"மணமகளே மருமகளே வா, வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா, குணமிருக்கும் குலமகளே வா, வா, தமிழ்க் கோயில் வாசல் திறந்து வைப்போம் வா, வா."
மணமகளை புகுந்த வீட்டுக்கு அழைக்கும் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண தினங்களே இல்லை ஒரு காலத்தில். மணமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவள் குணத்தையும், அதனால் வீடு, வாசல் செழிக்கப் போவதையும் எடுத்துச் சொல்லும் பாடல் இது. வரப்போகும் பெண்ணை சாக்ஷாத் மஹாலக்ஷ்மியாகவே மதித்துப் போற்றிய காலம் ஒன்று உண்டு. திருமணம் என்பது இரு குடும்பங்கள் இணையும் ஒரு பந்தம். அதில் உள்ள ஒவ்வொரு சடங்கும் அர்த்தம் பொதிந்தது. அவற்றையும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம். ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்த நம் கல்யாணக் காலங்கள் நாளா வட்டத்தில் மறைந்து போய் விட்டன. அதோடு இல்லாமல், பெண்ணே தன் காதலனைப் பார்த்து,
"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? .. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"
என்று கேட்பதாகப் பாடல்கள் எழுதப் பட்டு அவை தமிழ்நாட்டின் தேசிய கீதமாகவே விளங்கின. இது காலத்தின் கோலம் தான். திருமணத்தை இவ்வளவு மோசமாக நாம் நினைக்கும் அளவுக்கு மாறியது திருமணம் என்பதன் உண்மையான அர்த்தம் புரியாமல் வெறும் உடல் இன்பத்துக்காகவே திருமணம் என்று மாறிப் போக ஆரம்பித்தது தான் காரணம். உண்மையில் திருமணம் என்பது கணவனோடு கூடி இருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோடு அவன் காரியங்கள் அனைத்திலும் அவனுக்குத் துணை நிற்பதற்கே என்பதைப் போன பதிவிலேயே பார்த்தோம். அப்படி இருந்த கல்யாணங்களின் பொருள் மாறிப் போய் வியாபாரம் ஆனது எப்போது?
ஒரு காலத்தில் குருகுலம் முடித்த பிரமசாரிகள் வீடு வீடாக பிக்ஷை எடுத்து வருகையில், பெண்ணை வைத்திருப்பவர்கள் அந்த பிரமசாரியின் அபிப்பிராயத்தைக் கேட்டுக் கொண்டு தங்கள் வீட்டுப் பெண்ணை தானமாய்க் கொடுப்பது உண்டு எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். என் அப்பா வீட்டிலேயே இப்படி நடந்ததாக அப்பா சொல்லி இருக்கிறார். அதற்கும் பின்னர் பிள்ளை வீட்டுக்காரர்களே பிரமசாரிப் பையருக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனத் தேடிச் சென்று பெண் கேட்டுத் திருமணம் செய்து வைப்பதாகவும் கேட்டிருக்கிறேன். இப்படிப் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டினரே சென்றிருக்கின்றனர். ஆனால் மாப்பிள்ளையைத் தேடிப் பெண் வீட்டுக்காரர்கள் வர ஆரம்பித்தது ஆங்கிலேய ஆதிக்கத்தின் பின்னரே.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆள ஆரம்பித்த பின்னரே, குருகுலப் படிப்புக்கு மூட்டை கட்டிவிட்டு நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும், அதன் காரணமாக மடிப்புக்கலையாமல் உத்தியோக வாழ்க்கையும் ஏற்பட ஆரம்பித்த பின்னருமே நம் கல்யாணங்கள் அனைத்தும் வியாபாரக் கல்யாணங்களாக மாற ஆரம்பித்தன. அதற்கு முன்னர் வரை குருகுல வாசம் முடிந்து வரும் பிரமசாரிக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனப் பிள்ளை வீட்டுக்காரர்களே தேடிச் செல்வார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும் உத்தியோகமும் ஏற்பட்டு அதன் மூலம் கெளரவம் அதிகம் ஆனதாக ஏற்பட்ட உடனே பெண் வீட்டுக்காரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பெண்களுக்கு வரதக்ஷணை கொடுத்துப் பையனைத் தேடும் நிலைமைக்கும் ஆளானார்கள். இதற்கு அப்போது பெண்களின் விகிதாசாரம் அதிகமாகவும், ஆண்களின் விகிதாசாரம் குறைவாகவும் இருந்ததும் ஒரு காரணம்.
இன்னும் அலசுவோம்.
