எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 08, 2018

ஆண்டாளைப் பிடிச்சுட்டேன்!


முன்னால் செல்லும் சேவை சாதிப்போர்! படம் சரியா வரலை! :( இரண்டு பக்கமும் பெரிய வண்டிகள். கிடைத்த இடுக்கில் எடுக்கும்படி இருந்தது. கொஞ்சம் முன்னாலே போனால் தெரு நடுவாக இருந்திருக்கும். வண்டிகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன. ஏதோ சாக்குனு நினைக்காதீங்க! இங்கே திருவானைக்காப் பாலம் கட்டுவதால் எல்லாப் போக்குவரத்தும் அம்மாமண்டபம் சாலை வழியாத் தான்! எப்போதும் போக்குவரத்து மும்முரம்!


முன்னெல்லாம் போலீஸ் வான் வரும். இப்போது போலீஸ்காரர்கள் ஒன்றிரண்டு நபர்கள் தான் வருகின்றனர் போலும்!தங்கக்குடத்தில் நீர் எடுத்துச் செல்லும் ஆண்டாள்


இன்னொரு நாள் படம் எடுக்கும்போது தொந்திரவில்லாமல் இருக்குமானு பார்க்கணும்! :( அந்த அதிகாலை நேரத்திலேயே கூட்டம் கூட்டமாக மக்கள் காவிரியில் குளித்துவிட்டுச் சாரி சாரியாகச் சென்று கொண்டிருந்தனர். அவங்கல்லாம் விழுந்தால் சரியா வராது. ஆகவே ரொம்பவே பார்த்து எடுக்க வேண்டி இருந்தது. 

32 comments:

 1. நல்லா இருக்கு அம்மா...

  ReplyDelete
 2. ஆண்டாளை நானும் கண்டேன்...

  ReplyDelete
 3. கடந்த மகாமகத்தின்போது பதிவுகள் எழுதியபோது புகைப்படங்கள் எடுக்க நான் அதிகம் சிரமப்பட்டேன். அதனை நினைவுபடுத்தியது இப்பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவர் ஐயா, மாமாங்கத்தின் கூட்டம் இல்லைனாலும் அதிகமான பெண்கள் குளித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தபடியால் எடுக்கக் கொஞ்சம் தயக்கம், பயம். நாம் எடுக்கப் போவது யானையைத் தான் என்றாலும் அவங்களும் படத்தில் வராமல் இருக்கணுமேனு கவலை!

   Delete
 4. ஆகா..
  தங்களால் நானும் தரிசித்தேன்.. மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை செல்வராஜூ!

   Delete
 5. எப்படியோ ஆண்டாளை படம் பிடித்து விட்டீர்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  நாங்கள் பார்க்க தந்தமைக்கு வாழ்த்துக்கள்.
  தங்ககுடம் தெரிகிறது. ஆண்டாளின் நடை வேகமும் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! இன்னொரு முறை முயன்று பார்க்கணும்!

   Delete
 6. ஆஹா !! கீதாக்காவின் சந்தோஷம் பதிவில் தெரியுது :)

  எங்களுக்கும் காணகிடைத்தது நன்றி . உங்க செல்ல ஆண்டாள் அழகா செல்கிறாள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், இன்னொரு முறை எடுக்கணும். மனசிலே திருப்தி இல்லை.

   Delete
 7. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா, இதிலே என் முயற்சி ஏதும் இல்லை. இந்த மாசம் முழுதும் ஆண்டாள் செல்வாள். என்னால் தான் பார்க்கப் போக முடியாமல் இருந்தது. :))))

   Delete
 8. கீதாக்கா ஆஹா ஆண்டாளை பிடிச்சுட்டீங்களே...சூப்பர்...நாங்களும் ஆண்டாளைப் பார்க்க முடிந்ததே அதுக்கே உங்களுக்கு நன்றி பல சொல்லணும்...ஒரே சந்தோஷம்தானே படம் எப்படி வந்தா என்ன...பரவால்ல அடுத்த முறை எடுத்தா போச்சு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இஃகி, இஃகி, அடுத்த முறை, நல்லா எடுக்கணும்னு சொல்லி மனசை சமாதானப் படுத்திக்க வேண்டியது தான்!

   Delete
 9. ஆண்டாள் என்பது யானையோ?

  ஆண்டாள் என்றதும் முதலில் ஆனை மேல் ஆண்டாள் பவனியோ என்று நினைத்தேன் அதன் பின் தான் தெரிந்தது ஆண்டாள் யானை என்பது..நன்றாகவே இருக்கிறாள்.

