்காலத்திலேயே ஏற்பட்டது.  அதே போல் பெண்ணுக்குப் பரிசம் என்பதும் கிடையாது. இரண்டு குலங்களும் ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் பண்ணிக் கொண்டு தங்கள் குலத்தை விருத்தி செய்வதோடு பிரம்மசாரிக்கு கிரஹஸ்தாசிரமம் ஏற்பட்டு அவன் செய்ய வேண்டிய கர்மாநுஷ்டானங்களை அந்தப் பெண்ணின் துணையோடு கிரமமாகச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.  எட்டுவித விவாஹங்களில் இதுவே முதன்மை வாய்ந்தது ஆகும்.


அடுத்தது தைவம் எனப்படுவது.  யாகங்கள், யக்ஞங்கள் நடக்கையிலே அதைப் பண்ணி வைக்கும் ரித்விக்குக்குப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவதும் நடைமுறையில் இருந்து வந்தது.  பெண்ணுக்கு வயது வந்தும் உரிய காலத்தில் பிள்ளை தேடி வராத காரணத்தால் வேறு வழியின்றிப் பெண் வீட்டுக்காரர்கள் வரனைத் தேடிப் போய் அலைந்து யாகசாலையில் மாப்பிள்ளையைக் கண்டுபிடித்துப் பெண்ணைக் கன்யாதானம் செய்வார்கள்.  இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர்.  வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர்.  உண்மையில் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டுக்காரர்கள் செல்வதும், பெண்ணைத் தேடிக் கண்டு பிடித்து விவாஹம் செய்து கொள்வதுமே சிலாக்கியமான ஒன்று என சாஸ்திரம் சொல்கிறது.


அடுத்த ஆர்ஷம் என்பதும் உரிய காலத்தில் விவாஹம் ஆகாத கன்னிகையை வயது வித்தியாசம் பார்க்காமல் முதிர்ந்த ரிஷியாக ஆனாலும் இரண்டு பசுக்களையாவது வரனிடமிருந்து வாங்கிக் கொண்டு பெண்ணைக் கொடுப்பார்கள்.  வரனிடமும் அவ்வளவு சக்தி இல்லை.  ஆகையால் பசுக்களைக் கொடுக்கிறான்.  பெண்ணைக் கொடுப்பவருக்கும் பிராம்ம விவாஹம் செய்து வைக்கக் கூடிய சம்பந்தம் கிடைக்கவில்லை என்பதால் பசுக்களையோ, பொருளையோ வாங்கிக் கொண்டு பெண்ணைக் கொடுக்கிறார்கள். ஆனால் விவாஹ விஷயத்தில் பண சம்பந்தமே இல்லாமல் இருப்பதே உத்தமமான விவாஹம் ஆகும்.

அடுத்தது பிராஜாபத்தியம்.  பெண் வயதுக்கு வரும் பக்குவம் அடைந்துவிட்டாள் என்பதால் அவசரம் அவசரமாக வரனைத் தேடிப் போய் பிரம்மசாரியைக் கண்டுபிடித்துப் பெண்ணைக் கொடுப்பது தான் பிராஜாபத்தியம்.  இதைல் ஜிஎம்பி சார் சொன்ன மாதிரி பிரஜையை உண்டு பண்ணும் நோக்கமே முக்கியமானதாக உள்ளது என்பதால் இதுவும் அவ்வளவு உசிதமான திருமண முறை அன்று.  என்றாலும் இன்றும் இப்படியான திருமணங்களே பெரும்பாலும் நடந்து வருகின்றன.


// இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர். வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர். //

@அப்பாதுரை, தைவக் கல்யாண முறையோடு இது எழுதப் பட்டிருப்பதால் தைவ கல்யாணங்களில் வரதக்ஷணை இருந்தது என்ற கருத்துத் தோன்றி விட்டது. தவறு என் மேல் தான். நான் சொல்ல வந்தது என்னவெனில் தைவக் கல்யாணங்களில் பெண்ணை வைத்துக் கொண்டு பிள்ளை தேடி வராமல் பிள்ளையைத் தேடிப் போனது போல் தற்காலத்திலும் சில வருடங்கள் முன்னர் வரை பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிப் போய்க் கல்யாணம் ஏற்பாடு செய்தனர் என்பதே. இதுக்குத் தான் வரதக்ஷணை கொடுத்தனர். தைவக் கல்யாணங்களில் இல்லை. :))))))))//



மேலே குறிப்பிட்டவை அப்பாதுரையின் பின்னூட்டத்துக்கு என் பதில்.  இந்தப் பதிவில் தைவக் கல்யாணங்கள் குறித்த விளக்கத்தில் மேற்கண்ட வரிகளும் சேர்க்கப் பட்டிருப்பதில் தைவக் கல்யாணத்தின் பொருளே மாறுபட்டுத் தொனிக்கிறது.  உ.வே.சா. அவர்கள் எழுதிய கல்யாணம் குறித்த சான்றுகள் கிடைத்துவிட்டன.  விரைவில் அவற்றைப் பகிர்கிறேன். 


Tuesday, March 19, 2013

நீ பாதி நான் பாதி கண்ணே!

