எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 01, 2013

சமுத்திரத்தைப் பார்த்தேனே! :))))

ஹிஹிஹி, சிப்பு சிப்பா வருது! காலையிலே இருந்து கணினியிலே உட்கார்ந்து போரடிச்சுப் போச்சு.  மத்தியானமா கணினியை மூடலாம்னு யோசிச்சப்போ படுக்கக் கூடாதுனு நினைச்சேன்.  கொஞ்ச நேரம் படுத்தாலும் அப்புறமா சோம்பல் வந்துடுது.  அதோட கண்ணயர்ந்தால் ராத்திரி தூக்கம் வர நேரம் ஆயிடுது.  இதுக்குள்ளே ரங்க்ஸ் எழுந்து வந்துட்டார்.  தொலைக்காட்சி போட்டார்.  வழக்கமா எல்லா நியூஸ் சானல்களும் பார்த்துட்டு இருக்கிறவர், இன்னிக்கு என்னமோ அதிசயமா சன் தொலைக்காட்சியைப் போட்டால் அதிலே ஒரு படம்.  மணி மூணு ஆகி இருந்தது.  ஆகவே படம் ஆரம்பிச்சுக் குறைஞ்சது அரைமணியாவது ஆகி இருக்கணும்.

தங்கைக்கு அண்ணன்மார் கல்யாணம் பேசறாங்க.  தங்கைக்காக எதை வேணும்னாலும் தியாகம் பண்ணும் 3 அண்ணன் மார்.  ஒருத்தர் சித்தப்பா சரத்குமார், இன்னொருத்தர் முரளி(பாவம்), இன்னொருத்தர் எங்கேயோ பார்த்த முகமா இருக்கேனு நினைச்சுட்டு அப்புறமாத் தெரிஞ்சது பாரதிராஜாவின் மகனார் மனோஜ் என. மூணு அண்ணன்களும் தங்கைக்காகத் தியாகியாக ஆயிடறாங்க.  மஞ்சுளாவும் இருந்தாங்க.  என்ன உறவுனு மண்டை காய்ஞ்சது.  ஒரு தரமாவது படம் ஆரம்பத்திலே இருந்து பார்க்கணும். முடியறதில்லை. :))))

2,400 ஏக்கர் நிலம், (யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிஜம்மா நில உச்சவரம்புச் சட்டம் வந்ததுக்கப்புறம்மா அவ்வளவு நிலமெல்லாம் வைச்சுக்க முடியுமா?) வீடு, வாசல்  எல்லாத்தையும் தங்கைக்காகத் தியாகம் செய்யறாங்க.  வில்லன் பிரமிட் நடராஜன், அவர் பிள்ளையாக நடிச்சவர் சுந்தர் சி.னு நினைச்சேன்.  இல்லையாம். ஆனால் சீரியல்களில் நடிச்சிருக்கார். (இது ரங்க்ஸ் தகவல்) அவங்க கேட்கிறச்சேயே ஏதோ உள்நோக்கம் இருக்குனு தெரிஞ்சது.  ஆனால் என்ன தகராறுனு புரியலை.  அப்புறமாப் பார்த்தால் மாப்பிள்ளையை அண்ணன்காரங்க தங்கையைச் சீண்டினார்னோ என்ன காரணத்துக்கோ அடிச்சிருக்காங்க.  சரியான காரணம் தெரியலை.  இப்படி அண்ணன்களால் அடி வாங்கிய ஒரு பையரை மீண்டும் தங்கை ஏன் விரும்பினாள்னு தெரியலை.  முதல்லே விருப்பம் இல்லாமல் அப்புறம் இந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்குனு எப்படிச் சொன்னா?  மறுபடி மண்டைக் குடைச்சல். ஆனாலும் கொஞ்சம் விறுவிறு.

