ரொம்பவே போர் அடிச்சதுன்னா, எல்லாரும் என்ன பண்ணுவீங்களோ தெரியலை. எனக்கு ஆர்ச்சி/அல்லது ஆர்க்கி??? காமிக்ஸ் தான் கை கொடுக்கும். எல்லாம் பையரோட சேமிப்பு. ஒரு பக்கம் காணோம்னாக் கூடப் பதறுவாங்க. அதை எடுத்துப் படிச்சுட்டுத் திரும்ப அவங்களோட சேமிப்புகளிலே வைச்சுடணும். இதிலே அவங்க பிரின்சிபல் வெதர்பீ படும்பாடு அருமையா இருக்கும்.
வழுக்கைத்தலையோட உச்சியிலே நாலு அல்லது ஐந்து முடியோடு காட்சி கொடுக்கும் வெதர்பீ ஹேர்கட் சலூனுக்குப் போவதைப் பார்த்துத் திகிலடையும் ஆர்ச்சி அவரோட ஹேர் ஸ்டைல் எப்படி நடக்கப் போகிறது என்பதைப் பார்க்க ஆசைப்பட, அவரோ பள்ளியிலே தான் உன்னைச் சகிச்சுக்கப் பணம் வாங்கறேன். இங்கேயுமானு மறுக்க, அப்போ ஆர்ச்சியின் உயிர் நண்பன் ஜக்ஹெட் (இவன் தீனி தின்னி க்ரூப்பிலே இருக்க வேண்டிய ஆள், எப்போப் பார்த்தாலும் சாப்பிட்டுட்டே இருப்பான். ) அங்கே வெதர்பீயைப் பார்த்துட்டு ஆச்சரியம் தாங்காமல் வருகிறான்.
இருவரும் சேர்ந்து சலூன்காரரிடம் வெதர்பீயின் ஐந்து முடிகளை எப்படி அலங்கரிக்கலாம்னு யோசனை சொல்வதும், ஹிஹிஹி, படிச்சுச் சிரிக்கணும். அப்புறமா வெதர்பீ இதெல்லாம் வேண்டாம்னுட்டு தலையிலே விக் வைச்சுட்டு ஸ்கூலுக்குப் போறார். பசங்களுக்கு ஒரு ஆச்சரியமா இருக்கணும்னு நினைக்கிறார். ஆனால் உண்மையில் அவருக்குத் தான் ஆச்சரியம் காத்திருக்கு. ஹிஹி, தலையிலிருந்து ஹாட்டைக் கழட்டும் வெதர்பீயின் விக் ஹாட்டோடு சேர்ந்து ஹாட் ஸ்டான்டுக்குள் போயிடுது. இது தெரியாமல் பசங்களைக் கூப்பிட்டு, "ஹேர் ஸ்டைல் எப்படி? சைட் பர்ன்ஸ் எப்படி" னு கேட்டுட்டு இருப்பார்! அவங்க ரெண்டு பேரும் தலைமுடி எல்லாம் போயிட்டதிலே வெதர்பீக்கு ஏதோ ஆயிடுச்சுனு நினைப்பாங்க.ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரியாச் சொல்லலையோ!
இன்னும் இருக்காங்க ரெஜினால்ட், வெரோனிகா, பெட்டி கூப்பர், மிட்ஜ், மூஸ், மிஸ் க்ரன்டினு நிறையப் பேர்.
படித்தேன்.... ரசித்தேன்... சிரித்தேன்!
ReplyDeleteரொம்ப போரடிச்சா எனக்கு வோடவுஸ்.
ReplyDeleteஎன்னவோ ஆர்ச்சி எனக்கு எப்பவுமே அவ்வளவா ஆர்வம் இருந்ததில்லே.
வீடு பூரா காமிக்ஸ் கிடக்கும். அதிலும் திருச்சியில் ஜங்க்ஷனில் 3 ரூபாய்க்குப் புத்தகங்கள் கிடைக்கும்.
ReplyDeleteஒவ்வொரு ஞாயிறும் இதுதான் வேலை.
எங்களுக்கு,ஹாட்லி சேஸ், வோட் ஹௌஸ்,இர்விங்வாலஸ் என்று கிடைக்கும் புத்தகங்களை அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு பைபாஸ் ரோடுக்குப் போய் அந்த மணலில் விளையாடிவிட்டு வருவோம். நல்ல நினைவுகளைக் கிளறிவிட்டிர்கள்.
வாங்க ஸ்ரீராம், எதைப் படிச்சீங்க? ஆர்ச்சி காமிக்ஸா? :)))
ReplyDeleteவாங்க அப்பாதுரை, வோடவுஸ் அதிகமாப் படிச்சதில்லை. அகதா கிறிஸ்டியின் த்ரில்லர் பிடிக்கும். அதிகமா அதான் படிப்பேன். :))))
ReplyDeleteவாங்க வல்லி, ஜங்ஷனில் போய் வாங்கணுமா? :))) பைபாஸ் ரோடு இப்போப் பார்த்தீங்கன்னா, :(
ReplyDeleteI like Jughead and Betty! :D I also like the ones where Mr. Lodge freaks out when he gets the bills from Veronica's shopping... Very funny! :)
ReplyDeleteஹா..ஹா அருமை.
ReplyDeleteவாங்க மாதங்கி, எனக்கும் பெட்டியையும், ஜக்கியையும் ரொம்பப் பிடிக்கும். சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்தப்போ சில மாதங்கள், அச்சு, ஜக்கு என்ற பெயரில் ஒரு சில ஆர்ச்சி காமிக்ஸ்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். :))))
ReplyDeleteவாங்க மாதேவி, படிச்சுப் பாருங்க, பிடிக்கும். :)))
ReplyDelete