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீயில்லையே இனி 
நானில்லையே உயிர் நீயே


படைப்புக்குத் தேவை பெண்ணினமே.  புழு, பூச்சியில் இருந்து அனைத்து ஜீவராசிகளும் பெண் இனம் ஆண் இனத்தோடு இணைந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வகுத்த நியதி. அனைத்துப் படைப்புகளும் பெண்ணினத்தில் இருந்தே வருகின்றன என்பதையும் அறிவோம்.  இப்படி இயற்கையே பெண்ணைப் படைக்கவும், ஆணை அதற்குத் தேவையான விதையைத் தரவும் எனப் படைத்து இருக்கிறபோது ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? பெண்ணுக்கே சுபாவமாகவே துன்பங்களை ஜீரணித்து எதிர்த்து நிற்கும் வல்லமை உண்டு. மநுநீதியில் கூட இதைக் குறித்துக் குறிப்பிடப் பட்டிருக்கிறதாய்ப் பரமாசாரியார் சொல்கிறார். குடும்பத்தைக் கட்டிக்காக்கும் திறமையும் பெண்ணுக்கே உண்டு.  ஆகவே பிரம்மசாரியானவன் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டித் திருமணம் செய்து கொள்கிறான்.  இதற்காகப் பல வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து ஒரு காலத்தில் தனக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாய்ச் சொல்கின்றனர். 

திருமணம் செய்து கொள்ளும் முன்னர் பெண்ணின் குலம், கோத்திரம் போன்றவை விசாரிக்கப் படும்.  ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது தடுக்கப் படுகிறது.  உறவின் முறை திருமணமும் தடுக்கப்பட்டே இருக்கிறது.  எந்த சாஸ்திரமும் உறவின் முறைத் திருமணத்தை ஆதரிக்கவே இல்லை.  எல்லா கோத்திரக்காரர்களும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதோடு ஒரே கோத்திரமாக இருந்துவிட்டால் காலப்போக்கில் ஆண்-பெண் விகிதங்கள் குறையும்போது அந்த கோத்திரக்காரர்கள் குறைவாக இருக்க வாய்ப்புண்டு என்பதாலும் ஒரே கோத்திரம் மறுக்கப்படுகிறது.  வெவ்வேறு கோத்திரங்களில் பிறந்தவர்கள் இணைந்தாலே குடும்பம் செழிப்படையும் என்பது தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரை ஆகும்.  மேலும் மன ஒற்றுமைக்கும் வெவ்வேறு கோத்திரத்தையே சிபாரிசு செய்கிறது சாஸ்திரம்.  அதோடு பெண்ணுக்குப் பதினேழு வயது கட்டாயம் முடிந்திருக்க வேண்டும்.  ஆணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம்.  இதற்கான காரணமாக ஆயுர்வேதம் கூறுவது என்னவெனில், பெண் பதினாறு வயதில் பூர்ணவதியாக கர்ப்பம் தரிக்க தகுதி வாய்ந்தவளாக ஆகிவிட்ட்டாலும் ஆணுக்கு இருபத்தைந்து வயதில் தான் தந்தை ஆகும் தகுதி ஏற்படுகிறது எனக் கூறுகிறது.  பதினாறு வயதுக்குக் கீழே உள்ள பெண்ணுக்கும், இருபதுக்குக் கீழே உள்ள ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் நோயாளிகளாக ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கலாம் அல்லது அற்ப ஆயுளில் இறக்கலாம் எனக் கருதி வந்தனர்.

அதற்கும் முன்னால் பால்யத்திலே திருமணம் செய்விக்கும் வழக்கம் இருந்ததா எனத் தெரியவில்லை.  ஆனால் இது குறித்துப் பரமாசாரியார் தெரிவிப்பது என்னவெனில் பெண்ணுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்வித்த வழக்கம் இருந்தது என்றே கூறுகின்றார்.  பால்யத்தில் மனதில் கபடு, சூது தெரியா  பிள்ளைப் பருவத்தில் காமம் உட்புகும் முன்னர் இருவருக்கும் திருமணம் செய்வது வழக்கமாக இருந்ததை நாமெல்லோருமே அறிவோம்.  எங்க வீட்டில் என் அம்மாவின் அம்மா அப்படித் திருமணம் ஆனவரே.  ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோது திருமணம் ஆகி இருக்கிறது.  என் தாத்தாவுக்குப் பதினேழு வயது.  அவர் சட்டம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.  ஆகவே என் பாட்டி வயதுக்கு வரும்வரையில் பிறந்தகத்திலும், புக்ககத்திலும் மாறி மாறி இருந்து வந்திருக்கிறார்.  ஐந்து வயது மாட்டுப் பெண்ணை மாமனார் தன் சம்பந்தி வீட்டிற்கு வந்து தங்கள் வீடு இருக்கும் பக்கத்து கிராமத்துக்குத் தூக்கிக் கொண்டு செல்வாராம்.  வாயில் விரலைப் போட்டுக் கொண்டு மாமனார் தோளிலேயே என் பாட்டி தூங்கி விடுவாராம்.  ஆனால் இப்படிச் சிறு வயதில் இருந்து பழகியதால் புக்ககத்து மனிதர்களோடு நெருக்கமும், பாசமும் அதிகம் ஆகும் என்பது அவர்கள் கணிப்பு.

