கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்னு சொல்வாங்க.இரண்டுமே பண்ணியாச்சு. கல்யாணம் ஒன்றில்லை. நிறையக் கல்யாணங்கள். அதிலே நாங்களே (நானும் என் மறுபாதியும்) கல்யாண வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட கல்யாணங்கள் எங்க கல்யாணம் தவிர ஏழு அல்லது எட்டு இருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்சு நல்லா அனுபவிச்ச கல்யாணம்னு சொல்லணும்னா என்னோட சித்தி கல்யாணம் தான். அசோகமித்திரனின் மனைவியான இவங்க கல்யாணமே நான் விபரம் தெரிஞ்சு பத்துப் பதினோரு வயசிலே அனுபவிச்ச முதல் கல்யாணம். அப்போல்லாம் கல்யாணம்னா ஏதோ நாம ஜாலியா இருக்கிறதுக்கு மத்தவங்க பண்ணிக்கிறாங்க என்ற அளவில் மட்டுமே நினைப்பு இருக்கும். சொந்தக்காரங்க கூடுவதும், பக்ஷணங்கள் பண்ணுவதும், ஒரே கொண்டாட்டமாய் இருப்பதும், எல்லாத்துக்கும் மேல் பள்ளிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வீட்டில் இருப்பதும் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது.
என் கல்யாணமே எனக்குக் கொஞ்சம் விளையாட்டாகவே சில சமயம் தோணி இருக்கு. இதன் தாத்பரியத்தை நான் புரிஞ்சுக்கச் சில வருஷங்கள் தேவைப்பட்டன என்று சொல்வதில் வெட்கம் ஏதும் இல்லை. போகப்போகத் தான் புரிய ஆரம்பித்தது. கல்யாணத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும், ஒவ்வொருத்தர் கல்யாணத்திலும் நடக்கும் கலாட்டாக்களையும், வெவ்வேறு சம்பிரதாயங்களையும் நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். எது எப்படி இருந்தாலும் கல்யாணம் என்பதன் அடிப்படைத் தத்துவம் எதுவும் மாறவில்லை. சடங்குகள், சம்பிரதாயங்களில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும் மற்ற வைதிக காரியங்களில் மாற்றம் இல்லை. கல்யாணம் என்றால் என்ன? ஏன்? எதுக்கு? எப்படி? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் சரியா என்பதை எல்லாம் இங்கே வரும் நாட்களில் அலசுவோம். அவரவர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். மறுபடி கொஞ்சம் உடல்நலக்குறைவு என்பதாலும், வேலைகள் இருப்பதாலும் அடுத்த பதிவுக்கு ஓரிரு நாட்கள் ஆகலாம்.
கல்யாணத்தின் அடிப்படைத் தத்துவம்னதும் தேவன் பாணியில எதுனாவது சொல்லப் போறீங்களோனு நினைச்சேன்:)
ReplyDeleteAttend பண்றவங்களுக்கு கல்யாணங்கள் என்றைக்குமே ஜாலி தான், எந்த வயசுலயும் ஜாலி தான்.
அவசியமான பதிவாக இருக்கும்.
ReplyDeleteஎன்ன? ஏன்? எதுக்கு? எப்படி?
ReplyDeleteஅலசுவோம்...
கல்யாணத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும், ஒவ்வொருத்தர் கல்யாணத்திலும் நடக்கும் கலாட்டாக்களையும், வெவ்வேறு சம்பிரதாயங்களையும் நன்கு கவனிக்க ஆரம்பித்தேன்..
ReplyDeleteநானும் பதிவரானபின்னேதான் திருமணத்தின் சடங்குகளின் நுணுக்கங்களை கேட்டு வியப்படைந்தேன் ,,
உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள் ..
ReplyDeletewaiting
ReplyDelete//இங்கே வரும் நாட்களில் அலசுவோம்.//
ReplyDeleteஅஹா.. விருந்து காத்துக்கொண்டு இருக்கு போல இருக்கே?
உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் மாமி.
பதிவு நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் திருமணத்தின் தாத்பரியம் புரிய கொஞ்சம் காலதாமதம் ஆனது எனக்கும். ஒரு மகிழ்ச்சியான ஒரு விழா மட்டுமே என்று சிறு வயதில் நினைத்த விழா நம் திருமணத்தில் தான் எவ்வளவு, கடமைகள், பொறுப்புகள் இதில் இருக்கிறது நமக்கு என்று தெரிய வரும்.
உடல்நலத்தைப் பார்த்துக் கொண்டு தெம்பாக அலச வாருங்கள்.
கல்யாணம் பண்ணிப்பார்....