இதுக்குள்ளே நாடகத்தனமா அண்ணன் சரத்குமார் தங்கை வீட்டு வாசல்லே வந்து கல்யாணம் பண்ணிக்கிறார். அதுக்கடுத்த அண்ணன் மஞ்சுளாவின் பெண்ணை(மஞ்சுளா அத்தையாம், அவங்க அப்பாவின் தங்கை, இன்னொரு பாசமலர்)கல்யாணம் செய்துக்க, அதுக்கு எதிர்பாராமல் தங்கை கலந்து கொள்ள, அந்தத் தங்கையால் குடும்பத்தில் குழப்பம் வர, அப்புறமா அவங்க அம்மாவால் அவள் திருந்த, சொப்புனு போயிடுமோனு நினைச்ச படம் தங்கையின் சீமந்தத்தில் சூடு பிடிக்கிறது.  இதுக்கு நடுவிலே கடைசி அண்ணன் மனோஜ் குமாருக்கும் எம்பியே பெண்ணைக் கொடுக்க ஏற்பாடு நடக்க, சீமந்தத்துக்கு வந்த அண்ணன்மாரைத் தங்கை நிஜம்மாவே வெறுக்கிறானு மாமனார் பிரமிடும், மாப்பிள்ளையும் நினைக்க அவங்களை ஏமாத்திட்டுத் தங்கை ஓடி வருகிறாள்.  சாப்பிட்டுட்டுப் போன நிறைமாச கர்ப்பிணிப் பெண்ணின் காலில் கணவன் சூடு போட, தங்கை வராமல் பாசக்கார அண்ணன் மனோஜ் கல்யாணம் பண்ணிக்காமல் கையில் கட்டிய கங்கணத்தோடு ஓடி வர, கூடவே மற்ற அண்ணன்களும் ஓடி வர கிளைமாக்சில் யார், யாரை அடிக்கிறாங்கனு புரியவே இல்லை. புரிஞ்சால் மட்டும் என்ன வாழுது!

கடைசியில் தங்கைக்கு வீரம் வந்து நீளமாய் வசனம் பேசிவிட்டு (யார் அந்தத் தங்கை?)தாலியைக் கழற்றி வீசி எறிந்துவிட்டு அண்ணன்களோடு பிறந்த வீட்டுக்கு வரா.   கண்மூடித் திறக்கிறதுக்குள்ளாக மாளிகை, வீடு, வாசல், வசதியெல்லாம் அண்ணன்களுக்கு வர, (சே நமக்கெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி இருக்கு) தங்கைக்குப் பிரசவ வலி எடுக்க, அவள் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் இங்கேயும் அங்கேயும் அலையும் அண்ணன்மார் ஒரு வழியா காரை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போக முடிவு செய்ய, (இல்லைனா நானே கூட்டிட்டுப் போயிட நினைச்சேன்.) அப்போ வந்து அவள் கணவன் அவள் காலைப் பிடிக்க எல்லாரும் பூரிச்சுப் போய் அவனை மன்னிக்க, பிரமிட் நடராஜனும் அழுது கொண்டே வரார்.  அவருக்கு இந்த கெட் அப்  நல்லாவே இல்லை.  கடைசியில் தங்கைக்குக் குழந்தை பிறக்கிறது.  என்ன குழந்தைனு சொல்லவே இல்லை.  அதுவரையிலும் மணையில் உட்கார்ந்து காத்துக்கொண்டிருந்த எம்பி பெண்ணை மனோஜ் திருமணம் செய்து கொள்ளப் படம் முடிகிறது.  சுபம்.  ஆக மொத்தம் இன்றைய நாள் நல்லாச் சிரிக்க முடிந்தது.

கடைசி வரை சமுத்திரம் யாருனே தெரியலை. :)))))))) 

24 comments:

  1. /// சே நமக்கெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி இருக்கு...!

    இல்லைனா நானே கூட்டிட்டுப் போயிட நினைச்சேன்...! ///

    ஹா.... ஹா....

    சமுத்திரம் - படம் பார்ப்பவர்களின் கண்களாம்...! நீங்கள் சிரித்து இருக்கிறீர்கள்... (பாசமலரை நினைத்து...! சரியா...?)

    ReplyDelete
  2. //கடைசி வரை சமுத்திரம் யாருனே தெரியலை. :)))))))) //

    அதனால் பரவாயில்லை. அது யாராக வேண்டுமானாலும் இருந்துட்டுப்போகட்டும்.

    பார்த்தவரை விமர்சனம் அருமையாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. கண்ணீரால் நிரம்பிய சமுத்திரம்...??

    ReplyDelete
  4. ரசித்தீர்களோ, சிரித்தீர்களோ.... பொழுது போச்சு இல்லே? தூங்கவில்லை இல்லையா! இதில் வரும் ஹரிஹரன் பாடல் எனக்குக் கொஞ்சம் பிடிக்கும்.

    ReplyDelete
  5. சமுத்திரம் என்று எழுத்தாளர் ஒருத்தர் (ஆல் இந்தியா ரேடியோவிலும் இருந்தவர்)இருந்தாரே?.. ஞாபகம் இருக்கா?..