இம்மாதிரியான திருமணங்களால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் இயல்பாக நட்பு உருவாகி அது காதலாகவும், பாசமாகவும் மாறி, அவர்கள் வாழ்க்கைக்கு நீடித்ததொரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது முன்னோர் கணிப்பு.  இப்போதெல்லாம் ஆசையில் தொடங்கினாலும் பின்னர் அது நட்பாகவும் மாறவேண்டும்.  ஏனெனில் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றொரு சொல்லாடல் உண்டு.  ஆசை அடங்கினாலும் நட்பு தொடரும்; தொடரவேண்டும்.  இதுவே கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் காரணம்.  தாம்பத்திய இன்பம் என்பது தாம்பத்தியத்தின் ஒரு பகுதியே ஆகும்.  கல்யாணத்தின் குறிக்கோள் அது இல்லை. நட்பின் அடிப்படையில் இளமை முதிர்ந்து ஆசாபாசங்கள் இல்லாத எண்ணங்கள் உதிக்க ஆரம்பிக்கையில் நட்பின் அடிப்படையில் ஒன்றிய உள்ளங்கள் கொண்ட தம்பதிகள் ஒருவருக்குள் ஒருவர் ஆழ்ந்து போவார்கள் என்பதும் கண்கூடு.  

அதோடு முடிந்ததா?  அந்தக் காலத்தில் பெண் பார்ப்பது என்றெல்லாம் இல்லை என்றே கூறுகின்றனர்.  பெண்ணைத் திருமணத்தின் போதே மணமகன் முதல் முறையாகப் பார்க்கிறான் என்பதும் திருமணச் சடங்குகளின்போது சொல்லப்படும் மந்திரங்கள் மூலம் தெரிய வருகிறது.  அவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஆனால் இப்போதும் தெலுங்கு பேசும் மக்களின் திருமணத்தில் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே திரை கட்டுவது வழக்கம்.  பெண்ணை அந்தத் திரை திறந்ததுமே பார்ப்பது மணமகன் முதல் முறையாகப் பார்ப்பது என ஒரு காலத்தில் இருந்து வந்திருக்கிறது.  வட மாநிலங்களில் இப்போதும் திருமணம் முடிந்த முதலிரவின் போது பெண்ணின் முகத்திரையை மணமகன் அகற்றுவது என்பது ஒரு சாஸ்திரம் சார்ந்த சம்பிரதாயமாகவே பார்க்கப் படுகிறது.  அதுவரையிலும் மணமகள் மணமகன் தன்னைப் பார்க்க முடியாமல், "குங்கட்"எனப்படும் முகத்திரை அணிந்தே காணப்படுவாள்.

படம் உதவி: கூகிளார், உஜிலாதேவி ப்ளாக்ஸ்பாட்.

தொடரும்.

நான்கைந்து நாட்களாக விருந்தினர் வருகையால் எதுவும் எழுத முடியவில்லை.  அதுக்கு முன்னாடி யுபிஎஸ் கலாட்டா.  கிட்டத்தட்டப் பத்து நாட்களாக கணினி கிட்டே அதிகம் வராமல் சும்ம்ம்மா முக்கியமான மடல்கள் மட்டும் பார்க்கப்பட்டது ஒரு சாதனை! :))))))) 

Thursday, March 14, 2013

ஸ்வீட் எடு, கொண்டாடு!

யுபிஎஸ்ஸுக்கு 3 நாளாக உடம்பு சரியில்லை.  கைவிடாமல் அழ ஆரம்பிடுச்சு.  இன்னிக்குத் தான் மருத்துவர் வந்தார். ராத்திரிக்குள் சரி செய்யறேன்னு சொல்லி இருக்கார்.  ஆகையால் சும்மா  இணையத்துக்கு வந்துபார்த்துட்டுப் போறதோட சரி.  அதிக நேரம் உட்காருவது இல்லை. கணினியைத் திறந்து ஏதேனும் எழுதலாமானு உட்காரவே பயம்.  அதனால் கணினிக்கு ஏதேனும்  வந்துடுச்சுன்னா என்ன பண்ணறதுனு பயம்.  ஆனால் மருத்துவர் அதெல்லாம் பரவாயில்லை.  உட்காருங்க மின்சாரம் இல்லைனா கவனம்னு சொல்லி இருக்கார்.  இங்கே எப்போப் போகும், எப்போ வருமே சொல்ல முடியலை.  நாலு நாளா மறுபடியும் பகல் நேரத்தில் ஆறு மணி நேர மின் தடை. எல்லாம் சேர்ந்துட்டு இருக்கு.  சரியாகட்டும்.  அதுவரைக்கும் ஸ்வீட் எடு, கொண்டாடு!

Tuesday, March 12, 2013

மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா?

நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு! களிமண்ணை அலகால் கொத்திக் கொத்தி
இப்படிக் கொண்டு வந்து வட்ட வடிவமாகச் சுவர் எழுப்பி


கொத்துவேலை தெரியும்.  அதான் நல்லாக் கொத்திக் கொத்திப் பூசறேன்.





நீங்களே பாருங்க குஞ்சுங்களுக்கு இந்த இடம் போதுமா போதாதா? என்ன, இன்னும் பெரிசா இருக்கணுமா?  ம்ம்ம்ம்ம்ம் சரி.


தனியாத் தான் செய்தாகணும்.  நம்ம வீட்டு வேலை; நான் தானே செய்யணும்.  அவர் வரட்டும், பார்த்து அசந்துடுவார்.

அடப் பாவமே, நீ ஏன்மா தனியாக் கஷ்டப்படறே, இந்த ஓரமெல்லாம் கொத்த உன் மெல்லிய அலகால் முடியுமா?  நான் சரி பண்ணிடறேன் பார்த்துட்டே இரு.