பி.கு. படம் உதவி, ராஜராஜேஸ்வரி, jaghamani.blogspot.com
ராஜராஜேஸ்வரி
arumai arumaiyaana alasal
ReplyDeletesukumar
en kavithaigal vasikka
http://nisu1720.blogspot.com
மாப்பிள்ளை கவர்ன்மெண்டில் வேலை. கையில இரண்டாயிரம் கொடுத்தப் போதும். பித்தளை,வெங்கலம்,வெள்ளி என்று எல்லாவகையிலயும் பாத்திரங்கள். கட்டில் பீரோ இத்யாதி வந்ததும் 1930லியே தொடங்கிவிட்டது. இது மாமியார் தந்த விவரம்:)பிரம்மச்சாரிகளை இனிமேல் தேடணும்.
ReplyDeletepls continue..
ReplyDeleteஉண்மைகள்...
ReplyDeleteஇன்னும் நன்றாக அலசுங்கள்... நன்றி...
//இது காலத்தின் கோலம் தான்.//
ReplyDeleteவேற என்னன்னு சொல்லறது??
அருமையாக இருக்கு மாமி.
தொடருங்கோ..
"புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே" பாட்டை மறந்துட்டீங்களே...!
ReplyDeleteஇப்போது ஆன்-பெண் விகிதாச்சாரத்தில் கூட ஏற்றத் தாழ்வு வந்து விட்டதாம். ஆணின் விகிதம் அதிகம்.
"உண்மையில் திருமணம் என்பது கணவனோடு கூடி இருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோடு அவன் காரியங்கள் அனைத்திலும் அவனுக்குத் துணை நிற்பதற்கே"
ReplyDeleteAkka ippollam ithamari sonna pen kozanthaigale adikavaruvangakka. Kaalm maripochika maripochi.
வாங்க சுகுமார், முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க வல்லி, இப்போதெல்லாம் இந்த பேரம் கிடையாது தான். ஒரு சிலர் இருக்கிறதாச் சொல்றாங்க. எனக்குத் தெரிஞ்சு இல்லை. ஆனால் வேறு வகையில் ஆடம்பரம்.:)))))) பிரமசாரிகளைத் தேட வேண்டாம். முதிர்கன்னர்கள் இருக்கின்றனர். :(
ReplyDeleteவாங்க எல்கே, ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் ஒரே நபருக்கு நல்வரவு, :))))
ReplyDeleteவாங்க ராம்வி, காலம் செய்த கோலம் தான். அதோடு தொலைக்காட்சிகளும் காரணம். :(
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், அந்தப் பாடல் மட்டுமா? வாராய் என் தோழி வாராயோ, கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? மாப்பிள்ளை வந்தா மாப்பிள்ளை வந்தா மாட்டு வண்டியிலே, கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம், இப்படி நிறையப் பாடல்கள் இருக்கின்றனவே. எல்லாம் அந்த அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்பப் பயன்படுத்திக்கணும். முதல்லே இந்த எண்ணம் இல்லை. டிடி தன்னோட பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார். அதான் தேடிப் பிடிச்சுப் போடறேன். :))))
ReplyDeleteகருணாகரன், முதுகிலே பெரிய தலையணையாக் கட்டிட்டு இருக்கேன். வந்து அடிக்கட்டும். ஏற்கெனவே நிறைய வாங்கிட்டேன். :))))))
ReplyDeleteமுதல் வரவுக்கு நன்றிப்பா.
இனிமையான திருமணப்பாடல் வரிகள்..
ReplyDeleteஎமது தளத்தின் பொருத்தமான படத்திற்கு
நன்றி நவின்றதற்கு இனிய நன்றிகள் ..
திருமணம் என்பது இரு குடும்பங்கள் இணையும் ஒரு பந்தம். அதில் உள்ள ஒவ்வொரு சடங்கும் அர்த்தம் பொதிந்தது. //
ReplyDeleteஉண்மை நீங்கள் சொல்வது. இரு குடும்பங்களை இணையும் பந்தம் தான்.
அது தான் சம்பந்தி என்று சொல்கிறார்கள்.ஆனால் இப்போது சம்மந்தி என்று மாறி விட்டது என்று தேச. மங்கையர்கரசி விஜய் டிவியில் பேசினார்.
சம்பந்திகள் உறவு நன்றாக இருந்தால் கல்யாணம் சிறப்பாக நடக்கும்.
