எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 06, 2018

தீபாவளி கொண்டாடியாச்சா?


ஒரே விளக்கைப் போட்டால் வெளிச்சம் எப்படி விழுதுனு பார்த்ததில் ராமர் இப்படி வந்தார்.
அதே விளக்கு வெளிச்சத்தில் கீழே பளிச்!


அந்தக் கத்திரிப்பூக் கலர்ப் புடைவை சில்க் காட்டன், இன்னொண்ணு கொஞ்சம் வெளிறிய கிளிப்பச்சைக்கலர் நெகமம்! சில்க் காட்டன் தான் இன்னிக்குக் கட்டிண்டேன். 
இவை குளிக்கும் முன்னர் எடுத்த படங்கள்


குளிச்சுட்டு வந்து நிவேதனம் பண்ணும்போது எடுத்த படம் இது! அது என்னமோ தெரியலை! தீபாவளி பக்ஷணங்கள் மட்டும் சாப்பிட்டாலும் மறுபடி தீபாவளி அன்னிக்கும் உம்மாச்சிக்கு வைக்கிறோம். முள்ளுத் தேன்குழல், சாதா தேன்குழல் கொஞ்சம் போல்! மிக்சர் அது தான் விநியோகத்துக்கு, பாதாம் அல்வா! (சரியா வரலை, கலரும் போடலை!) பயத்தம் லாடு வெல்லம் போட்டு, தீபாவளி மருந்து! வெற்றிலை, பாக்கு, பழம், பூ!    பூ நேத்திக்கு 50 கிராம் 40 ரூபாய். 50 கிராம் வாங்கித் தொடுத்தேன். 

ஏற்கெனவே உடம்பு படுத்தல். அதோடு கிரகப்ரவேசம், இப்போ தீபாவளி. என்றாலும் இம்முறை அதிகம் பக்ஷணங்கள் பண்ண வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனால் மிக்சர் பண்ணணும்னு முடிவு செய்ததால் அதுக்கு வேண்டிய தேங்குழல் வகைகள் கொஞ்சம் கொஞ்சம் பண்ணறாப்போல் ஆயிடுத்து! மிக்சருக்குப் பண்ணும்போதே அவற்றில் கொஞ்சம் போல் எடுத்து வைத்துக் கொண்டேன். ஞாயிறன்று தான் பண்ண ஆரம்பிச்சேன். ஆனாலும் இணையத்துக்கு என்னமோ முன்னை மாதிரி வர முடியறதில்லை. ஒரே அசதி! நடுவில் கொஞ்ச நேரம் வந்து பார்ப்பதோடு சரி! நல்லவேளையா இந்த வருஷம் தீபாவளித் துணி வாங்குவது விஜயதசமிக்குனு வைச்சுக்காமல் நவராத்திரிக்கு முன்னாடியே வாங்கிட்டோம். நவராத்திரி நேரத்திலும் போக முடிஞ்சிருக்காது! பின்னரும் போக முடிஞ்சிருக்காது!

வழக்கம் போல் கோ ஆப்டெக்ஸ் தான்! சென்னையின் ஹான்ட்லூம் ஹவுஸ் நினைவில் வருது! அங்கே உள்ள வெரைடி இங்கே இல்லை தான்! ஆனால் சென்னை எழும்பூர் தில்லையாடியில் கிடைக்கும் வெரைடியை விட இங்கே நல்லாவே இருக்கு! கோவை நெகமம் இங்கே நல்லாக் கிடைக்குது. நெகமம் புடைவை ஒண்ணு வழக்கம் போல் எடுத்தேன். எழுபதுகளில் நெகமம் புடைவை இருந்ததுக்கும் இப்போதைக்கும் வித்தியாசம் இருக்கு. ஆனாலும் நெகமம் புடைவைகளின் தரம் மற்றக் கோவைப் புடைவைகளில் இல்லைனே சொல்லணும். ஊரெல்லாம் பட்டாசு வெடிக்கத் தடை அது, இதுனு சொல்றாங்க. ஆனால் இங்கே ஒரு வாரமா அவ்வப்போது வெடிகள் வெடித்துக் கொண்டு தான் இருந்தனர். முந்தாநாளில் இருந்து பட்டாசு சத்தம் ஜாஸ்தி தான். ஆனால் வழக்கமான சப்தத்தை விடக் குறைவுனு ரங்க்ஸோட நினைப்பு. எனக்கு அப்படித் தோணலை. காலையில் ஃபோன் வந்தப்போப் பேச முடியலை! வெடிச் சத்தம். இப்போவும் கொஞ்சம் படுக்கலாம்னு போனால் ஒரே வெடிச் சப்தம்.