பாவம், தனியா முடியலை.  வரதுக்குள்ளே நாமே சரி செய்துடுவோம்.  பாலிஷிங் நடக்கிறது.  அடடா வந்துட்டாளா?  என்ன எப்படி இருக்கு?



அலங்கார வளைவுகள் பாக்கி இருக்கே.



இந்த அலங்காரம் எல்லாம் அவராலே முடியாது.  நான் தான் பண்ணணும்.

அப்பாடா, இது தான் சொர்க்கம்.

வெளியே போனாரே காணோமே இன்னமும், என்ன ஆச்சு?  கவலையா இருக்கு.

இவ்வளவு நேரமாச்சு, இன்னும் வரலியே? எங்கே போயிருப்பார்?


அப்பாடா, வந்துட்டார்.  போய்ப் படுத்துத் தூங்கலாம்.  குஞ்சுகளெல்லாம் நல்லபடியாப்பொரிச்சாகணும். அது வேறே கவலை. காலையிலே பார்க்கலாம். இப்போத் தூங்கப்போறேன். வீடு எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?

தெரியாதவங்க சொல்லுங்கப்பா.

Monday, March 11, 2013

வீடு கட்டும் அதிசயப்பொறியாளர்! :))))

இன்னிக்கு வந்த ஒரு மடலில் கிடைத்த காணற்கரிய காட்சி.  அனைவரும் பார்க்க வேண்டிப் பகிர்கிறேன்.  நிறையப் பறவைக்காதலர்கள் இருந்தாலும் இத்தனை நுணுக்கமான கவனிப்பு அதிசயமே. அத்தகையதொரு அதிசயம் இது.


Structural engineer in action
Whether you’re a ‘bird person’ or not, this is stunning!!!
Not to detract from the sheer magic of it, but in practical terms, how MANY trips would a bird 
have to make with that tiny little quantity of mud/clay it could carry? (and how far from the 
nest is the source?) 
If you take the construction of a “circular bowl” in your stride as instinctive – how in the world
does the bird come up with the windbreak/entrance design that shields the eggs/chicks 
from the elements – and at what point in fashioning the bowl do they start to construct it?
 

  
http://imagecache.te3p.com/imgcache/15af18d19d91decfa96e5b89d4a4511f.jpg
http://imagecache.te3p.com/imgcache/1fa33c24ef939429f880117a4c59cb2e.jpg
http://imagecache.te3p.com/imgcache/b032df1e3b0ba958c584c4f20cce865f.jpg
http://imagecache.te3p.com/imgcache/457186c3ede1b215122097fe1fb05f30.jpg
http://imagecache.te3p.com/imgcache/6f13c9236e20651622212095669c467f.jpg
http://imagecache.te3p.com/imgcache/da539233c223eea1a4902da52f175468.jpg
http://imagecache.te3p.com/imgcache/baadfdc5132117cfad46b16118a2cb62.jpg
http://imagecache.te3p.com/imgcache/4b0b5db9adca56109260f0201f7a65f1.jpg
http://imagecache.te3p.com/imgcache/867d51021a631452aede36bf3c3e48b9.jpg
http://imagecache.te3p.com/imgcache/3deefd7a62fa70de582a43cf97c29506.jpg
http://imagecache.te3p.com/imgcache/88ff3c28067710fe2f0a507959daa285.jpg
http://imagecache.te3p.com/imgcache/7008ed5805f492bbfab6c83e382f1368.jpg
http://imagecache.te3p.com/imgcache/6864cee853b64633ee892058bb33e752.jpg
http://imagecache.te3p.com/imgcache/7980f691265b249562593dfa7d90106c.jpg
http://imagecache.te3p.com/imgcache/77e31332c7c557660e8255862abd51f8.jpg
Structural engineer in action.


Even if you think you could build this? Try it without using your hands!

Truly GOD’S creatures.

Sunday, March 10, 2013

சில தெரிந்த ஆனால் முக்கியத் தகவல்கள் நினைவூட்டலுக்கு!


நம் நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் சரியான பாதையில் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆங்கிலேயர் வந்த பின்னரே இங்குள்ள குருகுல முறைகள் அனைத்தும் சிதற ஆரம்பித்தன.  அவர்கள் வந்ததும் இங்கே தெரிந்து கொண்ட முக்கியமான விஷயம்.  ஏழை பிராமணனாக இருந்தாலும் அவர்களுக்கு உள்ள மதிப்பையும், அரசர்கள் முதல் அனைவரும் அவர்களை ஆசாரியர்களாக மதிப்பதையும் பார்த்துப் புரிந்து கொண்டான்.  ஆசாரியர்களுக்கு இருக்கும் மதிப்பு அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.  அடுத்துப் பசுக்கள் வழிபடப் படுவது. கோயில்களின் முக்கியத்துவம்.  அந்தக் கோயில்கள் யாத்திரிகர்களுக்குப் புகலிடமாகவும் இடம் கொடுப்பது.  கோயிலின் அர்ச்சகர்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்.  அரசன் முதல் கடைசிக் குடிமகன் வரை அவர்களுக்குச் செலுத்தி வந்த மரியாதை. ஆகவே இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் உள்நாட்டு விஷயங்களில் புகுந்து முதலில் குருகுல முறைக் கல்வியை ஒழித்துக் கட்டினார்கள்.  ஆங்கிலக் கல்வி தான் உயர்ந்தது;  இந்தியக் கல்வி முறையில் எதுவும் இல்லை என்ற எண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் புகட்டினார்கள்.