  துளசிதரன்.

  செல்லம் தான்! என்ன அழகு...நடை...!! உங்களுக்கு ரொம்பப் பிடித்தவளாச்சே...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன், செல்லம் தான், அழகு தான் என்றாலும் கிட்டப் போகக் கொஞ்சம் பயம் தான்! :))))

   Delete
 10. அவள் கண்ணே பேசுமே. நாலு வருஷம் முன்னால் பார்த்தது.
  இத்தனை சமத்து. சாயந்திரம் பார்த்தால் கடை வாசலில்
  நிற்கும். மிக மிக நன்றி கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரேவதி, ஆண்டாளுக்கு காஃபி, டீ, ஜூஸ் எல்லாம் பழக்கினதிலே அவளுக்கும் நீரிழிவு நோய்! :( இதைத் தவிர்த்திருக்கலாமோ? இதை வைச்சுத் தான் எஸ்.பி.சி.ஏ.காரங்க கோயில்களில் யானைகளை வைச்சுக்கக் கூடாதுனு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. நாமளும் கொஞ்சம் கவனமா இருக்கணும் இல்லையா?

   Delete
 11. நல்ல முயற்சி.....

  இந்த மாதம் முழுவதும் காவிரியிலிருந்து தான்....

  ஆண்டாள் - இந்த முறை கோவிலுக்குச் சென்றபோது பார்க்க இயலவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 12. உங்கள் கேமிராவில் சிக்கி விட்டார் ஆண்டாள்.... செல்லா? கேமிராவா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், உங்களோட இந்தக் கருத்தைக் கவனிக்கலை! காமிராவில் எடுத்தால் இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்குமோனு நினைக்கிறேன். நடைமேடையில் செல்லை வைச்சுண்டு எடுக்கையில் குறுக்கே குறுக்கே செல்லும் மனிதர்கள். :(

   Delete
 13. ஒரு படம் மட்டும் தெளிவாக இருக்கிறது. நீங்கள் துலா ஸ்னானம் செய்வதில்லையா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி! சுற்றுலா முடிஞ்சதா? இஃகி, இஃகி, இது அ.வ.சி.

   Delete
 14. படங்கள் அழகு. அவன் அருள் இருந்தால் நானும் இக்காட்சியைத் தரிசிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. இந்த மாசம் ஸ்ரீரங்கம் வந்து அம்மாமண்டபம் சாலையில் தங்கினால் பார்க்கலாம். :)))))இன்னும் ஒரு வாரம் தான் அதுவும்! அப்புறம் கார்த்திகை பிறந்தாச்சுன்னா, வழக்கம் போல் கொள்ளிடம் தான்!

   Delete
 15. கோவில் யானைகளுக்கு உணவளிப்பது (ஆர்வக் கோளாறு பக்தர்கள்) எனக்குச் சம்மதமில்லை. பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று 20 பேரன்களும் ஆளாளுக்கு ஏதேனும் உணவைக் கொடுப்பது பாட்டியின் உடல் நலத்தின்மீது கொண்ட அக்கறையா இல்லை தன் அன்பை அராஜகமாகத் தெரிவிப்பதற்காகவா?

  என்னைக் கேட்டால் யானைக்கு அருகிலேயே பெரிய உண்டியலை வைத்து, அதன் சிறப்பான பராமரிப்புக்கு பணம் போடலாம்.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. கோயிலில் மட்டுமில்லை. எங்கேயுமே காட்டு மிருகங்களுக்கு உணவளிப்பதை நிறுத்திக்கணும். அப்புறம் அதன் இயல்பான பழக்க வழக்கங்கள் அதற்கு விட்டுப் போயிடும். இதைச் சொன்னதுக்கு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். இரக்கமே இல்லை, மனசே ஆகலை என்பார்கள். இப்போ மிருகக்காட்சி சாலைகளிலும் காட்டிலாகா அதிகாரிகள் காட்டில் மிருகங்களைப் பார்க்கச் செல்லும்போதும் அறிவுறுத்துகின்றனர். இதை ஓர் சட்டமாகவே போட்டால் நல்லது.

   Delete
 16. ஆஹா ..ஆண்டாள் தரிசனம் எனக்கும் கிட்டி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனுராதா, உங்களையும் நீண்ட நாட்கள் கழிச்சு பார்க்க முடிஞ்சிருக்கு.

   Delete