ReplyDeleteதொடங்கிவிட்டது அப்பாஅம்மாக்களுக்கு இடி :)
//அவரவர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். //
ReplyDeleteஉங்களுக்குத் தெரியாததில்லை. இந்த பதிவுலகோடு பல வருஷ பந்தம் உண்டு உங்களுக்கு. ஆரம்ப காலங்களில் ஒருவொருக்கொருவர் 'சாட்' செய்கிற பாணியில் ஒரு வரியில் தன் கருத்தையும் சொல்லி வைத்து கலந்து கொள்கிற பாணியில் தான் இருந்தது, இந்த பதிவுலகம். அந்த நாளிலிருந்து நீங்களும் பல விஷயங்களை பல தளங்களில் பகிர்ந்து கொண்டு வருவதைப் படித்திருக்கேன்.
இப்பொழுதெல்லாம் அந்த முறை மாறியிருக்கிறது. அரைகுறையாக இல்லாமல், முழுசாக ஒருவர் தன் கருத்துக்களை தன் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிற மாதிரி மாற்றம் கண்டிருக்கிறது. இந்த மாற்றம் எது பற்றியும் கோர்வையாக ஒரு பக்கமாவது எழுதுகிற திறமையை பதிவர்களிடையே வளர்த்திருக்கிறது.
இது வரவேற்கத்தக்க மாற்றம்.
இருந்தாலும் இன்னும் சில மாற்றங்கள் வந்தால் தேவலை. பொதுப்படையாக எழுதினால் தான் மற்றவர்களும் தங்கள் கருத்தைச் சொல்கிற மாதிரி வெளிப்படையாகவும் அவை அமையும் என்று தோன்றுகிறது. நமக்கு எடுத்தாளக்கூடிய விஷயம் தான் முக்கியமே தவிர நபர்கள் அல்ல. பதிவுகளிலும் சரி, பின்னூட்டங்களிலும் சரி எதையும் பொதுவில் வைத்து அலசினால் நமக்கு ஒரு பொதுப்பார்வை வரும். அப்பொழுது தான் எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்கிற பகிர்ந்து கொள்கிற, பங்கெடுத்துக் கொள்கிற நிலை வரும். அப்படிப்பட்ட ஒரு மேலான நிலைக்கு பதிவுகள் நகர வேண்டும்.
'நான்', 'எனது' 'நான் கூட அப்படித்தான்' 'என் வழக்கம் என்னவென்றால்' போன்ற தன்னிலைக்களை, 'எனக்குத் தெரிந்த ஒருவர்' 'அதில் இன்னொருவர் கருத்து என்னவென்றால்' 'அதைப் பற்றி வேறொருவருக்கு அப்படி அபிப்ராயம்' என்கிற மாதிரி மாற்றி அது பற்றி நம் கருத்தையே பல விதங்களில் சொல்லலாம். இது தான் கட்டுரைகள் எழுதும் முறையும் கூட.
இந்த மாதிரி எழுதுவதில் பல நன்மைகள் உண்டு. யாரையும் பெயரிட்டுக் குறிப்பிடுவதைத் தவிர்க்கலாம். யார் மனதும் நோகாதவாறு அல்லது வெற்றுப் பாராட்டுகள் இல்லாதவாறு விஷயங்களை மட்டும் அலசலாம். அப்படிச் செய்யும் பொழுது நாம் எடுத்தாளக் கூடிய சப்ஜெக்ட் மட்டும் முன்னிலைபடுத்தப் பட்டு மற்ற தேவையில்லாதவை பின் தள்ளப்படும்.
நாம் எழுதுவதில் ஒரு முழுமையும் வளர்ச்சியும் அந்த சப்ஜெக்ட் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கிற மாதிரியான உணர்வையும் ஏற்படும்.
இன்றைய தேவையும் கூட இது தான்.
உடல் நலனில் கவனம் கொள்ளவும்.
ReplyDeleteஅது முக்கியம். ரொம்பவும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
ஒரே நேரத்தில் நாலைந்து பதிவுகள் வேண்டாம். இருக்கவே இருக்கு, பதிவுகள். மெதுவாக செளகரியப்பட்ட போது வரலாம். சரியா?..
சீதா போட்டோ பாத்த உடனே, சீதாஷ்டமி பத்தி எழுதி இருப்பீங்கன்னு guess பண்னேன்.
ReplyDeleteIn my marriage, our priest explained certain things to us. I was surprised and I wanted to know more about them. This would be a chance for me to learn some interesting things.
