எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 16, 2013

கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்

அம்மோய், பூவோடு வருமே, பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்!

இதை முன்னரே குறிப்பிட்டிருக்கணும், எப்படியோ மறந்திருக்கேன்.  கல்யாணப் பெண்ணிற்கு எத்தனை நகைகள் வாங்கிப் பூட்டினாலும், கைகளில் கூடவே கண்ணாடி வளையல்களும் அணிவிப்பார்கள்.  இதை ஒரு சடங்காகவே சிலர் செய்வார்கள்.  வைணவர்களில் ஒரு சாரார் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னர் ஒரு நல்ல நாள் பார்த்து அக்கம்பக்கம் சுமங்கலிகளை அழைத்துப் பெண்ணைப் புத்தாடை அணிந்து அமர வைத்து, சந்தனம், குங்குமம் பூசி வளையல்களை அணிவிக்கச் செய்வார்கள்.  பெண்ணின் தோழிகளும் இதில் பங்கு பெறுவர். சுமங்கலிகளுக்கும், பெண்ணின் தோழிகளுக்கும் வெற்றிலை, பாக்கு, இனிப்புக் கொடுப்பது உண்டு.  மற்ற பிராமணரில் குறிப்பிட்ட சில ஊர்களில் இதைத் தோழிப்பொங்கல் எனச் செய்வார்கள்.  அன்று தான் கல்யாணப் பெண்ணிற்கு மாமன் சீரும் கொடுப்பார்கள்.  பெண்ணை அவள் தோழிகளோடு  நல்ல நாள் பார்த்து மாமன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விதவிதமான உணவுகள் செய்து, பெண்ணிற்குப்புத்தாடை மற்றும் மாமனால் இயன்ற பல சீர்களையும் கொடுத்து முதல் மாலையை மாமன் கைகளால் போடச் செய்துப் பெண் வீட்டில் கொண்டு விடுவார்கள். 

வசதி படைத்தவர்கள் மேள, தாளத்தோடு செய்வார்கள்.  இதெல்லாம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் சின்ன கிராமங்கள் அல்லது சின்ன ஊர்களில் நடந்து வந்ததால் அன்று காலையே பெண்ணை நதிக்கரைக்கு அல்லது குளக்கரைக்கு அழைத்துச் சென்று ஸ்நானம் செய்யச் சொல்லிப் புத்தாடை அணிவித்து ஊர்வலமாகத் தோழிகள் சூழ அழைத்து வருவார்கள்.  அப்போது வீட்டுக்கு வீடு பெண்ணிற்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பது உண்டு.  மேலும் அப்போதெல்லாம் பெண்கள் மிகச் சிறு வயது.  இப்போதெல்லாம் குறைந்த பக்ஷம் 25 என்றிருந்தது இப்போது 27, 30 என ஆகிவிட்டதால் வளர்ந்த விபரம் தெரிந்த பெண்களுக்கு இதற்கெல்லாம் இயல்பான கூச்சம் வந்துவிடுகிறது.  எனவே காலப்போக்கில் இவை சுத்தமாய் மறைந்தொழிந்து போய் விட்டது.. இதைக் கல்யாணத்திற்கு நாலைந்து நாட்கள் முன்னரே செய்வார்கள். வட ஆற்காடு மாவட்டத்தில் சில குடும்பங்களில் பெண்ணின் அத்தை இம்மாதிரி கல்யாணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து விருந்து படைத்து உபசரிக்கும் வழக்கம் இருக்கிறது.  அம்பத்தூரில் இருக்கையில் எதிர்வீட்டில் நடந்து பார்த்திருக்கேன்.  இதன் பின்னரே பெண் சத்திரம்/மண்டபம் அல்லது கல்யாணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவாள்.  

கல்யாண அமர்க்களத்தில் சீப்பை மறந்த கதையாகத் திரட்டுப்பால் காய்ச்ச மறந்துட்டோம்.  ஆனால் பெண்ணின் மாமி மறக்காமல் காய்ச்சி எடுத்துட்டு வந்துட்டாங்க.  .  திரட்டுப் பால் காய்ச்சும்போது பொங்கி வழியாமல் இருக்க அதனுள் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டுக் காய்ச்சினால் பொங்கி வழியாது. பால் நன்கு திரண்டு வந்த பிறகே சர்க்கரை சேர்க்கணும்.  திருநெல்வேலிப் பக்கம் தேங்காய்த் திரட்டுப் பால் மிகவும் பிரபலம். அவங்க இரண்டு வகையும் செய்வாங்க.  நம்ம கல்யாணத்திலும் ரெண்டு வகையும் வைச்சுப்போமே! :))))