இன்னமும் வெடித்துக் கொண்டிருக்கின்றனர். திருநெல்வேலியில் பட்டாசு வெடித்ததுக்குக் கைது பண்ணி இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இங்கே அப்படி எல்லாம் யாரும் யாரையும் கைது பண்ணக் காணோம்.  ஒருத்தர் ரெண்டு பேரா இருந்தாச் சரி! எத்தனை பேரைனு கைது பண்ணுவாங்க? அதான் போல! அதோட இன்னிக்கு வெடிக்கலைனா அப்புறமா தினம் தினமா வெடிக்கப் போறாங்க? போனால் போகட்டும்னு விட வேண்டியது தான். :)))) பாவம் குழந்தைங்க!

அனைவர் வாழ்க்கையிலும் மங்களம் பொங்கி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பிரார்த்தனைகள்! தீபாவளி வாழ்த்துகள்!

59 comments:

 1. தேன்குழல், அதிரசம், ஜாமூன் - அனைத்தும் முடிய இரவு 2.00 மணி...!

  இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, அசத்தல் பலகாரங்கள்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   Delete
 2. விமரிசையாக தீபாவளி கொண்டாட்டம் வாழ்த்துகள் ஒரு நாள் பட்டாசு வெடித்து காற்றில் மாசு அதிகரிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை டெல்லியில் ஏற்கனவே மாசடைந்த காற்று இன்னும் மாசாக்க வேண்டாம் என்றால் சரி அதற்காக ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தடையா என்னவோ போங்க இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார், நீங்க கூடப் பட்டாசுக்கு ஆதரவுனு தெரிஞ்சு ஆச்சரியமா இருக்கு! இங்கே பட்டாசு நிறையத் தான் வெடிக்கிறாங்க. சத்தம் இன்னமும் ஓயவில்லை. உண்மையில் பட்டாசுப் புகையில் கொசுக்கள் கொஞ்சமாவது குறையும்.

   Delete
 3. பெரியோர்களின் ஆசீர்வாதம் பெருமாளின் ப்ரசாதம்!...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, இஃகி, இஃகி, யாரு பெரியவங்க? ஸ்ரீராம்? நெல்லைத் தமிழர்? அதிரடி, ஏஞ்சலின்? ஆமாம், ஆமாம், நீங்க சொன்னாச் சரியாத் தான் இருக்கும். :)))) தீபாவளி வாழ்த்துகள்.

   Delete
  2. >>> யாரு பெரியவங்க!..<<<

   நெ. த., அவர்களைப் பற்றி சரியாகத் தெரியவில்லை...

   அதிரடி, ஏஞ்சலின் - இன்னும் சின்னப் பிள்ளைகள்!... ( யப்பா.. சந்தோஷமா!..)

   இப்போதைக்கு நீங்கள் பெரியவர்கள்..

   அதிலும் எப்போதும் அரங்க மாநகருளானை சிந்தித்திருப்பவர்கள்..
   எனவே தங்களது ஆசிகளைத் தான் சொன்னேன்!...

   Delete
  3. துரை! போட்டீங்களே ஒரு போடு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிராவும், ஏஞ்சலும் சின்னவங்களா? அநியாயமா இல்லையோ? :))))) நெல்லைக்கும் எங்க தாத்தா வயசு இருக்குமே! நான் குழந்தை இல்லையோ? என்னைப் போய்ப் பெரியவங்கனு சொல்றீங்க? :))))))

   Delete
  4. >>> நெல்லைக்கும் எங்க தாத்தா வயசு இருக்குமே!.. <<<

   என்னது?..
   நெல்லைக்கு உங்க தாத்தா வயசா!?...

