எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 18, 2013

நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்!

கல்யாண மேடை. இது விரதம் செய்வதற்கு முன்னர் எடுத்த படம். :)))) போட்டோவில் இருப்பது என் அப்பா, அம்மா, இடப்பக்கம் எங்கள் தாத்தா(அப்பாவின் அப்பா) வலப்பக்கம் அவங்க குலதெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன், நடுவே சாய்பாபா.

இந்தத் திரட்டுப்பால் பெண்ணின் அம்மாவால் கொடுக்கப்படுவது தென் மாவட்டங்களில் கிடையாது.  இப்போதும் இருக்கிறதாகத் தெரியவில்லை.  ஆனால் தஞ்சை மாவட்டத்தில் இது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.  இது கொடுக்கவில்லை எனில் கோபம் கொள்ளும் சம்பந்தி வீட்டாரை முன்பெல்லாம் காணமுடியும். சண்டையே வரும். இப்போது சென்னையில் பலதரப்பட்டவர்களும் வசிப்பதில் காடரிங்காரர்களால் இது எல்லா மாவட்டக்காரர்களாலும் பின்பற்றப் படுவதைக் காண முடியும்.  பொதுவாகச் சீர் வரிசையில் சமையலுக்குத் தேவைப்படும் பாத்திரங்கள் தவிர, வெண்கலம், பித்தளைப்பாத்திரங்களில் தாம்பாளம், குத்துவிளக்கு, குடம், சொம்புகள், அரிக்கும் சட்டி, பொட்டுப் போட்ட மைசூர் வாணாய் எனப்படும் பாத்திரம், அடுக்கு வகைகள், பித்தளை ட்ரம், வாளி, வெண்கலப்பானைகள், அளக்கும் படி போன்றவை அவரவர் வசதிக்கு ஏற்பக் கொடுக்கப்படும்.  படியை முக்கியமாய்க் கொடுப்பார்கள்.  இப்போதெல்லாம் எவர்சில்வரிலேயே படி வந்து விட்டதால் அநேகமாய் அதில் வாங்குவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.  படி முக்கிய விசேஷங்களுக்குத் தேவைப்படும். நிறைநாழி வைக்க, ஏற்றி இறக்க எனப் பலவிதங்களிலும் பயன்படும் என்பதால் படி எல்லா அளவுகளிலும் வாங்கி இருப்பார்கள். வெள்ளிப் பாத்திரங்களில் பஞ்சாத்திரம், உத்தரணி, சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ், சின்னத் தட்டு, பன்னீர்ச்செம்பு(தேவையானால்)விளக்கு, கூஜா அல்லது சொம்பு(வரலக்ஷ்மி விரதத்திற்குக்கலசம் வைக்க) பெரிய சாப்பிடும் தட்டு, பால் இடும் கிண்ணம் போன்றவை முக்கியமாக அடங்கும்.  மற்றவை அவரவர் விருப்பமும், வசதிக்கும் ஏற்பக் கொடுப்பார்கள். மிக மிக வசதி உள்ளவர்கள் வெள்ளிக் குடம், வெள்ளித் தேங்காய் போன்றவை கொடுக்கின்றனர்.  இதெல்லாம் கொஞ்சம் ஆடம்பரமாகத் தோன்றும். வெள்ளி கொடுக்க இயலாதவர்களும் உண்டு.

