எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 14, 2018

ஆகையினால் திட்டுங்கள்!

அம்பிகையைப் பத்தி எழுதிட்டு என்னடா இதுனு நினைக்கிறீங்க இல்லையா? சமீபத்தில் நிறையக் குழந்தைகள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டோ அல்லது தற்கொலைக்கு முயன்று பின் பிழைத்தவர்களாகவோ இருக்கின்றனர்.  முன்னெல்லாம் குழந்தைகளைத் திட்டியும், அதட்டியும் வளர்த்தனர். பள்ளி ஆசிரியர்களிடம் கூடப் பெற்றோர் வந்து நன்கு கண்டித்துச் சொல்லுங்கள் எனச் சொல்வது உண்டு. இது என் பள்ளிக்காலத்தில் எனக்குப் பலமுறை நடந்திருக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் மாணவனையோ, மாணவியையோ ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அதனால் அவர்கள் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தற்கொலை என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர். சமீபத்திய ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு பள்ளி மாணவி தன் தாய் தொலைக்காட்சி பார்க்காமல் படி என்று சொன்னதால் ஆரஞ்சு ஜூஸில் விஷம் கலந்து குடிக்க முயன்றிருக்கிறாள். இப்போதைய பெற்றோருக்குத் தங்கள் குழந்தைங்களைத் திட்டாமல் வளர்ப்பதில் பெருமையும் இருக்கிறது.

ஆனால் மனநல ஆய்வு சொல்லுவது இத்தகைய மனப்பான்மை குழந்தைகளுக்குத் தோல்விகளை எதிர்க்கும் மனப்பான்மையைத் தூண்டி விடாமல் தோல்விகளைக் கண்டு துவளும் போக்கையேஏற்படுத்துகிறது. குழந்தைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கண்டித்தால் தான் அவர்கள் எதையும் தாங்கும் மனம் பெறுவார்கள். ஒரே குழந்தையாக வேறே பிறந்து வளர்வதால் அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது என்றால் என்னவென்றே தெரிவதில்லை. தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கும் குணமும் இருப்பதில்லை. ஒருவரை ஒருவர் அனுசரித்துக் கொண்டு வாழும் மனப்பாங்கையே காணமுடிவதில்லை. மேலும் தான் கேட்பது அனைத்தும் கிடைத்துவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரிவதால் அவர்களால் சின்ன ஒரு ஆசை நிறைவேறாவிட்டாலும் அதைத் தாங்கும் மனோபலம் இருப்பதில்லை.

இதற்கு மூலகாரணம் பெற்றோர் வளர்ப்பே தான். பெற்றோர் பலரும் தாங்கள் அடி வாங்கி வளர்ந்ததால் தங்கள் குழந்தைகளுக்குக் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோஷமாக வாழ வைக்கிறோம் என நினைக்கின்றனர். அது முழுத் தவறு. கேட்டது உடனே கிடைக்காது என்பதை ஏற்றுக்கொள்வதோடு அது நமக்குத் தேவையா என்றும் குழந்தை யோசிக்க வேண்டும். குழந்தைகளின் தவறுகளைப் பெற்றோர் கண்டிக்க வேண்டும். இந்தத் தவறைச் செய்யாமல் இருந்தால் குழந்தைக்கு அந்த வார இறுதியில் மதிப்பெண்கள் மாதிரி கொடுத்து மாதம் முடிவில் ஊக்கத் தொகை கொடுக்கலாம். அந்த ஊக்கத் தொகையையும் குழந்தை உடனே செலவழிக்காமல் சேமித்து வைத்துப் பின்னர் தான் விரும்பும் பொருளை வாங்கினால் அதன் அருமை குழந்தைக்குப் புரியும். இப்போதைய மனநல மருத்துவர்கள், "குழந்தையைத் திட்டிக் கண்டித்து வளருங்கள்!" என்றே சொல்கின்றனர்.

எல்லாக் குழந்தைகளுக்கும் உறுதியான மனோபலம் இருக்காது. ஆகவே எப்படி வளர்த்தாலும் ஒழுங்காக வளரும் குழந்தைகள் சிலர் இருக்கலாம். அவங்க அடிப்படையிலேயே எதையும் தாங்கும் மனோபலம் கொண்டிருப்பார்கள். ஆனால் பெரும்பான்மைக் குழந்தைகள் அப்படி இல்லை. ஆகவே உங்களால் முடிந்தவரை குழந்தைகளை அதன் தவறுக்காகக் கண்டியுங்கள். சிறு தண்டனை கொடுங்கள்.உதாரணமாக இதை முடித்தால் தான் விளையாடப் போகலாம். இதைச் செய்தால் தான் வார இறுதியில் கார்ட்டூன் பார்க்கலாம் என்பது போன்ற சிறு பரிசுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். குழந்தை நாம் சொன்னபடி செய்யவில்லை எனில் கேட்டது கிடைக்காது என்பதை அதை உணரச் செய்யுங்கள்.  ஆகவே திட்டுங்கள்! கண்டியுங்கள்.  அம்மா திட்டுவாங்க, அப்பா திட்டுவாங்க என்பதைக் குழந்தை உணர வேண்டும். சின்னஞ்சிறு செடிகளான குழந்தைகளுக்கு வேலி போட்டு வளர்த்தால் தான் நாளை ஊரையே காக்கும் விருட்சமாக மாறும்.  அடியும் திட்டும் வாங்கிக் கண்டித்து வளர்க்கப்பட்ட நாம் நம் குழந்தைகளுக்கு ஓர் முன்மாதிரியாகத் திகழவேண்டும். அப்பாவோ, அம்மாவோ அடிப்பதோ, திட்டுவதோ குழந்தைகளின் நலனுக்காகவே என்பதை அவர்களுக்கு மட்டுமில்லாமல் சுற்றி இருப்போர்க்கும் புரிய வைக்க வேண்டும். 

52 comments:

  1. சரியாக சொன்னீர்கள் அம்மா... இது ஒரு பக்கம் என்றால், இதை விட கொடுமை ஓரவஞ்சனை செய்வது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், டிடி இந்த ஓரவஞ்சனையால் நானும் பாதிக்கப்பட்டிருக்கேன். கதை போல இருக்கும்! :) வாழ்க்கையில் எல்லாம் கடந்து தானே வர வேண்டி இருக்கு!