   அப்போ - ஞானாநந்தையெல்லாம் இன்னும் கொஞ்ச வருசத்துல பாட்டி.. ந்றீங்களா!?..

   சலங்கைச் சாமிகள் வந்து
   எந்த மாதிரி ஆடப் போவுதுங்களோ!...

   Delete
  5. இஃகி, இஃகி, ஆடட்டும், ஆடட்டும், பார்ப்போம்! சாதுர்யம் பேசாதேடீ! என் சலங்கைக்குப் பதில் சொல்லடி! அப்படினு பாடினா ஓடிட மாட்டாங்க? :)))))

   Delete
  6. நெல்லையோட வயசு எனக்குத் தெரியும்னு அவர்ட்டே சொல்லிடாதீங்க! :)))))

   Delete
 4. தங்களுக்கும் அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 5. அதெல்லாம் சரி!..

  மாமாவுக்கு ஒரே ஒரு செட் தானா!..
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!...

  ReplyDelete
  Replies
  1. இணையத,துல கர்ரர்ரர்ரர்ரர்ரர்ர என்பதை ஆரம்பித்தவர் கீசா மேடம். இப்போ நாம எல்லாரும் உபயோகப்படுத்தி அவங்களோட தனித்தன்மையை மாத்திட்டோம். ஹாஹா

   Delete
  2. துரை, ஒரு செட்டை அவர் கிரகப்ரவேசத்தில் பயன்படுத்திட்டார்! நான் இரண்டு புடைவையுமே கட்டலை. அதோடு ஓ.சி. 2 இஃகி, இஃகி! :) இங்கே ஓ.சி. வைக்கலை!

   Delete
  3. நெல்லைத் தமிழரே, அதனால் என்ன? உரிய ராயல்டி தொகையை அமெரிக்கன் டாலராக் கொடுத்தால் போதும்! :P:P:P:P:P

   Delete
 6. இனிய தீபாவளி வாழ்த்துகள்
  வெடிப்பதை தடுக்கும் அரசு
  குடிப்பதை தடுக்கவில்லையே...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, நீங்க சொல்வது சரியே! அதுக்கும் கடுமையான சட்டம்!

   Delete
 7. அருமையான தீபாவளிப் படங்கள். தீபாவளி வாழ்த்துகள் சொல்ல வந்தேன். ஆசிகளும்,அன்பும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. நமஸ்காரங்கள் அம்மா. உங்கள் வருகையும் வாழ்த்தும், ஆசிகளும் மகிழ்ச்சி அளிக்கின்றன.

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. ரேவதி, கோமதிக்குப் போக வேண்டியது இங்கே வந்திருக்கு. இங்கே வர வேண்டியது அங்கே போயிருக்குமோ?

   Delete
  2. revathi narasimhan06 November, 2018
   ஆமாம் கீதா. காலை அவசரம். அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லும்
   வேகம். ஃபோன். இத்தியாதி.
   இத்தமனை உடம்பு படுத்தினாலும் அசராமல் செய்த
   உங்கள் உழைப்பை பிரமிப்பா பார்க்கிறேன். படங்கள் அத்தனையும் வெகு அழகு.

   Delete
 9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கீதாக்கா உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் :)
  அந்த லைட் நடுவில் இருக்கா இல்லை சுவர் ஓரமா ? அதான் ஒரு பக்கம் மட்டும்பளீர்னு காட்டுது
  //முள்ளுத் தேன்குழல், சாதா தேன்குழல் கொஞ்சம் போல்! மிக்சர் //

  கீழே வெளிச்சத்தில் படம் சூப்பர் இன்னிக்குன்னு பார்த்து எல்லா பட்சணமும் க்ளியரா கண்ணுக்கு தெரியுது ..முறுக்கு தேன் குழல் அப்படி சிவந்த நிறத்தில் இருந்தா வாசம் தூக்குமே !!
  நெகமம் கோ ஆப்டெக்ஸ் எல்லாம் எதோ முன் ஜென்மத்தில் பார்த்த மாதிரி இருக்கு !!
  அம்மா தில்லையாடியில்தான் வாங்குவாங்க ..கோவை சில்க் வேங்கடகிரி சில்க் என்னென்னமோ சொல்வாங்க