Very Nice Geetha maami. Waiting to read next post
ReplyDeleteஆங்கிலேயர் dowry கொடுக்கும் பழக்கம் இருந்தாலும், அதற்கு முன்னே இருந்ததாக நம்புகிறேன். நம் புராணங்களில் நிறைய குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பெண்ணுக்கு வரதட்சணை தருவது ஆரியர்கள் கொண்டு வந்தப் பழக்கம் :-)
ReplyDelete//..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"
ReplyDeleteகேள்விப்பட்டதேயில்லையே?
குருகுலம் முடித்து வருவது எல்லாம் பிராமணர்கள் மட்டும் தானே? மற்ற இனங்களிலும் வரதட்சணை பழக்கம் இருந்ததே?
ReplyDeleteஹிஹி.. ஒரு சடங்கையாவது அர்த்தமுள்ளது என்று ஏற்க விரும்புகிறேன்... தொடர்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//.தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"//
ReplyDeleteசரியாப் போச்சு போங்க, இந்தப் பாட்டு தமிழ்நாட்டின் தேசிய கீதமாச்சே, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மட்டுமே இதுக்குத் தடை போட்டாங்க. தமிழ்நாட்டில் இந்தப் பாட்டு வந்த படமும் இந்தப் பாடலும் கேட்காத, பார்க்காத நபர்களைத் தூக்கில் போடணும்னு சட்டமே போட்டிருக்கணும். என்னை மாதிரிச் சில பேர் இருக்கிறதாலே போடலை. ஆனாலும் பாட்டு காதில் வந்து விழத்தான் செய்யும். பிறந்த குழந்தை கூடப் பாடுமே! :))))
விக்ரம்,த்ரிஷா நடிச்ச ஏதோ ஓர் படம். விக்ரம் போலீஸ்காரராக வருவார்னு தெரியும். படம் பெயர் நினைவில் இல்லை. சாமி அல்லது வேல்????? யாரானும் சொல்லுங்கப்பா அப்பாதுரைக்கு. கூகிளிட்டுக் கண்டுபிடிக்கணும். :))) இப்போ நேரமில்லை. மத்ததுக்குப் பின்னூட்டம் மத்தியானமா! :)))))
ராஜராஜேஸ்வரி, வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிம்மா.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, சம்பந்தியை சம்மந்தி எனச் சொல்வதை நானும் கண்டிருக்கேன். :)))) என்ன சொல்வது! :))))
ReplyDeleteவாங்க சுபாஷிணி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.
ReplyDelete//ஆங்கிலேயர் dowry கொடுக்கும் பழக்கம் இருந்தாலும், அதற்கு முன்னே இருந்ததாக நம்புகிறேன். நம் புராணங்களில் நிறைய குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பெண்ணுக்கு வரதட்சணை தருவது ஆரியர்கள் கொண்டு வந்தப் பழக்கம் :-)//
ReplyDeleteஇல்லை அப்பாதுரை, வரதக்ஷணை எனக் கேட்டு வாங்கும் வழக்கம் கடந்த முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்தது. இது குறித்து தமிழ்த்தாத்தா அவர்கள் கூட எழுதிப் படிச்சிருக்கேன். ஆனால் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையைச் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை. அவரோட பொக்கிஷங்களில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பெண்ணோடு கூட நிலம், வீடு, சொத்துக்கள், நகைகள் என ஸ்த்ரீதனமாகக் கிடைத்தது உண்டு. பிள்ளையில்லா ராஜாவின் ஒரே பெண்ணானால் ராஜ்யமே மாப்பிள்ளைக்கும் அவன் வழிப் பிள்ளைகளுக்கும் தானே! மதுரையிலே தான் பார்த்திருக்கோமே! :)))) அது தனி. வரதக்ஷணை எனப் பிள்ளை வீட்டுக்காரர்கள் அடிச்சுப் பிடிச்சு லிஸ்ட் போட்டுக் கேட்டு வாங்குவது என்பது வேறு.
ReplyDelete//குருகுலம் முடித்து வருவது எல்லாம் பிராமணர்கள் மட்டும் தானே? மற்ற இனங்களிலும் வரதட்சணை பழக்கம் இருந்ததே?//
ReplyDeleteஇல்லை அப்பாதுரை, அனைத்து வர்ணத்தினருக்கும் குருகுலவாசம் உண்டு. அப்படி ஒரே குருகுலத்தில் படித்தவர்களாக நாம் கிருஷ்ணனையும், சுதாமாவையும் பார்க்கலாம். அதே போல் துருபதனையும், துரோணரையும் பார்க்கலாம். இப்படி இன்னும் நிறைய மேற்கோள்கள் உள்ளன. அதோடு கூட ஆங்கிலப் படிப்பு ஆரம்பிக்கும்வரைக்கும், நம் மக்கள் அனைவருமே தமிழ், வடமொழி இரண்டுமே கற்று வந்திருக்கிறார்கள். படிக்க ஆசைப்படும் பெண்களுக்கு வீட்டிலேயே தமிழ், வடமொழி கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறது. பெண் கல்வியை மிகவும் முன்னேற்றியவர்களில் சமண மதத்து ஆசாரியர்களை முன்னோடியாகச் சொல்லலாம். பெண் கல்விக்கு சமணர்கள் பழைய காலங்களிலேயே மிகவும் பாடுபட்டிருக்கின்றனர்.
