இப்போ ஐயப்ப சீசன் பல விதத்திலும்! :) எங்க வீட்டிலும் எங்க பையர் மற்றும் ரங்க்ஸ் எல்லாம் சபரிமலைக்குப் போயிட்டு வந்திருக்காங்க! இந்த வருஷமும் பையர் மாலை போட்டுக்கொண்டிருக்கிறார். ஐயப்பன் அருளால் விரதங்கள் நல்லபடிப் பூர்த்தி ஆகும் என நம்புகிறேன். தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்துச் செல்ல முயன்றவர்களால் செல்ல முடியவில்லை! இது ஐயப்பன் அருள் என்று பக்தர்கள் சொல்கின்றனர். எப்படியும் சபரிமலைக்குப் போய்த் தான் தீருவோம் என்னும் பெண்ணுரிமைப் போராளிகளுக்குப் பெண்களை முன்னேற்றச் செய்யவேண்டிய வேலைகள் பல இருக்கின்றன.
கிராமப்புறப் பெண்களுக்குப் படிப்பறிவு முதல் பல விஷயங்களிலும் அவர்களை முன்னேற்றலாம். முக்கியமாய்ப் பாலியல் தொந்திரவால் பாதிக்கப்படாமல் இருக்க ஆக்கபூர்வமான தற்காப்பு நடைமுறைகளைப் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை தைரியசாலிகளாக்கலாம். இப்படி எத்தனையோ காத்துக்கிடக்கின்றன அவர்களுக்கு. அதைவிடுத்து சபரிமலைக்குத் தான் செல்லுவேன் என்று ஏன் பிடிவாதம் பிடிக்க வேண்டும்? புரியவில்லை! அவர்களுக்கோக் கடவுள் நம்பிக்கை இல்லை. அப்போது நம்புகிறவர்களின் நம்பிக்கையில் குறுக்கிடவேண்டாமே! இது ஒரு வேண்டுகோள் தான்!
சுமார் பத்து வருடங்கள் முன்னர் எழுதிய கீழ்க்கண்ட இந்தப்பதிவுகளைக் கொஞ்சம் நீக்கி, கொஞ்சம் சேர்த்து மீண்டும் வெளியிடுகிறேன்.
ஐயப்பனைக் காண வாருங்கள் - 1
ஹரியும், ஹரனும் இணைந்து பெற்ற திருக்குழந்தையான தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன் ஆகும். எப்படினு பார்ப்போமா? ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம். தர்மசாஸ்தா தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது. அவை:
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.கிரகஸ்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை செல்கையில் வீட்டின் வாசல்படியில் ஒரு தேங்காயை உடைத்துவிட்டுச் செல்வார்கள். அப்போது சாஸ்தாவை வேண்டியே தேங்காயை உடைப்பதாக ஐதிகம். சாஸ்தாவும் தன் பூதகணங்களில் ஒருவரை அந்த வீட்டிற்குக் காவலாக இருத்துவார். யாத்திரை முடிந்து திரும்பியதும் மீண்டும் அதே போல் தேங்காயை உடைத்துவிட்டு நுழைய வேண்டும். அது பூதநாதனுக்கு நன்றி தெரிவித்து உடைப்பது ஆகும்.
கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும். பூரணை, புஷ்கலையுடன் காட்சி தரும் இவரை வேண்டிப் பிரார்த்தித்தால் தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும் எனக் கூறுவார்கள். சாஸ்தா ஹரி, ஹரன் ஆகிய இருவரின் புத்திரர் என்பதால் இவருக்கு தண்டம், கத்தி, வில், சூலம், சங்கு, சக்கரம் ஆகிய அனைத்து ஆயுதங்களும் உண்டு.
பொதுவாக இறைவனுக்குத் திருக்கல்யாணமா என்று சொல்வோர் உண்டு. அது ஜீவாத்மா, பரமாத்மாவின் சங்கமத்தையே குறிக்கும். இதைச் சுட்டிக்காட்டும் விதமாகவே சபரிமலைக்குச் செல்வோர் நெய்த்தேங்காய் எடுத்துச் செல்வார்கள். இங்கே தேங்காய் உடல், உள்ளிருக்கும் நெய் ஆன்மா. தேங்காயை உடைத்து உள்ளிருக்கும் நெய்யை ஐயனுக்கு அபிஷேகம் செய்விப்பது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதைக் குறிக்கும்.
வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
ஞான சாஸ்தா; தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும். "தான்" என்னும் நிலையைத் துறந்து தன்னைச் சரணடையும் பக்தர்களுக்கு ஆத்மஞானத்தைத் தருவதால் ஞான சாஸ்தா எனப்படுகிறான்.
பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம். சாஸ்தா அவதரித்ததும் ஈசன் அவரிடம், "குழந்தாய்! நீ எங்கள் மூவரின் உருவாய் அவதரித்திருக்கிறாய்!" என்று சொல்வதாக ஸ்காந்த புராணம் தெரிவிக்கிறது. சாஸ்தா மும்மூர்த்திகளின் அம்சம் எனச் சொல்லப்படுகிறார். அதன்படி ஹரிஹர சக்திகளான லக்ஷ்மியும், துர்கையும் பூரணையாகவும் புஷ்கலையாகவும் இங்கே காண்கிறோம். பிரம்ம அம்சமாக தியானிக்கையில் பிரம்மசக்தியான சரஸ்வதி பிரபா என்னும் பெயரில் இங்கே காட்சி அளிக்கிறாள். இவர்களுக்கு ஒரு பிள்ளை இருப்பதாகவும் ஐதிகம். அந்தப்பிள்ளை ஸத்யகன் என்ற செல்லப்பிள்ளை. இன்றைக்கும் திருநெல்வேலி மாவட்டமான கல்லிடைக்குறிச்சி, போன்ற ஊர்களில் நடைபெற்று வரும் சாஸ்தா ப்ரீதிகளில் இந்தச் செல்லப்பிள்ளைக்கு ஓர் தனி இடம் உண்டு என்கின்றனர்.
மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம். யமபயத்தை வெல்லவும் இவரை வணங்குவார்கள். ஸ்காந்த மகாபுராணத்தில் இதை யமனே தன் தூதுவர்களிடம் சொல்லுவதாகச் சில ஸ்லோகங்கள் மூலம் அறிகிறோம்.
வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும். புலிப்பாலுக்காகப் பந்தள ராஜகுமாரன் சென்றதே இந்த வீரத்திருக்கோலம். இவனே பூதநாதன் எனவும் அழைக்கப்படுகிறான்.
தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். யார் இந்த மஹிஷி? எதுக்காக ஐயப்பன் அவதாரம் எடுத்து அவளை சம்ஹாரம் செய்ய வேண்டும்? கொஞ்சம் பின்னோக்கிப்
போவோமா???
******************************************************************************
பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்தாயிற்று. தேவர்களுக்குள் பங்கீடும் முடிந்தது. மோகினியாய் அவதாரம் எடுத்து, விஷ்ணுவும் தன்னோட வேலையைத் திறம்படச்
செய்தாகி விட்டது. என்றாலும் அசுரத் தனமான எண்ணங்கள் அசுரர்களிடம் இருந்து
போகவில்லை. ரம்பன், கரம்பர் என்னும் இரு அரக்கர்களில் ரம்பனின் பிள்ளையான
மஹிஷாசுரனைத் தேவி துர்க்கையாக அவதரித்து சம்ஹரித்தாள். பார்த்தான் கரம்பன்.
அவன் பெண்ணான மஹிஷியைத் தூண்டி விட்டு பிரம்மாவை நோக்கித் தவம் இருக்கச்
செய்தான். மஹிஷியும் தவம் இருந்தாள். இந்த இடத்தில் ஒரு கேள்வி அனைவருக்கும்
சாதாரணமாய் எழக் கூடியது!!
தவம் செய்யும் எல்லாருக்கும் இறைவன் காட்சி தந்து வேண்டிய வரங்களைத் தந்து விட்டு பின்னர் ஏன் மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இல்லையா?எல்லாருமே பரிட்சைக்குப் படிக்கிறோம். அனைவருமே "பிட்" அடிக்காமலும் பரிட்சை எழுதுகிறோம். நாம் எழுதியதுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் கிடைத்துத் தானே ஆகவேண்டும்? குறைத்துக் கொடுத்தால் நாம் சும்மா இருப்போமா? படித்ததை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பம், என்றாலும் பரிட்சை பொதுப்பரிட்சை. எல்லாரையும் போல்தானே மதிப்பெண்கள் எதிர்பார்ப்போம் இல்லையா? அதே தான் இங்கேயும் அரக்கக் குடும்பம் ஆனாலும் தவம் பொய்யல்லவே, பக்தி
பொய்யல்லவே, அதை உபயோகிக்கும் விதம் தானே தவறு! அதற்குத் தான் சம்ஹாரம் என்ற தண்டனை!! மஹிஷி என்ன ஆனாள் நாளை பார்க்கலாமா????