Also, I always wanted to know the cause for our beliefs and customs instead of blindly following. (you might be knowing the 'tie a cat while pooja story)
ஜீவி சொல்லியிருப்பது மிகச்சரி. காழ்ப்பற்றப் பொது அலசலுக்கான பக்குவம் அதிகமாகி வருவதாகவே நானும் நினைக்கிறேன்.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, தேவன் நூற்றாண்டு விழா சமயத்திலே அவரை நினைவு கூர்ந்திருக்கீங்க. உங்களோட பின்னூட்டத்தினால் பதிவுகளின் தலைப்பை அவர் பாணியில் வைக்கணும்னு தோணி இருக்கு. பார்ப்போம். பொருத்தமா வருதானு.
ReplyDeleteகல்யாணங்களில் கலந்துக்கறதுனாலே உறவினர்களை எல்லாம் பார்க்க முடியுமே! :))))
வாங்க வா.தி. நன்றி.
ReplyDeleteவாங்க டிடி, நன்றி.
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கு நன்றி. பெரிசா ஒண்ணும் உடம்புக்கு இல்லை. அதிக நேரம் உட்கார்ந்தால் பாதம் வீங்கிக்கறது. வலி வருது. அதனால் கணினியில் உட்கார முடியலைனு சொன்னேன். :)))) மற்றபடி ஆஸ்த்மா பிரச்னை இல்லை. :))))
ReplyDeleteவாங்க எல்கே, காத்திருங்கள்.:)
ReplyDeleteவாங்க ராம்வி, ஓய்வு எடுத்துக்க வேண்டி இருக்கு. அதிக நேரம் உட்கார்ந்துக்கறதில்லை. சரியாயிடும். :))))
ReplyDeleteவாங்க கோமதி அரசு, விரிவாய் அலசணும்னு நினைக்கிறேன். போகப் போகத்தான் தெரியும். இப்போதைக்கு இரண்டு, மூன்று பதிவுகளுக்கு எழுதி வைச்சிருக்கேன். பார்க்கலாம். உடல்நலம் தேவலை.
ReplyDeleteவாங்க மாதேவி, அப்பா, அம்மாக்களில் நானும் ஒருத்தி தானே! இடினு இல்லாட்டியும் தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்க்கலாம்னு நினைக்கிறேன். :))))
ReplyDeleteவாங்க ஜீவி சார், நீங்க சொல்லி இருப்பதை எல்லாம் மீண்டும் மீண்டும் படிச்சு வைச்சுக்கறேன். எல்லாத்தையும் நினைவிலும் வைத்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநிறையப் பதிவுகளை ஏக காலத்தில் எழுதுவதில்லை சார். :))))) மின்சாரம் இல்லாத நேரத்தில் மடிக்கணினியில் எழுதி வைச்சுப்பேன். மின்சாரம் இருக்கையில் வெளியிடுவேன். சமயத்தில் ஒரே நாளுக்கு இரண்டு, மூன்று பதிவுகள் வெளியாகிடும். :)))))
ReplyDeleteவாங்க கவிதா, உங்களோட முதல் பின்னூட்டம் என்னுடைய பதிவுக்குனு நினைக்கிறேன். நல்வரவு. பொறுத்திருங்கள். சீதாஷ்டமி குறித்து பிஹார், நேபாளத்துக்காரங்களுக்குத் தான் நல்லாத் தெரியும். இங்கே அவ்வளவா பிரபலமாக இல்லை. :)))))
ReplyDeleteமறு வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி அப்பாதுரை.
ReplyDeleteநடுவில் இந்தப் பதிவு என் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறது! கவனிக்கவில்லை!
ReplyDeleteஉடல்நலம் பேணவும். போதிய ஓய்வு எடுக்கவும்.
ReplyDeleteகல்யாணத்தின் தாத்பர்யம் ... எனக்கு இன்னும் புரியவில்லை! தொடர்ந்து எழுதுங்கள். தெரிந்து கொள்கிறேன்.
கல்யாணம் என்பது, கலந்து கொள்பவர்களுக்கும் செய்து கொள்பவர்களுக்கும் அப்போதைக்கு ஜாலியான விஷயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. :))) பொதுவாகத் திரைப் படங்களில் கதா நாயக/கியர் திருமணம் செய்ததும் 'சுபம்' என்று காட்டி அனுப்பி விடுவார்கள். எழுந்து வரும்போது இனி தினசரி காலை எவ்வளவு சண்டை அவர்களுக்குள் வருமோ என்று தோன்றும்!!