  இங்கே புடவைலாம் சும்மா ஸ்டோன் ஒர்க் பனாரஸ்ன்னு தான் கடைகளில் இருக்கு நான் பண்டிகைக்கு ஸாரி .சல்வார் ரெண்டும் வாங்குவேன் மிட்நைட் சர்வீஸுக்கு கட்டி பார்ப்பேன் சரியா வரலேன்னா கழட்டிபோட்டு சல்வார் :)
  அது சரி பட்சணத்தில் எங்க பங்கு வந்து சேரலியே :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், லைட் நீங்க சொல்றாப்போல் ஓரத்தில் தான் இருக்கு. நேரே உள்ளதைப் போட்டாலும் பிரதிபலிப்பு இருக்கு. ஒண்ணும் புரியலை எப்படிப் படம் எடுப்பதுனு! :))) (இல்லாட்டி ரொம்ப வாழ்ந்ததோ!) இஃகி, இஃகி, அது என் ம.சா. கண்டுக்காதீங்க! :))))

   Delete
  2. வெங்கடகிரி நாலைந்து வாங்கி ஏமாந்துட்டேன். அதுக்குக் கத்வால் பரவாயில்லை. நல்லா உழைக்கும். நீளம், அகலம் அதிகம்! ஆனால் பெரும்பாலும் இப்போதெல்லாம் கோவைப் புடைவைகளே வாங்கிடறேன்.இந்த ஸ்டோன் வொர்க், பனாரஸ் எல்லாம் கட்ட பயம். உடலுக்கு முக்கியமா என்னோட அதிசயமான தோலுக்கு ஒத்துக்கணுமே! ஒரிஜினல் பனாரசே கட்டியாச்சு! ஆகவே இதுக்கெல்லாம் போறதே இல்லை. சிந்தடிக் புடைவைகள் கூட யாராவது கொடுத்தால் தான்! நானாக வாங்கறதில்லை.

   Delete
  3. பக்ஷணத்தில் பங்கா? நீங்களா எடுத்துக்க வேண்டியது தான்! :))))

   Delete
 10. / இன்னிக்கு வெடிக்கலைனா அப்புறமா தினம் தினமா வெடிக்கப் போறாங்க? போனால் போகட்டும்னு விட வேண்டியது தான். :))))//
  ஆமாம் நான் கேள்விப்பட்டேன் எதோ டைம் குடுத்திருக்காங்களாம் அந்த டைமில் மத்தாப்பூ சங்கு சக்கரம் பூ மாதிரி பரவும் flower pot னு சொல்வோம் அது கூட வெடிக்க கூடாதா ??

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேறே ஏஞ்சல், இங்கே ஆயிரம் வாலாவும் அவுட் வாணமும் புது ரக ஏரோப்ளேனும் அமர்க்களப்படுது! புஸ்வாணமா? அப்படின்னா என்னனு கேட்கிறாங்க! நேரமெல்லாம் இல்லை. நேத்திக்கு ராத்திரி மட்டும் பனிரண்டு மணி, ஒரு மணி, 2 மணினு பட்டாசுச் சத்தம் எழுப்பிட்டே இருந்தது.

   Delete
 11. இனிய தீபாவளி வாழ்த்துகள் கீசா மேடம்.

  மிக்சர்ல தேன்குழல் போடறாங்களா? பூந்தி, ஓம்ப்பொடி, மைதா பிஸ்கட், நிலக்கடலை, கறிவேப்பிலை, அவல், சிலர் நேந,திரம் சிப்ஸ் போடறாங்க. தேன்குழல் போட்டா நல்லா இருக்குமா?