சபரி மலை ஐயப்பன் படம் எடுக்க முடியவில்லை, ஆனால் ஐயனார் படம் போட்டுள்ளேன். ஐயனாரும், ஐயப்பனும் ஒண்ணே, அதுவும் பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமி என்று சொல்பவரும், ஐயப்பனும் ஒன்றே. மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கறுப்பண்ண சாமியின் தீர்ப்பை இன்றளவும் மீறி நடப்பவர்கள் இல்லை. கறுப்பு காவல் தெய்வம் என்றும், தவறுகளைத் தண்டிக்கும் என்னும் எண்ணமும் இன்றளவும் தென்மாவட்ட மக்களிடம் அதிகமாய் உண்டு. இந்தப் பதினெட்டாம்படிக்கு உள்ள முக்கியத்துவமும், கறுப்பு தான் காவல் தெய்வமான "சாஸ்தா" "சாத்தன்" என்பதும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாய்க் கிடைக்கும்.
ஏன் வரம் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டும் என்கிற கேள்விக்கு பதில் அருமை.
ReplyDeleteஎங்கள் குலதெய்வமும் பாலசாஸ்தாதான்.
வாங்க ஸ்ரீராம், பலருக்கும் குலதெய்வம் சாஸ்தாவாக இருக்கிறார்.
Deleteபால சாஸ்தா? எந்த ஊர்?
Deleteமழுவசேரி.
Deleteஸ்ரீ ஐயப்ப தரிசனம் அருமை...
ReplyDeleteஸ்வாமியின் மகத்துவத்தை அவன் மீது பக்தி கொண்டோரால் தான் உணரமுடியும்...
அலைகடலின் ஆழத்தை அளவிட்டாலும் இறைவனின் அருமை பெருமைகளை அளவிடவே முடியாது!...
சாமியே சரணாம் ஐயப்பா!....
வாங்க துரை, ஐயப்பன் மகிமை சொல்லச் சொல்ல இனிக்கும். நல்லபடியாக இருமுடி கட்டி நீங்களும் தரிசனத்துக்குச் சென்று வர அந்த ஐயப்பனைப் பிரார்த்திக்கிறேன்.
Deleteஇன்றைய சூழலில் பெண்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது என்பதை அழகாக விவரித்தீர்கள்.
ReplyDeleteஉண்மையான பக்தர்கள் ஐதீகத்தை அவமதித்து மனிதன் (நீதிமன்றம்) சொன்னதை ஏற்கமாட்டார்கள்.
சாஸ்தாவைப்பற்றிய சில விடயங்களை அறிந்து கொண்டேன் நன்றி.
உங்களது மகன் நலமுடன் விரதமிருந்து தரிசித்து வர ஐயப்பன் துணை புரியட்டும்
சாமியே சரணம் ஐயப்பா.
வாங்க கில்லர்ஜி, பெருவாரியான மக்கள் நீதிமன்றம் சொன்னதை ஏற்காமல் போராடுகின்றனரே! பெண்கள் தங்களுக்கு முழு உரிமை அது, இதுனு சொல்லிக் கொண்டு வேண்டாத போராட்டங்களில் தான் ஈடுபடுகின்றனர்.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteஎங்களுக்கு குலதெய்வம் சாஸ்தா தான்.
பூரணை, புஷ்கலையுடன் இருப்பார் சாஸ்தா.
களங்கள் நிறைந்த இடத்தின் கோடியில் இருப்பதால் களக்கோடி சஸ்தா.
வாங்க கோமதி, களக்கோடி சாஸ்தா? அல்லது களக்காடு சாஸ்தா? என் கடைசி நாத்தனார் குடும்பத்தினருக்கும் சாஸ்தாதான் குலதெய்வம்! வருடா வருடம் சாஸ்தாப்ரீதி செய்வார்கள்.
Delete//..நம்புகிறவர்களின் நம்பிக்கையில் குறுக்கிடவேண்டாமே! //
ReplyDeleteநம்புபவர்களின் மேலே விழுந்துபிடுங்குவதுதானே நாட்டில் ‘அறிவு சீவி’களின் பொழுதுபோக்கு.. குறுக்கிடவேண்டாமே என்றால் எப்படி!
வாங்க ஏகாந்தன், அப்படிக் குறுக்கிடுபவர்கள் தாங்கள் ஏதோ முன்னேற்றப்பாதையில் செல்வதாக நினைக்கின்றனர். மற்றவர்கள் பின் தங்கி இருப்பதாகவும் சமூக முன்னெற்றத்துக்குத் தாங்கள் பாடுபடுவதாயும் அவர்கள் நினைப்பு!
Delete//நம்புபவர்களின் மேலே விழுந்துபிடுங்குவதுதானே நாட்டில் ‘அறிவு சீவி’களின் பொழுதுபோக்கு.. குறுக்கிடவேண்டாமே என்றால் எப்படி!// hifive Aekanthan sir.
