இன்னிக்குக் காலம்பர நடைப்பயிற்சிக்கு மொட்டை மாடிக்குப் போனப்போ மேற்கே சூரியன். அட, காலம்பர சூரியன் மேற்கே உதிக்குமானு பார்த்தால், ஹிஹிஹி, நம்ம சந்திரனார். முழுசாக் காட்சி அளித்தார். சாதாரணமாப் பெளர்ணமிக்கு அப்புறமா இரண்டாம் நாளே உப்புப்பார்க்க வேண்டி மூலையில் கிள்ளின தோசை போலக் காண்பவர் இன்னிக்கு முழுசா இருந்தார். சரி, படம் எடுத்துட வேண்டியது தான்னு, நடையை முடிச்சுட்டுக் கீழே போய்க் காமிரா எடுத்துட்டு வரதுக்குள்ளே மங்க ஆரம்பிச்சுட்டார். :( ரொம்ப வருத்தமாப் போயிடுத்து. இனிமே நடக்கப் போறச்சேயே காமிராவும் கையுமாப் போகணும் போல! வெளிச்சமெல்லாம் ஃபோட்டோ ஷாப் பண்ணாமல் இயற்கையா இருந்ததோடு விட்டிருக்கேன். எடிட் பண்ணியும் ஒண்ணு போடறேன். :) பிகாசா என்னமோ திடீர்னு திறக்கவே இல்லை. :( மறுபடி ரீ ஸ்டார்ட் பண்ணிட்டுத் திறந்தேன். :) வெளிச்சம் கொடுத்தேன். ம்ஹும், நல்லாவே இல்லை. அப்புறமா அதை எடுத்துடறேன். இப்போதைக்குப் போட்டிருக்கேன், பாருங்க.
கொஞ்சம் மேகங்கள் வந்து மூட ஆரம்பிச்சதோட நிலாவே கரைஞ்சாப்போல் ஆயிடுச்சு! :)))))
படம் நல்லாயிருக்கு.
ReplyDeleteதிக்கு தெரியாம வாக்கிங் போறீங்களா.. join the club.
ஹாஹா, அப்பாதுரை, என்ன இந்த நேரம்? எந்த ஊர்? என்ன பேர்? ஹிஹிஹி, நாகேஷ் ஒரு படத்தில் இப்படிக் கேள்விகள் கேட்பார். :))))
ReplyDeleteதிக்கெல்லாம் தெரிஞ்சுதான் வேணும்னே மேற்கே சூரியனானு அதிசயப்படும் அளவுக்கு தகதகாயமாய்ச் சந்திரன் இருந்ததை ஆச்சரியமாய்ச் சொன்னேன். நடந்துட்டுக் கீழே போய்க் காமிரா எடுத்துட்டு வரதுக்குள்ளே சின்னதாப் போனதோடு இன்னமும் கீழே இறங்கி விட்டது. ஒளி மங்க ஆரம்பிச்சுடுத்து.
" உப்புப்பார்க்க வேண்டி மூலையில் கிள்ளின தோசை " ஆஹா ..அருமையான expression ..மிகவும் ரசித்தேன் ! மாலி .
ReplyDeleteபடம் நல்லா வந்திருக்கே கீதா.
ReplyDeleteநிலாம்மா ஜாலம் எல்லாம் பண்ணுவாங்க.
எத்தனை நாட்கள் ஏமாந்திருக்கேன்.
தெரியுமா. இப்பதான் விவதில்லை. உனக்காச்சு எனக்காச்சுனு:)
அச்சோ உப்புக் கிள்ளி தோசை'' பிரமாதம்.
//உப்புப் பார்க்க வேண்டி மூலையில் கிள்ளின தோசை//
ReplyDeleteஹா..ஹா... என்ன ஒரு வர்ணனை!