அடுத்து அவர்கள் செய்தது நம் விவசாய முறையை அழிக்க ஆரம்பித்தது.  பசுக்கள் தான் விவசாயத்துக்கு முக்கியம்.  அவைகள் ஈனும் காளைகளே நிலத்தை உழுதுப் பண்படுத்தப் பயன்பட்டு வந்தன. ராபர்ட் க்ளைவ் இதை ஆய்ந்து ஆராய்ந்து பசுக்களே இந்திய விவசாயத்தின் முக்கிய முதுகெலும்பாக இருப்பதை உணர்ந்து அதையும் ஒழிக்க நினைத்தார்.  இந்தியாவின் முதல் மாட்டு மாமிசம் தயாரிக்கும் இடம் 1760 ஆம் ஆண்டு ஒரு நாளைக்குக் குறைந்தது முப்பதாயிரம் பசுக்களைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாய் வங்காளத்தில் மக்களை விடப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. பசுக்களைக் கொல்ல ஆரம்பித்துவிட்டால் இயற்கை உரங்கள் கிடைக்காது. பசு மாட்டின் மூத்திரம் பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்தது.  அதுவும் கிடைக்காது.


1740 ஆம் ஆண்டு இந்தியாவில், குறிப்பாய்த் தமிழ்நாட்டில் ஆர்காடு மாவட்டத்தில் 54 க்வின்டால் அரிசி  ஒரு ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யப் பட்டது.  இதற்குப் பயன்பட்டவை இயற்கை உரங்களே.  பூச்சிக் கொல்லிகளாகப் பசுமாட்டின் மூத்திரமும், சாணியுமே பயன்படுத்தப் பட்டன.  ஆனால் பசுக்கள் படுகொலை ஆரம்பித்ததும், 1910 ஆம் ஆண்டிற்குள்ளாக 350 பசுக்கொலைக்களங்கள் ஏற்படுத்தப் பட்டு இரவு பகலாக அவை வேலை செய்தன.  இதன் மூலம் கால்நடைகள் குறைய ஆரம்பித்ததோடு உரங்களின் தேவைக்கு இங்கிலாந்து நாட்டையும் அதன் செயற்கை உரத்தையும் நம்ப ஆரம்பித்தது இந்தியா.  பின்னர் சுதந்திரத்துக்குப் பின்னர் செயற்கை உரங்களின் மூலம், "பசுமைப் புரட்சி செய்தது இந்தியா. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் செல்லப் போகிறார்கள் என்பது தெரிந்ததும் "தி கார்டியன்" என்னும் பத்திரிகை காந்தியைப் பேட்டி கண்டது. அப்போது காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படும் எனவும், பசுக்களைக் கொல்லும் இடங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.  அதற்கு முன்னரே 1929 ஆம் ஆண்டில் நேருஜி ஒரு பொதுக்கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் பிரதமராகத் தான் நியமிக்கப் பட்டால் தான் செய்யப்போகும் முதல் வேலை பசுவதைத் தடுப்பு என்று முழங்கினார்.  ஆனால் 1947 ஆம் ஆண்டில் இருந்தும் அதன் பின்னரும் பசுக்களைக் கொல்லும் இந்தக் கொலைக்களங்கள்350 இல் இருந்து 36,000 ஆக மாறியதோடு ஆந்திராவிலும் மஹாராஷ்டிராவிலும் ஒரே நேரம் பத்தாயிரம் பசுக்களைக் கொல்லும் தொழில் நுட்பமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதை இங்கே கூறுவதன் நோக்கமே ஆங்கிலப் படிப்பு ஆரம்பித்த பின்னரே வரதக்ஷணைப் பழக்கம் ஏற்பட்டது என்பதைச் சொல்லவே.  அதில் ஆரம்பித்தது எங்கேயோ போய்விட்டது. :(  இப்போ நாம் கல்யாணத்தைக் குறித்துப் பார்ப்போம்.

