சாப்பாடு மெனு ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஸ்ரீராம் கவனிக்கவில்லை போலிருக்கு. அதோடு எல்லார் வீட்டிலும் திரட்டுப் பால், போளி பண்ண மாட்டார்கள். திரு வைகோ அவர்கள் போளியும், திரட்டுப் பாலும் கேட்கிறார். இன்னும் கல்யாணத்துக்கே திரட்டுப்பால் பண்ணியாகவில்லை. :)))))
சுமங்கலிப் பிரார்த்தனை அன்று காலை சுமங்கலிப் பிரார்த்தனைக்குக் கொடுக்கவென வாங்கிய புடைவையை நனைக்க வேண்டும். அதுக்கு முன்னாடி புடைவையைக் கட்டிக் கொண்டு ஒரு பெண் அமர்ந்திருப்பது போல வைக்க வேண்டும். இதோ இப்படி. ஒன்பது கஜம் புடைவையை அதை எப்படிக் கட்டிப்பாங்களோ அப்படிக் கொசுவித் தலைப்பைச் சுத்திக் கொண்டு வந்து வைக்க வேண்டும். மற்றப் புடவைகள் அநேகமாய்ப் புதிதாகவே கொடுப்பார்கள். ஆகவே அவற்றை வைக்க வேண்டாம். என் பிறந்த வீட்டில் ஆறு கஜம் புடைவையும் , அதே போல் பாவாடை, சட்டையும் நனைக்க வைப்பதுண்டு என்பதால், அவற்றை இங்கே காணலாம்.
எண்ணெய் கொடுக்கும் முன்னர் முதலில் அந்தப் புடைவையில் சந்தனம், குங்குமம் இட்டு, மூன்று சொட்டு எண்ணெய் தெளித்து, சீயக்காய் கரைத்துத் தெளித்து, மஞ்சளும் அதே போல் தெளிக்க வேண்டும். இது நம் வீட்டில் மறைந்த சுமங்கலியே நேரில் வந்து வாங்கிக் கொண்டதாக ஐதீகம். அதன் பின்னரே அந்தப் புடவையை நனைத்து உலர்த்துவார்கள். அதே போல் ஆறு கஜம் புடைவை, பாவாடை, சட்டைக்கும் செய்து நனைக்க வேண்டும். இன்றைய தினம் முதலில் சாப்பிடுவது பெண்களே. :)) பெண்களுக்கே முன்னுரிமை. கிழக்கு, மேற்காகக் கோலங்கள் போட்டு இலை போட வேண்டும். புடைவைக் கலத்தின் முன்னர் அவரவர் வீட்டு வழக்கம்போல் ஒரு இலையோ அல்லது இரண்டு இலைகளோ போடவேண்டும். மற்றப் பெண்களுக்கும் வரிசைக்கிரமமாக இலை போட்டுவிட்டுப் பெண்களுக்கு மஞ்சள் கொடுத்துக் கால் அலம்பி வரச் சொல்ல வேண்டும். வரும் பெண்களுக்குப் பூ, சந்தனம், குங்குமம் கொடுப்பார்கள். சில வீடுகளில் பொண்டுகள் இலை போட்டுப் பரிமாறும்வரையிலும் பெண்கள் ஒரு தனி அறையில் இருப்பார்கள். பின்னர் அவரவர் குடும்பத்தில் மறைந்த சுமங்கலிகளின் பெயரை வருடம், வயது வாரியாக எழுதி வைத்து வாசித்துவிட்டு அனைவரும் வந்து சாப்பிட்டுவிட்டு ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொண்டு கையைத் தட்டி அழைப்பார்கள்.
ஆனால் பொதுவாக இலை போட்டுப் பரிமாறிவிட்டே பெயர்களைச் சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது. பரிமாறுகையில் முதலில் புடைவைக்கலத்தில் பரிமாற வேண்டும். பின்னர் வரிசையாக வரும் எந்த உணவாக இருந்தாலும் புடைவைக் கலத்துக்குப் பரிமாறியே பின்னர் மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டும். அதோடு முடிக்கையில் வடக்குப் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபரிடம் முடிக்க வேண்டும். தெற்குப் பக்கம் முடிப்பது ஏற்றுக் கொள்வதில்லை. பின்னர் வீட்டின் மூத்த மருமகள் கையில் நீரை எடுத்துக் கொண்டு புடைவைக் கலத்தில் ஆரம்பித்துச் சுற்றிக் கொண்டு வந்து பின்னர் புடைவைக் கலத்திலேயே முடிக்க வேண்டும். வீட்டின் ஆண்கள், கல்யாணப் பிள்ளை ஆகியோர் நமஸ்கரிப்பார்கள். கல்யாணப் பெண் வீட்டில் நடக்கையில் அந்தப் பெண்ணும் ஒரு கன்யாப் பெண்ணாக அமர்ந்திருப்பாள். அதன் பின்னரே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். புடைவைக் கலத்தில் இடப்படும் உணவைப் பின்னர் சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் வீட்டின் மருமகள்கள் பிரசாதமாக எடுத்துக் கொண்டு பகிர்ந்து உண்பார்கள். சாப்பிட்டு முடிந்ததும், வித விதமான உணவுகளைச் சாப்பிட்டதற்கு செரிமானத்துக்காகச் சுக்கு, வெல்லம் சேர்த்துப் பொடி செய்து வைத்திருப்பார்கள் அதைக் கொடுப்பார்கள். பின்னர் பானகம், நீர் மோர் கொடுப்பார்கள். நேரம் நல்ல நேரமாக இருந்தால் அப்போதே வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுத்துவிடுவார்கள். இல்லை எனில் நல்ல நேரம் வரும் மட்டும் தாமதித்துப் பின்னர் கொடுப்பார்கள்.