நிலவுப் படம் எனக்கு சரியாவே வர்றதில்லை! ம்..ஹூம்.. அதுக்கெல்லாம் ராமலக்ஷ்மியாப் பொறந்துருக்கணும்! :)))
வாங்க மாலி சார், நன்னி ஹை! :))))
ReplyDeleteவாங்க வல்லி, நிஜம்மாவா படம் நல்லா வந்திருக்கு! ஹிஹி, எனக்காகச் சொல்றீங்களோ?
ReplyDeleteதோசை மாவு அரைச்ச அன்னிக்கு தோசை வார்த்தால் முதல் தோசையில் ஒரு மூலையில் கிள்ளி ருசி பார்க்க மாட்டோமா? நிலாவைப் பார்க்கறச்சே அந்தப் பொன் நிறமும் தக தகனு தகத்தாயமும் நல்ல பொன் முறுகல் தோசை நினைப்புத் தான் வருது!:)))
பின்னே, இலக்கியமா எழுதறேன்! இலக்கிய நடையில் வர்ணிக்க! :))))
அது சரி, ஸ்ரீராம், ரா.ல.வுக்கு இன்னும் நல்லா வந்திருக்கும், அதோட மேக்கப்பும் போடுவாங்க, இது எப்படி இருக்குனு சொல்லவே இல்லையே? :))))
ReplyDeleteநிலாவை விட உங்கள் வர்ணனை (கருத்துரையிலும்) அருமை... ஹிஹி...
ReplyDeleteஇனிமே நடக்கப் போறச்சேயே காமிராவும் கையுமாப் போகணும் போல! //
ReplyDeleteஆமாம் கையில் காமிரா கொண்டு போனால் நல்லது தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் எடுக்கலாம்.
நிலா நன்றாக இருக்கிறது.
:-)))
ReplyDeleteநிலா கீழே போனா இன்னும் பெரிசாத்தானே தெரியணும்?
வாங்க டிடி, வர்ணனையை ரசிச்சதுக்கு நன்னி. :)
ReplyDeleteவாங்க கோமதி அரசு, கொஞ்சூண்டு தெரிகிற வானத்தின் வழியே எங்க பால்கனியிலே கூடத் தெரிஞ்சார் நிலவார் நேத்தி ராத்திரி ஒண்ணேகால் மணிக்கு. அப்போப்போய்க் காமிராவை எடுத்தால்! ஹிஹி, பால்கனிக் கதவைத் திறக்கிற சப்தத்தில் ரங்க்ஸ் முழிச்சுண்டு என்னவோ, ஏதோனு நினைச்சுப்பார்னு விட்டுட்டேன்! இன்னிக்குக் காலம்பரயும் கரைஞ்சாப்போல இருந்தார். :)))))
ReplyDeleteவாங்க வா.தி. இன்னும் மேற்கே போய் மேற்குப் பக்கத்து நாடுகளுக்கு இரவு வந்தாச்சுனு நிலா சொல்றவரைக்கும் காத்துட்டு இருக்கலை, வேலை இருக்கே வீட்டிலே. அவர் கீழே இறங்க ஏழுமணியாவது ஆகி இருக்கும். நான் இறங்கிட்டேன். :))))))
ReplyDeleteஅதிகாலை நிலா நன்றாக இருக்கின்றது.
ReplyDeleteகையில் எப்பவும் சின்னதா காமிரா ஒண்ணு வெச்சுக்கறது எப்பவுமே நல்லது.
ReplyDelete'கிள்ளின தோசை' நல்ல உவமை கீத்தாம்மா :-)
வாங்க மாதேவி, நன்றி.
ReplyDeleteவாங்க அமைதி, காமிரா தினமும் எடுத்துட்டுப் போக நினைவு இருப்பதில்லை. :))))
ReplyDeleteமாலைச் சூரியனைவிடக் காலை நிலவு (சற்று மேல்வானத்தில் காட்சி தந்திருக்கையிலேயே) வேகவேகமாய்தான் உள்ளே போய்விடும். தங்க நிலவாகவும் இருக்கும். இங்கே படம் ஆறினைப் பாருங்களேன்.