      Delete
    2. 'ஓரவஞ்சனை' - ஒரு குழந்தைக்கு மேல் உள்ள குடும்பத்தில் இதனைக் கடந்துவராமல் இருக்க முடியாது. ஆனால் 'நம் ப்ராப்தம்' என்ற எண்ணம்தான் இதனை சகிக்க வைக்கும். எவரும் தங்கள் எல்லாக் குழந்தைகளையும் சமமாக நடத்துவது என்பது மனிதர்களுக்குச் சாத்தியமே இல்லாத விஷயம். எதையாவது சொல்லி நாம் ஜஸ்டிஃபை செய்ய நினைப்போம். ஆனால் சமமாக நடத்துவது மனிதர்களுக்குச் சாத்தியமல்ல.

      Delete
    3. நம் குழந்தைகளில் ஒன்று குடும்பத்தில் ஒருவரைக் கொண்டிருக்கும். இல்லை, அப்பா சப்போர்ட்டராக இல்லை அம்மா சப்போர்ட்டராக இருக்கும். இது மாதிரி குண இயல்புகள் வேறுபடுவதால், 'தாய்மை' என்பதையும் தாண்டி, ஒரு சிலரைப் புறம் தள்ளுவதற்கும் ஒரு சிலரை கொஞ்சம் அதிகமாகக் கொஞ்சுவதற்கும் ஏதுவாக அமைந்துவிடுகிறது. காரணங்களை யோசித்தால் நாமே கண்டுபிடித்துவிடலாம்.

      Delete
    4. நெல்லை! ஓரவஞ்சனை என்பது பெற்றோர் செய்வது மட்டுமில்லை. உற்றத்தார் செய்வதும் சேர்ந்தது. ஆனால் எங்க வீட்டில் அப்பா எங்க மூணு பேருக்கும் சாப்பாடு, பக்ஷணங்கள், தீபாவளிப் பட்டாசு என ஒரே மாதிரிக் கொடுப்பார். அதே தீபாவளித் துணி எடுக்கையில் எனக்குக் கொஞ்சம் விலை அதிகமாகவே அமையும். படிப்பு என வரும்போது நான் நல்லாப் படிச்சாலும் என் அண்ணா, தம்பிக்குத் தான் முக்கியத்துவம். நீ படிச்சு என்ன பண்ணப் போறே என்று அலட்சியமாய்ச் சொல்வார். இது ஒரு விதத்தில் ஓர வஞ்சனை என்றே நான் சொல்வேன். ஆனால் அப்போல்லாம் இதை யாருமே ஒத்துண்டதில்லை. ஆண்பிள்ளைகளுக்குச் சரியாப் போட்டி போடறா பாரு இப்போவே என்பார்கள்!

      Delete
    5. //காரணங்களை யோசித்தால் நாமே கண்டுபிடித்துவிடலாம்.// என்னைப் பொறுத்தவரையிலும் வெளிப்படையான தன்மையே அனைவரின் வெறுப்புக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. மறைச்சுப் பேசவோ முதுகுக்குப் பின்னால் பேசவோ தெரியலை! :( இது என்னோட பலவீனமாகக் கூட இருக்கலாம்.

      Delete
    6. //வெளிப்படையான தன்மையே// - வெளிப்படையா இருப்பதும் உண்மையைப் பேசுவதும் ரொம்ப நல்ல குணங்கள். அவங்களுக்கு எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டிய (யார்ட்ட யாரைப் பத்தி என்ன சொன்னோம், இவர்ட்ட என்ன சொன்னோம்னுலாம்) அவசியமே கிடையாது.

      ஏதோ உங்க காலத்துலதான் அப்படின்னு இல்லை. நானும் சில சமயம், பெண்ணைவிட ஆணுக்குப் படிப்பு முக்கியம்னு நினைக்கறவந்தான். மெதுவாத்தான் இந்த எண்ணங்கள் என்னிடம் மாறிக்கொண்டுவருகிறது.

      Delete
    7. எங்க வீட்டில் அதிகம். ஒழுங்கான பேனா, பென்சில், ஜியோமிதிப் பெட்டி போன்றவை கூடக் கிடைக்காது! பள்ளியிலே ஆசிரியர் திட்டறாங்கனு சொன்னால், "திட்டு வாங்கிக்கோ! எனக்கு என்ன? வாங்கித் தர முடியாது! வேணும்னா படிப்பை நிறுத்து!" என்பார் என் அப்பா! :( அதனாலேயே என்னால் கணக்கில் கவனம் செலுத்த முடியாமல் போனது! :(

      Delete
  2. மேலும் தான் கேட்பது அனைத்தும் கிடைத்துவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரிவதால் அவர்களால் சின்ன ஒரு ஆசை நிறைவேறாவிட்டாலும் அதைத் தாங்கும் மனோபலம் இருப்பதில்லை.//

    ஆமாம் அக்கா....சரியே...

    திட்டுவது என்பது வரம்புக்கு மீறிய வார்த்தைகளைச் சொல்லித் திட்ட வேண்டியது இல்லை...ஆனால் தவறைச் சுட்டிக்காட்டி விளக்குவது கண்டிப்பாக வேண்டும். அதே சமயம் தோல்விகளை எதிர்நோக்கும் சக்தியையும் வளர்க்க வேண்டும். வீட்டில் அதீதமாகத் திட்டவில்லை என்றாலும் சமுதாயத்தில், பள்ளியில், இல்லை பொது இடங்களில் சில சமயம் திட்டுகளை வாங்கும் நிகழ்வு நடக்கலாம்...அதை ஃபேஸ் பண்ண வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கத்தான் வேண்டும்.

    //கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களை சந்தோஷமாக வாழ வைக்கிறோம் என நினைக்கின்றனர். அது முழுத் தவறு. //

    யெஸ் யேஸ்....அதற்கு அப்புறம் வரும் கருத்தும் அதே அதே...நான் இப்ப ரீஸன்டா அமெரிக்காவில் இருக்கும் என் தங்கை பெண் தன் குழந்தைகளைப் பற்றி சொல்லி (21/2 வயது மற்றும் ஒரு வயது நிரம்பியகுழந்தைகள்.) வளர்ப்பது பற்றி பேசிய போது நான் சொன்னது அடுத்த வரிகளை. பணம் இருக்கு என்பதால் குழந்தைகள் பார்ப்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதே. நீயாகவும் வாங்கிக் கொடுத்துப் பழக்காதே...வாங்கும் முன் யோசி...பெரியவன் நன்றாகப் புரிந்து கொள்வதால் அவனை யோசிக்க வை...வேண்டுமா என்று...அது இல்லாமல் இருக்க முடியுமா என்று ...நோ சொல்லக் கற்றுக் கொள் என்று சொல்லி...இந்த நோ சொல்லாததால் டீன் ஏஜ் வந்த ஒரு பையன் தான் நினைத்தது, கேட்பது நடகாததால் எப்படி டிப்ரஷனுக்குப் போகிறான் எனவே நோ சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு குழந்தைகள் மன நல மருத்துவர் ஆய்வு செய்து போட்டிருந்த படங்களுடன் கூடிய வீடியோவையும் அனுப்பிக் கொடுத்தேன்...

