எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 12, 2013

பை, பை, பை, பை வேண்டுமா, பை பற்றிய கதைகள் வேண்டுமா?



பை பத்திய போட்டி இந்த மாசம் பிஐடியிலே. அறிவிப்பு குழுமங்களுக்கு வந்தது.  கொஞ்சம் சுலபமான போட்டி என்றாலும் இதிலும் தொழில் நுட்பம் கவனிக்கப்படும்.  ஆகவே நமக்கு அங்கே இடம் இல்லை.  என்றாலும் படம் எடுத்துத் தள்ளலாமே! பைக்கா பஞ்சம்! :))) இது 2011-ஆம் வருடம் ஹூஸ்டனின் மருமகள் வாங்கித் தந்தது. இப்போக் கொஞ்ச நாட்களாக இதான் எடுத்துப் போறேன். கொஞ்சம் இல்லை, இல்லை ரொம்பவே பெரிசு என்றாலும் மடக்கி வைச்சுக்கறேன். 


இதுவும் மருமகள் வாங்கிக் கொடுத்த பைதான். இது 2007 ஆம் வருடமோ, 2009 ஆம் வருடமோ அவங்க இந்தியா வந்தப்போ வாங்கிட்டு வந்தாங்கனு நினைக்கிறேன்.  இது நல்லா உழைச்சுடுத்து. சில இடங்களில் தையல் பிரிந்து வந்து விட்டது.  என்றாலும் அவ்வப்போது அதிகம் லோட் ஏற்றாமல் எடுத்துப் போய் வருகிறேன். விட மனசில்லை. :)))))

குட்டி ஹான்ட் பாக்.  சின்னதாய் இருக்கும் எதுவுமே அழகு.  இதிலேயும் ஐந்து, ஆறு அறைகள் இருக்கின்றன. சும்மா உள்ளூருக்குள்ளேயே எதானும் வாங்கப் போனால் எடுத்துப் போகலாம். கைப்பிடிக்குள் அடங்கும். இது போன முறை சென்னை வந்திருந்தப்போ என் தம்பி மனைவி வைச்சிருந்ததைப்பார்த்து எனக்கும் ஒண்ணு வாங்கித் தரச் சொன்னேன்.  அவங்க இதைக் கொடுத்துட்டுத்தான் புதுசாகவே வாங்கிக்கறதாச் சொல்லிட்டாங்க. :))))



சென்ற வருடம் நவராத்திரியில் சின்னப் பெண்குழந்தைகளுக்கு இம்மாதிரிக்கைப்பை தான் வாங்கிக் கொடுத்தேன்.  மேலே காட்டிய கறுப்பு ஹான்ட் பாக் மாதிரித் தான் இதுவும்.  கிட்டத்தட்டப் பதினைந்து பைகள் வாங்கியதில் செலவு செய்தது போக மீதம் இது.  யாரேனும் குழந்தைகள் வந்தால் பணம், ரவிக்கைத் துணிக்குப் பதிலாக வைச்சுக் கொடுக்கலாம்.  இதை வாங்கிக் கொண்ட இங்கிருக்கும் பெண் குழந்தை ஒன்று தினமும் இந்தப் பையைக் கையில் மாட்டிக் கொண்டு வருவாள். பிடித்த கலராகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். :)))) 



முதல் முதலில் யு.எஸ். போயிருந்தப்போக் கொண்டு போயிருந்த ரெக்சின் ஹான்ட் பாகின் கோலத்தைப் பார்த்த பொண்ணு இதைக் கொடுத்தா. கொஞ்சம் சின்னது என்றாலும் வசதியாகவே இருந்தது.  ஆறு அல்லது ஏழு அறைகள் இருந்ததால்  பொருட்கள் வைக்கத் தனித்தனியாக இடம் கிடைத்தது.  தோள்பட்டை வார் நீளமாக இருக்கும். மடக்கி விட்டிருக்கேன்.  பைகள் குறித்த கதைகள் தொடரும்.  பைகளும் மீதம் இருப்பது நாளை வரும். :))))




22 comments:

  1. மூன்றாவது நல்லா இருக்கு...

