ஒரு வாரமா கடுமையான ஜலதோஷம், மூச்சு விட முடியலை! இருமல்! அதோட நவராத்திரிக்குப் பத்து நாட்கள் முன்னாடி வந்திருந்த அக்கியின் தொந்திரவும் குறையவில்லை. அக்கி உதிர்ந்து விட்டது அப்போவே. ஏழு நாட்கள் தொடர்ந்து மாத்திரைகள். ஒரு நாளைக்கு ஐந்து முறை. அரிப்புக்குத் தனி மாத்திரை! எல்லாம் தான் சாப்பிட்டேன். புண்கள் ஆறினாலும் வலியும் குறுகுறுப்பும், சில சமயங்களில் அரிப்பும் குறையவில்லை. வலிக்குத் தனியா மறுபடியும் மருந்து சாப்பிட்டேன். என்றாலும் இன்னமும் அவ்வப்போது வலி இருக்கு! ஒரு முறை அக்கி வந்தால் அப்புறமா வராதுனு சொல்வாங்க. சொல்றாங்க! ஆனால் நாமதான் அதிசயம் ஆச்சே. நம்ம வழி எந்த வழியிலேயும் சேராதது! போன முறை அக்கி வந்தப்போ (சுமார் 30 வருஷம் முன்னர்) 1987 ஆம் ஆண்டு முதுகு முழுவதும் அக்கி தான்! மல்லாந்தும் படுக்கமுடியாது. ஒருக்களிச்சும் படுக்க முடியாது! ஒரே அவஸ்தை. குப்புறத் தான் படுத்துப்பேன். தூங்க முடியாது! தூக்கமும் வராது. வலி பொறுக்க முடியாமல் இருக்கும். கடுமையான அக்னி நக்ஷத்திரக்காலம். அதோடு தான் சுமார் 15 நபர்களுக்குச் சமைச்சு, காஃபி, டிஃபன் என எல்லாம் செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் சமாளிச்சிருக்கேன். புண்கள் உதிரவே ஒரு மாசம் ஆனது. ஒரு மாசமும் விருந்தாளிகள் இருந்தாங்க! என்றாலும் சமாளிச்சேன். எப்படியோ சமாளிச்சிருக்கேன்! எப்பூடி?ஆனால் இப்போ என்னமோ ரொம்பத் தாங்கலை. இரண்டு நாட்கள் சாதம் மட்டும் வைச்சுட்டு, வெளியே சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கினோம். இரண்டு பேருக்கும் ஒத்துக்கலை! அப்புறம் சமைக்க ஆரம்பிச்சாச்சு! அதனாலே கடந்த இரண்டு மாசமாகப் பாத்திரங்கள் கழுவ மட்டும் ஒரு பெண்மணியை உதவிக்கு வைச்சிருக்கேன். இல்லைனா இப்போ இருக்கும் ஜலதோஷம், விடாத இருமலுக்கு இன்னமும் அதிகம் ஆகும்! ரங்க்ஸ் சொல்றார் இப்போ உனக்கு வயசாயிடுச்சு இல்லையா அதான் முடியலைங்கறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருக்கு வயசாச்சு? எனக்கா! அதெல்லாம் இல்லையாக்கும். நேத்திக்குக் கூட சாயங்காலமா நான் விளக்கு வைக்கையில் எதிரே உள்ள குடியிருப்பில் உள்ள இளம்பெண், "மாமி! ஃப்ரெஷா இருக்கீங்க!" என்று பாராட்டினாள்! இஃகி, இஃகி. என் இந்த மேனி அழகுக்குக் காரணம் குப்பை மேனி! குப்பை மேனின்னா தெரியுமா? தெருக்கள், சாலைகள் ஓரத்தில் கும்பலாக முளைச்சுக் கிடக்கும். அந்தக் குப்பை மேனியோட பவர் சொல்லி முடியாது! எனக்கு எப்போ ஃபோட்டோ அலர்ஜி வந்தாலும், அல்லது துணிகள் ஒத்துக்காமல் அலர்ஜி வந்தாலும் இது தான் கைகண்ட மருந்து. ஆகவே இப்போவும் அக்கித் தழும்புகள் சரியாக வேண்டியும் அரிப்புக் குறையவும் என்ன செய்யறதுனு யோசிச்சுட்டு நம்ம ரங்க்ஸ் குப்பைமேனியும், வேப்பிலையும் எங்கிருந்தோ பொறுக்கிக் கொண்டு வந்து கொடுத்தார்! