எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 15, 2015

பயணங்கள் முடிவதில்லை 3

முன்னர் கடலிலேயே பிரதக்ஷிணம் செய்யுமாறு இருந்த அமைப்பிலே இப்போது சுவர் எழுப்பி இம்மாதிரிப் பாதை ஏற்படுத்தி இருக்கின்றனர். 





முன்பக்கம் இறங்குமாறு வசதி.  ஆனால் குதிக்கத் தான் வேண்டும்.  அதே போல் எதிர்ப்பக்கம் கடலில் இறங்குமாறு வசதி இருக்கிறது.  நாங்கள் அப்படியே சுற்றி வந்து விட்டோம்.  கீழே இறங்கவில்லை.  தண்ணீர் சுத்தமாக இல்லை என்பதோடு மேடை உயரமாக இருக்கிறது.  நவகிரஹ விக்ரஹங்கள் இருக்கும் நீர்த்தேக்கம் அதிலிருந்து ஆழத்தில் இருக்கிறது. 




கீழே இறங்கிச் சுற்றி வரும் நபர்களைப் பார்க்கலாம். நாங்கள் இறங்கவில்லை.



இந்த நவபாஷாணச் சிலைகள் அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்ட கற்கள் ஶ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாய்க் கூறுகின்றனர்.  இவற்றை இங்கே அமைப்பது என்பது எளிதல்ல.  நவபாஷாணக் கட்டு என்பது சித்தர்களால் மட்டுமே செய்யக் கூடியது.  ஏனெனில் ஒவ்வொரு பாஷாணக் கட்டும் ஒவ்வொரு கிரஹத்தின் தன்மையைக் கொண்டு அமைக்கப்படுகிறது.  இவற்றிலிருந்து உருவாகும் சூக்ஷ்மமான கதிர்விச்சு, கட்டுபவரின் மனோநிலையை மேம்படுத்துவதோடு அந்த தெய்வச் சிலைகள் நவகிரஹத்தின் சக்திகளையும் பெற்று விடுகின்றன.  நம் உடலில் உள்ள ஒன்பது ஆதாரங்களோடு தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. ஆதாரங்களின் சக்தியை ஒருமுகப்படுத்தி இந்த விக்ரஹங்கள் மேல் செலுத்தப்பட்டதாகவும் ஒரு கூற்று.  ஆகவே சித்தர்களின் இந்த மனோநிலையால் இங்கு வந்து இந்த விக்ரஹங்களைத் தொட்டு வழிபட்டுச் செல்லும் மனிதர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு இருந்ததாகச் சொல்லப்பட்டு வந்தது. இப்போது இதன் புனிதம் சுத்தமாக இல்லை என்றே கூற வேண்டும்.

ஶ்ரீராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த இடத்தில் ஒன்பது கற்கள் இருந்த இடத்தில் இப்போது காணப்படுவது ஐந்து அல்லது ஆறுதான். மற்றவை தண்ணீருக்குள்ளே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் இருந்தது. ஶ்ரீராமனின் சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலமாகவும் சொல்லப்படுகிறது.

புராணம் சொல்வது என்னவெனில் மஹிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் மூலம் தேவர்களைத் துன்புறுத்துகிறான். தேவர்கள்  எவராலும் அவனை எதிர்க்க இயலாமல் ஆதி பராசக்தியிடம் தஞ்சம் புகுந்தனர். ஆதிபராசக்தி மஹிஷாசுரனை வதம் செய்ய வர, அசுரன் இங்குள்ள சக்ர தீர்த்தத்தில் மறைந்து கொள்ள, தேவி  சக்ர தீர்த்தத்தை வற்ற வைத்து அசுரனை சம்ஹாரம் செய்வதாகச் சொல்கிறது. தேவர்கள் மகிழ்ந்து அமிர்த தாரை பொழியச் செய்கின்றனர்.  அன்று முதல் இது தேவியின் பெயரால் தேவி பட்டினமாக அழைக்கப்படுகிறது.  ராவண வதத்துக்காகத் தென் திசை நோக்கி வந்த ஶ்ரீராமர் கடல் கடந்து சென்று யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் ராமநாதபுரத்திலுள்ள உப்பூரில் விநாயக வழிபாடு செய்கின்றார்.  உப்பூரிலுள்ள வெயிலுகந்த விநாயகர் ஶ்ரீராமர் வழிபட்டதாக வரலாறு. அதன் பின்னர் தேவி பட்டினம் வந்து கடலில் நவகிரஹப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கின்றனர்.  இங்கே நாமே அபிஷேஹம், அர்ச்சனைகள் போன்றவை செய்து கொள்ளலாம் என்றே இருந்து வந்தது.  இப்போது புரோகிதர்கள் வந்து செய்கின்றனர். 