மாப்பிள்ளையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றதும் அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்து உபசாரங்கள் செய்து பின்னர் விரதம் ஆரம்பிக்க அவர்களின் செளகரியத்தைக் கேட்க வேண்டும்.  சிலர் வீட்டிலேயே (உள்ளூராக இருந்தால்) குளித்துவிட்டு வந்திருப்பார்கள்.  இல்லை எனில் அவர்கள் குளித்து முடித்துத் தயாராக வந்ததும் விரதம் ஆரம்பிக்க வேண்டும். முதலில் மணமகன் செய்யப் போகும் விரதத்தைப்பார்க்கப் போகிறோம்.  இதை அஷ்ட விரதம் என்றும் பூர்வாங்கம் என்றும் கூடக் கூறுகின்றனர். பிள்ளையின் வித்யா காலம் முடிந்துவிட்டது என்றாலே பிரமசரியம் முடிந்து கிரஹஸ்தாசிரமத்திற்குத் தயாராகிவிட்டான் என்றே பொருள். ஆனால் இந்தக்காலங்களில் குருகுல வாசம் என்பதெல்லாம் இல்லை என்பதோடு அவரவர் பொருளாதார அடிப்படையிலும் திருமணங்கள் தாமதம் ஆகின்றன.  எனினும் இந்த விரதம் செய்வதை விடாமல் கடைப்பிடிக்கின்றனர்.  இது அவரவர் சார்ந்துள்ள வேத சாகையைப் பொறுத்து வேத அத்யயனம் செய்வதையே சுருக்கமாக அஷ்ட விரதம் என்று அழைக்கின்றனர்.  இந்த சம்பிரதாயம் ஒவ்வொரு வேதக்காரர்களுக்கும் அவரவர் வேதத்தை ஒட்டி மாறுபடும்.

ரிக் வேதக்காரர்களுக்கு முதலில் ஸம்ஹிதை,  பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் என அத்யயனம் செய்துவிட்டுப் பின்னர் ஸம்ஹிதா பாகத்திற்கு பத பாடம், கிரம பாடம், ஜடா பாடம் முடித்து மலா-சிகா-ரேகா-த்வஜம்-தண்டகம்-ரதம்-கனம் என்னும் விக்ருதி பாடங்களை அத்யயனம் செய்வார்கள்.  பாஷ்யங்களும் படிக்கப்படும், யக்ஞம் முதலியவற்றை உலக நன்மைக்காகவும் தானும் நலமாக வாழவும் வேண்டிக் கொண்டு வழி செய்து கொள்வான் பிரமசாரி.

யஜுர் வேதத்தில் ப்ராபாத்ய, செளம்ய, ஆக்னேய, வைஸ்வேதேவ என்ற நான்கு, பின்னர் பூர்வம், உத்தரம் என இரு பிரிவுகள் ஆக மொத்தம் எட்டுப்பகுதிகளின் சாகைகள் அத்யயனம் செய்யப்பட்டு பதம், கிரமம், ஜடா பாடம், கனபாடம், வர்ண கிரமம் என்பது செய்யப்படும்.

ஸாமவேதத்தில் த்ராஹ்யான சூத்ரங்களைப் (எங்க புக்ககத்தின் சூத்ரம் இதுவே) பின்பற்றுபவர்களுக்கும் எட்டுப் பிரிவுகள் உண்டு. அவை உபநயனம், கோதானம், வ்ராதிகம், ஆதித்யம், மஹாநாம்நிகம், உபநிஷத், பெளதிகம், பிரமசாமம் ஆகியன.  ப்ரக்ருதி, ஊஹம், ரஹஸ்யம், ஆரணம், பூரவார்ச்சிகம், உத்ரார்ச்சிகம், பதம், லக்ஷணம் முதலிய எட்டு பிராமணங்களின் கிரந்தங்களும் அத்யயனம் செய்யப்படும்.  இதை இங்கே இவ்வளவு விளக்கமாய்ச் சொல்வதின் காரணம், எழுதி வைத்துக் கொண்டால் அவரவர் வீட்டுத் திருமணத்தின் போது சாஸ்திரிகளிடம் கேட்டு நிச்சயம் செய்து கொள்ளலாம்.  ஒவ்வொரு பகுதியும் ரிஷி தர்ப்பணம், ஹோமம் போன்றவற்றோடு தொடங்கி வேதத்தின் அந்தக் குறிப்பிட்ட பகுதி தொடர்பான சில கர்மாக்களையும் செய்து உத்ஸர்ஜனம் செய்வார்கள்.  இப்படி வேதத்தின் எல்லாப் பகுதிகளையும் கற்பதே அஷ்ட விரதம் எனப்படும். வேத அத்யயனம் முறையாகக் கற்றிருந்தால் இந்த அஷ்ட விரதம் எனப்படுவது தேவையில்லை என்பது ஒரு சாரார் சொல்கிறார்கள்.  ஆனாலும் அத்யயனம் செய்தவர்களும் இதைச் செய்கின்றனர்.