    என் மகனுக்கு இப்பவும் சொல்லுவதுண்டு. எது வாங்கினாலும் யோசித்து வாங்கு....வேண்டுமா வேண்டாமா எவ்வளவு யூஸ் ஆகும் என்று யோசித்து வாங்கு என்று.....
    சிறு வயதில் தான் நினைத்தது வேண்டும் என்று "இப்போ" என்று சொல்லி கண்ணீர் வராமல் அழுவான்..(ஹிப்போ எல்லாம் வாங்க முடியாது...வேனும்னா வா ஜூவுக்குப் போய் காட்டறேன் என்று அவனை சிரிக்க வைக்க முயல்வதுண்டு...) அழுகையை நான் கண்டு கொள்ளவே மாட்டேன்...அப்புறம் நிதானமாக அவனுக்குச் சொல்லி விளக்குவதுண்டு...காம்ப்ளான் தான் வேண்டும் என்று அழுவான்...அப்புறம் சொல்லிச் சொல்லி ரொம்பவே சீக்கிரம் மெச்சுராகிட்டான்..

    //குழந்தைகளின் தவறுகளைப் பெற்றோர் கண்டிக்க வேண்டும். இந்தத் தவறைச் செய்யாமல் இருந்தால் குழந்தைக்கு அந்த வார இறுதியில் மதிப்பெண்கள் மாதிரி கொடுத்து மாதம் முடிவில் ஊக்கத் தொகை கொடுக்கலாம். அந்த ஊக்கத் தொகையையும் குழந்தை உடனே செலவழிக்காமல் சேமித்து வைத்துப் பின்னர் தான் விரும்பும் பொருளை வாங்கினால் அதன் அருமை குழந்தைக்குப் புரியும்.//

    உண்டியல் வைத்திருப்பேன் அப்ப எல்லாம்...அதில் சேர்த்து அவனுக்கான தின்ங்க்ஸ் வாங்குவது..என்று...

    // இதைச் செய்தால் தான் வார இறுதியில் கார்ட்டூன் பார்க்கலாம் என்பது போன்ற சிறு பரிசுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.//

    யெஸ் அக்கா பாசிட்டிவான தண்டனைகள் தான் நல்லது....

    அடித்தல், அசிங்கமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டுதல் வேண்டாம் என்று நினைப்பேன்...

    நல்ல பதிவு அக்கா...சூப்பர். நான் அடிக்கடி சொல்லுவது எங்கள் குடும்பத்தில்...குழந்தைகள் உடையோர் கேட்பவர்களுக்கு...

    குழந்தை வளர்ப்பு என்பதுதான் 64 கலைகளிலும் மிக மிக கடினமான ஒன்று என்று நான் நினைப்பதுண்டு...கத்தி மேல் நடப்பது போலத்தான் என்றும் தோன்றும்...குறிப்பாக பருவ வயதுக் குழந்தைகளை...

    ரொம்பவே ரசித்து வாசித்தேன் அக்கா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் குழந்தைகளைக் கண்டிப்புடனும் கவனத்துடனும் நான் வளர்த்தப்போ குழந்தைகளிடமே என்னைக் "கொடுமைக்கார அம்மா" எனச் சொல்வார்கள். நாங்கல்லாம் பத்து பிள்ளைக்கு மேலே பெற்று வளர்க்கலையா என்பார்கள். ஆனால் இப்போ அவங்க வாயாலேயே அந்தக் குழந்தைகள் மாதிரி வராது என்று சொல்லும்படி ஆகி இருக்கு. ஆகவே என்னைப் பொறுத்தவரை எனக்கு இதிலே குற்ற மனப்பான்மை அறவே இல்லை. குழந்தைகளுக்கு வேண்டியதை, அவர்கள் கேட்டதை விலை பெற்ற பொருள் எனில் வாங்கிக் கொடுத்ததில்லை. சின்ன வயசில் எங்க பையர் 3 சக்கர சைகிள் கேட்டப்போக் கூட நாங்க கொடுக்கும் காசோடு அவனுக்குப் பிறர் கொடுக்கும் காசுகளையும் உண்டியலில் போடச் சொல்லிப் பழக்கினோம். பின்னர் உரிய சமயம் வந்ததும் அந்த உண்டியல் காசோடு மேலே கொஞ்சம் குழந்தைக்கு போனஸ் என்று சொல்லிப் போட்டு வாங்கிக் கொடுத்தோம். அப்போது குழந்தை அடைந்த பெருமையும் சந்தோஷமும் ஈடு இணை இல்லாதது.

      Delete
  3. குழந்தைகள் தினத்துக்கான பொருத்தமான பதிவு .
    ஒரே குழந்தையாக இருந்தாலும் கஷ்டம் நஷ்டம் என்று சொல்லிக்கொடுத்து வளரும் பிள்ளைகள் நல்ல முறையில் இருக்கிறாங்கக்கா .
    சொல்ல வெக்கமா இருக்கு :) ஆனாலும் உண்மையை சொல்லணுமே ..என் மகள் தான் பல நேரம் எனக்கு வழிகாட்டி :) வில்லங்கமா ஏதாச்சும் பாலிட்டிக்ஸ் அப்புறம் திருமணமுறைகள் அது இதுன்னு கேள்வி கேப்பா ..பல நேரம் என் வாயை கிளறுவதாகவே அவள் கேள்வி இருக்கும் :) ஏற்கனவே நான் கு கு... வா அவசரப்பட்டு ஏதாச்சும் சொல்லிடுவேன் ஆனா பொண்ணு எப்பவுமே நிதானமா அதே நேரம் நீங்க படார்னு பேசறது செய்றது தப்பான பின் விளைவுகளை ஏற்படுத்தும்னு சொல்லிடுவா ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், அட! ஆமா இல்ல! இன்னிக்கு என்னைப் போன்ற குழந்தைகள் தினம்! :))))) உண்மையில் குழந்தைகளை நாம் வளர்ப்பதில் தான் இருக்கு. என் குழந்தைகளும் என் தவறைச் சுட்டிக்காட்டுவாங்க! என்னையும் அதீத உணர்ச்ச்சிவசப்படுகிறேன் என்பார்கள். :) ஆனால் மருமகள் நேர்மாறாக அம்மா தான் நிதானம் அவங்க வேகமாகச் செய்வதால் அவசரம்னு நினைக்கறீங்க! அப்பா தான் ரொம்ப எமோஷனல் என்பாள். :)