பிரமசாரி ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றொரு கேள்வி எழுந்தது.  அதற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமாக அனைவராலும் நடக்க முடியாது என்பது ஒன்றே ஆகும்.  எல்லாராலும் நைஷ்டிக பிரமசரியம் அனுசரித்துக்கொண்டு ஸமாவர்த்தனமும் பண்ணிக் கொள்ளாமல் குருவிடமே இருந்து அவருக்குச்சேவை செய்து கொண்டு, சந்நியாச வாழ்க்கை வாழ இயலாது. ஆகவே தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றொரு பொதுவான தர்மத்தை ஏற்படுத்தி உள்ளனர். நல்ல மனோதிடம் உள்ளவர்கள் சந்நியாசியாகவும் ஆகலாம்.  ஆனால் இளமையில் சந்நியாசியாக ஆகவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின்னர் அதற்கு விரோதமாக நடக்கக் கூடாது என்பதற்காகவே ஸமாவர்த்தனம் என்பது முடிந்த பின்னர் மாணவன் குருவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு காசிக்கு யாத்திரை சென்று வந்து பின்னர் திருமணத்துக்கு ஆயத்தம் ஆகவேண்டும்.  திருமணம் வரையில் காசி யாத்திரை போய் வரும் கட்டத்தின் போது அவனுக்கு ஸ்நாதகன் எனப் பெயர்.  ஸமாவர்த்தனம் என்பது இப்போதைய பட்டமளிப்பு விழா போல் ஆகும்.  குருகுல வாசமும் பனிரண்டு வருடங்கள் ஏற்றாக வேண்டும்.  அதற்கு முன்னரே உபநயனமும் முடிய வேண்டும். மனதில் விகல்பமான எண்ணங்கள் உள் புகுமுன்னர் கல்வி உள்ளே சென்று மாணவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஏழில் இருந்து பனிரண்டு வயதுக்குள்ளாக உபநயனம் செய்வித்து குருவிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த உபநயனமும் அனைவருக்கும் பொதுவானது.  மற்ற வர்ணத்தவர் பனிரண்டு வயதுக்கும், பதினாறு வயதுக்கும் உபநயனம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறது.  பிரமசாரியாகவே இருந்தால் சிருஷ்டியின் நோக்கம் தடைப்படும். எல்லாரும் சந்நியாசியானால் அந்த சந்நியாசிகளுக்கு உணவளிப்பது யார்? அதற்காகவேனும் கிரஹஸ்தர்கள் வேணுமே.  ஆகவே இந்தப் பிரபஞ்சம் சரியானபடி நடைபெறவும், ஜீவர்கள் தங்கள் கர்மாவைக் கழிக்க வேண்டிப் பிறப்பெடுக்கவும், திருமணங்கள் தேவையாகின்றன. ஆனால் வெறும் குழந்தை பெற்றுக் கொள்வதும், மனைவியோடு இன்பம் துய்க்கவும் மட்டுமே திருமணம் என்று ஏற்படவில்லை.  அவரவர் தங்களுக்கு விதித்த கடமைகளைச் செய்ய வேண்டும்.  அதற்கு மனைவியின் துணையும் கட்டாயம் தேவை.

ஆதாரம்: தெய்வத்தின் குரல்.

Saturday, March 09, 2013

முன்னாடியே படம் போட்டுட்டேனே!

யு.எஸ்ஸில் காவர்ன் கேவ்ஸ் போனப்போ எடுத்த சில படங்கள்.  அதன் இயல்பான வண்ணத்தில்.



அதோ தெரியும் வெளிச்சம் விளக்குகளோடது.

ரிவர் வாக்கில்/சீ வேர்ல்டில்(?) எடுத்த படம்.

  காவர்ன் கேவ்ஸில் இருந்த செடி ஒண்ணு.  ஏற்கெனவே போட்டிருக்கேன். அப்பாடா, இதுக்கு எங்கள் ப்ளாக் போட்டிக்கு வராது.  இந்த வாரம் நான் முந்திண்டாச்சு.

Friday, March 08, 2013

பச்சை நிறமும், தேன் சிட்டும்.



பிஐடியிலே இயற்கை வண்ணங்கள் குறித்த போட்டி இந்த மாசம். நமக்கெல்லாம் போட்டியிலே சேரும் அளவுக்குத் தகுதி இல்லைனாலும், இருக்கிறதிலே இயல்பான பச்சை வண்ணப் படங்களைத் தேர்ந்தெடுத்தேன்.  இன்னும் நிறைய இருக்கு. என்றாலும் இப்போதைக்கு இது போதும்னு எண்ணம். :))))


இன்னிக்கு பால்கனிக்குத் தேன்சிட்டு வந்தது.  ஒரே கீச் மூச்சுனு சத்தம். கணினியிலே ஆழ்ந்து போயிருந்த நான் நிமிர்ந்து பார்த்தால் அங்கே துணி காயப் போடக் கட்டி இருக்கும் கம்பிக் கொடியிலே உட்கார்ந்திருந்தது.  மெதுவாப் போய் காமிராவைக் கொண்டு வரலாம்னா, உள்ளே இருந்து நம்ம ரங்க்ஸ் குரல் கொடுத்துட்டே வந்தார். அவர் கிட்டே காமிக்கையிலே எதிர் பால்கனிக்குப் போயிடுச்சு. :( பிடிக்கிறது கஷ்டம். தேவுடு காக்கணும். வந்தது கீழே உள்ள நிறத்தில்.  சட்டுனு பார்த்தால் சிட்டுக்குருவிக் குஞ்சு போல இருக்கும்.  தேன்சிட்டு பச்சை வண்ணத்தில் உள்ளது மிக மிக அழகாக இருக்கும்.  இந்த க்ரே கலரில் கூட கழுத்தில் இருந்து வயிறு வரை மஞ்சளாக இருக்கும் தேன் சிட்டுக்களும் உண்டு.  அவை எல்லாம் இங்கே கண்ணில் படவில்லை.



