எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 26, 2013

கோமதி அரசுவின் விளக்கங்கள்!

மறையோர் வழக்காகிய நூல்களில் எட்டுவகை மணத்துள், யாழை ஏந்தி இசைத்துறையில் வல்லவர்களாக, என்றும் பிரியாத இணையர்களின் (தலைவன், தலைவி) கர்தர்வ மணத்தைப் போன்றதாகும்.
அதாவது, களவு கந்தர்வ மணத்தை ஒத்ததாகும்.


மன்றல் எட்டு:

பிரமம்- பிரமச்சாரிகளுக்குத் தானமாக்க கொடுப்பது.
பிரசாபத்தியம்- இரு பெற்றோரும் இசைந்து கொடுப்பது.
ஆரிடம்- ஆவும் ஆனேறும் வாங்கிக் கொண்டு கொடுப்பது.
தெய்வம்- வேள்வி ஆசிரியனுக்குக் கொடுப்பது
காந்தர்வம்- மனம் ஒத்த இருவர் தாமே கூடுவது
அசுரம்- வில் போட்டியில் வென்றவர்க்குக் கொடுப்பது.
இராக்கதம்- விருப்பமில்லாத போது வலிந்து கூடுவது.
பைசாசம்- கள்ளுண்டு மயங்கி கிடக்கும் போதும், தூங்கும் போதும் கூடுவது.
இதனை வடநூலார் இலக்கியப்படுத்துவர். துணைமையோர் என்பது, ஒருவரை ஒருவர் இணை பிரியாத கர்தர்வர். கர்தர்வ முறை கற்பில்லாமலும் நிகழும். ஆனால், தமிழ் முறையில் கற்பின்றி களவே அமையாது என்று சொல்வார் நச்சினார்க்கினியர்./
http://arulalantamizh.blogspot.in/2012/09/1-1038-1047.html//

எங்கள் வீட்டில் உள்ள தமிழ் மொழி அகராதியில் மணம் 8 என்று போட்டு இருக்கும் குறிப்பு:

மணம் 8: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், 

இவற்றுட் பிரமசாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பதுபிரமமணம்.

தலைமகளினத்தாருட் பட்டவளைத்தீமுன்னர்க் கொடுப்பது பிரசாபத்தியமணம்

ஒன்றிரண்டு பசுமெருதும் வாங்கிக் கொண்டு கன்னியை தீமுன்னர்க் கொடுப்பதாரிடமணம்.

வேள்வியால் வந்த கன்னியை தீ முன்னர்க் கொடுப்பது தெய்வமணம்.

கொடுப்பாருங் கேட்பாருமின்றி யிருவருந்தனியிடத்தெதிபட்டுத்தாமே கூடுவது காந்தருவமணம்.

பெண்ணுக்கு பொன்பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன்வேண்டுவனகொடுத்துக் கொள்வது அசரமணம்.

பெண்ணும், பெண்ணினத்தாருடன் படாமல் வலிதிற் கொள்வதிராக்கதமணம் துயின்றாளைச் சென்று ஊடுவது பைசாசமணம்.

நீங்கள் அழகாய் விரிவாக கூறிவிட்டீர்கள்.

உங்கள் திருமணங்கள் பற்றிய ஆய்வு கட்டுரையில் நானும் சிறு அணில் போல் சேர்ந்து கொள்கிறேன்.

10 comments:

 1. நீங்கள் கலந்து கொண்டதோடு நல்லதொரு தளத்தையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கீதா, தலைப்பில் என் பேர் போட்டே பதிவா! நன்றி.

  ReplyDelete
 3. வாங்க டிடி, இந்தப் பதிவை நேற்றும், நேற்று வெளிவந்ததை இன்னிக்கும் ஷெட்யூல் செய்தேன். எப்படியோ தேதி மாறி இருக்கு! ஹிஹிஹி, கூகிள் செய்த சதி! :)))))

  ReplyDelete
 4. வாங்க கோமதி அரசு, உங்களோட விளக்கம் உங்க பெயரிலே தானே வரணும்! :)))))

  ReplyDelete
 5. படிச்சுட்டேனே....

  ReplyDelete
 6. வாங்க ஸ்ரீராம், நேற்றைய பதிவு, கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? நிச்சயதார்த்தம் குறித்தது படிச்சாச்சா? :))))) கூகிளாரின் சதியினால் நேத்து வர வேண்டியது இன்னிக்கும், இன்னிக்கு வர வேண்டியதும் நேத்திக்கேவும் வந்தாச்சு! :))))

  ReplyDelete
 7. புதிய புதிய தகவல்கள்.
  வரும் தலைமுறைகளுக்கு பயன்படும் பதிவுகள்.

  கோமதியின் விளக்கங்கள் சுவாரஸ்யம். மேலதிகத் தகவல்கள் கொடுப்பதில் கோமதியை மிஞ்ச முடியாது.

  வாழ்த்துகள் கோமதி / கீதா கூட்டு!

  ReplyDelete
 8. என்னுடைய பக்கத்திலும் எண்வகை மணங்கள் பற்றி படங்களுடன் ஒரு பகிர்வு எழுதியிருந்தேன்.

  அதன் லிங்க் இங்கே இருக்கிறது.

  http://venkatnagaraj.blogspot.com/2012/08/blog-post_29.html

  1949-ஆம் வருட தீபாவளி மலரிலிருந்து எடுத்து போட்டது. உங்க கமெண்ட் கூட இருந்தது....

  உங்களுக்கு நினைவூட்டவே இக்கருத்து.... :)

  ReplyDelete
 9. வாங்க ரஞ்சனி, கூட்டு எனக்கு எப்போதுமே பிடிக்கும். :)))) இங்கே வீட்டிலே ஜாஸ்தி கூட்டு தான். :)))

  ReplyDelete
 10. வாங்க வெங்கட், அதான் முந்தைய பதிவிலே படத்தை உங்க ப்ளாகிலே இருந்து சுட்டதைச் சொல்லி இருக்கேனே! அவசரத்தில் பார்க்கலை போல! :))))

  ReplyDelete