'கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம், தங்கத் தாலி கட்டுற கல்யாணம், என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்,"
இன்றைய முதலமைச்சர் கதாநாயகியாய் நடிச்ச ஏதோ ஒரு படத்தில் வரும் பாடல். (சந்திரோதயம்?) கதாநாயகி வளர்ந்தும் குழந்தையாக இருப்பாளாம். அவள் கேட்கும் கேள்விதான் இது. சும்மாவானும் மேளம் கொட்டித் தாலி கட்டறதோடு கல்யாணம்ங்கறது முடியறதில்லை. அதோடு தாலி மட்டும் கட்டிக் கொண்டு நடைபெறும் கல்யாணங்கள் இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாத திருமணங்கள் ஆகும். இந்துத் திருமணங்களில் அது எந்த ஜாதியினரானாலும் சரி, சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும். அது வரைக்கும் என்னதான் தாலி கட்டிக் கொண்டாலும், அந்தத் தாலியின் புனிதம் குறித்துப் பல சினிமாக்களில், பல நெடுந்தொடர்களில் பக்கம் பக்கமாய் வசனம் பேசினாலும் திருமணம் ஆனதாய்க் கருத முடியாது. அப்படின்னா, கோயில்லே வைச்சுத் தாலி கட்டிக்கிற கல்யாணங்கள்?
அவையும் செல்லாதவையே. அங்கேயும் ஹோமம் வளர்த்து அக்னிசாட்சியாய் சப்தபதி நடந்தாலே திருமணங்கள் செல்லும். காதல் ஜோடி அவசரமாய் மாலை மாற்றிக் கொண்டு தாலிகட்டிக்கொள்ளும் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லைனா அவனோ, அவளோ நடுவில் பிரிந்து போனால் கூட என்னனு கேட்டுக்க முடியாது. இப்போதெல்லாம் சப்தபதியோடு நடக்கும் திருமணங்களே பதிவும் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் பெண்களோ, பிள்ளைகளோ அதிகம் வெளிநாடுகள் செல்கின்றனர். அங்கெல்லாம் திருமணப்பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவை. ஆகையால் திருமணம் பதிவு செய்யப்படுகிறது.
ஆகவே திருமணம் என்பது சாதாரணமான ஒரு விஷயமே இல்லை. காலம் பூராவும் அவனும், அவளும் நிலைத்து நின்று இல்வாழ்க்கை வாழ வேண்டும். இதைத் தான் ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். ஏனெனில் அவன் மூலமும், அவள் மூலமுமே அந்த வம்சம் விருத்தியாகிறது. அப்போ திருமணம் வம்ச விருத்திக்கு மட்டுமா?
"எனக்கொரு மகன் பிறப்பான்;
அவன் என்னைப் போலவே இருப்பான்"
எனப் பாடி ஆடுவதற்கா? அல்லது பெண்ணைப் பெற்றுக் கொண்டு, "அன்புள்ள அப்பா, அப்பப்பா"னு தெய்வத்திருமகள்களைப் பெறுவதற்கா? வம்ச விருத்தி முக்கியம் தான். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பூர்வ கர்மாக்கள் இருக்கின்றன. அதைக் கழித்தாக வேண்டும், அதற்கு அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டும். இதற்குத் தாம்பத்தியமும் அவசியமே. ஆனால் அதே சமயம் வெறும் வம்ச விருத்தி மட்டுமே திருமணத்தின் காரணம் இல்லை. திருமணம் என்பது ஒரு பிரமசாரியை கிரஹஸ்தாசிரமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி நடைபெறும் ஒரு முக்கியமான சம்ஸ்காரம். அதோடு கூட அந்தப் பெண் அவனோடு கூடி இருந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அற வழியில் இல்லறத்தை நடத்திக்காட்ட வேண்டும். இதற்கானதொரு அதி அற்புதமான சேர்க்கையே கல்யாணமும், அதை ஒட்டிய இல்லற வாழ்க்கையும். பிரமசாரி ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
பி.கு. ரொம்பவே தத்துவார்த்தமாக இருக்காது என இப்போதே சொல்லிவிடுகிறேன். கொஞ்சம் சரளமாக, ஜனரஞ்சகமாகவே எழுத எண்ணம். எவ்வளவு தூரம் என்னால் முடியும் என்பது தெரியாது. பார்க்கலாம்.
Koncham perusa eluthalame....
ReplyDelete//ஒவ்வொருவருக்கும் பூர்வ கர்மாக்கள் இருக்கின்றன. அதைக் கழித்தாக வேண்டும், அதற்கு அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டும். இதற்குத் தாம்பத்தியமும் அவசியமே.
ReplyDeleteகேட்கவே பயமாக இருக்கிறதே? தாம்பத்தியம் என்பது சந்தோஷமான விஷயம்னு நினைச்சேன்...