19 comments:

  1. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி புதுவை வேலு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  2. ப்ரோகிதர்களும் உள்ளே இறங்கி பூஜை செய்வார்களா? இடம் பார்க்க நன்றாய் இருக்கிறது.

    இனிய பொங்கல் நல வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உள்ளே இறங்கலாம் ஶ்ரீராம். புரோகிதர் என்று தான் பெயரே தவிர அவர் உண்மையாகப் புரோகிதம் செய்பவரா என்பது சந்தேகமே. பழக்க தோஷத்தினால் ஏதேதோ சொல்லிக் காசு சம்பாதிக்கிறார் என்றே தெரிகிறது. :(

      Delete
    2. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  3. புராண வரலாறு அறிந்தேன் அம்மா...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  4. நல்ல தகவல்....... தொடர்கிறேன்.


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  5. அருமையான பயண இலக்கியம்.

    ReplyDelete
  6. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க காசிராஜலிங்கம். நல்வரவு. பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  7. இது தேவிப்பட்டினத்திலா?.. ராமேஸ்வரம் இரு முறை சென்றிருந்தும் தே.ப., தனுஷ்கோடி எல்லாம் போய்ப் பார்த்ததில்லை.

    ஊர் பேரை நினைத்தாலே இப்போலாம் அந்த ஊர் தொடர்பாய் யாராவது எழுத்தாளர் இருந்தால் அவர் பெயர் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. தனுஷ்கோடி ராமசாமி.. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.. ஆ.வி.யில் கொடிகட்டிப் பறந்தவர்.

    ராமேஸ்வரத்தில் வசதியான சத்திரங்கள் உண்டே?..

    'பயணங்கள் தொடர்கதை' என்று தலைப்பு இருந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார். ஒவ்வொரு முறை ராமேஸ்வரம் போறச்சேயும் தேவிப் பட்டினம் போயிருக்கோம். அப்போ இருந்த அழகு இப்போ இல்லை. அதுவும் தனுஷ்கோடி மௌனமாக சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தது. இப்போது வறட்டுக் குரலில் வியாபாரம் செய்து வருகிறது. :( அதிர்ச்சியாக இருந்தது பார்க்கவே! ராமேஸ்வரத்தின் சத்திரங்களில் , ஹோட்டல்களில் எங்கும் இடம் இல்லை. நாங்க போனது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை சமயம். ஐயப்ப பக்தர்கள் கூட்டம் வேறே. வாரக் கடைசி நாட்களான சனி, ஞாயிறு எல்லாம் சேர்ந்து கொண்டது.

      Delete
  8. தேவி பட்டினம் இப்போது மாறி உள்ளது நாங்கள் படகில் போய் இறங்கி பார்த்தோம். இப்போது கீழே இறங்காமல் சுற்றி வந்து வணங்கினால் போதும் , நடைபாதை அமைத்து இருக்கிறார்களே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சுற்றிலும் வளைவாகப் பாதை போட்டிருக்கின்றனர். நல்லவேளையா இன்னும் நுழைவுக் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கவில்லை. விரைவில் அதுவும் ஆரம்பிக்கலாம்! :)

      Delete
  9. பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், நன்றிப்பா.

      Delete