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (நீண்ட பெருமூச்சு) அம்பத்தூர் வீட்டில் தோட்டத்திலேயே குப்பைமேனி கிடைக்கும். சிறியா, பெரியா நங்கையிலிருந்து துளசி, தூதுவளை வரை எல்லாமும் கிடைக்கும். இப்போ எங்கே போறது! பொறுக்கித் தான் கொண்டு வரார். :( அதைத் தான் பச்சை மஞ்சளோடு சேர்த்து நன்கு நைசாக அரைச்சுத் தடவிக் கொண்டு குளிக்கிறேன். இதான் என் மேனி அழகுக்குக் காரணம்! இஃகி, இஃகி, இதை அந்தப் பெண்ணிடம் நான் சொல்லலை! ரகசியமா வைச்சுண்டேன். :))))
இந்த அக்கிக்கும் எனக்கும் என்னமோ தெரியலை! அப்படி ஒரு ராசி! இதோட 3 ஆம் முறையாவோ நாலாம் முறையாவோ வந்திருக்கு! சின்னக் குழந்தையா இருந்தப்போ மதுரையில் சென்ட்ரல் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு சாயபு கிட்டே மந்திரிச்சு எழுதிக் கொண்டு வருவோம். 30 வருஷம் முன்னர் 87-இல் வந்தப்போவும் குயவனிடம் எழுதினது தான். ஆனால் இங்கே இம்முறையில் எழுதிக்கப் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க! ஆகவே ஆங்கில மருந்துகள் தான்! எழுதற பாரம்பரியத்தில் பிறந்தவங்களுக்குத் தான் அதன் சூக்ஷுமம் தெரியுமாம். பூங்காவிப் பொடியை மஸ்லின் மாதிரியான துணியில் சலிச்சு அதில் என்னவோ சேர்த்து எழுதணும்னாங்க! சரி, இதிலே போய் ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு எடுக்கலை! இப்போவும் மல்லாந்து படுக்கையில் கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யுது! நாளாக ஆகச் சரியாகும்னு நினைக்கிறேன். அதுக்குள்ளே பழைய குருடி, கதவைத் திறடி னு சொல்லிட்டு வீசிங் வந்தாச்சு! எப்படியோ இத்தகைய ரசனையான விஷயங்களுக்கிடையே பொழுது போயிட்டு இருக்கு! ஒரு நாளாவது உடம்பு நல்லா இருக்குனு சொல்ல ஆசை! பார்ப்போம்! :))))
அக்கினு வெளியே யாரிடமும் சொல்லிக்கலை. மருத்துவர், என் கணவர், நான் மூணு பேருக்கு மட்டுமே தெரியும். எப்போப் பார்த்தாலும் புலம்பறோமேனு தான் எதுவும் சொல்லறதில்லை! ஆனால் இன்னிக்கு மேனி அழகைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு எல்லாத்தையும் கொட்டிட்டேன். :)))) நாளை ஒரு ஜாலியான பதிவுடன் பார்க்கலாம்! அதிலே ஒரு ஆச்சரியமும் இருக்கே!
அம்மாவும் இந்த அக்கியால் அவதிப் பட்டதுண்டு - சில வருடங்கள் முன்பு. விரைவில் பூரண குணமடைய எனது பிரார்த்தனைகள்.....