பெண் வீட்டினர் போய்ச் சேர்ந்ததுமே சீர் வகைகளை அலங்கரித்து வைக்க வேண்டும். முன்னெல்லாம் அப்படியே பெட்டியோடு, பக்ஷணங்கள் கூடைகளில் வைக்கப்பட்டு கூடையோடு கொடுப்பார்கள்.  யாரும் அதிகமாய் அலட்டிக் கொண்டதில்லை. பெரும்பாலும் வெயில் காலத்திலேயே கல்யாணம் நடக்கும் என்பதால் பக்ஷணங்கள் நமுத்தும் போகாது.  ஆனால் இப்போதெல்லாம் காடரிங்காரர்கள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளில் கொடுத்துவிடுகிறார்கள் என்பதோடு ஒவ்வொன்றையும் தனித்தனி பாக்கிங்காகவும் வைக்கின்றனர்.  ஆகவே விநியோகம் செய்ய வசதி. பிள்ளை வீட்டினர் தங்கும் இடத்தில் அவர்களுக்கு ஏற்ற வசதிகள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.  முன்னெல்லாம் பல்பொடி, சோப்பு, தேங்காய் எண்ணெய், பவுடர் டப்பா, குங்குமம், சாந்து, சீப்பு போன்ற பொருட்கள் அங்கே அவர்கள் வரும் முன்னர் வைக்க வேண்டும்.  அதோடு பெண்ணிற்குக் கொடுக்க வேண்டிய பாத்திரங்கள், டப்பாக்கள், சம்புடங்கள் ஆகியவற்றில் மளிகை சாமான்களை நிரப்பி அங்கே அடுக்கி வைப்பார்கள். இதற்கு அங்கமணிச் சீர் என்று பெயர். அரிசி, பருப்பில் இருந்து ஆரம்பித்து சர்க்கரை, காப்பிப் பொடி, தேயிலைப்பொடி, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, கிராம்பு வரை எல்லாமும் இருக்கும்.  இதோடு சேர்த்து ஏற்கெனவே செய்த அப்பளம், வடாம், வற்றல் போன்றவற்றையும் வைப்பார்கள். பக்ஷணங்களும் இடம் பெறும். 

பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  எவர்சில்வர் புழக்கத்திற்கு வந்த பின்னர் அவை அதிகமாகக் காணப்படுகின்றன.  அதற்கு முன்னர் பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி, ஈயத்தில் ரசச் சொம்பு போன்றவையே.  இந்த ஈயச் சொம்பில் தான் தீபாவளி மருந்தும் கிளறி வைத்திருப்பார்கள்.  வகை வகையாகக் கல்யாணச் சாப்பாடு சாப்பிடுவதால் ஜீரணத்துக்குனு நினைக்கிறேன். எல்லா ஏற்பாடுகளும் பிள்ளை வீட்டினர் வரும் முன்னரே செய்திருக்க வேண்டும்.  பிள்ளை வீட்டினர் வராங்களா, தகவல் கிடைத்ததும், ஆரத்தியை எடுத்துக் கொண்டு வாசலில் தயாராக நிற்க வேண்டும்.  காடரிங்காரர்கள் எனில் அவரக்ள் காடரிங்கில் ஃபோட்டோவும் அடக்கம்.  இல்லை எனில் பெண் வீட்டினர் ஏற்பாடு செய்ய வேண்டும். 

 ஆச்சு, அதோ வந்தாச்சு பிள்ளை வீட்டினர்.  பெண்ணின் அம்மா, அப்பா, மற்றும் சித்தப்பா, சித்தி முறை உறவுகள், பெண்ணின் பாட்டி, பெண்ணின் மாமா, மாமி, அத்தை, அத்தை கணவர் போன்ற முக்கிய உறவினர் முன்னே நின்று வரவேற்பார்கள். முன்னெல்லாம் ஆரத்தி சுற்றி பெண்வீட்டு முக்கியஸ்தரான மாமாவோ தாத்தாவோ மாலை போட்டுக்  கைலாகு கொடுத்து மாப்பிள்ளையை அழைப்பார்கள்.  இப்போது காடரிங் காரர்கள் பிள்ளையின் அம்மா, அப்பா, பிள்ளை, பிள்ளையின் சகோதரி, சகோதரி கணவர் ஆகியோருக்கு ஸ்பெஷல் மாலை போட்டு, பிள்ளை, பிள்ளையின் அம்மா, அப்பா, சகோதரி ஆகியோரைத் தனியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து, மேலிருந்து பலூன்கள் தானாக/அல்லது வெடிக்க வைத்துப் பூக்கள் கொட்டுவது போல் ஏற்பாடு செய்து வரவேற்கின்றனர்.  அன்று பிள்ளை வீட்டினரோடு வரும் அனைவருக்கும் சிறு குழந்தை உட்பட அனைவர் கழுத்திலும் ஒரு சின்ன மாலையைப் போட்டுடறாங்க.  சம்பங்கிப் பூக்கள்னு நினைக்கிறேன்.  வாசனையிலிருந்து அப்படித் தான் தெரிஞ்சது. :)))) நல்லவேளையாப் பெண்ணின் மாமி காய்ச்சிக் கொண்டு வந்த திரட்டுப்பாலை ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் போட்டு வைத்திருந்து  பின்னர் பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மா கையில் திரட்டுப் பால் அடங்கிய பாத்திரத்தைக் கொடுப்பாங்க.  