    ReplyDelete
  6. அடேங்கப்பா .........காசில்லாமல் ஓர் ஒசிப்படம் பார்த்த திருப்பதி எங்களுக்கும் உங்களால் கிட்டியது தோழி வாழ்த்துக்கள் நித்தா வராது போனால் அடுத்த கதையையும் எழுதுங்க தோழி :))))அவ்வ்வ்

    ReplyDelete
  7. சமுத்திரம் கண்டுபிடிங்கனு புதிர் போட்டாங்களோ என்னவோ!
    பாரதிராஜா மகன் இப்போ நடிகரா..? .

    ReplyDelete
  8. வாங்க டிடி, சில தொலைக்காட்சித் தொடர்களிலும் இப்படித்தான்! :)))) அடிபட்டவங்களையோ, பிரசவ வலி எடுத்தவங்களையோ உடனடியா சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் அழுதுட்டு இருப்பாங்க. ரெண்டு அடி கொடுத்துக் கூட்டிட்டுப் போயிடலாமானு தோணும். :)))))

    பாசமலர் நினைப்பு வந்தது தான்(ஹிஹி, பாசமலர், பாலும் பழமும் எல்லாம் இன்னமும் பார்த்ததில்லை, சீக்கிரம் பார்த்துடறேன்.) ஆனால் இது அதீதப் பாசமலர்கள்! :P :P :P:P:P

    ReplyDelete
  9. ஹாஹா, வைகோ சார், படத் தலைப்புக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா! :))))

    ReplyDelete
  10. வாங்க ராஜராஜேஸ்வரி, அதெல்லாம் இல்லை. எஞ்சாய் பண்ணிட்டு இருந்தோம்! :))))

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், தூங்காமல் இருக்க எத்தனையோ வழிகள்! ஏதானும் புத்தகத்தை எடுத்து வைச்சுப் படிச்சாலே போதுமே! ஹிஹிஹி ஒரு சேஞ்சுக்குத் தான்.

    அது சரி, ஹரிஹரன் பாடல் எப்போ வரும்? ஒருவேளை தொலைக்காட்சியில் காட்டினதாலே கட் செய்திருப்பாங்க! :))))அப்படி ஒண்ணும் பாடல் காட்சிகள் சுகமில்லை. முரளியோடு ஒரு டூயட், மனோஜோடு ஒரு டூயட். ரெண்டுமே சகிக்கலை.

    ReplyDelete
  12. சு.சமுத்திரம். திருநங்கைகள் குறித்த தொடர்கதை ஒண்ணு விகடனில் எழுதி இருக்கார். அவர் எழுத்தைப் படிச்சிருக்கேன் நிறையவே

    ReplyDelete
  13. அம்பாள் அடியாள், ஓசிப்படம் தான் நிறையப் பார்க்கலாமே! தொலைக்காட்சி தயவில்! :)))

    ReplyDelete
  14. அப்பாதுரை, எந்தக் காலத்திலே இருக்கீங்க போங்க! இந்தப் படமே 2000/2001 இல் வந்திருக்கணும். அதுக்கும் முன்னாடியே மனோஜை ஜீரோவாப் போட்டு, சேச்சே, ஹீரோவாப் போட்டுப் படம் வந்தது! ஒண்ணும் ஓடலை. :)))))

    ReplyDelete
  15. நானும் இந்த படத்தை முழுசா பார்த்ததில்லை...:) ”அழகான சின்ன தேவதை அவள் தானே எங்கள் புன்னகை” பாடல் தான் ஸ்ரீராம் சார் சொல்றார்னு நினைக்கிறேன். நன்றாக இருக்கும். ஆரம்பத்திலேயே வந்து விடும்.

    நான் நேற்று மதியம் சாப்பிடும் போது டிவியை போட்டேன். சிறிது நேரம் பார்த்த பின் இந்த படம் வந்தது. நிறுத்தி விட்டு சற்றே கண்ணயர்ந்தேன். பத்து நிமிடத்திலேயே மேல் வீட்டு குழந்தை கதவை தட்ட தூக்கம் போயே போச்சு...:))

    ReplyDelete
  16. 'அழகான சின்ன தேவதை' பாடல் சங்கர் மகாதேவன். அதுகூட சுமாரா நல்லாயிருக்கும். நான் சொன்ன ஹரிஹரன் பாடல் 'கண்டுபிடி...கண்டுபிடி...கள்வனைக் கண்டுபிடி' பாடல்! :))))

    ReplyDelete
  17. க்தாநாயகிக்கு அல்லது , தங்கைக்கு, பிரசவ வலி வந்த சமயம் மழை பெய்யும் ஒரு வண்டியும் கிடைக்காது, அல்லது கதாநாயகன் நிறைய பேருடன் சண்டை இடுவான், வயிற்று பிள்ளைக்காரி கத்திக் கொண்டு இருப்பாள். இது தான் எல்லா படங்களிலும் .