ReplyDeleteவாங்க வெங்கட், நான் அக்கி மட்டுமில்லாமல் வேனல்கட்டிகளோடும் அவதிப் பட்டிருக்கேன். :)))) என்னைப் பெண்பார்க்க மாமா வந்தப்போ முகம் முழுக்கக் கட்டிகள்! 2மணி நேரத்துக்கு ஒரு ஊசி போட்டு என் சித்தப்பா என்னைக் கொஞ்சம் பார்க்கும்படி செய்தார். இத்தனைக்கும் நான் காஸ்மெடிக் பொருட்களோ, பவுடரோ, ஸ்னோவோ பயன்படுத்தியதே இல்லை! :))))
Delete//மருத்துவர், என் கணவர், நான் மூணு பேருக்கு மட்டுமே தெரியும்//
ReplyDeleteஇப்ப உலகுக்கே தெரிஞ்சுடுத்து...
வாங்க கில்லர்ஜி, இப்போவும் சொல்லி இருக்க மாட்டேன். குப்பைமேனிக் குளியல் சொல்ல வைச்சது!
Deleteஇப்படி அழகின்ரகசியத்தைப் போட்டூ உடைக்கலாமா /இப்போ உனக்கு வயசாயிடுச்சு இல்லையா அதான் முடியலைங்கறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உண்மையைச் சொன்னால் கர்ர்ர்ர்ர் ஆ
ReplyDeleteஅதானே! உரக்க சொல்லுங்க'
Deleteஎல்லாம் நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்னும் நல்ல எண்ணம் தான் ஜிஎம்பி சார்.
Deleteதி.வா. தம்பி! எங்கேயோ புகை வாசனை வரமாதிரி இல்லை? :)))))
Deleteஉடம்புக்கு முடியலை என்பதையே நகைச்சுவையா எழுதிட்டீங்க... இன்னமும் படுத்தல்ஸ் இருக்கா? 87 ல அதோடே எப்படி 15 பேர்களுக்கு சமைத்தீர்களோ... அந்தப் பதினைந்துபேரில் யாரும் "நீ செய்ய வேண்டாம், நான் செய்யறேன்" என்று சொல்லவில்லையா?
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், இன்னமும் முதுகில் வலி இருக்கு. வலப்பாகம் முழுக்கக் கொஞ்சம் வலி, கொஞ்சம் குறுகுறுப்பான உணர்வு இருந்துட்டு இருக்கு. குப்பைமேனி பயன்பாட்டுக்கு அப்புறமாக் குறுகுறுப்புக் கொஞ்சம் குறைஞ்சிருக்கு.
Deleteநம்மால் முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. மனதளவில் இளமையாகவே இருக்கிறீர்கள். அதுதான் காரணம். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஇருக்கலாம் ஸ்ரீராம், இரு வருடங்கள் முன்னர் கை மணிக்கட்டு அருகே வலி, வீக்கம் இருந்ததில் முறுக்கே சுத்த முடியலை! கிட்டத்தட்ட அழுகையே வந்துடுச்சு! இப்போதும் தோசை வார்க்கும்போது வலக்கை தகராறு செய்யும்! :)))) அதுக்கு வேலை கொடுத்துட்டே தான் இருக்கேன்.
Deleteநாளை என்ன ஸ்பெஷல்? சமையல் பதிவு?
ReplyDeleteஹாஹாஹா ஹா சொல்லுவேனா, ரகசியம், பரம ரகசியம்!
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தீபாவளிப் பலகாரத்தில ஒண்ணு:))
Deleteஅதிரடி ஞானி, உங்களால் கூட யூகம் செய்ய முடியாதே!
Delete//ஒரு வாரமா கடுமையான ஜலதோஷம், மூச்சு விட முடியலை! இருமல்!// இங்கேயும் அதேதான் அக்கா. இன்று சென்னையில் என் சினேகிதியின் மகளின் திருமணத்திற்கு சென்றிருக்க வேண்டும்.ஹூம் :(( இப்போது எங்கே பார்த்தாலும் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் என்றுதான் காதில் விழுகிறது.
