மண் அகல் விளக்குகள். கீழே உட்கார்ந்து எல்லாம் செய்யும் அளவுக்கு இடவசதியும் இல்லை. உட்காரவும் முடியாது. ஆகவே ஒரு டேபிளின் மேல் கோலம் போட்டு வைச்சாச்சு. பெரிய குத்துவிளக்குகள் கீழே பலகையின் மேலே.
மற்றப் பித்தளை, வெண்கல விளக்குகள் இந்தப்பக்கம் வேறொரு ஸ்டூலில். இரண்டுக்கும் நடுவே அவல் பொரி, நெல் பொரி, அப்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பூக்கள்.
எங்க வீட்டு வாசலில் நான் போட்ட கோலத்தில் வைக்கப்பட்ட விளக்குகள். காலையிலிருந்து பெரு மழையாகத் தூறிக்கொண்டே இருந்தது. வெளித் தாழ்வாரத்தில் ஜன்னல் வழியே சாரல் வேறே இருந்தது. கோலத்தைச் சீக்கிரமாய்ப் போட்டால் தான் காயும்னு பனிரண்டரை மணிக்கே போட்டேன். அப்புறமாக் கவலை வந்து விட்டது. மழைத்தண்ணீர் பட்டு அழிஞ்சுடுமோனு! நல்ல வேளையா நான் கோலம் போட்ட சிறிது நேரத்தில் சின்னத் தூறலாக மாறி விட்டது. இப்போக் காலையிலிருந்து எட்டிப் பார்க்காமல் இருந்த சூரியன் பளிச்சென்று முகமெல்லாம் கழுவிக் கொண்டு சுடச் சுட வந்துட்டார்.
சிறப்பாகக் கொண்டாடி விட்டீர்கள். வருண பகவானும் இடைவேளை வீட்டுக் காத்து விட்டான். சிறப்பு.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், ஆமாம் , மழை வேணும், அதே சமயம் கோலம் அழிஞ்சுடுமோனு கவலை! சென்னையில் ஒரு முறை கிருஷ்ணன் பிறப்புக்குப் போட்ட கோலங்கள் எல்லாம் கொட்டிய மழையில் அழிஞ்சு போய் வீட்டுக்குள்ளும் தண்ணீர் வந்து அதிலேயே கொண்டாடினோம்.
Deleteநாங்களும் அவல்பொரி, நெல்பொரி, அப்பம், வடை ஆகியவற்றோடு கொண்டாடினோம். நேற்றும் மாலை எல்லாம் இங்கு நிறையபேர் வெடி வெடித்துக் கொண்டிருந்தார்கள்.
ReplyDeleteஸ்ரீராம், இங்கேயும் வடை உண்டு. ஆனால் மாமியார் வீட்டில் காலை பண்டிகைச் சமையல் என்பதால் காலையிலேயே வடை தட்டி விடுவோம். அப்பம் கூட மாமியார் வீட்டுப் பழக்கம் இல்லை. இந்த வருஷம் ரங்க்ஸ் பண்ணச் சொன்னார். ஆகவே பண்ணினேன்.
Deleteமாமா இனிப்பு சாப்பிடுகிறாரா? அப்பம் படம் இப்போ பார்த்தேன்.
Deleteஇந்தத் தடவை நெல் பொரில உருண்டையாவும் கோன் மாதிரியும் இங்க ஹஸ்பண்ட் பண்ணியிருந,தாள். கடைல மொறுமொறுப்பா வர, குளூகோஸ் சேர்க்கிறார்கள் போலிருக்கு.