      Delete
    2. நாங்கள் மஸ்கட்டிலிருந்து இந்தியா வந்த புதிதில் முதல் வருடம் இருவரையும் பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பினேன். அடுத்த வருடம் காலையில் மட்டும் அட்டோ, வரும் பொழுது எம்.டி.சி.பஸ், இதற்கு நண்பர்கள் சிலர், "ஐயோ! குழந்தைகளை இப்படி படுத்துகிரீர்களே?" என்றார்கள். மூன்றாவது வருடத்திலிருந்து இருவருக்குமே சைக்கிள் வாங்கி கொடுத்து விட்டோம்.

      Delete
    3. எங்கள் குழந்தைகள் எல்லாம் அம்பத்தூரில் இருந்து பட்டாபிராம் மிலிடரி சைடிங்கில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குத் தினமும் போய் வருவார்கள். சுமார் பதினைந்து கிலோ மீட்டர்ப் பயணம்! ரயிலில் தான் போகணும்! நல்லவேளையா அப்போ மின்சார ரயில் வந்துவிட்டது! என்றாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் தான் பட்டாபிராம் சைடிங் போகும்! ஆகவே அந்த 7-- 45 வண்டியை விட்டால் அன்னிக்குக் குழந்தைகள் பள்ளிக்குப் போக முடியாது. ரயில் என்றாவது தாமதம் ஆகி இவங்க பள்ளியின் வருகை மணி கடைசித் தரம் அடிக்கையில் உள்ளே போகலைனால் அப்படியே திருப்பி அனுப்புவாங்க! வாயில் கதவு அருகே இதற்கென ஒரு ஆசிரியை நின்று கொண்டு கண்காணித்து மாணவ மாணவிகள் சரியான நேரம் வரலைனால் திரும்ப அனுப்புவாங்க எச்சரிக்கையுடன்! மூன்றாவது எச்சரிக்கையில் பள்ளியில் இருந்து டி.சி. தான்! இதற்கெல்லாமும் சேர்த்து நிறையவே வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கேன். அதிசயமாப் படிக்க வைக்கிறா என்பார்கள்.

      Delete
  4. உண்மை. சரியாகச் சொன்னீர்கள். தோல்விகளைத் தாங்கும் பழக்கத்தை முதலிலேயே ஏற்படுத்த வேண்டும். சக ஜீவனை, ஆ பெண்ணையும், பெண் ஆணையும் மதிக்க முதலிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். தவறு செய்தால் அது தவறு என்று எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டும். குழந்தைகளின் முன்னிலையிலேயே நெகட்டிவ் ஆக பேசக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், நீங்க சொல்வது சரியே! அடுத்த பாலினத்தை மதிக்கக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமில்லாமல் ஆண் பிள்ளைகளையும் வீட்டு வேலைக்குப் பழக்கப்படுத்த வேண்டும். இதெல்லாம் கௌரவக் குறைச்சல் என என் புக்ககத்தினர் சொன்னது உண்டு! ஆனால் பெண் எப்படி சுயச் சார்போடு இருக்கணும்னு நினைக்கிறோமோ அப்படியே ஆணும் பெண்ணிடம் சார்ந்திருக்காமல் தன் வேலைகளைத் தானே செய்து பழகிக்கணும்.

      Delete
    2. //ஆண் பிள்ளைகளையும் வீட்டு வேலைக்குப் பழக்கப்படுத்த வேண்டும்./

      ஆமாம்... ஆமாம்... அதை மறந்துவிட்டேன்....என் அம்மா எல்லாம் என்னை அப்படிதான் பழக்கினார்கள். தனியாக வகுப்பெல்லாம் எடுக்க மாட்டார்கள். அந்தப் பயிற்சி இயற்கையாக இயல்பாக நடந்தது.

      Delete
    3. எங்க வீட்டிலேயும் எங்கள் பையரை அப்படியே பழக்கப்படுத்தினோம். கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே தான்!

      Delete
    4. எங்க வீடுகளில் ஆணாக இருந்தால் வயதில் சிறியவராய் இருந்தால் கூடக் குடிக்கத் தண்ணீர் கூட நாம் தான் போய்க் கொண்டு கொடுக்கணும். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் நாம் தான் கொண்டு கொடுக்கணும். இது எழுதப்படாத சட்டமாக இருந்து வந்தது. மெல்ல மெல்ல இப்போது மாறி உள்ளது.

      Delete
  5. /மேலும் தான் கேட்பது அனைத்தும் கிடைத்துவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரிவதால் அவர்களால் சின்ன ஒரு ஆசை நிறைவேறாவிட்டாலும் அதைத் தாங்கும் மனோபலம் இருப்பதில்லை//

    உண்மைதான் அக்கா ..ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் தோல்விகளை சமாளிக்கும் பக்குவத்தை கற்றுக்கொடுக்கணும் பிள்ளைகளுக்கு இது பெற்றோரின் கடமை .
    நான்லாம் அம்ம்மாகிட்ட திட்டு வாங்காத நாளில்லை அப்போ வாங்கின திட்டுக்கள் தான் இப்பவும் வாழ்க்கையில் பலவிஷயங்களை ஒழுங்கா முன்னெடுத்துச்செல்லும் பக்குவத்தை கொடுத்திருக்கு .