ReplyDeleteவாங்க பானுமதி, உங்கள் உடல்நிலை பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். ஒரு இடத்துக்குப் போவதென்று தீர்மானித்தால் போய்ச் சேரும் வரை நிச்சயம் சொல்ல முடியலை இப்போல்லாம். ஏதேனும் ஒரு உடம்பு படுத்தல்! அது போல் உங்களை இப்போத் தோழி வீட்டுக் கல்யாணத்தில் கலந்துக்க முடியாமல் செய்திருக்கு!
Delete//அக்கினு வெளியே யாரிடமும் சொல்லிக்கலை. மருத்துவர், என் கணவர், நான் மூணு பேருக்கு மட்டுமே தெரியும்.// அப்படியே இருக்கட்டும், நீங்கள் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை, நாங்களும் கேட்கவில்லை
ReplyDeleteஇஃகி, இஃகி, இஃகி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Deleteசிறு வயதில் வந்த போது தாங்கி கொண்டு 15 பேருக்கு சமைத்தீர்கள் இப்போது முடியவில்லை வெளியில் சாம்பார், ரசம் கூட்டு வாங்கியதால் சொல்லி இருப்பார்கள்.
ReplyDeleteவயது ஆக ஆக தாங்கும் சக்தி குறைகிறது என்பதற்காக உங்கள் கணவர் சொல்லி இருப்பார்கள்.
வயதானலும் என்றும் நான் இளமைதான் என்று சொல்வதும் அது போல் இருப்பதும்மகிழ்ச்சிதானே!
வாங்க கோமதி, தாங்கும் சக்தி இல்லை என்பதற்காகத் தான் சொன்னார். ஆனாலும் மனசு கேட்கிறதா? இந்த வயசில் நம்மை விட வலுவாக இருந்தவங்களோடு என்னை நானே ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டு மனதைச் சமாதானம் செய்து கொண்டு வேலை செய்ய ஆரம்பிச்சுடுவேன்.
Deleteஅப்போவும் மருத்துவர் மருந்து, மாத்திரைகள், தடவிக்க ஆயின்ட்மென்ட் எல்லாம் கொடுத்தார். ஆனால் வாங்கலை! எழுதினால் போதும்னு இருந்தாச்சு! காலையில் வாசல் தெளிச்சுக்குளிச்சுட்டுக் காஃபி போட்டு வைச்சுட்டு எழுதக் கிளம்பிப்போயிட்டு வந்து சமைக்க ஆரம்பிப்பேன். இப்போ எழுதாதேனு சொல்லிட்டாங்க! ஆயின்ட்மென்ட் இப்போவும் கொடுத்தாங்க! சின்ன ட்யூப். ஒரு நாளைக்கு மூணு, நாலு ஆயிடும்.
Deleteநானும் அப்படித்தான் , அத்தை, அம்மாவை நினைத்து நாட்களை ஓட்டுகிறேன், முடியாத போது .
Deleteகால்வலி, மேல்வலி என்று வலிகளுடன் வாழ்நாள் ஓடுகிறது.
வித விதமான ஆயின்ட்மென்ட்கள்.
தங்கைக்கு வந்து மிகவும் சிரமபட்டாள், மண்பானை செய்யும் இடத்தில் போய் எழுதிக் கொண்டு பின் டாக்டரிடமும் வைத்தியம் பார்த்தாள். சம்பந்திஅம்மா அமெரிக்கா போய் இருக்கார் அவர்களுக்கும் அங்கு வந்து மிகவும் சிரம பட்டு விட்டார். குணமானலும் சுருக்கி பிடித்து இழுத்து வலிக்கிறது என்கிறார் .