    இன்னும் இருக்கா...?

    ReplyDelete
  2. பை பையாய் பையக் கதைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. செல்லுகிற இடம் மற்றும் நிகழ்ச்சிக்குத் தகுந்தார்ப்போல
    பைகள் வேறு வேறு வேண்டியகத்தான் இருக்கிறது
    படங்களும் விளக்கமும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பைகள் எல்லாமே அழகாக உள்ளன.

    கையில் பையும் வாயில் பொய்யும் இல்லாமல் எங்கும் சென்று எதையும் சாதிக்க முடியாது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. ஹாஹா டிடி, வாங்க, மூணாவது இப்போத் தானே பத்து நாட்கள் முன்னாடி சென்னை போனப்போ கிடைச்சது! படமும் இன்னிக்குத் தான் காலம்பர எடுத்தேன். இருக்கு இன்னமும்.

    ReplyDelete
  6. வாங்க ராஜராஜேஸ்வரி, சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனையில் உங்களைக் காணோமே! வந்திருந்தீங்களா? :)))) நன்றிங்க.

    ReplyDelete
  7. 'பைகளும் உறவுகளும்'ன்னு நீங்க தலைப்பு வைச்சிருக்கலாம்.

    ReplyDelete
  8. வாங்க ரமணி சார், முதல்(?) வரவுக்கு நன்றி. அப்படி எல்லாம் நிகழ்ச்சிக்கு ஏற்றாற்போல் எடுத்துச் செல்வதில்லை என்றாலும் கொண்டு போகும் சாமான்களில் கைப்பையிலேயே வைக்க வேண்டியதைப் பொறுத்து அமையும். நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  9. வாங்க வைகோ சார், பைகள் எல்லாம் நல்ல பைகளே,

    ஹிஹிஹி, வாயிலே பொய்யெல்லாம் வரதில்லை. பிரச்னையே அதான். சட்டுனு மனசு நினைக்கிறதை வாய் பேசிடும். மாட்டிண்டு முழிப்பேன். :))))

    ReplyDelete
  10. பைகள் சூப்பரோ சூப்பர்...

    நவராத்திரியில் ரோஷ்ணிக்கு நீங்க கொடுத்த பையை அவள் வைத்திருக்கிறாள்..:)

    ReplyDelete

  11. பெண்களுக்கு இம்மாதிரி பையில் என்ன மையலோ.... நான்கு ஐந்து அறைகள் உள்ள பையானால் எந்தப் பொருளை எந்த அறையில் வைத்தோம் என்று தேடுவதற்கேநேரம் சரியாக இருக்கும். நாங்கள் வெளியில் போய் வரும்போது , வீடு சேர பத்து நிமிடங்கள் இருக்கும் போதே சாவியை எடுத்துவைக்கச் சொல்லி எச்சரித்து விடுவேன்.மேல் நாட்டு மருமகள்கள் வாங்கிக் கொடுத்தது என்று பெருமையுடன் கூறும் நீங்கள் என் கடைசி பதிவை இன்னும் படிக்கவில்லை..

    ReplyDelete
  12. ஜீவி சார், உங்க பின்னூட்டத்தை இப்போத் தான் கண்டெடுத்தேன். சரியாச் சொன்னீங்க. பைகள் ஒவ்வொன்றும் உறவுகளோடு சம்பந்தமுள்ளவையே! :))))

    ReplyDelete
  13. வாங்க கோவை2தில்லி, குழந்தைகளுக்கு பொக்கிஷமாச்சே அதெல்லாம். எனக்கு முதன் முதல் பட்டுப்புடைவை எடுத்தப்போ ஹாஜி மூசாவில் கொடுத்த சின்னப் பர்சைக் கல்யாணம் ஆகி அதை என்னோட பெண் துண்டு துண்டாகக் கிழிக்கும் வரை வைத்திருந்தேன். :)))))