குருகுல வாசம் அனைவருக்குமே பொதுவானது. முக்கியக் கல்வி கற்றபின்னர் அவரவருக்குப் பிடித்த விஷயத்தில் தனித் திறமை பெறப் படித்துக்கொள்ளலாம். இது இப்போதைய போஸ்ட் கிராஜுவேட் போல. தொழிற்கல்வி கற்க ஆசைப்படும், ஆசைப்பட்ட பிராமணர்களுக்கும் தொழிற்கல்வி கற்றுத்தரப் பட்டது. அதே போல் வேதம் படித்து, பிரம்மத்தை அறிய எண்ணும் மாற்று வர்ணத்தவர் அதைக் கற்று பிராமணன் ஆக முடிந்தது. இதுக்கு விசுவாமித்திரரே சாட்சி இல்லையா? ஆனால் பிராமணனுக்குச் சட்ட,திட்டங்கள் அதிகம் என்பதால் நாளாவட்டத்தில் குறைய ஆரம்பித்தது.
ReplyDeleteveetla irunthu padika time illa. officela irunthu avlothan poda mudiyuthu
ReplyDeleteஸ்ரீராம்.. பாத்தீங்களா, கீதாம்மா கூட நீங்க சொன்ன பாட்டின் தாத்பரியத்தை எவ்வளவு சாதுர்யமா ஸ்கிப் ஓவர் பண்ணி, வேறே கல்யாண சம்பந்தப்பட பாட்டுகளோட சகட்டுமேனிக்கு ஒரே தட்டிலே வைச்சுப் பார்த்திருங்காங்க, பாருங்க..
ReplyDeleteகல்யாண ரிஷப்ஷன்கள்லே இந்தப் பாட்டைப் பாட இப்போலாம் உத்திரவிடப்படாத தடா! மெல்லிசைக் காரர்கள்கிட்டே பாடச் சொல்லிச் சொன்னாலும், பயந்தபடியே "எதுக்கும் ஒரு வார்த்தை பெண்வீட்டார்கிட்டே கேட்டுர்றேன்" என்பார்கள். அங்கே கேட்கும் பொழுது, "ஊஹூம்.." தான். ஒரு கல்யாணத்திலே "இந்தப் பாட்டைப் பாடி பெண்ணோட மூட் கெட்டுடப்போறது"ன்னு சொன்னதை என் காதாலேயேக் கேட்டேன்!"சுத்த கர்நாடக ரசனை" என்று அர்ச்சனை வேறு! 'ஏன், என்ன' என்று தோண்டித் துருவி கேட்டால், அந்தப் பாட்டில் வரும் 'புத்திமதிகளை' ரசிக்கும் பக்குவத்தில் இன்றைய தலைமுறை இல்லையாம்!
//மத்ததுக்குப் பின்னூட்டம் மத்தியானமா! :))))) //
ReplyDeleteஹஹஹா.. உங்க பாணியே அலாதி தான்! 'மின்சாரக் கண்ணா' நேரம் வந்தாச்சா!
குருகுலக் கல்வி பற்றி ஆற அமர அலச 'தைத்திரீய உபநிஷதம்' பக்கம் வாங்க அப்பாஜி! 'ஆத்மாவைத் தேடி..' பதிவுகளில் கதை ரூபத்லே நானும் கொஞ்சம் சொல்ல முயற்சித்திருக்கேன்.
ReplyDeleteகுருகுலக்கல்வி வாழ்க்கைக்கான கல்வியாக இருந்தது. அதனால் அது சிஷா வல்லீ என்று அழைக்கப்பட்டது. குடும்பம் சார்ந்த வாழ்க்கையில் சிறார்களின் மன இயல்புகள் மாறிவிடக் கூடாதே என்கிற அக்கறையில் மிகச்சிறு பிராயத்திலேயே குருவின் பொறுப்பில் குழந்தைகளை விட்டனர். வேதங்கள் மட்டுமின்றி உபவேதங்களும், வேதாங்கங்களும் பாடத்திட்டத்தில் இருந்தன.