தொடரா? ...
ReplyDeleteஅடுத்த பகுதிகளுக்கு காத்திருக்கிறேன்!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.சொல்லுங்கள் கேட்கக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteஅருமை தொடருங்கள்... அப்படியே நிறைய பாடல் வரிகளோடு...
ReplyDelete//ரொம்பவே தத்துவார்த்தமாக இருக்காது என இப்போதே சொல்லிவிடுகிறேன். //
ReplyDelete:))))
வம்சவிருத்திக்காகதான் இனச் சேர்க்கை.
சுயநலமும் பொசசிவ்னெஸ்ஸும் வந்தபோது இந்தப் பெண் என்னுடையவள் என்று காட்ட வேண்டிய அவசியம் வந்தது.
ஆணுக்கு எப்போது கட்டுப் பாடுகள் இருந்ததில்லை.
ரொம்ப யோசிக்காமல் தோன்றியவற்றை பின்னூட்டமிட்டு விட்டேன்!
//இந்துத் திருமணங்களில் அது எந்த ஜாதியினரானாலும் சரி, சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும். //
ReplyDeleteஉண்மைதான் மேடம். இந்தத் தகவலை நான் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன்.
மிகவும் நன்றாக ஆரம்பித்து இருக்கீங்க.ஜனரஞ்சகமாக இருந்தாதான் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். தொடருங்க..
வாங்க எல்கே, பெரிசா இருந்தால் நிறையப் பேர் படிக்கிறதில்லை. அதான். :)))))
ReplyDeleteஅப்பாதுரை, ஹிஹிஹிஹி
ReplyDeleteவாங்க வெங்கட், ரொம்ப பிசி போல. தொடர்தான். :)
ReplyDeleteவாங்க வல்லி, உங்களுக்குத் தெரியாததா? என்றாலும் உங்கள் பெருந்தன்மைக்குத் தலை வணங்குகிறேன். :))))
ReplyDeleteவாங்க டிடி, பாடல் வரிகளோடு?? ஓகே, பொருத்தமான பாடல்களைத் தேட வேண்டியது தான். :)))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், மனதில் தோன்றுவதைத் தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படித்தான் செய்யறேன். :)))) பல சங்கடங்கள் வந்தாலும். :)))))))
ReplyDeleteவாங்க ராம்வி, ஒவ்வொன்றாகச் சொல்ல நினைக்கிறேன். நன்றிம்மா.
ReplyDeleteநல்லதொரு ஆரம்பமா இருக்கு. தொடர்ந்து சொல்லுங்கோ மாமி..:)
ReplyDeleteபெரிசா வேண்டாம். இதே அளவோடு இருக்கட்டும்....:))
உங்கள் பதிவின் தலைப்பை பார்த்தவுடன் எனக்கு ’சந்திரோதயம்’ படப்பாடல் நினைவுக்கு வந்தது நீங்களும் அதையே எழுதி விட்டீர்கள்.
ReplyDeleteகல்யாணம் என்பதின் அர்த்தம் சிறுமியாக இருக்கும் போது இந்த அம்மாக்கள் இன்னொருவீட்டில் எப்படி போய் குப்பைக் கொட்டபோகிறயோ என்று சொல்லியும், நீ சரியாக நடக்கவில்லை என்றால் என் வளர்ப்பு சரியில்லை என்று பேசுவார்கள் என்றும் பேசி பேசியே நமக்கு திருமணம் ஆனவுடன் நாம் நாமாக இருக்கமுடியாது குழந்தைகளுக்கு ஒரு பயம் வருவது என்னவோ உண்மை.
நான் சொல்வது என் காலத்தில்.
நீங்கள் அடுத்து என்ன சொல்ல போகிறீர்கள் என்று படிக்க ஆவல்.
தொடரா? ...
ReplyDeleteகாத்திருக்கிறேன்
'கெட்டிமேளம்,கெட்டிமேளம்' என்று முழங்க, கையைத் திருகுகிற மாதிரி நாதஸ்வரக்காரருக்கு சிக்னல் கிடைத்தவுடன் அவர் பீப்பீயின் சீவாளி சரிபார்த்து குபீர் எழுச்சியாய் நாயனம் வாசிக்கத் தொடங்க, மத்தளங்கள் அதிர, பின்னலோடு சேர்த்து அல்லது யாராவது ஜடையைத் தூக்கித் தந்து உதவினால் பின்னல் தவிர்த்து படு சாமர்த்தியத்தோடு அந்த இருட்டில் மணமகள் கழுத்தைக் கண்டுபிடித்து தப்பாகிவிடக்கூடாதென்று மனசில் எண்ணியபடியே மூன்று முடிச்சுப்போட்டு ஒருவழியாக விஷயம் முடிஞ்சாச்சு என்று வெற்றிக்களிப்பில் மணமகன் 'இதுக்குத்தாண்டா காத்திருந்தேன்' என்கிற அர்த்தத்தில் புன்னகைக்க வந்திருந்த கூட்டம் இத்தனை நேரம் கையில் அடக்கிக் கொண்டிருந்த அட்சதையை 'அப்பாடி! இப்போதாவது வீச நேரம் வந்ததே' என்று வீசி, டைனிங் ஹால் நோக்கிப் பாய, அதற்கு முன்பே 'விஷயம் தெரிந்தவர்கள்' அமர்த்தலான விஷமப் புன்னகையோடு சாப்பாட்டுக்கூடத்தை நிரப்பியிருக்க---
ReplyDelete'சப்தபதி.. சப்தபதி...' சாஸ்திரிகளின் அறிவிப்பு யார் காதில் விழப்போகிறது?..
//சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும்.//
ஏன் இந்த போட்மெயில் வேகம்?.. நீங்களாவது சப்தபதி என்றால் என்னவென்று சொல்லாவிட்டாலும் அந்த ஏழடிக்கான மந்திர அர்த்த்தைத்தையாவது சொல்லியிருக்கலாமில்லையா? முதல் அடிக்கான மந்திரமே 'நீ எனக்கு இல்லறத்துணைவி ஆகிவிட்டாய்' என்கிற எக்காளம் அல்லவோ?..
//பிரமசாரி ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?,, //
ReplyDeleteஅல்லது எதற்கு பிரமச்சரியத்தைத் துறக்க வேண்டும்?..
வாங்க கோவை2தில்லி, ரொம்பப் பெரிசா இருந்தால் பலரும் படிக்கிறதில்லை. அதான் கொஞ்சம் சின்னதாவே போடறேன். உங்களுக்குப் பிடிச்சிருக்கா? சந்தோஷம். :))))
ReplyDelete//நமக்கு திருமணம் ஆனவுடன் நாம் நாமாக இருக்கமுடியாது குழந்தைகளுக்கு ஒரு பயம் வருவது என்னவோ உண்மை.
ReplyDeleteநான் சொல்வது என் காலத்தில். //
ஆமாம், உண்மைதான். எனக்கு இட்லியே பிடிக்காது. என் அம்மா புக்ககம் போய் எப்படி இருக்கப் போறியோனு அலுத்துக் கொண்டே இட்லி மாவில் இலுப்பச்சட்டி தோசை வார்த்துக் கொடுப்பார். அதுக்கு என்னோட பதில், அவங்களுக்கெல்லாம் இட்லி வார்த்துட்டு எனக்கு மட்டும் தோசை வார்த்துக்க முடியுமா? அதனால் போனால் போறதுனு சாப்பிட்டுடுவேன். மெதுவா அவங்களும் தோசை பக்கம் வரும்படி ஆசையை உண்டாக்கிடுவேன். அப்படினு சொல்வேன்.
வேடிக்கை என்னன்னால், என்னோட மறுபாதிக்கும் இட்லி அவ்வளவாப் பிடிக்காது. அநேகமா இட்லிக்குனு சாம்பாரோ, சட்னியோ பண்ணினாலும் அன்னிக்கு தோசை பண்ணிடுனு சொல்லிடுவார். :))))
வாங்க புதுகை, நன்றி.
ReplyDelete//ஏன் இந்த போட்மெயில் வேகம்?.. நீங்களாவது சப்தபதி என்றால் என்னவென்று சொல்லாவிட்டாலும் அந்த ஏழடிக்கான மந்திர அர்த்த்தைத்தையாவது சொல்லியிருக்கலாமில்லையா? முதல் அடிக்கான மந்திரமே 'நீ எனக்கு இல்லறத்துணைவி ஆகிவிட்டாய்' என்கிற எக்காளம் அல்லவோ?..//
ReplyDeleteஜீவி சார், நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே! :)))) அதுக்குள்ளே வேகம்னால் எப்படி? சும்ம்ம்ம்ம்மா ஒரு உதாரணத்துக்குக் கல்யாணம்ங்கறது என்னனு சொல்வதற்காக சப்தபதி குறித்துச் சொல்லி இருக்கேன். விளக்கங்கள் விரிவாகவே வரும். பொறுத்திருங்கள். எக்காளம் எல்லாம் இல்லை. பெண்ணின் காலை அல்லவோ பிடிப்பார் பையர்!:))))))
முக்கியக் கருத்துக்கே இன்னமும் வரலை. :))))
ReplyDelete//பெண்ணின் காலை அல்லவோ பிடிப்பார் பையர்!:))))))//
ReplyDeleteகாலைப் பிடித்தாலும் பிடிக்க அனுமதி கிடைத்த எக்காளம் தனி ஜோர் இல்லையா?..