    ReplyDelete
  18. ///கடைசி வரை சமுத்திரம் யாருனே தெரியலை. :)))))))) ////

    அட தெரியாம போச்சே உங்களுக்கு.... உங்களுக்கு தெரிஞ்சா நானும் தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன்!

    அப்பாதுரை சார் மனோஜ் இப்பல்ல, முன்னாடியே நடிக்க ஆரம்பிச்சாச்சு அவர் அப்பா படத்தில்! :) இப்ப பாரதிராஜா எடுத்திருக்கும் அன்னக்கொடி படத்தில் கூட அவர் தான் வில்லனாம்! :)

    ReplyDelete
  19. குடும்பமே சமுத்திரம் தானே கீதா. தங்கச்சி பெரிய அலை. சகோதரர்கள் சிறிய அலைகள். அந்தத் தங்கச்சிக்குக் காவேரி னு பேரு.இந்தக் கொடுமையெல்லாம் பார்த்து அழ எங்க முனிம்மா இருக்கா.:)))))

    ReplyDelete
  20. வாங்க கோவை2தில்லி, நீங்க சொன்ன பாட்டு ஹரிஹரன் இல்லைனு ஶ்ரீராம் சொல்றார். :))))

    ReplyDelete
  21. ஶ்ரீராம், அப்படி ஏதோ பாட்டு வந்ததுனு நினைக்கிறேன். டூயட்??? ஹிஹிஹி, நல்லவேளையா டீ போடப் போயிட்டேன். :))) எல்லாம் கைவிரல் நுனியிலே இருக்கும் போல! நமக்கெல்லாம் இதில் ஞானமே இல்லை. ஞான சூன்யம். :))))

    ReplyDelete
  22. கோமதி அரசு, எங்க பையர் பார்த்தால் அம்மா, நாமளே ஃபோன் பண்ணிடலாம்னு கிண்டல் செய்வார். :))))) அதே போலப் பாருங்க சீரியல்களில் எல்லாம் கட்டுக் கட்டாகப் பணத்தை எடுக்கிறாங்களேனு நினைச்சுப்பேன். அதுவும் ஒரு மஞ்சள் பையில் வைச்சு சர்வசாதாரணமாக் கொண்டு வருவாங்க. சில வருடங்கள் முன்னர் ஒரு நெடுந்தொடரில் ஒரு சின்னப்பெண் வைர நெக்லஸைப் பள்ளிக்குத் தூக்கிட்டுப் போயிடுது. டீச்சரும், தலைமை ஆசிரியரும் பார்த்துட்டுத் திரும்ப அந்தக் குழந்தை கிட்டேயே கொடுத்து பத்திரமா எடுத்துட்டுப் போயிடுனு சொல்லிடறாங்க. அதுவும் சாதாரணமா. வீட்டிற்குத் தகவல் அனுப்பி என்ன, ஏதுனு கேட்கவில்லை. அவங்களுக்கு இதெல்லாம் சகஜம் போலத் தோணித்து! :)))))

    ReplyDelete
  23. வாங்க வெங்கட், பாரதிராஜா எப்படியானும் பிள்ளையை முன்னிலைப் படுத்த நினைக்கிறார். :))) எங்கே!

    ReplyDelete
  24. வாங்க வல்லி, முனிம்மா மாதிரியான ஆட்களுக்காகத் தானே இப்படி எல்லாம் படம்! :)))

    ஹிஹிஹி, இன்னிக்கும் ஒரு படம் பாதியிலே இருந்து பார்த்தேன். ஜிவாஜி, விஜயா,பதுமினி, ரோஜாரமணி(??) நாகேஷ், மனோரமா இவங்கல்லாம் இருந்தாங்க. ஜிவாஜி பதுமனியை லவ்விட்டு விஜயாவைக் கல்யாணம் செய்திருப்பார் போல! ஒரே உருக்கிங்க்ஸா இருந்தது.

    இன்னொரு படத்திலே அவரோட மனைவியோ, யாரோ (சுஜாதா??) இறந்து போக அழறார் பாருங்க ஜிவாஜி. எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்து விட்டது. ஹிஹிஹிஹி!

    ReplyDelete