  ReplyDelete
  Replies
  1. எங்க பிறந்த வீட்டிலே எல்லாமும் போடுவோம் நெல்லைத்தமிழரே! அதே மாமியார் வீட்டில்கிடையாது. காராசேவு மாதிரித் தேய்த்துப் போட்டாலே கூடாதுனு தடா! இந்த வருஷம் என் இஷ்டத்துக்குப் பண்ணப் போறேன்னு சொல்லிட்டேன். அதான் எல்லாம் போட்டேன். ஆனால் அவருக்கு இந்த ருசி பிடிச்சுப் போச்சு! மிக்சர் அருமையா இருக்குனு சொல்லிட்டு இருக்கார். நேந்திரம் சிப்ஸ், கார்ன்ப்ளேக்ஸ், மைதா பிஸ்கட் (மைதாவே எப்போவானும்) இதெல்லாம் நான் போட மாட்டேன். உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் மட்டும் சேர்ப்பேன். மற்றபடி அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, இருந்தால்முபருப்பு, கருகப்பிலை எல்லாம் உண்டு.

   Delete
 12. சென்னையிலும் பெரிதாக நேரம் பற்றி எல்லாம் மக்கள் அலட்டிக்கொள்ளவில்லை. கண்டபடி வெடித்துக்கொண்டிருந்தனர், வெடித்துக் கொண்டிருக்கின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே இன்னமும் அடங்கவில்லை ஸ்ரீராம். "96" படம் பார்க்கலாம்னு தொலைக்காட்சியைப் போட்டுட்டு வசனங்களே காதில் விழலை! அணைச்சுட்டோம்.

   Delete
 13. எங்கள் வீட்டில் நாடாத் தேன்குழல், மாலாடு, ரவா லாடு, மைசூர்பாகு (இது மட்டும் என் கைவண்ணம்) அப்புறம் லேகியம்!

  ReplyDelete
  Replies
  1. மாமனார் இருக்கும்போது தான் தேன்குழல், முள்ளுத்தேன்குழல், ரிப்பன் பகோடா, ஓமப்பொடினு எல்லாமும் சீருக்கு வைக்கிறாப்போல் பண்ணுவோம். அளவும் அவ்வளவு பெரிசா இருக்கும். இப்போச் சீருக்கு வைக்கிறாப்போல் எல்லாம் இல்லை! அதைத் தவிர்த்து ஒரு 20 கிலோ பிடிக்கும் ட்ரம்மில் மிக்சர். சுமார் ஒரு வாரம் பக்ஷண வேலை தான்! இப்போ இதுக்கே நாக்குத் தள்ளுது! :))) ஸ்வீட் மைசூர்ப்பாகு, அல்வா, ரவாலாடு, ஜவ்வரிசி லாடுனு எல்லாமும் உண்டு.

   Delete
  2. ஜவ்வரிசி லாடா? கேள்விப்பட்டதில்லையே... எப்படிச் செய்வீர்கள்?

   Delete
  3. ரொம்ப ஜிம்பிள் நெல்லைத் தமிழரே, ஜவ்வரிசியைக் கருகாமல் வெறும் வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்துக் கொண்டு பின்னர் மிஷினில் மாவாக்கி சர்க்கரை சேர்த்து நெய் விட்டு மு.ப. ஏலக்காய் போட்டு லாடு பிடிக்க வேண்டியது தான். சின்னக் குழந்தைங்க இருந்தால் அவங்களுக்கு பொட்டுக்கடலை லாடு, கடலைமாவு லாடு, பூந்தி லட்டு போன்றவை கொடுக்க மாட்டாங்க. அவங்களுக்காகத் தனியாப் பிடிப்போம் இது. இல்லைனாலும் எங்க வீட்டில் அடிக்கடி பண்ணுவோம்.

   Delete
 14. கீதாக்கா இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.

  பக்ஷணங்கள் எல்லாம் செமையா இருக்கு...பாதாம் ஹல்வா எப்படி வந்தால் என்ன...சாப்பிடும் போது பாதாம் டேஸ்ட் இனிப்புடன் இருந்தா போதுமே அக்கா..

  வெடி இங்கும் கூடாதுதான்...போலீஸ் ரோந்து வேற இப்பத்தான் போனாங்க...ஆனா பசங்க வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்ச நேரம் வெடிக்கலாம் போல. ஆனால் மதியம் வெடிச்சத்தம் கேட்டது...

  எங்கள் செல்லம் பாவம் தவித்துக் கொண்டிருக்கிறது...