Thursday, March 07, 2013

தெரியாதவர்களுக்கு மட்டும்

ஆயிரத்து ஐநூறாவது பதிவு

அப்பாதுரை குருகுலம் பத்திக் கேட்டப்போவே இந்தப் பின்னூட்டம் எழுதினேன்.  ஆனால் பின்னால் அவருக்குத் தெரியாதது இல்லைனு கொடுக்கலை.  என்றாலும் சேமித்து வைத்தேன்;  இப்போது திரு ஜிஎம்பி அவர்கள் குருகுலம் என்பதே இல்லை என்பதால் இந்தச் சுட்டியைத் தருகிறேன்.  இது ஏற்கெனவே பலமுறை சொல்லி இருக்கிறேன்.  ஆகையால் படித்தவர்கள் மன்னிக்கவும்.

       ttp://www.samanvaya.com/dharampal">Dharampal
                                    
 உங்களுக்குக் கட்டாயமாய்த் தெரிஞ்சிருக்கும்.  என்றாலும் மேலே குறிப்பிட்ட சுட்டிக்குச் சென்று, முதல் வால்யூம் Indian Science and Technology in the Eighteenth Century, மூன்றாம் வால்யூம் The Beautiful Tree Indigenous Indian Education in the Eighteenth Century படியுங்கள். ஏற்கெனவே தெரிஞ்சிருந்தாலோ, படிச்சிருந்தாலோ இதை மறந்துவிடுங்கள்.  நான் ப்யூடிஃபுல் ட்ரீ மட்டும் அவ்வப்போது படித்து வருகிறேன். தேவையான சமயங்களில். Link மறுபடி சரியா வேலை செய்யலை. :( ஆகவே மன்னிக்கவும்.  மார்க்கி போகுது.  லிங்க் போகலை. என்ன தப்புனு புரியலை.


பதிவில் சரியாக விழாத அதே லிங்க் பின்னூட்டத்தில் வந்திருக்கு.  அங்கே சென்று முயலவும். :)))))கொஞ்ச நாட்களாக இப்படித்தான் அடம். 

Wednesday, March 06, 2013

மணமகளே, மருமகளே வா, வா!


"மணமகளே மருமகளே வா, வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா, குணமிருக்கும் குலமகளே வா, வா, தமிழ்க் கோயில் வாசல் திறந்து வைப்போம் வா, வா."

மணமகளை புகுந்த வீட்டுக்கு அழைக்கும் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண தினங்களே இல்லை ஒரு காலத்தில்.  மணமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவள் குணத்தையும், அதனால் வீடு, வாசல் செழிக்கப் போவதையும் எடுத்துச் சொல்லும் பாடல் இது.  வரப்போகும் பெண்ணை சாக்ஷாத் மஹாலக்ஷ்மியாகவே மதித்துப் போற்றிய காலம் ஒன்று உண்டு.  திருமணம் என்பது இரு குடும்பங்கள் இணையும் ஒரு பந்தம்.  அதில் உள்ள ஒவ்வொரு சடங்கும் அர்த்தம் பொதிந்தது.   அவற்றையும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம்.  ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்த நம் கல்யாணக் காலங்கள் நாளா வட்டத்தில் மறைந்து போய் விட்டன.  அதோடு இல்லாமல், பெண்ணே தன் காதலனைப் பார்த்து,

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? .. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"

என்று கேட்பதாகப் பாடல்கள் எழுதப் பட்டு அவை தமிழ்நாட்டின் தேசிய கீதமாகவே விளங்கின. இது காலத்தின் கோலம் தான்.  திருமணத்தை இவ்வளவு மோசமாக நாம் நினைக்கும் அளவுக்கு மாறியது திருமணம் என்பதன் உண்மையான அர்த்தம் புரியாமல் வெறும் உடல் இன்பத்துக்காகவே திருமணம் என்று மாறிப் போக ஆரம்பித்தது தான் காரணம்.  உண்மையில் திருமணம் என்பது கணவனோடு கூடி இருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோடு அவன் காரியங்கள் அனைத்திலும் அவனுக்குத் துணை நிற்பதற்கே என்பதைப் போன பதிவிலேயே பார்த்தோம்.  அப்படி இருந்த கல்யாணங்களின் பொருள் மாறிப் போய் வியாபாரம் ஆனது எப்போது?

ஒரு காலத்தில் குருகுலம் முடித்த பிரமசாரிகள் வீடு வீடாக பிக்ஷை எடுத்து வருகையில், பெண்ணை வைத்திருப்பவர்கள் அந்த பிரமசாரியின் அபிப்பிராயத்தைக் கேட்டுக் கொண்டு தங்கள் வீட்டுப் பெண்ணை தானமாய்க் கொடுப்பது உண்டு எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  என் அப்பா வீட்டிலேயே இப்படி நடந்ததாக அப்பா சொல்லி இருக்கிறார்.  அதற்கும் பின்னர் பிள்ளை வீட்டுக்காரர்களே பிரமசாரிப் பையருக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனத் தேடிச் சென்று பெண் கேட்டுத் திருமணம் செய்து வைப்பதாகவும் கேட்டிருக்கிறேன்.  இப்படிப் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டினரே சென்றிருக்கின்றனர்.  ஆனால் மாப்பிள்ளையைத் தேடிப் பெண் வீட்டுக்காரர்கள் வர ஆரம்பித்தது ஆங்கிலேய ஆதிக்கத்தின் பின்னரே.



ஆங்கிலேயர்கள் நம்மை ஆள ஆரம்பித்த பின்னரே, குருகுலப் படிப்புக்கு மூட்டை கட்டிவிட்டு நம் பிள்ளைகளுக்கு  ஆங்கிலப் படிப்பும், அதன் காரணமாக மடிப்புக்கலையாமல் உத்தியோக வாழ்க்கையும் ஏற்பட ஆரம்பித்த பின்னருமே நம் கல்யாணங்கள் அனைத்தும் வியாபாரக் கல்யாணங்களாக மாற ஆரம்பித்தன.  அதற்கு முன்னர் வரை குருகுல வாசம் முடிந்து வரும் பிரமசாரிக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனப் பிள்ளை வீட்டுக்காரர்களே தேடிச் செல்வார்கள்.  ஆனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும் உத்தியோகமும் ஏற்பட்டு அதன் மூலம் கெளரவம் அதிகம் ஆனதாக ஏற்பட்ட உடனே பெண் வீட்டுக்காரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பெண்களுக்கு வரதக்ஷணை கொடுத்துப் பையனைத் தேடும் நிலைமைக்கும் ஆளானார்கள்.  இதற்கு அப்போது பெண்களின் விகிதாசாரம் அதிகமாகவும், ஆண்களின் விகிதாசாரம் குறைவாகவும் இருந்ததும் ஒரு காரணம்.