இப்போது வேதம் கற்றவர்கள் மிகச் சிலரே இருப்பதால் அனைவருக்கும் இது அவசியம் என்பது தெரிய வருகிறது. இதன் கடைசியில் வருவதே ஸமாவர்த்தனம்.  ஸமாவர்த்தனம் என்றால் முடிவு, முடிப்பது எனப் பொருள்.  இது குருகுலத்தில் இருந்து பிரமசாரி வீடு திரும்பும் கால கட்டத்தைக் குறிக்கும்.  இந்த அஷ்ட விரதத்தைக் கல்யாணத்திற்கு முதல்நாள் தான் செய்வது என்பது இப்போது ஏற்பட்ட சம்பிரதாயம் ஆகும்.  இதை எப்போது வேண்டுமானாலும் குருகுல வாசம் முடியும் சமயம், விவாஹம் செய்து கொள்வதற்கு நான்கைந்து மாதங்கள் முன்னர் என்று செய்யலாம். ஆனால் இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு நாற்காலி உத்தியோகம் என்பதால் அவர்கள் கல்யாணத்திற்கு லீவு எடுப்பதால் முதல்நாள் கட்டாயம் அஷ்ட விரதம் செய்யணும் என வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இப்போதெல்லாம் மணமகனை காயத்ரி மந்திரம் சொல்லச் சொல்லிவிட்டு புரோகிதர்களே இதைச் சொல்லி முடித்துவிடுகின்றனர். இதை முடித்ததும் மணமகன் மந்திரோக்தமாக ஸ்நானம் செய்யணும்.  ஆனால் அதெல்லாம் இப்போச் செய்யறதில்லை.  இந்நிலையில் இருக்கும் பிரமசாரியை ஸ்நாதகன் என அழைக்கின்றன்னர்ர்.  பிரமசரியத்தைக் கடந்தாலும் இன்னும் கிரஹஸ்தாசிரமத்தில் நுழையவில்லை.  இப்போது அவன் அநாஸ்ரமியாக இருக்கிறான்.  ஆகவே உடனடியாகத் திருமணம் செய்து வைக்கணும் என ஏற்பாடுகள் நடக்கும்.


விரத விபரங்கள் தொடரும்!  வேதங்கள் பற்றிய குறிப்புகளுக்கு நன்றி: காமகோடி தளம், தெய்வத்தின் குரல், ரா.கணபதி.

18 comments:

  1. பல தகவல்கள் அறியாதவை... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. எல்லாம் சாஸ்திரிகள் பார்த்துக் கொள்வார் என்று விட்டு விடுவதுதான் வழக்கம். அவர் சொல்வதைச் செய்து விட்டுப் போய் விடுவது! இவ்வளவு விவரங்கள் இப்போதுதான் படிக்கிறேன்.

    ReplyDelete
  3. நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்!

    தலைப்பும் அனைத்துத் தகவல்களும் அருமையோ அருமையாக ரசிக்கும் படியாக உள்ளன.

    தொடருங்கள். ;)

    ReplyDelete

  4. எழுதி வைத்துக் கொண்டால் சாஸ்திரிகள் வாங்கும் பணத்துக்குக் குறைவில்லாமல் மந்திரங்கள் சொல்கிறாரா என்று கவனிக்கலாம்.! பல பழக்கங்கள் இப்போது இல்லை என்று கூறி வருகிறீர்கள். சம்பிரதாயத்துக்குச் செய்யும் இவற்றில் மனமில்லாமல் செய்வதை விட செய்யாமல் இருப்பதே மேல்.