அம்மை போல்தாம் திரும்ப வராது என்கிறார்கள், ஆனால் திரும்ப வந்து இருக்கிறது அவர்களுக்கு உங்களைப் போல்.
கோமதி, நான் இந்த சித்த மருத்துவ மருந்துகள் சாப்பிட ஆரம்பிச்சதும் மூட்டு வலி, கால் வலி குறைஞ்சிருக்கு. அவ்வப்போது தலைகாட்டினாலும் முன்பெல்லாம் வீட்டுக்குள் நடமாடுவதே சிரமமா இருக்கும். இப்போ அப்படி இல்லை. ஆனால் இந்த அக்கி வலி தான்! படுத்தல்! அதோடு இப்போ வீசிங்!
Delete//ரங்க்ஸ் சொல்றார் இப்போ உனக்கு வயசாயிடுச்சு இல்லையா அதான் முடியலைங்கறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ReplyDeleteஇதுக்கு நீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லவேண்டாம். மாமாகிட்ட சொல்லுங்க, நான் இப்படி 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' சொன்னேன்னு.
வாங்க நெ.த. இத்தனை வருஷம் ஆயிருக்கே, அவருக்குத் தெரியாதா என்ன! :)))))
Delete//இளம்பெண், "மாமி! ஃப்ரெஷா இருக்கீங்க!" என்று பாராட்டினாள்!// - எழுதறதை முழுமையா எழுதுங்க கீசா மேடம். அதற்கப்புறம் அந்த 'இளம்பெண்', 'மாமி.. கொஞ்சம் 2 கரண்டி காஃபி பொடி கடனா தர முடியுமோ.. திடுமென்று பார்க்கிறேன் காஃபி டப்பா காலியாயிருக்கு' என்றும் சொல்லியிருப்பாரே... இல்லை, 'வேறு என்ன இலவசமா கேட்டார்'?
ReplyDeleteம்ஹூம், நீங்க சொல்வது சரியில்லையே நெ.த. இப்போல்லாம் முன்னை மாதிரி யாரும் காஃபிப் பொடி, சர்க்கரைனு கேட்டுட்டு வருவது இல்லை என்பதோடு நேரிலே பார்க்கிறச்சே பேசுவது தான்! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே அம்பத்தூரில் இருந்தப்போ திடீர்னு விருந்தாளிகள் வந்தால் பக்கத்துப் போர்ஷன் சமையலையோ, பக்கத்து வீட்டு சமையலையோ கடத்தி வந்திருப்பவர்களை உபசரித்தது உண்டு. :))))
Deleteஜாலியா நீங்க எழுதியிருந்தாலும், கஷ்டங்களோடே, நிறைய பதிவுகளை எழுதறதைப் படிக்க, பார்க்க ரொம்ப ஆச்சர்யப்படறேன்.
ReplyDeleteகுப்பைமேனி என்று சொன்னவுடனே நான் 4 வது படிக்கும்போது என் அப்பா கேட்டார்னு குப்பைமேனி செடிகளைப் பிடிங்கிக்கொண்டுவருவேன் (இலைகளை). அவர் வென்னீரில் போட்டு, அந்த நீரில் குளித்தார் என்று ஞாபகம்.
நாங்க குப்பைமேனி அதிகம் பயன்படுத்துவோம். ஆனால் சாப்பிடப் பயன்படுத்தும் அளவுக்குச் செய்யமுடியாமல் எனக்கே சரியாப் போயிடும். சின்ன வயசில் இருந்தே அம்மா எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் எண்ணெயில் கொம்பரக்கு, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு போன்றவற்றைப் போட்டுக் காய்ச்சி ஒரு பாட்டிலில் வைத்திருப்பார். அதுதான் பல வருஷங்கள் தேய்த்துக் குளிச்சிருக்கேன். சோப்பெல்லாம் இல்லை. பயத்தமாவோடு ஸ்ரீவில்லிபுத்தூர் வாசனைப்பவுடர் கலந்து தேய்ச்சுப்போம். இப்போல்லாம் அவை ஒரிஜினலா எங்கே கிடைக்குது?