ReplyDeleteஆயுர்வேதம், தனுர்வேதம், கந்தர்வ வேதம், அர்த்தசாஸ்திரம் என்பவை உபவேதங்கள் என்று அழைக்கப்பட்டன. அவை முறையே மருத்துவம், போர்க்கலைகள், நுண்கலைகள், ஆட்சிமுறை என்னும்
நான்குமாகும்.
வேதாங்கங்களோ, சிஷை (உச்சரிப்பு) வியாகரணம் (இலக்கணம்) சந்தஸ் (செய்யுள்) நிருத்தம் (அகராதி) ஜ்யோதிஷம் (வானவியல், ஜோதிடம்) கல்பம் (சடங்குகள்) என்று ஆறாகும்.
நன்றி: தைத்திரீய உபநிஷதம் பற்றிய ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடுகள்.
எல்கே,சும்ம்ம்மாச் சீண்டினேன். அம்புடுதேன். :))))
ReplyDeleteஸ்ரீராம்.. பாத்தீங்களா, கீதாம்மா கூட நீங்க சொன்ன பாட்டின் தாத்பரியத்தை எவ்வளவு சாதுர்யமா ஸ்கிப் ஓவர் பண்ணி, வேறே கல்யாண சம்பந்தப்பட பாட்டுகளோட சகட்டுமேனிக்கு ஒரே தட்டிலே வைச்சுப் பார்த்திருங்காங்க, பாருங்க..//
ReplyDeleteஅப்படி ஒரு அர்த்தம் வருதா? எனக்கு அப்படியெல்லாம் தோணலை. :))))) சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போலப் பாடலைப் போட எண்ணம் அவ்வளவு தான்.
//கல்யாண ரிஷப்ஷன்கள்லே இந்தப் பாட்டைப் பாட இப்போலாம் உத்திரவிடப்படாத தடா! மெல்லிசைக் காரர்கள்கிட்டே பாடச் சொல்லிச் சொன்னாலும், பயந்தபடியே "எதுக்கும் ஒரு வார்த்தை பெண்வீட்டார்கிட்டே கேட்டுர்றேன்" என்பார்கள். அங்கே கேட்கும் பொழுது, "ஊஹூம்.." தான். ஒரு கல்யாணத்திலே "இந்தப் பாட்டைப் பாடி பெண்ணோட மூட் கெட்டுடப்போறது"ன்னு சொன்னதை என் காதாலேயேக் கேட்டேன்!"சுத்த கர்நாடக ரசனை" என்று அர்ச்சனை வேறு! 'ஏன், என்ன' என்று தோண்டித் துருவி கேட்டால், அந்தப் பாட்டில் வரும் 'புத்திமதிகளை' ரசிக்கும் பக்குவத்தில் இன்றைய தலைமுறை இல்லையாம்!//
இது குறித்துக் கேள்விப் பட்டதில்லை. புதுச் செய்தி எனக்கு. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
//மத்ததுக்குப் பின்னூட்டம் மத்தியானமா! :))))) //
ReplyDeleteஹஹஹா.. உங்க பாணியே அலாதி தான்! 'மின்சாரக் கண்ணா' நேரம் வந்தாச்சா!//
அதெல்லாம் இல்லை. இப்போ +2 தேர்வு நடக்கிறதாலே அதிகம் மின்சாரம் போவதில்லை. ஆனால் காலை வேளையில் அவசியம் நேர்ந்தால் தவிர கணினியில் உட்காருவதில்லை. வேலைகள் கெட்டுப்போகும். இப்போது கொஞ்ச நாட்களாக முக்கிய வேலை இருந்ததால் அரை மணி நேரம் உட்காருகிறேன். வீட்டு வேலைகளைச் செய்து கொண்டே கணினியையும் பார்ப்பது என்னைப் பொறுத்தவரை சரிப்பட்டு வருவதில்லை. :)))))
+2 தேர்வு முடிஞ்சப்புறம் இருக்கு எங்களுக்கு! :)))))))))))) மின்சாரமா என்னனு கேட்கணும். :)))))
மற்றபடி குருகுலக் கல்வி குறித்த மேலதிக விளக்கத்துக்கு நன்றி ஜீவி சார். :))))))
ReplyDelete
ReplyDeleteபெண்வீட்டார் பிள்ளையைத் தேடிப் போவதோபிள்ளை வீட்டார் பெண்ணைத் தேடிப் போவதோ இரண்டுமே உண்டு. சமூகத்துக்குச் சமூகம் மாறுபடும். நீங்கள் குறிப்பிடும் சில பழக்கங்கள் குறிப்பிட்ட சில சமூகத்தில்தான் அதிகம் போல் தோன்றுகிறது. கல்வி அறிவே மறுக்கப்பட்ட காலம் இருந்ததுண்டு. குருகுலக் கல்வி என்பதெல்லாம் கதைகளில் காண்பது மட்டுமே.என் சிறுவயதில் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் கண்டிருக்கிறேன்.