  தில்லியில் போலீஸ் ரோந்து ரொம்பவே இருக்காம். அரெஸ்ட் எல்லாம் பண்ணினாங்களாம்...அதனால வெடிச்சத்தம் இல்லை...குருகிராமத்திலும் இல்லை என்று என் தங்கை சொன்னாள்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, இன்னிக்குப் பூராத் தொலைக்காட்சியே பார்க்கலை. ஆகையால் செய்திகள் தெரியாது. பொதுவாகவே நாங்க பண்டிகை தினங்களில் தொலைக்காட்சிப் பக்கமே போக மாட்டோம். 96 படம் நல்லா இருக்கும்னு சொன்னாங்களேனு பார்க்க நினைச்சா வெடிச் சத்தம்!

   Delete
 15. எனக்கு முருக்கு, தேங்குழல் எல்லாம் கொஞ்சம் லேசாகச் சிவந்து இருந்தால் பிடிக்கும்...அதன் சுவை தனிதான்....உங்கள் தேங்குழல்கள் எல்லாம் சூப்பரா இருக்கு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் சிவப்பா இருக்கட்டும்னு தான் எடுத்தேன். நாளாக ஆகச் சிவந்த நிறம் மாறிடும்.

   Delete
 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பலகாரங்கள் ஈர்க்கின்றன. படங்கள் முதல் படத்தைத் தவிர மற்றவை எல்லாம் நன்றாக இருக்கின்றன

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன், உடல் நலம் தேவலையா? வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டீர்களா? கேரளாவில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறைவு தான் இல்லையா?

   Delete
 17. நான் முன்னாடியே சொல்லி இருக்கேன், போட்டோ கூட அனுப்பினேன், அந்த ஆனை கலர் புடவையை கத்தரிப்பூ கலர் ஆக்கிவிட்டீர்கள்.
  இந்த வருடம் கடலை மாவு பட்சணம் எதுவும் செய்யவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. @ ஜேகே அண்ணா, பொதுவாகவே நாம் பார்க்கும் வண்ணத்தில் எடுக்கும் படங்களில் வண்ணம் வருவதில்லை. அதுவும் புடைவைகள்! அது யானைக்கலர்னு நீங்க நினைச்சுண்டா நான் என்ன பண்ண முடியும்? மிக்சருக்குத் தேய்த்த பூந்தி கடலை மாவு தானே. ஓமப்பொடியும் கடலைமாவு தான்!

   Delete
  2. கீழே அதிரடி சொல்லி இருப்பதைப் பார்க்கவும். :))))) என் மாமியார் சிவப்பு நிறத்தை "ரோஸா" இருக்குனு சொல்வாங்க! அது போல இருக்கு நீங்க சொல்வதும்! :))))))

   Delete
 18. தீபாவளி வாழ்த்துகள்....

  பக்ஷணங்கள் கவர்கின்றன....

  ReplyDelete
 19. மிக மெதுவாக வந்து சொல்கிறேன். வாழ்த்துக்கள்.
  தீபாவளி வட மாநிலத்தில் நாளை.
  உங்கள் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  உடம்பு முடியவில்லை என்றாலும் பண்டிகைகளை விட்டுக் கொடுக்க முடியவில்லயே .
  அக்கம்பக்கத்திற்கு கொடுக்க, வீட்டுக்கு வரும் உறவு, நட்புகளுக்கு கொடுக்க என்று வேண்டி இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை கோமதி! எனக்கும் இன்னமும் நிறையப் பதிவுகள் படிக்க விட்டுப் போயிருக்கின்றன. பார்க்கணும். மெதுவா வந்தா என்ன? நேரம் கிடைக்கையில் வாங்க!

   Delete
 20. திப ஒளித்திரு நாள் நல் வாழ்த்துகள். பட்டாசு வெடிக்க தடை குறித்தெல்லாம் ஒன்றும் சொல்வதுக்கில்லை.குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதும் அதிக பாதிப்பை தான் தரும். ஒரே நேரத்தில் எல்லோருமே வெடி கொழுத்தினால் சூழல் புகைமண்டலமாகுமல்லவா?