Deleteஎந்த நோய் வந்தாலும் அலுக்காமல் வேலைகளைத் தொடருவதுதான்
ReplyDeleteகீதா இலக்கணம். இந்தப் பொறுமைக்கு உங்களுக்குப் பெரிய நமஸ்காரம்.
குப்பைமேனி இங்க கொஞ்சம் அனுப்புங்கோ.
நோயில்லாமல் பகவான் வைக்கட்டும். நானும் பட்டிருக்கிறேன்.
நினைக்கவே பயமாக இருக்கிறது.
வாங்க ரேவதி அதிக உடல் சூடு! எனக்கு எப்போவுமே உடம்புச் சூடு அதிகம். கயிலை மலையில் கூட வேர்க்கும் உடல்வாகு! அதே சமயம் அதிகக் குளிரும் ஒத்துக்கறதில்லை. விசித்திரமான உடல்வாகு! போர்த்திண்டால் வேர்க்கும். போர்வையை எடுத்தால் குளிரும். எப்படியோ நானும் நாட்களைக் கடத்திட்டு இருக்கேன். :))))))
Deleteஎனக்கும் அதே அதே சபாபதே!
Deleteஅதான் சொன்னேன் ரெண்டு பேரும் ஒரே ராசினு! நம்மை மாதிரியும் ஒருத்தர் இந்த பூவுலகில் உண்டுனு தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கு! :))))))
Delete///என் மேனி அழகின்///
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முதல்ல கீசாக்காவைப் பார்த்து இந்த வசனத்தை ஜொன்னது ஆரூஊஊஊஊஊஊ:)).. சொல்லிட்டு எப்படித் தப்பிப் போனாங்க?:) இல்ல காவிரில மிதக்கினமோ சொன்னவிங்க?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, அது என்ன காது, மூக்கிலிருந்து ஒரே புகை! இஃகி, இஃகி!
Delete/// ரங்க்ஸ் சொல்றார் இப்போ உனக்கு வயசாயிடுச்சு இல்லையா அதான் முடியலைங்கறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ReplyDeleteஇது மாமாவுக்கு என் பரிசு:)..
http://prankwatches.com/wp-content/uploads/2017/11/2017-Rolex-watches-for-mens.jpg
அநியாயமா இருக்கே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteரோலெக்ஸ் வாட்ச் எனக்கும் வேணும்.
Delete//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யாருக்கு வயசாச்சு? எனக்கா! அதெல்லாம் இல்லையாக்கும்.//
ReplyDeleteஆங்ங்ங்ங் அப்பூடின்னா.. நீங்க ஆண்டாளோடு அருகில் நிண்டு ஒரு செல்பி எடுத்துப் போடுங்கோ நாங்க ஜொள்றோம்ம்..
நெல்லைத்தமிழன் ஓடியாங்கோ.. நீங்கதான் லேட்டஸ்ட்டா கீசாக்காவைப் பார்த்திருக்கிறீங்க?:))... மாமா சொல்வது சரியா இல்ல கீசாக்கா சொல்வது சரியா என டீர்ப்பு ஜொள்ளுங்கோ:)).. பயப்பூடாதீங்கோ.. :) மாமாவுக்குச் சார்ப்பாச் சொன்னா.. அவருக்கு கொடுப்பதில் ஒன்று உங்களுக்கும் வரும்:))
அவர் சொன்னால் அப்புறமா நான் நெ.த. ஃபோட்டோ போட்டு அவரோட வயசு பத்தின குட்டை உடைச்சுட மாட்டேனா! :)))))))
Delete//இதான் என் மேனி அழகுக்குக் காரணம்! இஃகி, இஃகி, இதை அந்தப் பெண்ணிடம் நான் சொல்லலை! ரகசியமா வைச்சுண்டேன். :))))//
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பெரிய சிதம்பர ரகசியமாக்கும்:)).. அதுக்கு காரணம் குப்பை மேனி அல்ல.. நம்மோடு சேர்ந்து கும்மாளமிட்டுச் சிரிப்பதுதான்:))..