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஏஞ்சல்! பெற்றோர் நம்மிடம் உள்ள அக்கறையால் தான் கண்டிக்கின்றனர் என்பதைப் புரிஞ்சுக்கணும். ஆனால் அந்தக் கண்டிப்பும் எல்லாவற்றுக்கும் இருக்கக் கூடாது! குழந்தை விரும்பும் உணவைச் சாப்பிடும்போது "இப்படிச் சாப்பிடறான்/றாள் பாரு!" என்றெல்லாம் சொல்லாமல் சாப்பிட அனுமதிக்கணும். அவங்க விளையாடப் போகும்போது பள்ளி வேலைகளை முடிச்சாச்சுன்னா போகலாம்னு அனுமதி கொடுக்கலாம். இரண்டு குழந்தைகள் இருந்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டால் கூடியவரை தலையிடாமல் இருப்பதே நல்லது. இருவரில் யாருக்கு நாம் பரிந்து பேசினாலும், அவங்க பக்கம் நியாயம் இருந்தால் கூட இன்னொரு குழந்தை அதை ஏற்காது! இதை அனுபவபூர்வமாய் உணர்ந்து சொல்கிறேன். என்னையும் பிறந்தகம், புக்ககம் இரண்டு இடங்களிலும் எல்லாவிதத்திலும் கசக்கிப் பிழிந்து உலர்த்தி இருக்கின்றனர். ஆனால் அனைத்தையும் மீறி நிற்கத்தான் நான் கற்றுக் கொண்டிருக்கேன். தப்பாய்ப் புரிஞ்சுண்டவங்க நிறைய! ஆனாலும் நானாக வலியப் போய் என்னை நான் நிரூபித்ததில்லை. காலம் வரும், தானாகப் புரியும்னு இருந்துடுவேன். புரிய வைத்தும் இருக்கேன்.

      Delete
    2. ஒரு விஷயம் தெரியுமா ஏஞ்செல்? வகுப்பில் எப்போதும் முதலில் வரும் முதல் பெஞ்ச்காரர்களைவிட சுமாராக படிப்பவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. காரணம், பாராட்டுதல்களையே கேட்டு பழகியவர்களுக்கு விமர்சனங்களையும், எதிர்பாராத சங்கடங்கலையும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லையாம். பின் பெஞ்சுகாரகளுக்கும், மீடியாக்கர்களுக்கும் விமர்சனங்களும், தோல்விகளும் பழகி இருப்பதால், நிதர்சன வாழ்வின் பிரச்சனைகளை திறமையாக சமாளித்து ஜெயிக்கிறார்களாம்.

      Delete
    3. உண்மை தான்! எனக்குத் தெரிந்து பல திறமையானவர்கள் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட முடியாமல் தோற்றுப் போயிருக்கின்றனர். அதிலும் இப்போதெல்லாம் இந்தப் பத்தாம் வகுப்பு, பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெறுபவர்கள் பின்னால் என்ன ஆகிறார்கள் என்பதே ஆச்சரியமாய் இருக்கும் விஷயம்! பலராலும் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை!

      Delete
  6. >>> அப்பாவோ, அம்மாவோ அடிப்பதோ, திட்டுவதோ குழந்தைகளின் நலனுக்காகவே என்பதை அவர்களுக்கு மட்டுமில்லாமல் சுற்றி இருப்போர்க்கும் புரிய வைக்க வேண்டும்.. <<<

    வைர வரிகள்...

    ஆனாலும் சொன்னால் யாரும் மனம் கொண்டு கேட்டுக் கொள்வதில்லை...

    நம் மனம் வாடுமே என்று -
    முகத்துக்கு முன்னால் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்வதாக பாவனை காட்டி விட்டு
    அந்தப் பக்கமாக வசை பாடி விட்டுச் செல்வோர் வாழ்கின்ற உலகமாயிற்று...

    இப்படித்தான் இவ்வுலகம் போக வேண்டுமென்று கலிபுருஷன் தீர்மானித்து விட்டான்...

    அவனிடமிருந்து நம்மை மீட்டுக் கொண்டு - ஈசனைச் சரணடைந்தால் தான்
    நல்ல புத்தி விளைந்து நல்ல வழி தென்படும்!...

    சிந்தனையை என்பால் திருப்பு.. - என்கிறான் கிருஷ்ணன்...

    அருகிலிருந்த அர்ச்சுனனுக்கே அது மிகவும் கஷ்டமாக இருந்தது...

    இனி வரவிருக்கும் சந்ததியினரின் வாழ்வு அவரவர் கைகளில் தான் உள்ளது...

    விதையை நட்டோம்... தண்ணீர் விட்டோம்... ஆடுமாடுகளிடமிருந்து பாதுகாத்தோம்..
    அதோடு சரி... அதுக்குப் பின்னால -

    இந்த இந்தக் கிளைகள் இப்படி இப்படித் தான் போக வேண்டும் என்று தீர்மானிக்க நாம் யார்!...

    என்ன ஐயா இது.. மனுசனும் மரமும் ஒன்னா!... - என்று கேட்டால்,

    வெட்டிக் கெட்டது வேம்பு..
    வெட்டாமல் கெட்டது பூவரசு!...

    அப்போ என்னதான் செய்யறது?..

    மரத்துக்கு மரம் தர்மம் வேறுபடுற மாதிரி மனுசனுக்கும் வேறுபடுது...

    அதுக்கு என்ன செய்யிறது!...

    மக்கட்பண்பு - ரத்தத்தோட கலந்திருக்கணும்..

    அப்படி இருந்தாத்தான் புள்ளைங்க ஒரு பார்வையிலயே திருந்துவாங்க!...

    திட்டவும் வேணாம்!.. அடிக்கவும் வேணாம்!..

    நன்மக்கட்பேறு.. - ந்னு வள்ளுவர் சொல்றாரு...

    அது என்னா?.. எப்படி!..

    அதெல்லாம் ஒரு பதிவிலயோ ஒரு கருத்துரையிலயோ சொல்லி முடிக்கிற விசயமா!?...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, மரத்துக்கு மட்டுமா வேலி? மனிதர்களுக்கும் போடணுமே!போடவேண்டிய நேரத்தில் போடாமல் அப்புறமாக் குய்யோ, முறையோனு அடிச்சுக்கறவங்களை என்ன சொல்றது? ஆனால் இப்போதெல்லாம் சொல்ல முடியறதில்லை என்பதும் உண்மை! நாம் வளர்த்த நம் குழந்தைகளிடமே சொல்ல முடியாது! உண்மைதான், ஒரு பதிவிலே சொல்ல முடியாது! என்றாலும் மையக்கருத்தை மட்டும் சுருக்கமாச் சொல்லலாம். நம்மால் முடிந்தது அது தான்.

