எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 10, 2013

அயோத்தியை நோக்கி! குப்தார்காட்டிலும், நந்திகிராமத்திலும்!

சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போதே ஆட்டோக்காரர் வந்து கூப்பிடுவதாக ரிசப்ஷனிலிருந்து தொலைபேசி அழைப்பு வர, உடனடியாகக் கிளம்பினோம்.  சாலை சரியாக இல்லாததாலும், விரைவில் இருட்டி விடுவதாலும் செல்ல வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கிலே சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாலும் சீக்கிரம் சென்றால் தான் மாலை ஏழுக்குள் வர இயலும் என ஆட்டோ ஓட்டுநர் கூறக் கிளம்பிவிட்டோம்.  முதலில் சென்றது குப்தார்காட் என்னும் சரயு நதி தீரம்.

http://sivamgss.blogspot.in/2008/08/85.html/கதை கதையாம் காரணமாம்/ராமாயணம்

http://sivamgss.blogspot.in/2008/08/86.html

http://sivamgss.blogspot.in/2008/08/87.html

ஶ்ரீராமர் எந்தச் சூழ்நிலையில் சரயுவில் மூழ்கி மறைய நேர்ந்தது என்பதை என் "கதை கதையாம் காரணமாம்--ராமாயணம்" தொடரின் மேற்கண்ட சுட்டிகளில் காணலாம். (ஶ்ரீராம் கேட்டதினால் இந்த வரிகள் விட்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன், மன்னிக்கவும்.)


 அயோத்திக்கு மேற்கே உள்ள சரயு தீரத்தில் ஶ்ரீராமர் சரயுவில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது.  அது குறித்த விளக்கங்களை ஏற்கெனவே எழுதி விட்டதால் சுட்டிகளை மட்டுமே அளித்துள்ளேன். ஹிந்தியில் "குப்த்" என்றால் மறைவாக, ரகசியமாக என்றெல்லாம் பொருள்படும்.  இங்கே தான் ராமர் மறைந்தார் என்பதால் குப்தார்காட் என இதை அழைக்கின்றனர்.  இங்கே நதிக்கரையில் ஒரு கோயிலும் இருக்கிறது.  இது தான் மதராசி மந்திர், அம்பாஜி மந்திர் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில் என அறிந்தேன்.  ஆனால் நாங்கள் சென்ற நேரம் மணி மூன்று.  கோயிலை நான்கு மணிக்கு மேல் தான் திறப்பார்களாம். வெளியில் இருந்தே சில சந்நிதிகளை மட்டும் தரிசித்தோம். அவை கீழே.  சிவன் சந்நிதி மட்டும் பார்க்க முடிந்தது.


அதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்துவிட்டார். அயோத்தியின் நிலைமை அப்படி உள்ளது.  எந்த நேரம் எந்த வழியை மூடுவாங்க, அல்லது திறப்பாங்கனு சொல்ல முடியாது. அதோடு இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் வேறே உள்ளன.  அவற்றுக்கு வெவ்வேறு திக்கில் செல்ல வேண்டும். இதுக்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தோம்.



வழியெங்கும் நெல் வயல்கள்.  கரும்புத் தோட்டங்கள்.  செழுமை பொங்கின. இவ்வளவு நீர், நில வசதி இருந்தும் நாடு ஏன் முன்னேறவே இல்லை என்ற கேள்வியும் மனதைத் துளைத்தது.  ஆங்காங்கே வயல்களில் வரப்போரமாகவோ அல்லது சாலைகளின் ஓரமாக வயல் கரையிலோ இயற்கை உரங்கள் மலை போல் குவிந்து கிடந்தன.  எங்கேயும் செயற்கையான உரத்தையே பார்க்க முடியவில்லை.  ஒவ்வொரு வீட்டிலும் அது குடிசையாக இருந்தாலும் குறைந்தது நான்கு பசுக்கள் இருந்தன.

குப்தார்காட்டின் படகுத் துறை.  காலை பார்த்த இடத்திலும் படகுத்துறை இருந்தது.  அங்கே ஆழம், வேகம் குறைவு. இங்கே ஆழம் நாற்பது அடிக்கும் மேல் என்றார்கள்.  வேகமோ வேகம்.  அதான் ராமர் இதைத் தேர்ந்தெடுத்தாரோனு நினைத்தேன்.


 கால்நடைப் பராமரிப்பும் சரி, வளர்ப்பும் சரி அமோகமாக இருப்பதும் தெரிந்தது.  பசுக்கள் மேயப் புல்வெளியும் ஏராளம்.  ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை.  இதை இங்கே ஶ்ரீரங்கத்திலும் பார்க்கலாம்.  பசுக்களுக்கு மாட்டுச் சொந்தக்காரர் அறியாமல் நாமாக ஏதேனும் உணவைக் கொடுத்துவிட முடியாது. கொடுத்தால் அகத்திக்கீரை மட்டும் கொடுக்கலாம். பாழாய்ப் போனதெல்லாம் பசுவன் வயித்திலே என்ற பழமொழி இங்கே எடுபடாது.  ஏன் நீ சாப்பிடேன், என்று திருப்புவார்கள். இது மாட்டின் நன்மைக்கே என்றாலும் முதலில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  பின்னர் பழகி விட்டது.