  இந்த சட்டங்களை போட ஆலோசனை தரும் புண்ணியவான்கள் வாழட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிஷா, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. சட்டம் போட்டாலும் நீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும் இங்கே அதெல்லாம் செல்லுபடி ஆகலை! ஒரு வாரமாப் பட்டாசு சத்தம்! இன்னிக்குத் தான் இல்லை. கடந்த 2 நாட்களாகக் காது துளைக்கும் சத்தம்!

   Delete
 21. பெங்களூரில் எங்கள் பகுதியில் (ப்ரூக் ஃபீல்ட்)(வடக்கத்தியர் கலந்துகட்டியாக இருக்கிறார்கள்) இஷ்டத்துக்கும் வெடிச்சு தள்ளுறானுங்க! போலீஸாவது, கோர்ட்டாவது. சரிதான் என்று தோன்றுகிறது.

  வடநாட்டில் இன்று தீபாவளி. காற்று மாசு, கத்தரிக்கா தூசுன்னு எல்லாவற்றுக்கும் தடை போடறேன்னு கோர்ட்டு நுழஞ்சதால் டெல்லி திணறுது. கோர்ட்டுமாசு ஆகிவிட்டது! டெல்லியில் என் தம்பி பையனிடம் (10 வயது-சூரத்தனமாக வெடி வெடிப்பவன். லோகல் ஹீரோ!) வெடிவெடிச்சியாடா என்று ஃபோனில் நேற்று கேட்டேன். இல்லை என்றான் சுரத்தில்லாமல். தீபாவளிபற்றி உற்சாகமான எந்த பேச்சும் அவனிடமிருந்து இல்லை. குழந்தைகள் உலகத்திற்குள் கோணங்கிகள் செல்லப்படாது! கோர்ட்டு க்ரிமினல் கேஸ்களின் தீர்ப்புகளை வருடக்கணக்கில் ஆரப்போட்டுவிட்டு, கோவில், குழந்தைகள் விளையாட்டு என மூக்கை நுழைத்தால் அது வேறெங்கோ கொண்டுபோய்விட்டுவிடும்.

  நியூயார்க்கில், ஐநா (UN), இந்தியாவிலும், உலகெங்கிலும் வாழும் கோடானுகோடி இந்தியர்களின் பிரபல, கோலாகல விழா -தீமை ஒழிந்து, நன்மை விளையவென கொண்டாடப்படும் ஒளிவிழா - எனப் புகழ்ந்து தீபாவளிக்கென வெளியிட்ட சிறப்பு தபால்தலை இன்று 7/11/18 விற்பனைக்கு வந்துள்ளது. மோதியின் இந்தியா சர்வதேச அளவில் பிரபலமானதாக, மதிப்புள்ளதாக ஆகியிருக்கிறது. நமது நாட்டில் என்னடா என்றால்...


  இப்படி எல்லா பாரம்பரிய விஷயங்களிலும் கோர்ட் மூக்கை நுழைந்துகொண்டிருந்தால், (குறிப்பாக சமீபத்து ஐயப்பன், தீபாவளி), அதன் விளைவுகள், நாளடைவில் சமூகத்திற்கு நன்றாக அமையும் எனத் தோன்றவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன், எனக்கும் இது சரியாத் தோணலை! பண்டிகையில் மகிழ்ச்சியே அதைக் கொண்டாடும் விதத்தில் தானே இருக்கு! என்ன செய்ய முடியும்! :( ஆனால் இங்கே இன்னமும் வெடிக்ளை வெளுத்துக் கட்டுகிறார்கள். இன்னிக்கு ஒரு செய்தியில் படிச்சேன். கோயில் திருவிழாவில் ஸ்வாமி புறப்பாட்டின் போது போடும் அதிர்வேட்டுக்குக் கைது செய்தாங்களாம். எந்த ஊர்க் கோயில்னு பார்க்கலை! முன்னெல்லாம் கோயிலில் இருந்து ஸ்வாமி புறப்பட்டாச்சுன்னா முதலில் அதிர்வேட்டுத் தான் வரும்! அதன் பின்னர் நகரா முழக்கிக் கொண்டு வரும். பின்னர் மெதுவாக யானை, குதிரை, ஒட்டகங்கள்! அதன் பின்னர் சாவகாசமாகப் பிள்ளையார் வந்தால் அவர் தெரு முக்கிலே நின்னுடுவார். அப்புறமாத் தான் முக்கிய உம்மாசிங்களே வருவாங்க! இப்போல்லாம் திருவிழாவுக்கான வேட்டுக் கூடக் கேட்டுக் கொண்டு போடணும் போல! பாரம்பரியம் சிதைந்து வருகிறது! :(

   Delete
 22. ஆஆஆஆஆ கீசாக்காவுக்கு இம்முறை ரெண்டு சாறியோ...அவ்வ்வ்வ்வ்வ் அந்த பேப்பிள் கலர் சாறிதான் எனக்கு வேணும்..:)..