      Delete
  7. அருமையாக சொன்னீர்கள் நிறைய எழுத நினைக்கிறேன் ஆனால் செல்வழி.

    ReplyDelete
    Replies
    1. நேரம் இருக்கையில் உங்கள் கருத்தையும் பதியுங்கள் கில்லர்ஜி!

      Delete
  8. நீங்கள் எழுதியிருப்பது உண்மை. பசங்களை ஓரளவு கண்டித்து வளர்க்கணும், காசு அருமை தெரிய வைக்கணும்.

    எனக்கு, என்னால் முடியும் என்ற நிலையிலும், பசங்க கேட்டதை உடனே கொடுத்ததில்லை, நிறைய எதிர்பார்ப்புகளுக்கு "NO" என்றே சொல்லியிருக்கேன்.

    மனசுல அவங்களுக்கு நான் செய்தது சரி என்றே இப்போது தோன்றும்.

    நான் நிறைய பேர்கள், குழந்தைகளுக்கு, கேட்டதை வாங்கிக்கொடுப்பதையும், செல்போன், கணிணி விளையாட்டு என்று அவரவர் இஷ்டத்துக்கு விடுவதையும் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செல்ஃபோன் கணினி மட்டும் இல்லை நெல்லைத் தமிழரே! வண்டி? இரு சக்கர வண்டி? பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட வாங்கிக் கொடுத்துப் பள்ளிக்கும் அனுப்பும் பெற்றோரை என்ன சொல்வது? அவங்க வசதியைக் காட்டவா? இப்போதெல்லாம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதால் தான் சீக்கிரமே வாழ்க்கையில் சலிப்பு வருகிறது.

      Delete
    2. நான் எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் வாய்ப்பு கிடைத்தால் பிறருடன் பேசுவேன் (வாகன ஓட்டிகளிடமும்). அதில் டாக்சி ஓட்டுபவர் (அந்த ஊரில்) என்னிடம் சொன்னது, அவர் பையன் நல்ல பைக் வேணும்னு அடம் பிடிக்கிறான் (காலேஜ் சேர்ந்த முதல் வருடமே). எவ்வளவு சொல்லியும் கேட்கலை. அம்மாவை டார்ச்சர் பண்ணறான் இதைக் கேட்டு. நான் இங்கு கஷ்டப்படுவது அவனுக்குத் தெரியலை என்றார். நான் அவரிடம் இந்த சப்ஜெக்டைப் பற்றிப் பேசி, வாங்கிக் கொடுக்காதீர்கள், இந்த வயதில் பண அருமை தெரியாமல் பைக் வாங்கிக் கொடுத்தால் அது இன்னும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். அதிலும் 'அடம் பிடித்தால்' எதையும் வாங்கிக்கொடுக்கக் கூடாது, 'தற்கொலை' என்றெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் பயமுறுத்தினால் அதற்கெல்லாம் அஞ்சாதீர்கள் என்று சொன்னேன்... (ஆனாலும் அவர் பிறகு வாங்கிக் கொடுப்பார்னு எனக்கு மனசு சொல்லியது).

      எங்க பெரியப்பா, 'அடம்' பிடித்தால் நிச்சயம் அதனைச் செய்யமாட்டார். சாதாரண விஷயத்தையும்கூட, அடம் பிடித்துக் கேட்டால் கிடைக்கவே கிடைக்காது. அதன் தாத்பர்யம் பெரியவனாகும்போது புரிந்தது.

      Delete
    3. நாங்களும் இப்படிப் பலருக்கும் புத்திமதி சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கோம். ஆகவே இப்போதெல்லாம் சொல்லுவதே இல்லை! எங்க குழந்தைகள் இது வேணும், அது வேணும்னு அடம் பிடிச்சதே இல்லை! இப்போ நினைச்சால் கூட அவங்க எப்படிப் புரிந்து கொண்டு எங்களோடு ஒத்து இருந்திருக்காங்க என்பது ஆச்சரியமா இருக்கும். அதே எங்க உறவினர் குழந்தைங்க அவங்களுக்கு எதிரேவே பிடிவாதம், அடம், நினைச்சதைச் செய்யறதுனு இருந்தாங்க! அப்போக் கூட இவங்க திசை மாறவில்லை! இது எனக்குக் கடவுள் அளித்த மிகப் பெரிய பரிசு!

      Delete
    4. //'தற்கொலை' என்றெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் பயமுறுத்தினால் அதற்கெல்லாம் அஞ்சாதீர்கள் என்று சொன்னேன்...//

      மும்பையில் என்று நினைக்கிறேன்... ஒரு சிறுவன் மொபைலில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டே இருந்தானாம். அவன் அம்மா அதைக் கண்டித்து மொபைலைப் பிடுங்கி வைத்து விட்டார் என்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.

      இன்று காலை படித்த செய்தி.

      Delete
    5. //எங்க பெரியப்பா, 'அடம்' பிடித்தால் நிச்சயம் அதனைச் செய்யமாட்டார்.// எங்கள் அம்மாவும் இதேதான்.
      எங்கள் அம்மாவுக்கு இது வேண்டும் என்று கேட்டாலே பிடிக்காது.

      Delete
    6. //எங்க குழந்தைகள் இது வேணும், அது வேணும்னு அடம் பிடிச்சதே இல்லை! இப்போ நினைச்சால் கூட அவங்க எப்படிப் புரிந்து கொண்டு எங்களோடு ஒத்து இருந்திருக்காங்க என்பது ஆச்சரியமா இருக்கும்.// எனக்கும் இதேதான் அக்கா. பிள்ளையாவது மிகவும் சிறியவனாக இருந்த பொழுது கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பான். பெண்ணிற்கு பிடிவாதம் என்றால் என்னவென்றே தெரியாது.