இன்னும் அலசுவோம்.


பி.கு.  படம் உதவி, ராஜராஜேஸ்வரி, jaghamani.blogspot.com

ராஜராஜேஸ்வரி



Monday, March 04, 2013

என்ன கல்யாணமடி, கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!




'கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம், தங்கத் தாலி கட்டுற கல்யாணம், என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்,"

இன்றைய முதலமைச்சர் கதாநாயகியாய் நடிச்ச ஏதோ ஒரு படத்தில் வரும் பாடல். (சந்திரோதயம்?) கதாநாயகி வளர்ந்தும் குழந்தையாக இருப்பாளாம். அவள் கேட்கும் கேள்விதான் இது.  சும்மாவானும் மேளம் கொட்டித் தாலி கட்டறதோடு கல்யாணம்ங்கறது முடியறதில்லை.  அதோடு தாலி மட்டும் கட்டிக் கொண்டு நடைபெறும் கல்யாணங்கள் இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாத திருமணங்கள் ஆகும்.  இந்துத் திருமணங்களில் அது எந்த ஜாதியினரானாலும் சரி, சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும்.  அது வரைக்கும் என்னதான் தாலி கட்டிக் கொண்டாலும், அந்தத் தாலியின் புனிதம் குறித்துப் பல சினிமாக்களில், பல நெடுந்தொடர்களில் பக்கம் பக்கமாய் வசனம் பேசினாலும் திருமணம் ஆனதாய்க் கருத முடியாது.  அப்படின்னா, கோயில்லே வைச்சுத் தாலி கட்டிக்கிற கல்யாணங்கள்?

அவையும் செல்லாதவையே.  அங்கேயும் ஹோமம் வளர்த்து அக்னிசாட்சியாய் சப்தபதி நடந்தாலே திருமணங்கள் செல்லும். காதல் ஜோடி அவசரமாய் மாலை மாற்றிக் கொண்டு தாலிகட்டிக்கொள்ளும் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.  இல்லைனா அவனோ, அவளோ நடுவில் பிரிந்து போனால் கூட என்னனு கேட்டுக்க முடியாது. இப்போதெல்லாம் சப்தபதியோடு நடக்கும் திருமணங்களே பதிவும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஏனெனில் பெண்களோ, பிள்ளைகளோ அதிகம் வெளிநாடுகள் செல்கின்றனர்.  அங்கெல்லாம் திருமணப்பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவை. ஆகையால் திருமணம் பதிவு செய்யப்படுகிறது.

ஆகவே திருமணம் என்பது சாதாரணமான ஒரு விஷயமே இல்லை.  காலம் பூராவும் அவனும், அவளும் நிலைத்து நின்று இல்வாழ்க்கை வாழ வேண்டும்.  இதைத் தான் ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள்.  ஏனெனில் அவன் மூலமும், அவள் மூலமுமே அந்த வம்சம் விருத்தியாகிறது.  அப்போ திருமணம் வம்ச விருத்திக்கு மட்டுமா?

"எனக்கொரு மகன் பிறப்பான்;
அவன் என்னைப் போலவே இருப்பான்"

எனப் பாடி ஆடுவதற்கா?  அல்லது பெண்ணைப் பெற்றுக் கொண்டு, "அன்புள்ள அப்பா, அப்பப்பா"னு தெய்வத்திருமகள்களைப் பெறுவதற்கா? வம்ச விருத்தி முக்கியம் தான்.  ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பூர்வ கர்மாக்கள் இருக்கின்றன.  அதைக் கழித்தாக வேண்டும்,  அதற்கு அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டும்.  இதற்குத் தாம்பத்தியமும் அவசியமே.  ஆனால் அதே சமயம் வெறும் வம்ச விருத்தி மட்டுமே திருமணத்தின் காரணம் இல்லை.  திருமணம் என்பது ஒரு பிரமசாரியை கிரஹஸ்தாசிரமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி நடைபெறும் ஒரு முக்கியமான சம்ஸ்காரம்.  அதோடு கூட அந்தப் பெண் அவனோடு கூடி இருந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அற வழியில் இல்லறத்தை நடத்திக்காட்ட வேண்டும்.  இதற்கானதொரு அதி அற்புதமான சேர்க்கையே கல்யாணமும், அதை ஒட்டிய இல்லற வாழ்க்கையும். பிரமசாரி ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?


பி.கு. ரொம்பவே தத்துவார்த்தமாக இருக்காது என இப்போதே சொல்லிவிடுகிறேன்.  கொஞ்சம் சரளமாக, ஜனரஞ்சகமாகவே எழுத எண்ணம்.  எவ்வளவு தூரம் என்னால் முடியும் என்பது தெரியாது.  பார்க்கலாம்.