வாங்க ஜிஎம்பி சார், பெண்ணைத் தேடிச் செல்லும் வழக்கமே இருந்திருக்கிறது. பின்னால் தான் மாறியுள்ளது. :)))) இது குறிப்பிட்ட சமூகத்துக்கு என இருந்ததில்லை. அதோடு திண்ணைப்பள்ளிக்கூடங்கள் இருந்தன என்பதும் சரியே. ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவை. ஆங்கிலேயர் வந்ததுமே பள்ளிகள் என்பதெல்லாம் சரியல்ல. நான் ஒரு சுட்டி தருகிறேன். அங்கு போய்ப்பாருங்கள்.
ReplyDeleteரைட். ஸ்த்ரீதனம் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கும் வரதட்சணைக்கும் என்ன வித்தியாசம்?
ReplyDeleteஸ்த்ரீதனம் இல்லாமல் கல்யாணம் நடக்கவில்லை என்றால் அது வரதட்சணை தானே? தமிழிலக்கிய நூல்களில், நான் படித்தது மிகச் சொற்பம் எனினும், வரதட்சணை பற்றிய குறிப்புகள் இல்லை.
தவறாகச் சொல்லிவிட்டேன். நான்கு வர்ணத்தவரில் முதலிரண்டைத் தவிர குருகுலவாசத்தில் இடம் கிடையாது. மூன்றாமவருக்கு குருகுலவாசம் தேவையிருக்கவில்லை. நான்காமவருக்கு எங்கேயும் எதிலும் இடமில்லாமலே போனது.
ReplyDeleteஏகலைவன் உதாரணத்தை நாம் உடனடியாக ஏற்பதில்லை. கர்ணனைக் கூட விரட்டி விட்டதாகவே புராணம் சொல்கிறது. குருகுலம் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காகவே நடத்தப்பட்டது. (தர்மபால் வேறே விஷயம் - இருபதாம் நூற்றாண்டுக்காரர்)
ஜீவி சார். நீங்கள் சொல்வதை மேலோட்டமாகவே அறிவேன்.
ReplyDeleteநான் சொல்வது, in those days, இந்த குருகுலக்கல்வி எல்லாருக்கும் கிடைப்பதற்காக அமைக்கப்படவில்லை. worse, குறிப்பிட்ட சிலருக்காகவே 'பிறப்பு' தகுதியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது என்பதே.
என் பின்னூட்டம் சரியாக புரிந்து கொள்ளப் பட வில்லை என்றே தோன்றுகிறது. சில விஷயங்கள் கோடி காட்டப்பட, உணர வேண்டியது. நான்கு வித பிரிவுகள் division of labour என்ற முறையில் பிரிக்கப்படது. ஆனால் ஒருசாரார் கல்வி அறிவுக்கே தகுதி இல்லாதவர்கள் என்று முறைப்படுத்தப்பட்டு கல்வியே மறுக்கப் பட்டனர். அதன் விளைவுகளை அவர்களது சந்ததியினர் இன்ன்மும் அனுபவித்துக் கொண்டு வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க குருகுலக் கல்வி என்பதெல்லாம் ஒரு சாராரே அனுபவித்து வந்தனர். மற்றதெல்லாம் கதைகளில் கேட்கப்படுபவையே என்ற பொருளில் எழுதி இருந்தேன். அதற்கு பதிலாக சுட்டியைக் கொடுத்து படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். ஆங்கிலேயர் வந்ததும் இருந்த, நிலவிய, சூழ்நிலையை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம்மை மேலும் பிரித்தனர் என்பதே சரித்திரம். இதையெல்லாம் சிந்தித்தே கல்வி சமமாக இலவசமாக எல்லோருக்கும் அளிக்கப் பட வேண்டும் என்றும் என் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.நான் குறிப்பிட்ட திண்ணைப் பள்ளிக்கூடங்களில்ஆரம்பக் கல்வி கற்றவர்கள்,படித்தவர்கள் பெரும்பாலும் கல்வி மறுக்கப் பட்டவர்களே.சிலவற்றைப் படித்து தெரிந்து கொள்கிறோம். சிலவற்றை அனுபவத்தில் கற்கிறோம்.படித்து தெரிந்து கொள்வதைவிட பட்டறிவதே சிறந்தது என்று எண்ணுகிறேன்.