    ReplyDelete
  5. திவாஜி
    2:44 PM (1 hour ago)

    to thamizhvaasal
    2013/7/18 Geetha Sambasivam
    யஜுர் வேதத்தில் ப்ராபாத்ய, செளம்ய, ஆக்னேய, வைஸ்வேதேவ என்ற நான்கு, பின்னர் பூர்வம், உத்தரம் என இரு பிரிவுகள் ஆக மொத்தம் எட்டுப்பகுதிகளின் சாகைகள் அத்யயனம் செய்யப்பட்டு பதம், கிரமம், ஜடா பாடம், கனபாடம், வர்ண கிரமம் என்பது செய்யப்படும்.

    வேதம்​ முழுக்கச்சொல்வதில்லை. அது பல நாட்களாகும். ஒவ்வொரு ​ ​ 'காண்டத்தின்​'​
    ​ ஆரம்ப பாகம் மட்டுமே சொல்லப்படும்.
    அதாவது குருகுல வாசத்தில் ஆசார்யன் ஒவ்வொரு பகுதியையும் ஆரம்பிக்கும் முன் அந்த காண்ட ரிஷிகளுக்கு ஹோமம் செய்தே ஆரம்பிக்க வேண்டும்.​ முடித்துவிட்டு மீண்டும் ஹோமம் செய்ய வேண்டும். அதுவே இப்போது இந்த ரூபத்தில் இருக்கிறது//

    திரு தி.வா. அவர்கள் தற்போது சொல்லும் முறையைக் குழுமத்தில் பின்னூட்டமாக இட்டிருக்கிறார்.

    திரு ஜிஎம்பி சார், இவை சம்பிரதாயமல்ல. கட்டாயமாய்ச் செய்யவேண்டியவையே. அதனாலேயே கல்யாணத்துக்கு முதல்நாள் முடியாவிட்டாலும் கல்யாணத்தன்று அதிகாலையில் சிலர் செய்கின்றனர். சாஸ்திரிகள் வாங்கும் பணத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஏனெனில் இது எல்லாம் கல்யாணப் பிள்ளைக்குச் சம்பந்தப்பட்டவையே. அவரே நேரிடையாகச் செய்ய வேண்டியவை. அவர் வாழ்க்கைக்கு வேண்டியவை. இப்போது அத்யயனம் செய்தவர்கள் இல்லை என்பதால் இவை எல்லாவற்றுக்கும் அர்த்தம் இல்லை என்றாகி விடாது.

    என் அண்ணா பையர் அத்யயனம் செய்தவர். அவர் கல்யாணத்தில் அவரே எல்லாவற்றையும் புரிந்து கொண்டு தானாக முன் வந்து செய்தார். இன்னும் சொல்லப் போனால் டிசிஎஸ்ஸில் பெரிய பதவியிலிருக்கும் அவர் நண்பர்கள் வீட்டில் புண்யாஹவசனம், கிரஹப்ரவேசம் என அழைத்தாலும் போய்த் திருப்தியாகச் சொல்லிக் கொடுத்துச் செய்து தருவார். ஒவ்வொரு வருடமும் சத்யசாய்பாபாவின் பிறந்த நாளில் பாபாவின் முன்னே வேத அத்யயனம் செய்யும் குழுவில் இவரும் ஒருவராக இருந்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆர்வமே தேவை. :)))))))

    மற்றப் பின்னூட்டங்களுக்குப் பின்னர் பதில். :)))))

    ReplyDelete
  6. ஆழ்ந்து நின்று நிதானித்துப் படித்தேன். போட் மெயில் வேகத்தில் போவதாகத் தோன்றினாலும் விவரமாக கூடியவரை எதுவும் விடுபடாமல் நேர்த்தியாக இருந்தது.