20 comments:

  1. //கல்யாணப்பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
    அம்மோய், பூவோடு வருமே, பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்!//

    ஒரே பாட்டும் கூத்துமாக தலைப்பு வைத்து அசத்தி வருகிறீர்கள்.

    படிக்கப்படிக்க இளமை காலம் திரும்பக் கிடைத்தது போல மனதில் ஓர் மகிழ்ச்சி.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. //திரட்டுப்பாலை ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் போட்டு வைத்திருந்து பின்னர் பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மா கையில் திரட்டுப் பால் அடங்கிய பாத்திரத்தைக் கொடுப்பாங்க. //

    ஆஹா, நாக்கில் நீர் ஊற வைக்கும் இடம் .. இது ..இது .. இதுவே தான்.
    ;)))))

    இப்போ இதுவும் கல்யாண காண்ட்ராக்டரால் மட்டுமே செய்து த்ரப்படுகிறது.

    தொடரட்டும் திரட்டுப்பால் போன்ற பதிவுகள்.

    ReplyDelete
  3. திரட்டுப்பாலை கூட மறந்து விடலாம்... சீப்பை மறந்து விட்டால் மாப்பிள்ளைக்கு கோபம் வருமே... (ஹிஹி...)

    எல்லோரும் வந்துட்டாங்க... கூட்டம் ஜாஸ்தியாயிருக்கே... திரட்டுப்பால் பத்துமா...? என்னே செய்றது...?

    காட்சிகள் கண் முன்னே தெரியும் எழுத்திற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. கல்யாணம் களை கட்டி விட்டது! திரட்டுப்பால் கொஞ்சம் எனக்கும் கொடுங்கோ!

    மாப்பிள்ளை வீட்டார் தாங்கும் அறைகளில் என் தங்கை கல்யாணத்தில் சோப்பு, செப்பு பவுடர் என வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வருகிறது. அப்புறம் நடந்தது தனிக் கூத்து!

    ReplyDelete
  5. வெள்ளிப் பாத்திரத்தில் திரட்டுப் பால்..... அட சுவைக்க நாவில் ஒரு ஆசை!.....

    ஆமாம், வெள்ளிப் பாத்திரமும் சீரில் சேர்த்தியா? அதோட செலவும் பெண்ணின் அப்பா தலையிலா!

    ReplyDelete
  6. வாங்க வைகோ சார், கல்யாணம்னாலே பாட்டும் கூத்தும் தானே! :))))

    ReplyDelete
  7. கான்ட்ராக்டர் திரட்டுப் பால் எங்கே செய்து தரார்?? ஆவினில் வாங்கி வைச்சுடறார். :(

    ReplyDelete
  8. வாங்க டிடி, சீப்பை மாப்பிள்ளை பாக்கெட்டிலேயே வைச்சிருக்காராம். அதோட திரட்டுப் பால் பிள்ளையின் அம்மா கைக்குப் போனதும் உள்ளே பத்திரமாய்ப் பதுக்கப்படும். எல்லாருக்கும் கொடுக்க மாட்டாங்க!

    இப்படிக்கு

    திரட்டுப் பால் கிட்டாமல் ஏமாந்தோர் சங்கத் தலைவி!

    ReplyDelete
  9. வாங்க ஶ்ரீராம், டிடிக்கு எழுதினதைப் பார்த்தீங்க இல்லை? நோ திரட்டுப்பால்! :))))

    ReplyDelete
  10. அட வெங்கட்?? வாங்க, வெள்ளிப்பாத்திரம் இல்லாமல் கல்யாணமா? அடுத்த பதிவிலே ஒரு லிஸ்டே கொடுத்துடுவோம். வெள்ளிப்பாத்திரம் கொடுக்க இயலாதவர்கள் எவர்சில்வர் டப்பாவிலும் கொடுப்பது உண்டு. :))))) எல்லாராலும் வெள்ளி கொடுக்க முடியுமா?

    ReplyDelete
  11. திரட்டுப் பால் காய்ச்சும்போது பொங்கி வழியாமல் இருக்க அதனுள் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டுவிட்டுக் காய்ச்சினால் பொங்கி வழியாது. பால் நன்கு திரண்டு வந்த பிறகே சர்க்கரை சேர்க்கணும். திருநெல்வேலிப் பக்கம் தேங்காய்த் திரட்டுப் பால் மிகவும் பிரபலம். //
    திரட்டு பால் காய்ச்சும் போது பொங்கி வழியாமல் இருக்க சின்ன தட்டை அதற்குள் போட்டு வைப்பார்கள்.
    பாசிப்பருப்பு வறுத்து தேங்காயுடன் அரைத்து பாலுடன் சேர்த்து கிண்டுவார்கள்.

