எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 25, 2013

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கற்றுக் கொண்டாய்?

இப்போ நான் ஶ்ரீராம் மாதிரி ஆப்பீச்ச்சுக்கெல்லாம் போகலை.   ஒரு காலத்தில் போனேன். அதுவும் டைபிஸ்டாத் தான் சேர்ந்தேன். தட்டச்சும் வேகம் அப்போவெல்லாம் இன்னும் அதிகம்.  அப்புறமா வாழ்க்கைப் பயணத்தில் எப்படியெல்லாமோ பயணம் செய்யும்படி ஆச்சு. ஆனாலும் டைபிங்கோ, சுருக்கெழுத்தோ மறக்கலை.  இப்போக் கூட எந்த ஆங்கில வார்த்தையைப் பார்த்தாலும் உடனே சுருக்கெழுத்தில் மானசீகமா எழுதிப் பார்த்துடுவேன். எனக்குக் கூச்ச சுபாவம் எல்லாம் இல்லை. ஶ்ரீராமுக்கு நேர் எதிரிடை! :)))) அப்படி இருந்தும்,   பாருங்க, கணினி மட்டும் யாரும் கத்துக்கொடுக்கலைனு தான் சொல்லணும்.  எண்பதுகளில் சூப்பர் கம்ப்யூட்டர் வந்தப்போ வாயைப் பிளந்துட்டு பார்த்ததோடு சரி.  இதெல்லாம் நம்மாலே எப்படினு ஒரு எண்ணம் அப்போல்லாம்.


குழந்தைங்க எல்லாம் காலேஜ் போக ஆரம்பிச்ச சமயம் பொண்ணு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்னு ஒரு கோர்ஸ் படிச்சா.  எங்க வீட்டிலே முதல்லே கணினியைத் தொட்டது அவ தான். அப்போ பெர்சனல் கம்ப்யூட்டர் எல்லாம் இத்தனை கிடையாது.  அவ சொல்றச்சே கேட்டுப்பேன். நான் கத்துக்க முடியுமானு நினைச்சுப்பேன்.  நமக்கெல்லாம் எங்கே கம்ப்யூட்டரைப் பார்க்கக் கூட முடியுமானு நினைச்சுப்பேன்.  அப்புறமாப் பையர் ஒரு தரம் காலேஜ் லீவிலே சென்னை வந்திருந்தப்போ ஆப்டெக்கில் போய்க் கணினி கோர்ஸ் முடிச்சார். அவர் பண்ணிட்டு இருந்தது மெகானிகல் இஞ்சினியரிங்.  ஆகவே தனியாத் தான் படிச்சார்.

அப்புறமா அவர் பரோடாவில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அங்கிருந்து ஒரு தரம் லீவுக்கு வந்திருந்தப்போ விளையாட்டா என்னைச் சும்மாத்தானே இருக்கே! கம்ப்யூட்டர் கத்துக்கோயேன் அப்படினு சொன்னார். பெண்ணுக்கு அப்போத் தான் கல்யாணம் ஆகி இருந்தது.  தொலைபேசி இணைப்பே பொண்ணு கல்யாணம் ஆகி அமெரிக்கா போன அப்புறமாத் தான் எங்க வீட்டுக்கு இணைப்புக் கொடுத்தோம்.   அது தனிக்கதை, இன்னொரு நாள் வைச்சுக்கலாம். அப்போ அவ ஒரு தரம் பேச்சு வாக்கிலே உனக்கு மெயில் ஐடி இருந்தால் ஏதானும் முக்கியமானதுனு இருந்தாக் கொடுக்கலாம்.  நீ உடனே ப்ரவுசிங் சென்டர்லே போய்ப் பார்க்கலாம்.  இப்போ நான் லெட்டர் எழுதி உனக்கு வரப் பதினைந்து இருபது நாட்கள் ஆயிடுதுனு சொன்னா.