    ReplyDelete
  7. வாங்க டிடி, கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், இன்னும் இருக்கு, வரும் பாருங்க. :))))

    ReplyDelete
  9. வாங்க வைகோ சார், நன்றி.

    ReplyDelete
  10. ஜீவி சார், வேகமாய்ப்போவதாய்ச் சொல்கிறீர்கள்! எதை வைச்சுனு புரியலை! :))) இப்போ மின்சாரம் இருப்பதால் பதிவுகளை எழுதி வைத்துக்கொள்ள முடிகிறது. ஓய்வு இருக்கையில் எழுதிக் கொண்டு பின்னர் காப்பி,பேஸ்ட் செய்வதால் அடுத்தடுத்துப் பதிவுகள் வருகின்றன. அதை வைச்சுச் சொல்றீங்க போல! இன்னும் எத்தனை நாளைக்குக் காற்றாலை கை கொடுக்குமோ தெரியாது. அதுவரை ஓரளவுக்கு இயலும். பின்னர் எப்படியோ பார்க்கலாம். :)))))))

    ReplyDelete
  11. சாஸ்த்ரீகளும் முழுதும் சொல்கிறாரா தெரிவதில்லை....அப்படியிருந்தாலும் மணமகன் இதெல்லாம் இப்போ சொல்லுவாரோ என்றும் தெரியவில்லை....:)

    தகவல்களுக்கு நன்றி.

    திரட்டுப்பாலோடு ,மாலாடும் எங்கள் வீட்டில் வழக்கம் உள்ளது...

    ReplyDelete
  12. கோவை2தில்லி, மாலாடு எங்களுக்கும் வழக்கம் உண்டு. நிச்சயதார்த்தத்திலேயே சொல்ல நினைச்சுட்டு அப்புறமா விட்டுட்டேன். :)))) ஆனால் தஞ்சைக்காரங்களுக்கு மாலாடு புதுசு என்பதோடு உருண்டை வைக்கக் கூடாதுனும் சொல்வாங்க. இப்போல்லாம் மாறிக் கொண்டு வருகிறது. :)))))

    ReplyDelete
  13. எத்தனை எத்தனை விவரங்கள், விரதம் பற்றி. வியப்பாக இருக்கிறது, இவ்வளவு நாள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளவில்லையே என்று வெட்கமாகவும் இருக்கிறது.
    விவரமாக எழுதுவதற்கு நன்றி!

    ReplyDelete
  14. வாங்க ரஞ்சனி, ரொம்ப லேட் நீங்க! சத்திரத்தில் ரூம் எல்லாமும் நிரம்பி இருக்கும். யாரோடயாவது அட்ஜஸ்ட் செய்துண்டு தான் இருக்கணும், சரியா? :)))))