Deleteஐயனார், கருப்பண்ணாசாமி தர்மஸாஸ்தா தகவல்கள் எல்லாம் புதியது. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.
ReplyDeleteதுளசிதரன், கீதா
கீதா: கீதக்கா நான் ரசித்தது வரம் தந்துட்டு ஏன் மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டும் என்பதற்கான உங்கள் பதில்...வாவ்! செம!
நன்றி துளசிதரன், ஐயப்பன் எப்போ நீங்க வரணுமோ அப்போ அவனே அழைப்பான்.
Deleteதி/கீதா, இது நான் எங்க குழந்தைகளுக்குச் சின்ன வயசில் இருந்தே சொல்லிக் கொண்டு வருவது! அவங்களுக்கு இந்த வரம் கொடுத்து அதுவும் அசுரர்களுக்கு வரம் கொடுத்துவிட்டுப் பின் ஏன் திண்டாடணும்னு தோணும்! அப்போச் சொல்லுவேன். அவங்களும் பக்தர்கள் தான்! ஆனால் தங்கள் பக்தியைப் பயன்படுத்தும் விதம் தான் மாறிவிடுகிறது என! அதற்கு உதாரணத்துக்குச் சொன்னது தான் மேலே சொன்னது!
நானும் முன்பு திருமணத்திற்கு முன்பு போயிருக்கிறேன். அப்புறம் தான் போகமுடியவில்லை...
ReplyDeleteதுளசிதரன்
விரைவில் உங்களுக்கும் சபரிமலை செல்லும் வாய்ப்புக் கிடைக்க ஐயப்பன் அருள் புரிவான்.
Deleteஸ்வாமியே சரணம் ஐயப்பா
ReplyDeleteவாங்க எல்கே, ஐயப்பன் உங்களையும் வர வைச்சுட்டான் போல!
Deleteசபரிமலைக்குச் சென்று வந்தவன் என்ற முறையில் எனது அபிப்பிராயம் அய்யப்பனைத் தொழும் 99% பக்தர்களும் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மலைக்கு வருவதை விரும்பமாட்டார்கள். கேரளத்தில் வசிக்கும் பெண்களும் இதை மதிக்கிறார்கள்.
ReplyDeleteசட்டப்பிரகாரம் நடப்பவர்களுக்கே ரோட்டில் முதல் உரிமை. அதற்காக நடு ரோட்டில் நடந்து செல்ல முடியுமா?. இதை கோர்ட்டில் கேட்டால் கோர்ட் நடப்பவர்களுக்கு நடு ரோட்டில் செல்லலாம் என்று தான் தீர்ப்பு கொடுக்கமுடியும். கோர்ட் பட்டாசு வெடிக்க தடை விதிக்கவில்லையா? அது போல் தான் இதுவும். இங்கே இருக்கும் கடவுள் மறுப்பு கம்யூனிஸ்ட் அரசு இதை வைத்து சபரிமலை வருமானத்தை குறைக்கப் பார்க்கிறது. அவ்வளவு தான்.
Jayakumar
ஆமாம், பெருவாரியான மக்கள் எதிர்ப்பதாலேயே அரசாலும் எதுவும் செய்ய முடியலை! மக்கள் எதிர்ப்பு வலுத்தும் வருகிறது. வருடக்கணக்காக சபரிமலை செல்பவர்கள் யாராக இருந்தாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டார்கள்.
Deleteவிளக்கம் ஒவ்வொன்றும் சிறப்பு அம்மா...
ReplyDeleteசுப்ரீம்கோர்ட் என்ன வேண்டுமானால் சொல்லட்டும் பாரம்பரியத்தை மதிக்கும் பெண்கள்போகாமல் இருக்கலாமே உன் சுதந்திரம் அடுத்தவன்மூக்குவரைமட்டுமே என்னும் சொல் நினைவுக்கு வருகிறது
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, பாரம்பரியத்தை மதிக்கும் பெண்கள் போகணும்னு சொல்லவே இல்லையே! அதை மதிக்காத பெண்கள் தான் கிளம்பி வருகின்றனர். நாங்க சமூகத்தை முன்னேற்றிப் பெண்ணுக்கு விடுதலை வாங்கித் தரோம்னு!
Deleteதவம், வரம் பற்றி என் கருத்தும் உங்களுடைய கருத்துதேதான்.
ReplyDeleteநன்றி பானுமதி!
Deleteஎங்கள் குல தெய்வமும் சாஸ்தாதான். ஆனால் சாஸ்தவிற்கு எட்டு அவதாரங்கள் உண்டு என்று இப்பொதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteபல குடும்பங்களுக்கும் சாஸ்தா என்னும் சாத்தன் குலதெய்வமாக இருந்து அருள் பாலிக்கிறார்.
Delete