நெ.த. பொரியையே பருப்புத் தேங்காய் போல் பிடிக்கும் வழக்கம் என் மாமியார் வீட்டிலும் உண்டு. ஆனால் என்னால் பிடிக்க முடியாமல் அப்படியே விட்டுட்டேன். :) மற்றபடி மொறுமொறுப்பாக் கடைகளில் கொடுத்தாலும் அவற்றில் வெள்ளைச் சர்க்கரைப் பாகு! வெல்லப் பாகு இல்லை! உடைக்கவே கடினமாயும் இருக்கும். நாங்க சர்க்கரைப் பாகில் செய்வதில்லை. முன்னாலெல்லாம் வாணலியில் சூடு பண்ணிப்போம். அவ்வளவு ஏன்? ராஜஸ்தானில் இருந்தப்போ எல்லாம் அவல் பொரி, நெல் பொரி போன்றவை மணல் கொண்டு வந்து இரும்பு வாணலியில் சூடு பண்ணி நான் பொரித்துத் தான் செய்திருக்கேன். சுமார் ஒன்பது வருடங்கள். ஜாம்நகரில் கொஞ்சம் கொஞ்சம் கிடைத்தது. இப்போல்லாம் மொறுமொறுப்புக்கு மைக்ரோவேவில் 40 செகன்ட் வைச்சு எடுக்கிறேன்.
Deleteநெல்லை நெல் பொரி எப்பவுமே வெல்லப் பாகில் போட்டதும் க்ரிஸ்பா இருக்காதே....அவல் பொரிதான் க்ரிஸ்பா இருக்கும். கடைல வாங்குற நெல்பொரியும் க்ரிஸ்பா இருக்காதே நெல்லை...
Deleteகீதா
படங்கள் நன்றாயிருக்கின்றன. குறிப்பக கோலமும், கோலத்தில் விளக்குகளும்.
ReplyDelete//படங்கள் நன்றாயிருக்கின்றன// ஹிஹிஹி, திடீர்னு நிபுணி ஆயிட்டேனோ? :)))))
Deleteஅல்லாம் ஒண்ணுமில்லை. ஆச தோச அப்பளம் வட ...
Delete@ வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteகார்த்திகை தீபதரிசனம் நன்று.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteகோலம், விளக்குகள் எல்லாம் அழகு.
ReplyDeleteதிருக்கார்த்திகை வாழ்த்துக்கள். எதிர்வீட்டு கோலமும் விளக்கும் அழகுதான்.
நன்றி கோமதி!
Deleteபடங்கள் சிறப்பு. திருக்கார்த்திகை வாழ்த்துகள்.
ReplyDeleteடேபிள் மேல கோலமும் விளக்குகளும் அட்டஹாசமா இருக்கு.
ReplyDeleteபொரி உருண்டை பண்ணலையா?
நான் எடுத்த மாதிரியே ராமர் படத்தை போட்டோ எடுத்திருக்கீங்களே.. பாராட்டறேன்.
அப்பம்தான் மொபைல்ல தெரியலை. அப்புறம் பார்க்கிறேன்.
உங்க பில்டிங்கும் வீடும் நல்லா இருக்கு.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்க எப்படி எடுத்தீங்கன்னே தெரியாது! என்னமோத்தான் பெரிசா அலட்டல்! :P:P:P:P
Deleteபொரி உருண்டை பிடிக்க முடியலை. கை ஒத்துழைக்கலை! போன 2016 ஆம் வருஷம் அம்பேரிக்கா போனப்போ அங்கே நல்லாப் பிடிச்சேன். இப்போ முடியலை!
கோலம்.. திருக்கோலம்...
ReplyDeleteதீபச் சுடரொளி வளரட்டும்..
திக்கெலாம் நலம் பெருகட்டும்..
தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...
நன்றி துரை!
Deleteகோலம் அழகு... தீபங்கள் அதைவிட அழகு...
ReplyDeleteதீபத்திருநாள் வாழ்த்துகள் அம்மா...
அகல் விளக்குடன் அக விளக்கும் எரியட்டும்
ReplyDeleteகோலம் விளக்கு எல்லாம் மிக அழகாக இருக்கின்றன.
ReplyDeleteதுளசிதரன்
அக்கா சூப்பரா இருக்கு சாமி சன்னதி பக்கத்துல ஸ்டூல் ல இருக்கற விளக்குகள் அப்புறம் வாசல் கோலம் ரொம்ப அழகா இருக்கு அதுல விளக்கு எல்லாம் அழகு.
கீதா