    ReplyDelete
  14. வாங்க ஜிஎம்பி சார், சாவிகள் எல்லாம் குறிப்பிட்ட அறையிலேயே வழக்கமாய்ப் போடுவதால் தேடும்படி நேர்ந்ததில்லை. :))) மற்றபடி மறதி என்பது எல்லாருக்கும் பொதுவானது. :)))

    என்னோட மருமகள்(மருமகள்கள் இல்லை) மேல்நாட்டுக்காரி இல்லை. தமிழ்நாட்டுப் பெண் தான். :)))) பெருமையெல்லாம் ஒண்ணும் இல்லை. யார் வாங்கிக் கொடுத்தாங்கனு சொல்லி இருக்கேன். அவ்வளவே. அதிலே தம்பி மனைவி வாங்கிக் கொடுத்ததும், பெண் கொடுத்ததும் கூட இருக்கு! :)))))

    ReplyDelete
  15. உங்க கடைசிப் பதிவைப் படிச்சுப் பின்னூட்டம் போட்ட நினைவு இருக்கு. செக் பண்ணறேன். புதுசா எழுதி இருந்தா ஒருவேளை படிச்சிருக்க மாட்டேன்.

    ReplyDelete
  16. மஞ்சள் பை, பிக் ஷாப்பர், சாக்குப்பை எல்லாம் கணக்குல வராதா!

    ReplyDelete
  17. பெண் குழந்தைகளூக்கு பைகள் என்றாலே ஒரு சந்தோஷம். பெரியவர்களுக்கும் தான்! :)))

    ReplyDelete
  18. ஆகா! பைகள்.

    நாங்களும் ஒரு பகிர்வுபோட்டுவிடலாம்:)

    மகளதும் என்னதும் சேர்த்து ஒருகடை வைத்துவிடலாம் :))

    ReplyDelete
  19. வாங்க ஶ்ரீராம், மஞ்சள்பை குறித்து எழுதி வைச்சிருக்கேன். :))) போடலாமா வேண்டாமா என்று யோசனை! :)))))பெரிய ஷாப்பிங் பையெல்லாம் இல்லை. அவ்வளவெல்லாம் ஷாப்பிங் செய்வதில்லை! :)))) ஆனால் பார்த்திருக்கேன். சாக்குப் பை சொல்லி இருக்கலாம். மாதிரிக்கு ஒண்ணுகூட இப்போ இல்லை. முன்னெல்லாம் அரிசி கூட சாக்குக் கோணிகளில் தான் கட்டி வரும். இப்போ எல்லாம் ப்ளாஸ்டிக் மயம்! சணலில் கட்டைப் பிடி போட்டு யானை வரைந்து ஒரு பை இருந்தது. அது எங்கேயோ யாரோ வாங்கிண்டு போய்த் திருப்பிக் கொடுக்கவே இல்லை. :))))) சிவப்புச் சாயம் தோய்த்திருக்கும்.

    ReplyDelete
  20. வெங்கட், வெளியே செல்கையில் கைப்பை அவசியம் தான். :)))

    ReplyDelete
  21. வாங்க மாதேவி, நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள் பைகளுடனான உங்கள் அனுபவங்களை. :))) அடுத்த பதிவும் எழுதி வைச்சேன். போடணுமானு யோசிச்சுட்டு இருக்கேன். :)))))

    ReplyDelete
  22. மன்னிக்கணும் கீதா லேட்டா வரேன்.பைகளும் விவரங்களும் ஜோர். நாலைந்து பாக இருந்தால் தான் அது பை. எத்தனை பொருட்கள் வைக்கவேண்டி இருக்கு!!!
    அருமையான பதிவு.

    ReplyDelete