அதோட இல்லாமல்   என்னோட சிநேகிதி ஒருத்தி அப்போ கணினி கத்துட்டு மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் பண்ணிட்டு இருந்தா.  அதுக்கு ஆங்கில அறிவும், தட்டச்சும் தெரிந்தால் போதும்னு சொன்னாங்க.  நமக்கு இருக்கிற ஆங்கில அறிவு போதாதானு நானே முடிவு பண்ணிக் கொண்டு நமக்குத் தட்டச்சத் தெரியும். ஆகவே இந்த கோர்ஸ் பண்ணினால் வசதினு தோணிச்சு.எனக்குக் கூச்ச சுபாவமே இல்லையா, உடனேயே   ரங்க்ஸ் கிட்டே என்னோட ஆசையை வெளியிட்டேன்.  இப்போ இருக்கிற பணத் தேவைக்கு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்னு அல்நாஷர் கனவுகள்.  அப்படியே நிறைய க்ளையன்ட் கிடைச்சு, எல்லார் கிட்டேயும் இப்போ முடியாது; இன்னும் இரண்டு நாள் பொறுங்க.  உங்களுக்கு முன்னால் கொடுத்தவங்களுக்கு முடிச்சுட்டுத் தான் உங்களோடதுனு மானசீகமாப் பேசி எல்லாம் பார்த்துண்டேன்.  வீட்டிலேயும் எப்போவும் என்னைப் பார்க்கவென்றே ஒரு கூட்டம் வராப்போல் எல்லாம் கனவுகள்!  கத்துண்டால் மட்டும் போதுமா?   கணினி வீட்டிலே சொந்தமா இருக்கணும்.  அப்போத் தான் இதிலே கொஞ்சமானும் சாத்தியம் ஆனால் எனக்குத் தான் கூச்ச சுபாவம் எல்லாம் இல்லையே!  அதனாலே எனக்குத் தோணினபடி எல்லாம் கற்பனையில் மிதந்தேன்.


ஆனால் பாருங்க, இந்த அழகான, அற்புதமான கற்பனைகளுக்கு, அநியாயமா செக் வைச்சது நம்ம ரங்க்ஸ் தான். இதுக்குச் சொந்தமாக் கணினி வாங்கணும்.  நம்மால வாங்க முடியுமா? முதல் கேள்வி! கணினியோட விலையெல்லாம் அப்போ நினைச்சுப் பார்க்கிற லெவலில் இல்லை.  அது இருந்தால் பொண்ணோட முதல் பிரசவத்துக்கு அமெரிக்கா போயிடலாமே! சரியான இடத்தில் கொக்கி போட்டார் ரங்க்ஸ்!


உன்னாலே தினம் தினம் அண்ணாநகர் போய்ட்டு வர முடியுமா? இரண்டாவது கேள்வி!  மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் கோர்ஸ் அப்போ அண்ணாநகரில் தான் நடத்தினாங்க.  தினம் மதியம் போயிட்டு வரணும்.  அப்போ  குடும்பக் கவலைகள்னு சொல்ல முடியாட்டியும் பொறுப்புகள் இருந்தன. ஆகவே கணினி கோர்ஸுக்கான கட்டணம், அம்பத்தூரில் இருந்து அண்ணாநகருக்கு தினம் போயிட்டு வரக்கூடிய செலவுனு யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.  மூணாவது கேள்வியைப் போட வேண்டிய அவசியமே ரங்க்ஸுக்கு ஏற்படலை! :))))

நம்ம ரங்க்ஸ் எதையும் தன் வாயால் வேண்டாம்னு சொல்லவே மாட்டார்.  இதை எல்லாம் எடுத்துச் சொல்லி, "நீ புத்திசாலி! யோசிச்சுக்கோ!" அப்படினு சொல்லிடுவார்.   நாமளே வேண்டாம், விடுங்கனு சொல்றாப்போல ஆயிடும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஒரு  ஐஸ்னு புரிஞ்சுக்கவே பல வருஷங்கள் ஆயிடுச்சு! மரமண்டை தானே!   :P :P :P ஆகவே ஆவலை அடக்கிக் கொண்டு விட்டேன்.  கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆசை என்னமோ மனசில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு தான் இருந்தது.   அதுவரை கணினியைப் பார்த்ததில்லை.   உங்களை எல்லாம் நான் இப்படிப் படுத்தணும்னு விதி இருக்கிறச்சேச் சும்மா விடுமா! பையர் உசுப்பேத்தி விடவே, நானும் பிடிவாதம் பிடிச்சேன்.  அதோட பாருங்க, எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லையே! :))))

ஒரு நாள் காலை தினசரியோட வந்த விளம்பர அறிவிப்புகளில் ஒண்ணு அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இல்லத்தரசிகள்,படிச்சுட்டுச் சும்மா இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை கணினி அறிவு கற்றுக் கொடுக்கப்படும்னு சொல்லி 20 மணி நேரம் கத்துக்கறவங்களுக்கு அதே 20 மணி நேரம் இலவசமாய் ப்ரவுசிங் செய்துக்கலாம்னு சொல்லி இருந்தாங்க. அடிச்சது நல்லதொரு வாய்ப்பு, விடுவேனா!  ரங்க்ஸ் ஆப்பீச்சு போறச்சே அவரோட வண்டியிலே தொத்திக்கொண்டேன்.  அவருக்கு என்னமோ இஷ்டமில்லை தான்.  உன்னாலே எல்லாம் முடியாதுனு புலம்பிட்டே வந்தார்.  என் கிட்டே கெட்ட பழக்கம் என்னன்னா, யாரானும் உன்னால முடியாது இதுனு சொல்லிட்டாப் போதும் ;  அதைச் செய்தே காட்டணும்னு ஒரு வீராப்பு வரும்.  அப்படி ஒரு சமயம் இப்போ, விடாதேனு ம/சா. அடிச்சுச் சொல்லவே அதன் குரலுக்குக் கீழ்ப்படிந்தேன்.


எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது! உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ, அப்படி! :))))))

ஹிஹிஹி, தாங்க்ஸ் ஶ்ரீராம், கூச்ச சுபாவம் பயனுக்கு!

29 comments:

  1. சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க. நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. // "நீ புத்திசாலி! யோசிச்சுக்கோ!" // அப்பவே நன்றாக புரிந்து வைத்துள்ளார்...!

    அனைவருக்கும் இருக்க வேண்டிய கெட்ட பழக்கம்...! வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது ஒரு ஐஸ்னு புரிஞ்சுக்கவே பல வருஷங்கள் ஆயிடுச்சு!//
    ஹையா ஹையா!

    ReplyDelete
  4. உங்களுக்குக் கூச்ச சுபாவம் இல்லை என்பதை கூச்சத்துடன் ஒப்புக் கொள்கிறேன்! :)) நீங்கள் இன்னும் எந்த 5 பேரையும் அழைக்கவில்லை என்பதால், தொடரும் அறிவிப்பு இல்லாமலேயே இது தொடரும் என்பது தெரிகிறது! ஆனால் ஒண்ணு! தொடர் பதிவை தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர் பதிவாக்கிய முதல் பெருமை எனக்குத்தான்! grrrrrrr போல ராயல்டி உண்டாக்கும்!

    //அவரோட வண்டியிலே தொத்திக்கொண்டேன்//

    ஓ... உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியாதா? வராதா?

    //என் கிட்டே கெட்ட பழக்கம் என்னன்னா, யாரானும் உன்னால முடியாது இதுனு சொல்லிட்டாப் போதும்..........................//

    :))))))))))))

    ReplyDelete
  5. தலைப்பு அசத்தல்.
    கற்றுக் கொண்டு நீயா, நானா என்று கணினியிடம் கேட்பது போனற படம் அருமை.
    ஸ்ரீராம் கேள்வி பார்த்தீர்களா?
    வண்டி ஓட்டுவது ஒன்றும் உங்களுக்கு கஷ்டம் இல்லை.
    உங்கள் சாதனை வாழ்க!

    ReplyDelete
  6. //எத்தனை பதிவு வரும்னு இப்போச் சொல்ல முடியாது! உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ, அப்படி! :))))))//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    இதுதான் சான்ஸ் என்று சும்மா ஜாலியா எழுதித்தள்ளுங்கோ.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. சுவாரஸ்யம். தொடருங்கள்.

    ரசிக்க காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  8. சுவாரஸ்யமாக ஆரம்பிச்சிருக்கே கணினி அனுபவங்கள். தொடர்கிறேன்.

    இங்கயும் அதே நிலைமை தான். நேரிடையாக முடியாது என்று சொல்லாமல் உன்னால முடியுமா யோசிக்கோ தான்...:))) ஆனா அதே சமயம் இந்த வேலையை கட்டாயம் இன்று செய்தே ஆக வேண்டும் என்று இதுவரை சொன்னதேயில்லை. இன்று செய்தால் நல்லா இருக்கும்...அப்படித்தான்...:)))

    ReplyDelete
  9. அட்டகாசம்!

    (சாமி கும்பிடாம உங்களால இருக்க முடியாதுங்கறேன்.. :)

    ReplyDelete
  10. வாங்க கெளதமன் சார், வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  11. வாங்க டிடி,

    /அப்பவே நன்றாக புரிந்து வைத்துள்ளார்...!//

    நான் அசடுனு தானே, ஆமாம், ஆமாம்! :)))))

    ReplyDelete
  12. வாங்க வா.தி. ஜாலியா இருக்குமே! சந்தோஷமா! :P:P:P:P

    ReplyDelete
  13. வாங்க ஶ்ரீராம், அப்படி எல்லாம் சீக்கிரம் முடிச்சுடுவேனா என்ன! நோ ராயல்டி, நாங்க நிறையத் தொடர்பதிவு எழுதி இருக்கோமாக்கும்! :))))

    வண்டி ஓட்ட வராது! எல்லாத்துக்கும் மேலே வண்டி ஓட்ட விடமாட்டாங்கங்கறதே சரியானது. :))))))

    ReplyDelete
  14. வாங்க கோமதி அரசு, இதெல்லாம் சாதனைன்னா, உண்மையிலேயே சாதனை பண்ணறவங்க இருக்காங்களே! :)))))

    ReplyDelete
  15. ஹிஹிஹி, வண்டி ஓட்டுவது எனக்குக் கஷ்டம் இல்லை தான்; ஆனால் தெருவிலே போறவங்க????? ஹிஹிஹி!