      Delete
  9. உண்மைதான் கீசாக்கா இவை மட்டுமல்ல இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு, இக்காலத்தில் நாமிருவர் நமக்கிருவர் அல்லது ஒருவர்.. அத்தோடு தனிக் குடும்ப வாழ்க்கை, இதனால குழந்தைகள் அடிபட்டு சண்டை இட்டு, தம் உணவை மற்றும் விளையாட்டுப் பொருட்களை பங்கு போட்டுக் கொள்ளாமல், தனித்தனியே தம் அறையில் எந்த தொந்தரவும் இல்லாமல் வளர்க்கப் படுகின்றனர்.. சொல்லப் போனால் மெசின் கோழிக்குஞ்சுகள் போல, இதனால அவர்களுக்கு ஏனையோரோடு சேரும் போது, ஒரு தோல்வியையோ அவமானத்தையோ தாங்க முடிவதில்லை. மனநிலையும் குறுகிய வட்டமாகி விடுகிறது,

    சிலர் தனிமையில் இருந்தாலும் அடிக்க்கடி பிள்ளைகளை அயலவர்கள் உறவுகளோடு பழக விடுவர், ஆனா சிலரோ அப்படியே உலகம் தெரியாமல் பொத்தி வளர்க்கின்றனர்.. இவையும் இப்படியான மனத் தாக்கங்களுக்கு காரணமாக அமைந்து விடுது.

    ReplyDelete
    Replies
    1. அதைவிட முக்கியக் காரணமா நான் நினைப்பது, பெற்றோர்கள் சுயநலத்தால், தாங்கள் சீரியல் பார்க்கவேண்டும், கணிணியில் மூழ்கவேண்டும் என்று பல காரணங்களால் பசங்களுக்கு ஐபேட், மொபைல் போன்றவை வாங்கித்தந்து கேம்ஸ் விளையாடப் பழகித் தராங்க. அதனால பசங்க கனவுலகில் மிதக்கறாங்களே தவிர நனவுலகின் கஷ்டங்கள் எதுவும் அவங்களுக்குத் தெரியறதுல்லை

      Delete
    2. அதிரடி, நீங்க சொல்வது சரியே! பெரும்பாலான பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பதாலும் இத்தகைய பிரச்னைகள் வருகின்றன. குழந்தைக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையே இருப்பதில்லை. அதோடு இல்லாமல் உறவு முறைகளும் அவற்றின் பெயர்களும் மறைந்து வருகின்றன. தாங்கள் பெற்ற முதல் குழந்தைக்குப் பெற்றோர் கொடுக்கும் பெரிய பரிசே என்னைப் பொறுத்த வரை அதற்கு ஓர் தம்பியோ, தங்கையோ கொடுப்பது தான்! அப்போத் தான் அந்தக் குழந்தைக்குப் பகிர்ந்து உண்ணும் பாங்கும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வரும். நாங்களெல்லாம் ஒரே தலையணையைக் கூடப் பகிர்ந்திருக்கோம். அதிலும் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை உறவினர் வீடுகளில் தங்க அனுமதிப்பதில்லை. இப்போதைய உறவினரும் விரும்புவதில்லை! ஆனால் அப்படித் தங்கும் குழந்தைகள் எல்லாச் சூழ்நிலைக்கும் அனுசரித்துக் கொண்டு வாழக் கற்றுக் கொள்ளும்.

      Delete
    3. எங்க குழந்தைங்க ரெண்டு பேரும் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்ததால் இந்தப் பதின்ம வயதுப் பிரச்னைகள் அவங்களுக்கு ஏற்படலை! சமாளித்துக் கொண்டு வளர்த்து விட்டோம்.

      Delete
    4. இப்போத் தான் ஐபேட், மொபைல்னு எல்லாத்தையும் குழந்தைக்குக் கொடுக்கிறாங்க! அப்போல்லாம் ஏது? நான் புத்தகங்கள் படிக்கையில் அநேகமாய்க் குழந்தைகளிடம் அதில் உள்ள நல்ல விஷயங்களைப் படிச்சு விளக்கிப் புரிஞ்சுக்க வைப்பேன். இப்படியே அவங்களுக்கு "தேவன்" எழுதிய நாவல்கள் அனைத்தையும் அநேகமாப் படிச்சுச் சொல்லி இருக்கேன். அவங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது! வடநாட்டிலேயே கேந்திரிய வித்யாலயாவிலேயே படிச்சதால்!

      Delete
  10. மிக மிகத் தேவையான பதிவு. ஆனால் கண்டிப்புகளை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்ளுகிறார்களோ யோசித்தே சொல்ல வேண்டி இருக்கிறது.
    பையன் களை வளர்ப்பது இங்கே கொஞ்சம் சிரமம் தான். அதுவும் டீனேஜ் வந்துவிட்டால் இன்னும் பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, அங்கே குழந்தைகளை எதுவுமே சொல்ல முடியாதே! அம்பத்தூரில் எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினரின் பேத்தி யு.எஸ்ஸில் வளர்ந்தவள் அப்பா, அம்மா கண்டித்தால் 911 க்குத் தொலைபேசி அழைச்சுடுவேன் என மிரட்டுவாளாம்! இத்தனைக்கும் அப்போ 3 வயசு அந்தக் குழந்தைக்கு!

      Delete
  11. அடடா! நல்ல பதிவு. இந்தாங்க! https://1clickurls.com/3RIPfpV

    ReplyDelete
    Replies
    1. 'அண்ணா' இதை வைத்து அவங்க என்ன செய்வாங்க? இதுக்குப் பதிலா சாக்கிலேட் கொடுத்திருந்தாலும் புண்ணியம்... ஹாஹா.

      Delete
    2. அட, தி.வா. தம்பி. நல்வரவு! உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சின்னா உங்க பரிசு இதை விட அதிகமா மகிழ்ச்சியைத் தருது! நெ.த.வுக்கு என்ன தெரியும்! நீங்க கொடுத்த பரிசு அசத்தல்! ஆனா இதுக்காகக் கார்த்திகைச் சீர் அனுப்பாமல் இருந்துடாதீங்க! :))))) அப்புறமாப் பொங்கல் வேறே வருது! :)))))

      Delete
  12. அருமையான பதிவு.
    படித்து பலன் பெற வேண்டிய பதிவு.
    கண்விழியை விட்டு விட்டு தோலை இரித்து எடுங்கள் வாத்தியார் ஐயா என்று அந்தக் காலத்தில் பெற்றொர்கள் வாத்தியார்களிடம் சொல்வார்கள். இப்போது என் குழந்தையை அடிக்க உரிமை இல்லை எங்கிறார்கள், சட்டமும் அடிக்க கூடாது என்கிறார்கள்.