ReplyDeleteபழைய பொக்கிஷங்களில் 'டைவர்ஸ்' என்ற ஒரு கதை உண்டு. பிவிஆர் எழுதியது என்று நினைவு. அது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஎங்கள் ப்ளாக் ஞாயிறு படம் -இந்தவாரப் படத்துக்குப் போட்டிப் படம் இல்லையா?!!! :))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், சமயத்திலே கூகிளார் பதிவுகளைச் சரியாக் காட்டறதில்லை. இரண்டு, மூன்று நாட்களாக என்னோட வலைப்பக்கமே திறக்கத் தகராறும் கூட! :)))))அப்டேட் என்னனு இன்னமும் தெரியலை. :(
ReplyDelete//கல்யாணத்தின் தாத்பர்யம் ... எனக்கு இன்னும் புரியவில்லை! தொடர்ந்து எழுதுங்கள். தெரிந்து கொள்கிறேன்.//
ReplyDeleteஎனக்கு மட்டும் புரிஞ்சிருக்கா? :))))) பார்க்கலாம், புரிஞ்சுக்கறாப்போல் எழுதறேனானு! :)))))
பி.வி.ஆரின் டைவோர்ஸ் கதை குமுதத்தில் வந்தது. ராமு என்னும் ஓவியர் வரைந்த படங்களோடு. ஆனால் கதையின் முடிவு எனக்குப் பிடிக்கலை. :((
ReplyDelete// எழுந்து வரும்போது இனி தினசரி காலை எவ்வளவு சண்டை அவர்களுக்குள் வருமோ என்று தோன்றும்!!//
ReplyDeleteஹிஹிஹி, போட்டிப் படம் தான் போட்டுட்டேன். மேகங்களோட படம் இருக்கு. ஆனால் பறவைகள் இல்லை. எங்கேயாவது தேடிப் பிடிச்சு வந்து ஒட்ட வைக்கணும். :)))))
'டைவர்ஸ்' கதைக்கு ஓவியம் ராமு இல்லை! ஜெ... ஹீரோ கோபி...கதாநாயகி வசு(தா). பணக்கார வசு கோபியைக் காதலித்துத் திருமணம் புரிந்து, பிரிந்து வாழ்ந்து அப்புறம் சில அட்ஜச்த்மேன்ட்களுக்கு அப்புறம் ஒரு புரிதலோடு அவனோடு குடும்பம் நடத்தத் தொடங்குவாள்.
ReplyDeleteபோட்டிப் படமா.... எங்கே? காணோமே!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், மறு வரவுக்கு நன்றி. வசுவோட அம்மா, வேறு வழியில்லாமல் அவள் அப்பாவைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவதைப் போல் தானும் இருக்கணும்னு வசு தீர்மானித்துக்கொண்டதாக என் கருத்து. வசுவின் அப்பாவின் பழைய காதலி, அவருடைய சஷ்டி அப்த பூர்த்திக்கு வருவதும், வசுவின் அம்மா அவளுக்கு மட்டும் வெற்றிலை, பாக்குக் கொடுக்காமல் தவிர்த்து ஒதுக்கிவிட்டுச் செல்வதும் படமாகக் குமுதத்தில் பார்த்த நினைவு. அந்த அம்மாவை வரைந்திருப்பதை இப்போது நினைத்தால் ஓவியர் ராமுவோ என்றுதான் தோணுது. ஜெயராஜா? சரியாய் நினைவில் இல்லை. :)))))
ReplyDeleteபோட்டிப் படம் தான் பார்த்துட்டு உடனே பின்னூட்டமும் கொடுத்துட்டீங்களே! :)))
தேவன் அவர்களின் நூற்றாண்டா? யாராவது ஞாபகம் வச்சு விழா எடுத்தா நல்லா இருக்கும். விகடன்?
ReplyDeleteகல்யாணத்தின் தாத்பர்யமா? சொல்லுங்க மாமி கேட்டுக்கிறோம்....:)
ReplyDeleteகல்யாணத்தை பத்தி யோசிப்பதற்கு முன்னேயே, கடமை என்று பார்சல் பண்ணி அனுப்பி விட்டார்கள்....என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்....:))
உடம்பை பார்த்துக்கோங்கோ மாமி...
மறு வரவுக்கு நன்றி அப்பாதுரை, தேவனின் நூற்றாண்டு விழாவை விகடன் கொண்டாடுதோ இல்லையோ வெங்கட்ராம் திவாகர் வல்லமையில் கொண்டாடிட்டு இருக்கார். கிட்டத்தட்டப் பத்துப் பதிவுகள் போட்டாச்சு. முடிஞ்சால் போய்ப்பாருங்க. :))))))
ReplyDeleteவாங்க கோவை2தில்லி, நீங்க எப்படி இருக்கீங்க? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உடம்பு பரவாயில்லைம்மா. :))))
ReplyDelete