    ReplyDelete
  16. வைகோசார், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  17. வாங்க மாதேவி, வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  18. வாங்க கோவை2தில்லி, அதே, அதே, நீங்க சொன்னது தான்.

    முடியுமா, செய்துடுன்னெல்லாம் சொல்ல மாட்டார். பாரு, யோசிச்சுக்கோ, தள்ளிப் போட்டாச் சரியா வருமானு எல்லாம் கேட்டுப்பார்! :)))))

    ReplyDelete
  19. ஆஹா, அப்பாதுரை, ரொம்ப நாள் கழிச்சு, எங்கே ஒளிஞ்சுட்டு இருந்தீங்க??? :)))
    ஹிஹிஹி, உங்க கேள்விக்கு பதில்,

    கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா?
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.//

    அப்படினு இருந்துடுவேனாக்கும்! என்னனு நினைச்சீங்க என்னை?? :)))))))))))

    ReplyDelete
  20. சுவையான அனுபவங்கள்....

    தொடர் பதிவுக்கு தொடரும் போட ஆரம்பிச்சாச்சு எல்லாரும்..... [ஸ்ரீராம், பழனி. கந்தசாமி, இப்ப நீங்க!]......

    என்னையும் எழுதக் கூப்பிட்டு இருக்காரு ஸ்ரீராம்..... ம்ம்ம்ம்... எழுதணும்!

    ReplyDelete
  21. //அப்படினு இருந்துடுவேனாக்கும்!
    good shot.

    ReplyDelete
  22. அசத்தல் பதிவு. இத்தனை நேரத்துக்கு ஸ்ரீராமோட கூச்ச ஸ்வபாவம் ஓடிப்போயிருக்கும்:)
    மிரட்டி மிரட்டியே வேலை கற்றுக் கொண்டீர்களா:)
    நானும் பெண்ணுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்தபிறகு தான் கணீனி வாங்கினேன்.
    யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை:(

    ReplyDelete
  23. வாங்க வெங்கட், எழுதுங்க, ரொம்பவே நகைச்சுவைனா ஒரு சுட்டி கொடுத்துடுங்க. நான் வந்து பார்க்கிறதுக்குள்ளே மாமாங்கம் ஆயிடும். :)))))

    ReplyDelete
  24. அப்பாதுரை,

    நன்னி ஹை! :))))

    ReplyDelete
  25. அசத்தல் பதிவு. இத்தனை நேரத்துக்கு ஸ்ரீராமோட கூச்ச ஸ்வபாவம் ஓடிப்போயிருக்கும்:)//

    வாங்க வல்லி, ஹிஹிஹி, இந்த வாரம் வம்புக்கு ஶ்ரீராம் மாட்டிண்டார். வேறே யாரும் கிடைக்கலை! :)))))

    ReplyDelete
  26. பேஷ் பேஷ், எப்படி இது போல கலக்கிண்டு இருக்கீங்கன்னு இப்பத்தான் தெரியறது....பாவம் மாமா!

    ReplyDelete
  27. எல்லா ரங்கஸ் ஸும் எப்படி ஒரே மாதிரி இருக்காங்க? எல்லா தங்க்ஸ் ஸும் ஒரே மாதிரி இருக்கறதனாலேயோ?

    ஸ்ரீராம் பாவம், இன்னொரு தடவை கூச்சம் என்ற சொல்லையே சொல்ல மாட்டார் பாருங்க!

    நகைச்சுவை அபாரம்!என்ன ஒரு அனாயசமான நடை! அசத்தல், கலக்கல்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. என்னாது, மதுரையம்பதியா?? அதாரு புதுசா??? எந்தூரு?? :P:P:P:P

    ReplyDelete
  29. வாங்க ரஞ்சனி, ஹிஹிஹி, ஶ்ரீராம் வாழ்க்கையே வெறுத்துட்டார்னு கேள்வி! :))))) கூ னு குயில் கூவினாக் கூடப் பயப்படறாராம். கூச்சம்னு சொல்லிடப் போறதேனு! :))))))

    ReplyDelete