    //அம்மாவோ அடிப்பதோ, திட்டுவதோ குழந்தைகளின் நலனுக்காகவே என்பதை அவர்களுக்கு மட்டுமில்லாமல் சுற்றி இருப்போர்க்கும் புரிய வைக்க வேண்டும். //
    அறிவுரை செல்வதையே திட்டு என்கிறார்கள். கை ஓங்கினால் கூட அடித்த மாதிரி விக்கி விக்கி அழுகிறார்கள்
    திட்டவும் கூடாது, அடிக்கவும் கூடாது இப்போது உள்ள குழந்தைகளை.


    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! இப்போதைய குழந்தைகளை மட்டுமல்ல, பெற்றோர்களையும் சரியாக் குழந்தையை வளர்ப்பதில்லைனு சொல்ல முடியலை! அதோடு இப்போப் பெரும்பாலும் ஒரே குழந்தையோடு நிறுத்திக்கிறதையும் வேண்டாம், இன்னொண்ணு பெத்துக்குங்கனு சொல்ல முடியறதில்லை. இதனோட பலாபலன்கள் அவங்களுக்கு இந்த வயசில் புரியாது! பின்னால் புரியும்! :((((

      Delete
  13. குழந்த வளர்ப்பு பற்றி ஜெனரலைஸ் செய்யக் கூடாது நல்லது கெட்டது என்பதெல்லாம் அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள் ஆனால் பத்வில் கண்ட / சிறு தண்டனை கொடுங்கள்.உதாரணமாக இதை முடித்தால் தான் விளையாடப் போகலாம். இதைச் செய்தால் தான் வார இறுதியில் கார்ட்டூன் பார்க்கலாம் என்பது போன்ற சிறு பரிசுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்./ கடவுளுக்கே எனக்கு இது செய்தால் உனக்கு இது செய்வேன் என பேரம் பேசும் நாம் குழந்தைகளுக்கு நாம் அறியாமலேயே கையூட்டு பழக்கம் பற்றி தெரிவிக்கிறோமா

    ReplyDelete
    Replies
    1. //கடவுளுக்கே எனக்கு இது செய்தால் உனக்கு இது செய்வேன் என பேரம் பேசும் நாம் குழந்தைகளுக்கு நாம் அறியாமலேயே கையூட்டு பழக்கம் // - ஜி எம் பி சார்... இதனை நான் படிக்க நேர்ந்தது. நீங்கள் எழுதியுள்ளது தவறு.

      நம்மால் எதனைத் தவிர்க்கமுடியாதோ அல்லது நாம் பெரியது என்று எதனை நினைக்கிறோமோ அதனைத் தியாகம் செய்யறேன் என்று உறுதிதான் கடவுளிடம் எடுத்துக்கறோம். நாம் பேசுவது வியாபாரம் அல்ல. (இவ்வளவு கொடுத்தால் 10% தருகிறேன் என்று. அவனுக்கு எதுக்கு 10%, அவனிடம் 100% இருக்கும்போது).

      நியாயமான ஆசைகளுக்கு, நம்மால் முடிந்ததைவிட அதிகமாக வேண்டிக்கொள்கிறோம். என் குழந்தைக்கு விரைவில் திருமணம் ஆனால், திருப்பதிக்கு நடந்துவந்து சேவிக்கிறேன் என்பதுபோல. அவனிடம் வேண்டுகோள். அதற்கான ப்ரார்த்தனை என்றே நாம் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

      குழந்தைகளிடம் இதைச் செய், உனக்கு இது தருவேன் (அவர்களுக்கு விருப்பமானதை) என்று சொல்வது, ஒரு Goalஐக் காண்பித்து அதை அடைந்தால் கிடைக்கும் பரிசு இது என்பதை உணர்த்துவதற்கு.

      அடுத்து, 'நீங்க எங்க வீட்டுக்கு வாங்க, இரவு உணவு உண்ணலாம்' என்பதையும் 'கையூட்டு' என்பதில் கொண்டுவந்துவிடுவீர்கள் போலிருக்கிறதே..ஹாஹாஹா.

      Delete
    2. வாங்க ஜிஎம்பி சார், எதையும் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையில் இருக்கு! யாரும் யாரிடமும் பேரம் பேசுவதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு நீங்க அவங்களுக்கு எப்போவுமே எந்தப் பரிசுமே கொடுக்காமலா இருந்திருப்பீர்கள்? அல்லது பள்ளிகளில் கொடுத்திருக்க மாட்டாங்களா? அதை எல்லாம் லஞ்சம்னு சொல்வீங்களா என்ன? அது போலத் தான் இதுவும். குழந்தைகளுக்குக் காசு கொடுத்தாலும் அதைச் சேமிக்கக் கற்றுக் கொடுக்கணும். எங்க பொண்ணு பள்ளியிலே உள்ள சிறுவருக்கான வங்கியில் போட்டு வைப்பாள்! அவசரத்துக்கு அவங்களுக்கு ஏதேனும் நோட்டோ, புத்தகமோ வாங்க உதவுமே! அப்படிப் பார்க்க வேண்டும். அதே போல் பள்ளிகளில் நன்னடத்தைச் சான்றிதழ் கொடுக்கிறாங்க! நாம சான்றிதழ் கொடுப்பதற்குப் பதிலாகக் குழந்தைக்குப் பரிசு கொடுத்து ஊக்கம் கொடுக்கிறோம். அரசாங்கம் கூட "நல்லாசிரியர் விருது" இன்னும் பல திறமைகளுக்கான விருதுகள் கொடுக்கின்றன. அவற்றையும் லஞ்சம்னு சொல்லுவீங்களா?

      Delete
    3. அடுத்தது பிரார்த்தனை! பிரார்த்தனை செய்து கொள்வது நம்மை வருத்திக் கொண்டு பிறருக்கு அல்லது நம் குடும்பத்துக்கு நன்மைகளை வேண்டியே! இதையும் லஞ்சம்னு சொல்ல முடியாது! அப்படி எனில் கடவுள் எல்லோரிடமும் காசு வாங்கிக் கொண்டா எல்லாவற்றையும் நடத்தி வைக்கிறார்? மரம், செடி, கொடிகளுக்கு நாம் நீர் ஊற்றி உரம் போட்டு வளர்க்கிறோம்! அவை நமக்குப் பலன் தருகின்றன! அது கூட லஞ்சம் தான் ஒரு வகையில்! இல்லையா? :)))))

      Delete
  14. நல்ல பதிவு. நான் கூட இதைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தரப்பில் இந்தக் கருத்தை நீங்களும் எழுதலாமே பானுமதி!

      Delete