ReplyDelete//ஜீவி சார். நீங்கள் சொல்வதை மேலோட்டமாகவே அறிவேன்.
ReplyDeleteநான் சொல்வது, in those days, இந்த குருகுலக்கல்வி எல்லாருக்கும் கிடைப்பதற்காக அமைக்கப்படவில்லை//
உபநிஷதங்களைக் கற்றோர் தெரியப் படுத்தியிருப்பதை நான் குறிப்பிட்டேன்.இந்த தைத்திரீய உபநிஷதம் எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருஷங்களுக்கு முன்பான காலத்தைச் சேர்ந்தது என்று இவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்ட அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆக, அத்தனை காலத்திற்கு முன்பான வாழ்க்கை அமைப்பில் இப்படியான வாழ்க்கைக் கல்வி இருந்தது என்று ஒரு சரித்திர ஆய்வாக நாம் கொள்வதற்கு இந்த உபநிஷதச் செய்திகள் உதவுகின்றன என்று கொள்ளலாம். அவ்வளவே.
உபவேதங்களும்,வேதாங்கங்களும் கையாளக் கூடிய பாடதிட்டங்களைப் பார்த்தால் யாகங்களை மேற்கொண்டோருக்கும், அரசகுலத்தினருக்குமான கல்வி என்று யூகிக்கலாம். யாகங்கள் செய்வதையும், அரசாள்வதையும் மேற்கொண்டவர்களுக்கு இந்த பாடதிட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது..
ஆனால் இந்தக் கல்வியைக் கற்பித்தவர்கள் அக்காலத்திய ரிஷிகள் என்று நாம் கொண்டால், வில்வித்தை, குதிரையேற்றம் போன்ற அரசகுலக் கல்வியையும் அவர்கள் கற்றுத் தெரிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. அப்படிக் கற்பித்தவர்களும் தங்களின் கண்டுபிடிப்புகளாகவோ, தாங்கள் அறிந்த அறிவாகவோ எதையும் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
'எனக்குச் சொன்னவர்கள் இப்படிச் சொன்னார்கள் அதை உனக்குச் சொல்கிறேன்' என்கிற வழக்கத்தை அறிவு சிலுப்பல் இல்லாமல் மிகத் தாழ்மையாகக் கடைபிடித்திருக்கிறார் கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான இந்தக் காலத்தை உலகளாவிய பல அறிஞர்கள் ஆராய்ந்து நிறைய ஆராய்ச்சி செய்திகளைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். நிறைய ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல செய்திகள் பிரமிப்பூட்டுவையாக இருக்கின்றன. அவற்றைப் பின்னால் பார்க்கலாம்.
This comment has been removed by the author.
ReplyDelete//அதற்கு பதிலாக சுட்டியைக் கொடுத்து படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். ஆங்கிலேயர் வந்ததும் இருந்த, நிலவிய, சூழ்நிலையை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நம்மை மேலும் பிரித்தனர் என்பதே சரித்திரம்//
ReplyDeleteஜிஎம்பி சார், சும்மாவானும் பதிலுக்காகச் சுட்டியைக் கொடுக்கவில்லை. நீங்க சொல்லும் படிக்காத நாலாம் வர்ணத்தவர்களில் எத்தனை பேர் படித்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற விபரங்கள் உங்களுக்கு அதில் கிடைக்கும். ஆகவே இது வர்ணாசிரமக் கோளாறெல்லாம் இல்லை. திட்டமிட்டு ஆங்கிலேயர் செய்தது. ஆங்கிலேயர்களிலேயே ஒருவர்,நாடெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் தங்கள் நாட்டிற்குப் போய் இந்த நாட்டில் எங்கும் திருட்டே இல்லை. எவரும் ஒருவரை ஒருவர் கடிந்து பேசுவதில்லை. அனைவரும் மிகவும் பெரும்போக்காக ஒருவரை ஒருவர் மதித்து நடக்கின்றனர். தெய்வ பக்தி அதிகம் உள்ளது. பிராமணர்கள் சொற்படி அரசர்கள் கேட்டு நடக்கின்றனர்." என்றெல்லாம் எழுதி இருப்பதையும் படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
//நான் சொல்வது, in those days, இந்த குருகுலக்கல்வி எல்லாருக்கும் கிடைப்பதற்காக அமைக்கப்படவில்லை. worse, குறிப்பிட்ட சிலருக்காகவே 'பிறப்பு' தகுதியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது என்பதே.//
ReplyDeleteஇதைத் தான் நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். இருபதாம் நூற்றாண்டு மனிதராக தரம்பால் இருந்தால் அதற்காக அவர் ஆய்வு செய்து எழுதியவற்றை மறுக்கவேண்டாமே! அதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்குங்க! :))))))))
நிச்சயமாக வர்ணாசிரமம் இருந்தது. ஆனால் அதற்காக ஒரு வர்ணத்தினருக்குக் கல்வி மறுக்கப் பட்டது என்பதெல்லாம் கிடையாது.