ReplyDelete@ ஸ்ரீராம், கோமதிம்மா சொன்னார்கள். அதே பதிவில் (நீங்க பார்த்த பதிவே) நிலாவுடன் உனக்காச்சு எனக்காச்சுன்னு 3,4 மாசம் மல்லுக்கு நின்றிருக்கிறேனே. நிலாப்பாட்டிக்கு ஒருமுறை நீலப்புடவை, ஒரு முறை பிங்க் புடவையெல்லாம் கூட கட்டி விட்டிருக்கிறேன்:). ஒவ்வொரு மாதமும் முழு நிலவை ஆசையுடன் தொடரும் வல்லிம்மாவின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டைப் பாராட்ட வார்த்தை கிடையாது!
அதிலே படம் ஐந்தும் அதிகாலை நிலாதான்:)!
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி.! கீதா நானும் ராத்திரி படம்(நிலா) எடுப்பேன்..
ReplyDeleteஇவர் இரண்டு அதட்டல் போட்டுவிட்டுத் தூன்ங்கிவிடுவார்:)
வாங்க ரா.ல. லேட்டா வந்தாலும் வந்ததுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. :))))) காத்திருப்பது தான் என்னளவில் இயலாது. வீட்டில் யாரானும் வருவாங்க, இல்லைனா தொலைபேசி அழைப்பு வரும். வேலை ஏதானும் இருக்கும். :)))) அதுவும் காலை வேளையில்னா கேட்கவே வேண்டாம். :))) இருக்கிறது என்னமோ 2 பேர். 20 பேருக்கான வேலை! :)))))
ReplyDeleteஉங்களோட நிலாப் பதிவை நான் ஏற்கெனவே பார்த்திருக்கேன். :))))
ReplyDeleteவாங்க வல்லி, மாடிக்குப் போறச்சே காமிரா எடுத்துட்டுப் போக நினைவிருக்காது. அப்புறமாப் போய் எடுத்துட்டு வரதுக்குள்ளே காட்சி மாறிடும். நானும் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் நினைச்சுப்பேன். அன்னிக்குனு யாரானும் வந்திருப்பாங்க. மாடிக்கே போக முடியாது. :))))
ReplyDeleteஇரண்டு நாட்கள் முன்னர் அதிகாலைச் சூரியனைப் பார்த்தால் அப்படியே வழுக்கைத்தலையும், கிளிமூக்குமா துப்பறியும் சாம்புவைப் போலவே இருந்தது. படம் எடுக்க முடியலை. காமிரா கொண்டு போறதுக்குள்ளாக முழுச் சூரியனாக மஞ்சள் நிறத்தில் வந்தாச்சு. :))))
ராமலக்ஷ்மி...
ReplyDeleteகோமதி அம்மா என்ன சொன்னார்கள் என்று சொல்லவில்லையே நீங்கள்...!
மடித்து வைத்த தோசையை மறுபடி பார்த்து வந்தேன். வல்லிம்மாவைப் பாராட்டத்தான் வேண்டும். பயங்கர நிலா ரசிகர்.
//இரண்டு நாட்கள் முன்னர் அதிகாலைச் சூரியனைப் பார்த்தால் அப்படியே வழுக்கைத்தலையும், கிளிமூக்குமா துப்பறியும் சாம்புவைப் போலவே இருந்தது.//
:))))))
வாங்க ஸ்ரீராம், மீள் வரவுக்கு நன்றி. நீங்க ரா.ல.வாப் பிறந்திருக்கணும்னு சொன்னதைத் தான் கோமதி சொல்லி இருப்பாங்க. :)))))
ReplyDelete//இரண்டு நாட்கள் முன்னர் அதிகாலைச் சூரியனைப் பார்த்தால் அப்படியே வழுக்கைத்தலையும், கிளிமூக்குமா துப்பறியும் சாம்புவைப் போலவே இருந்தது.//
:))))))
ஹிஹிஹி, நமக்கெல்லாம் வேறே எப்படித் தெரியும்! :)))))
ஹிஹி.. சரியாச் சொன்னீங்க கீதா மேடம்:)!
ReplyDelete