யுபிஎஸ்ஸுக்கு 3 நாளாக உடம்பு சரியில்லை. கைவிடாமல் அழ ஆரம்பிடுச்சு. இன்னிக்குத் தான் மருத்துவர் வந்தார். ராத்திரிக்குள் சரி செய்யறேன்னு சொல்லி இருக்கார். ஆகையால் சும்மா இணையத்துக்கு வந்துபார்த்துட்டுப் போறதோட சரி. அதிக நேரம் உட்காருவது இல்லை. கணினியைத் திறந்து ஏதேனும் எழுதலாமானு உட்காரவே பயம். அதனால் கணினிக்கு ஏதேனும் வந்துடுச்சுன்னா என்ன பண்ணறதுனு பயம். ஆனால் மருத்துவர் அதெல்லாம் பரவாயில்லை. உட்காருங்க மின்சாரம் இல்லைனா கவனம்னு சொல்லி இருக்கார். இங்கே எப்போப் போகும், எப்போ வருமே சொல்ல முடியலை. நாலு நாளா மறுபடியும் பகல் நேரத்தில் ஆறு மணி நேர மின் தடை. எல்லாம் சேர்ந்துட்டு இருக்கு. சரியாகட்டும். அதுவரைக்கும் ஸ்வீட் எடு, கொண்டாடு!
காரம் எடு, கொண்டாடு!
ReplyDeleteமின்சாரம் இல்லைன்னா எப்படி கொண்டாட முடியும்??
ReplyDeleteஇனி வரும் நாட்களில் பகல் நேரத்தில் 2 மணி நேரம் தான் மின்சாரமே என்று தகவல்...
ReplyDeleteஅச்சச்சோ... சீக்கிரம் சரியாகட்டும்.
ReplyDeleteமிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட கோபம் வருகிறது. என்னப்ப இப்படிச் செய்யறாங்க. இன்வர்ட்டர் சரியாகட்டும்னு வேண்டிக்கறேன்.
ReplyDeleteவாங்க வா.தி. நீங்க காரத்தோட கொண்டாடுங்க. நான் பாதாம் அல்வாவோட கொண்டாடிக்கிறேன். :)))))
ReplyDeleteவாங்க ராம்வி, கணினி கிட்டே இருந்து அப்படியானும் ஓய்வு கிடைக்குதேனு நம்ம ரங்க்ஸ் சந்தோஷப் படுவார் இல்லையா? அது கொண்டாட்டம் தானே! நானே சில சமயம் வேணும்னே கணினி கிட்டே வராமல் மூடி வைச்சுடறது உண்டு. அதுவும் போதாதுனு மின் வாரியம் மின் தடையை ஏற்படுத்திடுது! நிறைய வேலை பென்டிங்கிலே இருக்கு. :)))))
ReplyDeleteடிடி, வயித்தைக் கலக்குது இப்போவே. :(
ReplyDeleteஸ்ரீராம், மின்சாரம் சரியாகலை. யு.பிஎஸ் சரியாயிடுச்சு. எனக்குத்தான் ரெண்டு நாளா வர முடியலை. விருந்தாளிங்க வருகை. :)))))
ReplyDeleteஅட வல்லி, மிளகாய் பஜ்ஜியைப் பிடிச்சு இல்லை சாப்பிடுவாங்க. சாப்பிட்டால் கோபம் வருமா?
ReplyDeleteவெள்ளை பஜ்ஜி மிளகாயைக் நீளவாட்டில் நறுக்கி உள்ளே உள்ள விதையை எல்லாம் கத்தியால் சுரண்டி எடுத்துட்டு, எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள் பொடியில் மிளகாயை ஊறவைத்து அப்புறமா எடுத்து பஜ்ஜி போட்டால் கோபம் வராது. இன்னும் இரண்டு கொடுனு கேட்பீங்க! :))))))
சுவீற் பஜ்ஜி எல்லாம் எடுத்துக்கொண்டோம்.:))
ReplyDeleteமின்சாரம் :(
கோடையும் வருகின்றது.:((
ஓ! அதுதான் போட்டோ போட்டி இல்லையா?
ReplyDeleteஇப்பதான் எங்கள் ப்ளாகிலேர்ந்து வரேன்!
சீக்கிரம் திரும்பி வருக!