    விரதம் போன்றவை செய்கையில் அர்த்தமே தெரியாமல் செய்வதைப் பார்த்துட்டுத் தான் இவ்வளவு விளக்கங்களையே தேடிப் பிடித்தேன் ரஞ்சனி. படிக்கும் ஒரு சிலருக்காவது அர்த்தம் புரியும் இல்லையா! :))) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  15. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாடா. எக்ஸ்ப்ரஸைப் பிடிச்சுட்டேன். ரஞ்சனி சொல்வது அத்தையும் உண்மை. விவரம் தெரியாமலயே எந்திரத்தனமாக எத்தனை காரியங்கள் செய்திருக்கிறோம்!!!!!
    நெல்லைக் காரர்களுக்கு திரட்டிப்பால் இல்லாமல் எந்த வேலையும் தொடங்காது கீதா.
    இங்கே கேசரி ரொம்ப முக்கியம். அனைத்து செய்திகளுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  16. படி முக்கிய விசேஷங்களுக்குத் தேவைப்படும். நிறைநாழி வைக்க, ஏற்றி இறக்க எனப் பலவிதங்களிலும் பயன்படும் என்பதால் படி எல்லா அளவுகளிலும் வாங்கி இருப்பார்கள். வெள்ளிப் பாத்திரங்களில் பஞ்சாத்திரம், உத்தரணி, சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ், சின்னத் தட்டு, பன்னீர்ச்செம்பு(தேவையானால்)விளக்கு, கூஜா அல்லது சொம்பு(வரலக்ஷ்மி விரதத்திற்குக்கலசம் வைக்க) பெரிய சாப்பிடும் தட்டு, பால் இடும் கிண்ணம் போன்றவை முக்கியமாக அடங்கும். மற்றவை அவரவர் விருப்பமும், வசதிக்கும் ஏற்பக் கொடுப்பார்கள். மிக மிக வசதி உள்ளவர்கள் வெள்ளிக் குடம், வெள்ளித் தேங்காய் போன்றவை கொடுக்கின்றனர். இதெல்லாம் கொஞ்சம் ஆடம்பரமாகத் தோன்றும். வெள்ளி கொடுக்க இயலாதவர்களும் உண்டு.//
    என் அம்மாவிற்கு வெள்ளி தேங்காய் உண்டு நலுங்கில் உருட்டி விளையாட். வெள்ளி பல்லாங்குழி , வெள்ளி, கூஜா, வெள்ளி முடி சிக்கு எடுக்கும் சிணுக்கூறி.உண்டு அம்மாவிற்கு. வெள்ளி வெற்றிலைப்பெட்டி.அதற்குள்.சுண்ணாம்பு வைக்கும் கிண்ணம், பாக்கு வெட்டி, மைகூடு, வெள்ளி சிரட்டை இதில்கரும் சாந்து பொட்டு சேர்த்து வைப்பார்கள். பதிவு போடுவது எல்லாம் அப்போது தெரியாத காரணத்தால் அம்மா அவற்றை விற்கும் போது போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளவில்லை.
    எங்களுக்கு எல்லாம், நல்ல கனமாய் பித்தளை தேங்காய், உருட்டும் போது உள்ளே சலங்கை ஒலி வரும்.
    குலம்வாழ பிள்ளை வெள்ளியில் (தவழும் கண்ணன்)கொடுத்தார்கள் நீங்கள் சொன்ன வெள்ளி பாத்திரங்களும் உண்டு.
    வெள்ளி தட்டு, பால்சொம்பு, டம்ளர் குங்குமசிமிழ், சந்தனபேலா, விளக்கு, குலம்வாழபிள்ளை இவை வெள்ளியில் முக்கிய பொருட்கள் அப்புறம் அவர் அவர் வசதி படி வாங்கி கொடுக்கலாம்.

    தலைப்பு பாடல் அருமை.

    ReplyDelete
  17. வாங்க வல்லி, கேசரி இப்போவும் பல கல்யாணங்களிலும் முக்கியமாத் தென்மாவட்டங்களில் பார்க்க முடியும். சென்னைனா அசோகாதான்! :))

    ரொம்பவே லேட்டா வந்திருக்கீங்க போல! :))) பரவாயில்லை, இன்னும் நிச்சயமே ஆரம்பிக்கலை. எல்லாரும் அலங்காரம் பண்ணிட்டு இருக்காங்க. :))))

    ReplyDelete
  18. வாங்க கோமதி அரசு, நீங்களும் லேட் தான். பரவாயில்லை, சீக்கிரமாத் தயாராயிடுங்க! :))

    நீங்க சொன்ன லிஸ்டில் எனக்கும் மைக்கூடு, சாந்துக் கொட்டாங்கச்சி, சாந்து எடுக்க வெள்ளிக்குச்சி போன்றவை இருந்தது. எல்லாத்தையும் வித்தாச்சு! :))))))

    ReplyDelete