அதிரடி, குப்பைமேனியும் தான், கும்மாளமும் தான். இரண்டும் காரணம் தானே!
Deleteகுப்பைமேனி குளிர்ச்சியானது என நினைக்கிறேன், அதனால கூட வீசிங் வரலாம்.. அக்கி என்றால் உடம்பெல்லாம் தடிச்சு கிரந்திபோல கடிச்சு அங்கங்கு நீரும் வருமே அதுவா?
ReplyDeleteஅப்படி எனில் வேப்பங்குருத்தை/இலையை மஞ்சளோடு கலந்து அரைச்சு, பூசிக் குளிப்பார்கள். வேப்பங்குழை போட்டுப் படுத்தாலும் நல்லது... கடி குறையும்.
இஃகி, இஃகி, அதிரடி, எனக்கு ஆஸ்த்மா உண்டு பலவருடங்களாக. ஆகவே இதுக்குக் குப்பைமேனிக்கும் சம்பந்தமே இல்லை. பாவம் அது! மேலே பதிவை மறுபடி படிங்க. குப்பைமேனி+வேப்பிலை+பச்சை மஞ்சள்னு எழுதி இருக்கேனே.
Deleteஅன்னை அபிராமவல்லி அருகிருந்து ஆரோக்கியம் தந்தருள்வாளாக....
ReplyDeleteநன்றி துரை. இப்போக் கொஞ்சம் குறைஞ்சிருக்கு! இருமல் தான் துளைக்குது! அது கொஞ்சம் நாள் ஆகும்!
Deleteஉங்கள் உடம்பு தேவலையா? இந்த அக்கி கட்டி புண்ணிற்கு ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஆயுர்வேதத்தில் மருந்துகள் இருக்கின்றன. உடல் நலன் பார்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteதுளசிதரன்
புண்ணெல்லாம் ஆறிடுச்சு துளசிதரன். தழும்புகள் இருக்கு. வலி இருக்கு! முன்னைக்கு இப்போப் பரவாயில்லை!
Deleteகீதாக்கா இந்த குப்பை மேனி மிகப் பெரிய அருமருந்து....நான் 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தப்ப பக்கத்து வீட்டு பாட்டி நாங்கள் இருந்த வீட்டில் காம்பவுன்டுக்குள் குப்பை மேனி கன்னாபின்னானு வளர்ந்திருக்கும். அதைப் பறித்துத் தரச் சொல்வார் தன் முட்டிப் புண்ணுக்கு அதை அரைத்து தடவுவார்.....
ReplyDeleteகுப்பைமேனி என்ற பெயரே அதுக்கு அந்த அர்த்தம்தான்...நானும் நிறைய பயனப்டுத்தியிருக்கேன். என் அம்மாவுக்கு அக்கி வந்தப்பவும்.
இப்ப எங்காவது தோட்டம் இருந்தால் குப்பை மேனி இருக்கும். ஆனால் மண்ணே அழிந்து வரும் போது இவற்றைப் பார்ப்பது அரிதாகி இருக்கு. கேரளத்தில் எல்லார் வீடுகளிலும் (தனிவீட்டுக்காரர்களின் தோட்டத்தில்) தோட்டத்தில் பார்க்கலாம்...
நான் பாண்டிச்சேரியில் இருந்தப்ப அந்த வீடு சிறியது என்றாலும் சுற்றி மண் தான். அதில் நிறைய இருக்கும்...
அருமையான மருந்து செடி
கீதா
ஆமாம், அதுவும் தோல் நோய்க்குக் கண்கண்ட மருந்து! நான் அடிக்கடி உபயோகிப்பேன்.
Delete