    பாட்டு தலைப்புஅருமை.

    நாங்களும் மாப்பிள்ளை வீட்டார் தங்கி அறைகளில் சோப்பு, சீப்பு, பவுடர், எண்ணெய்முத்லியவை வக்கும் பழக்கம் உண்டு.
    திருமணம் முடிந்த இரவு நலுங்கு முடிந்தவுடன் பாத்திர சீர் வரிசை வைக்க வேண்டும். இப்போது எல்லாம் வெள்ளி பாத்திரம் மட்டும் வையுங்கள்
    மற்றவை மண்டபத்திற்கு கொண்டு வந்து சிரமப்பட வேண்டாம் என சொல்லப்படுகிறது.

    ReplyDelete

  12. தொடருகிறேன். நன்றி.

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, சின்னத் தட்டு, கிண்ணம் போன்றவற்றையும் போடுவது உண்டு. நன்றிங்க வரவுக்கும் கருத்துக்கும். இப்போல்லாம் சீர் வரிசை அலங்காரங்களைப் பார்க்கத் தான் முடிவதில்லை. :)))

    ReplyDelete
  14. வாங்க ஜிஎம்பி சார், நன்றி.

    ReplyDelete
  15. அடடா.. கீத்தாம்மாவுக்கே திரட்டுப்பால் கிடைக்கலையா :-))

    போகட்டும். விருந்தில் ஜமாய்ச்சுடச்சொல்லுங்க. சீர்வரிசையெல்லாம் அமர்க்களம்.

    ReplyDelete
  16. பொங்கியிடுதல் மாமாக்கள், அத்தையும் உண்டல்லவா? எனக்கும் செய்தார்கள்.

    திரட்டுப்பாலைப் பற்றி சொல்லலையே என்று நினைத்தேன்....:)) எனக்கும் கொஞ்சம் எடுத்து வைங்கோ மாமி...

    எனக்கு கொடுத்த அங்குமணிச் சீரில் இருந்த சம்படங்கள் அனைத்தும் எங்கு சென்றது என்றே இதுவரை ஜீ பூம் பாவா இருக்கு...:))

    சீர் வரிசைகள், சோப்பு, சீப்பு அனைத்தும் மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு முன்பே நானே அடுக்கி வைத்த நினைவு...:)

    ReplyDelete
  17. வாங்க கோவை2தில்லி, அநேகமாத் தென் மாவட்டங்களில் இந்தத் தோழிப்பொங்கல் உண்டு. திரட்டுப்பால் எனக்கே கிடைக்கலை, நீங்க வேறே!:))))

    ஆமாம், செய்ய ஆளில்லை என்றால் நாம் தான் செய்துக்கணும். வேறே என்ன செய்யறது? ஆனால் கான்ட்ராக்டில் விட்டால் மாப்பிள்ளை வீட்டின் செளகரியங்களையும் சேர்த்து அவங்க தான் கவனிச்சுக்கணும்.

    ReplyDelete
  18. திரட்டுப்பால் நம்ம வழக்கில் இல்லை.
    எனக்கும் எடுத்துவையுங்க.

    சீர்வரிசை என்று வைத்துக் கொடுப்பதில்லை. வெள்ளிப்பாத்திரம் என்ற பேச்சே இல்லை.
    பெண்ணுக்கு பணம், நகை, வீடு,வீட்டுப் பொருட்கள் கொடுப்பார்கள்.

    ReplyDelete
  19. ஹாஹா, திரட்டுப்பாலுக்கு எத்தனை நண்பர்கள்?? எல்லாரும் நம்ம வீட்டுக்கு வாங்க, திரட்டுப்பால் ஆவின்லே வாங்கியாவது தரேன். :))))

    மாதேவி, ஒரு சிலர் வெள்ளிவிளக்கும், தட்டு, சந்தனப்பேலா, குங்குமச் சிமிழ் கொடுத்துப் பார்த்திருக்கேன்.ஆனால் அங்கே தெரியாது. :))))

    ReplyDelete
  20. சர்க்கரையும் திரட்டிப்பாலும் வெள்ளிப் பேலாவில்தானே கொடுத்தாகணும்:)படு உத்சாகமாக இருக்கிறது கீதா.
    எங்களிலும் இந்தக் கண்ணாடி வளையல்கள் மருதாணி எல்லாம் அத்தை கையால் இடும் வழக்கம் உண்டு. ஜாலிதான்.

    ReplyDelete