ReplyDelete//ஏகலைவன் உதாரணத்தை நாம் உடனடியாக ஏற்பதில்லை. கர்ணனைக் கூட விரட்டி விட்டதாகவே புராணம் சொல்கிறது.//
ReplyDeleteஏகலவ்யனும் சரி, கர்ணனும் சரி க்ஷத்திரியர்களிலேயே கொஞ்சம் குறைந்தவர்கள். நிஷாத நாட்டு இளவரசனே ஏகலவ்யன். அவனுக்கு வில் வித்தை கற்றுக் கொடுப்பதால் பின்னர் அவன் தனக்கே எதிராகத் திரும்பலாம் என்பதாலேயே துரோணர் மறுத்தார்.
கர்ணனும் க்ஷத்திரியனே. அவனை சூத புத்திரன் என அழைப்பதை வைத்து அனைவரும் சூத்திரன் என அழைப்பதாக நினைக்கின்றனர். உண்மையில் சூதன் என்றால் தேரோட்டி என்னும் பொருள். நம் புராணங்களை வகுத்த வேத வியாசர் அதைப் பரப்ப வேண்டி சூத புராணிகரையே தேர்ந்தெடுத்தார் என்பதைக் கவனிக்கவும். சூத புராணிகர் சொல்லிப் பல ரிஷிகள், மன்னர்கள் எனப் பெரிய மனிதர்கள் பலரும் புராணங்களைக் கேட்டிருக்கின்றனர்.
ஏகலவ்யன் குறித்தும், கர்ணன் குறித்தும் அவனுக்கு துரோணர் ஏன் பிரம்மாஸ்திரம் கற்றுக்கொடுக்க மறுத்தார் என்பது குறித்தும் கண்ணன் வருவான் தொடரில் ஏற்கெனவே எழுதி உள்ளேன். துரோணர் மறுத்ததின் காரணமே கர்ணன் அர்ஜுனனை ஒரு காலத்தில் தான் வென்று அவனைக் கொல்வதற்காகவே பிரம்மாஸ்திரம் கற்க வேண்டும் என்று கேட்டதாலேயே. அதோடு கூடத் தன் அருமை மகன் ஆன அஸ்வத்தாமாவுக்குக் கூட பிரம்மாஸ்திரப் பிரயோகத்தைக் கற்றுக்கொடுத்த துரோணர் அதைத் திரும்பப் பெற்றுக்கொடுக்கும் விதத்தைச் சொல்லிக் கொடுக்கவில்லை. அர்ஜுனன் ஒருவனுக்கே சொல்லிக் கொடுத்தார். ஏனெனில் தேவையில்லாமல், தேவையில்லா நபர்களின் மேல் அவன் பிரயோகிக்க மாட்டான் என்பது அவருக்கு நிச்சயமாய்த் தெரியும்.
ReplyDeleteஸ்த்ரீதனம், பெண்ணுக்குத் தன் தாய்வழிச் சொத்தாக வழிவழியாக வருவது. மஞ்சள் காணி என்பார்கள். இப்போது தான் பூர்வீகச் சொத்தில் பங்கு கொடுக்கணும்னு இந்தியாவில் சட்டம் நிறைவேறியுள்ளது. ஆனால் அந்தக் காலங்களிலேயே அதை இவ்வாறு நிறைவேற்றியுள்ளார்கள். ஒவ்வொரு தகப்பனும் தன்னால் இயன்ற பொன், பொருள், ஆபரணங்களைப் பெண்ணுக்கு அளிப்பதே ஸ்த்ரீதனம். இதைக் கேட்டுப் பெறுவதில்லை. விரும்பிக் கொடுப்பார்கள். வரதக்ஷணை வேறே விஷயம்.
ReplyDeleteசிறப்பாக வந்துகிட்டிருக்கு. தொடர்கிறேன்.
ReplyDeleteவாங்க கோவை2தில்லி, வருகைக்கு நன்றிம்மா.
ReplyDelete