புடைவை கொடுத்ததும் அதைக் கட்டிக் கொண்டு வந்த பின்னர் அனைவருமே அந்தப் பெண்மணியை வயது வித்தியாசம் இல்லாமல் நமஸ்கரிப்பார்கள். அன்றைய தினம் அந்தப் பெண்மணி தான் அந்த வீட்டின் வயதான சுமங்கலியாகக் கருதப்படுவாள். மற்றப் பெண்களுக்கும் வாங்கிய ரவிக்கைத்துணியோடு மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், வளையல், சீப்பு, கண்ணாடி, மருதாணி போன்றவற்றோடு அவர்களால் இயன்ற பணமும் வைப்பார்கள். அது ஒரு ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை இருக்கும். அன்றிரவு பொண்டுகளில் சாப்பிட்ட அனைவரும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளத் தடை இல்லை. (வெங்காயம், பூண்டு சேர்க்காமல்) ஒரு சில கல்யாண வீடுகளில் மறுநாளே சமாராதனை செய்வார்கள். சிலர் சனிக்கிழமை, வியாழக்கிழமை என நாள் பார்த்துச் செய்வார்கள். பொதுவாகக் கல்யாணத்துக்கு நாள் நெருங்கி வந்தால் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு மறுநாளே செய்துவிடலாம்.

நடைமுறைகள் வியக்க வைக்கிறது...! வேறென்ன சொல்ல...?
ReplyDeleteநடைமுறைகளை விடாமல் எழுதி வருவது பிரமிக்க வைக்கிறது. மெனு படித்ததை மறந்து விட்டேனோ...
ReplyDeleteஅழகான சும்ங்கலிப்பிரார்த்தனைகளை விரிவாக விளக்கியுள்ளீர்கள். ;)பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க டிடி நன்றி.
ReplyDeleteஆமாம் ஶ்ரீராம், க்ஷேமங்கள் கோரி என்ற தலைப்பிலே வரும் பதிவிலே கடைசிப் பத்தியிலே மெனு இருக்கும் பாருங்க. பொதுவான மெனு தான். :)))))
ReplyDeleteவாங்க வைகோ சார், பாராட்டுக்கு நன்றி.
ReplyDeleteஒரே ஒரு தடவை சாப்பாட்டு டயத்துக்குப் போனதோடு சரி. பின்னால் இத்தனை இருப்பது சத்தியமாகத் தெரியாது.
ReplyDeleteசுமங்கலி பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது. எங்காத்திலும் பெயர் சொல்லி கை தட்டி தான் அழைப்பார்கள். அப்பா பெயர்கள் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்...
ReplyDeleteதில்லியில் நண்பர் ஒருவர் வீட்டுக்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆட்டோவில் மடியாக பயணித்து பொண்டுகளாக நானும் ரோஷ்ணியும் கலந்து கொண்டது நினைவில் உள்ளது....:)
அருமை அருமை கீதா. எத்தனை விவரங்களையும் மறக்காமல் கோர்வையாக எழுதிவைத்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட இதே முறைதான் எங்கள் வீட்டிலும் ஆனல் இரட்டை இலை உண்டு.
ReplyDeleteகல்யணம் பக்கத்தில் வந்துவிட்டது:)
வாங்க அப்பாதுரை, சாப்பிட்டுட்டே போங்க. :))))
ReplyDeleteவாங்க கோவை2தில்லி, நீங்களும் கட்டாயமாச் சாப்பிட்டுட்டுப்போகணும். சரியா? ரோஷ்ணியும் தான். :))))
ReplyDeleteவாங்க வல்லி, பொண்டுகளுக்கு வந்ததுக்கு நன்னி ஹை. கல்யாணம் கிட்டத்திலே வந்துடுச்சு தான். சீக்கிரமாய் முடிச்சுடுவோம். :))))
ReplyDeleteசுமங்கலி பிரார்த்தனை பற்றி அறிந்துகொண்டேன்
ReplyDeleteநன்றி மாதேவி.
ReplyDeleteஇந்த functionல யார் மட்டும் சாப்பிடலாம்...pl reply
ReplyDelete