  உடுப்பதை, சாப்பிடுவதை விட, இப்போதெல்லாம் படம் எடுத்துப் போடுவதிலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கு.. அதிலும் நேரில் பார்ப்போரைக் காட்டிலும் புளொக்கில் வந்து பார்த்துப் போவோரோடுதான் மனம் அதிகம் ஒட்டுதலாக இருக்குது..

  //தீபாவளி கொண்டாடியாச்சா?//
  மழை விட்டாலும் தூவானம் நிற்காதெல்லோ:)..

  ReplyDelete
  Replies
  1. இஃகி, இஃகி, அதிரடி, இதுக்குத் தான் ஒழுங்காப் பழைய பதிவெல்லாம் படிக்கணும்னு! இம்முறை மட்டுமில்லை, எனக்கு நினைவு தெரிஞ்சதிலே இருந்தே தீபாவளிக்கு 2 உடைகள் தான். பாவாடை, சட்டை போடும் நாட்களில் இரண்டு செட்! தாவணி கட்ட ஆரம்பிச்சதும் அப்படியே, புடைவை கட்டும்போதும் அப்படியே. என் அப்பா வீட்டில் தீபாவளிக்கு ஒரே ஒரு புதுத்துணி மட்டும் வாங்க மாட்டாங்க! இங்கே புக்ககம் வந்து அப்படி 2 புடைவைகள் வாங்க முடியும்னு தோணலை. ஆனால் எங்க பிறந்த வீட்டுப் புடைவை வந்துடும். இப்போல்லாம் கேட்க யார் இருக்காங்க! ஆகவே 2 புடைவைதான்! காதிலே புகை வருதா? காதியிலேயும் (கதர்) 2 எடுத்திருக்கேன். தினப்படி கட்ட! அதை இங்கே வைக்கலை! :)))) ஆனால் அவை கதர் புடைவை இல்லை. கோவைக் கைத்தறிப் புடைவை! ஓ.சி. 2! :))))))

   Delete
  2. https://sivamgss.blogspot.com/2016/10/blog-post_29.html

   https://sivamgss.blogspot.com/2015/11/blog-post_10.html

   அதிரடி, சாம்பிளுக்கு ரெண்டு வருஷப் பதிவுகளோட சுட்டி கொடுத்திருக்கேன்.
   பர்ப்பிள் (பேப்பிள் க்ர்ர்ர்ர்ர்) கலர்ப் புடைவை இன்னமும் டார்க் கலரில் 2,3 இருக்கு! அதான் இம்முறை லைட் கலரா எடுத்தேன். என்ன தான் பார்த்தாலும் கட்டாத கலர்னு பார்த்தாக் கொஞ்சம் கிடைப்பது கஷ்டம் தான்! ஆனால் நான் அதிக பட்சமா அரை மணி நேரம் தான் செலவிடுவேன் புடைவை வாங்க! இம்முறை ஆட்டோக்காரரே அசந்துட்டார்! என்னங்க அதுக்குள்ளே வாங்கிட்டீங்களானு கேட்டார்.


   ஜேகே அண்ணா, 2015 ஆம் வருடம் எடுத்த சில்க் காட்டன் தான் நீங்க சொல்லும் யானைக்கலர். ஆனால் எனக்கு/எங்களுக்கு அது க்ரே கலர்! :)))))

   Delete
 23. இங்கே பெங்களூரிலும் நிறைய வெடிக்கிறார்கள். தீபாவளி சிறப்பாக நடந்ததில் மகிழ்ச்சி. உடல் நலம் தேறி விட்டதா?

  ReplyDelete