குப்தார் காட்டிலிருந்து நாங்கள் சென்றது நந்திகிராமம். இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது.  இங்கே அநுமனும், பரதனும் ஆலிங்கனம் செய்து கொள்ளும் சிற்பம் ஒன்றும், அநுமன் சந்நிதியும் உண்டு. பரதன் தவம் இருந்த குகையில் இப்போது ஶ்ரீராமன், பரிவாரங்களோடு கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் அருகேயே இன்னொரு பழமையான கோயில் அது தான் உண்மையான பரதன் குகை என்று சொல்கிறது.  இதைக் கண்டறிந்ததும் விக்கிரமாதித்த அரசன் என்றும் சொல்கிறது. இரண்டையுமே சென்று பார்த்தோம்.  இரண்டாவது கோயிலில் கீழுள்ள குகைக்குச் செல்ல முடியவில்லை.  அநுமதி கொடுப்பதில்லை என்றனர்.  சிலர் அநுமதி கொடுப்பவர் வரவில்லை என்றனர்.  ஆக மொத்தம் பார்க்க முடியவில்லை. 

15 comments:

  1. படித்து விட்டேன். ஏற்கெனவே ஒருமுறை சென்று வந்திருக்கிறீர்களா? பழைய பதிவுகளின் சுட்டி கொடுத்திருக்கிறீர்களே...

    ReplyDelete
  2. வாங்க ஶ்ரீராம், சுட்டிக்காட்டியதுக்கு நன்றி. விட்டுப்போன வரிகளைச் சேர்த்துவிட்டேன். :)))))) கவனிக்கவே இல்லை. :(

    ReplyDelete
  3. என்னடாது? இந்த இழை 'குப்தமாக' போயிடுத்தே என்று பார்த்தேன்.
    '...இவ்வளவு நீர், நில வசதி இருந்தும் நாடு ஏன் முன்னேறவே இல்லை என்ற கேள்வியும் மனதைத் துளைத்தது…'

    ~ வாஸ்தவம். இந்த காட்சியை மேகாலயா, கேரளா, கர்நாடகா, சென்னை அருகில், பல இடங்களில் இந்தியா முழுதும் பார்த்திருக்கிறேன்.

    கேள்விக்கு பதில்:
    1. தரகர் சாம்ராஜ்யம்.
    2. தண்டல்காரனுக்கு சிக்கன்.
    3. அளித்த வாக்குக்கு போக்குக்காட்டும் அரசியல்வாதி.
    4. அசாத்திய அசட்டை குடிமகன்.

    ReplyDelete
  4. //ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை. //

    ஆஹா.... அருமையான பசுக்கள்.

    ReplyDelete
  5. //அதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்துவிட்டார். அயோத்தியின் நிலைமை அப்படி உள்ளது. எந்த நேரம் எந்த வழியை மூடுவாங்க, அல்லது திறப்பாங்கனு சொல்ல முடியாது. அதோடு இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் வேறே உள்ளன. அவற்றுக்கு வெவ்வேறு திக்கில் செல்ல வேண்டும். இதுக்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தோம்.//

    அட்டா, நல்ல பயணம். நல்ல வர்ணனைகள். ;)

    ReplyDelete
  6. // இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது.//

    சந்தோஷமான செய்திகள்.

    நல்ல பதிவும் பகிர்வும். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாங்க "இ" சார், நல் வரவு. அங்கே உள்ள நீர் வளத்தைப் பார்க்கையில் இதை வைத்து ஏன் முன்னேற்றப் பாதையில் செல்லாமல் ஏழ்மையிலும், அதைவிட மோசமாக அறியாமையிலும் மக்கள் இருக்கிறார்களே என்ற கவலை மிகுந்தது உண்மை. :((( மின் வசதி என்பதே கிடையாது. அதிலும் அயோத்தி இருளோ, இருள்! :(((( ஜகஜ்ஜோதியாய் இருக்க வேண்டாமோ?

    ReplyDelete
  8. வாங்க வைகோ சார், பசுக்களுக்கு வேண்டிய தீனி கிடைச்சுடுத்துன்னா அதுங்க ஏன் ப்ளாஸ்டிக்கையும் சுவரொட்டியையும் நாடிப் போகுதுங்க? :((((

    ReplyDelete
  9. ஆமாம் வைகோ சார், பயணம் ரொம்பவே கஷ்டமானது. அதுவும் அந்த ஆட்டோக்ஸி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உடம்பை ஒரு வழி பண்ணிடுது. சீட்டில் சரியாய் உட்காருகிறதுக்குள்ளாக ஆட்டத்தை ஆரம்பிச்சுடும். பெட்ரோலுக்குப் பதிலாக பீரோ, சாராயமோ போடறாங்களோனு நினைக்க வைக்குது! :))))

    ReplyDelete
  10. அட! எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

    சமீபத்திய எனது வட இந்திய சுற்றுலாவின் பின்னணியில் உங்கள் வரிகளின் உண்மை ஆதங்கம் மனசில் ஆழமாக உறைத்தது.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  11. என்னமோ காட்டுல போனேன், காட்டுல போனேன் ந்னு அடிச்சுகிட்டீங்களே? இதன் ghat தான் அந்த காடா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  12. வாங்க ஜீவி சார், தொடர்வதற்கு நன்றி.

    ReplyDelete
  13. @வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  14. சரயுநதி,குப்தார்காட் கண்டுகொள்ளக்கிடைத்தது.

    வீட்டிற்கு நான்கு பசு, பசுமை பார்க்கவே அருமையாக இருக்கும். இவைஎல்லாம் இப்பொழுது காண்பது அரிது.

    ReplyDelete
  15. ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் ஆகிய எல்லா மாநிலங்களிலுமே எருமைகளுக்குக் குறைவில்லை. ஆங்காங்கே பசுக்களுக்கும் உண்டு.....

    செழிப்பான பிரதேசங்களாக இருந்தும் முன்னேற்றம் இல்லை என்பது தான் வருந்த வேண்டிய விஷயம்.

    குப்தார்காட் பார்த்து விட்ட திருப்தி - உங்கள் பதிவின் மூலம்!

    ReplyDelete