எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 08, 2006

வெற்றிகரமாக முடிந்த பயணம்-2ன் முதல் பாகம்

My thoughtsநேற்று எழுதும்போது என்ன தவறு செய்தேன் தெரியவில்லை. நான் எழுதிய பதிவின் முதல் பாகம் வரவில்லை. துவாரகா பதிவில் எலிக்குட்டியை வைத்தால் கீழே task barக்கு மேலே எல்லாமே வருகிறது. எலிக்குட்டியைக் கிளிக்கினால் தேடுதலில் போய்ப் பார்க்கச் சொல்லுகிறது. தேடு பட்டனை அழுத்தினால் this page cannot be found என்று வழக்கம்போல் வருகிறது.

போகட்டும். முதல் நாள் சுப்ரமண்யாவில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் மங்களூர் கோயில்கள் எல்லாம் பார்த்துக்கொண்டு வரும்போது டிரைவரிடம் மறுநாள் சீக்கிரம் வரும்படிக் கேட்டுக் கொண்டோம். அதன்படி திரு நசீரும் காலை 5-30 மணிக்கு வந்தார். நல்ல அருமையான காலை நேரம். சுகமான காற்று.பயணம் இனிமையாக இருந்தது. வழியில் நேத்ராவதி ஆற்றைக் கார் கடந்தது. கர்நாடகாவிற்கு எவ்வளவு இயற்கை வளங்களை ஆண்டவன் கொடுத்திருக்கிறான் என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. தண்ணீருக்குக் கூடப் பிறரிடம் கை ஏந்தும் நிலையில் இருக்கும் நாம் இருக்கும் கொஞ்ச வளங்களையும் அழித்துக் கொண்டு இருக்கிறோம். தாமிரபருணி நதியை விட்டால் தமிழ் நாட்டில் உற்பத்தி ஆகும் நதி எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நேத்ராவதி ஆற்றுக்குப்பின் 2,3 இடங்களில் back water எனப்படும் இடங்களை வண்டி கடந்து "கட்டீல்" என்னும் க்ஷேத்திரத்தை நோக்கிப் போனது.மங்களூரில் இருந்து கட்டீல் 10 அல்லது 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோயில் நந்தினி ஆற்றின் நடுவில் உள்ளது. கட்டீல் என்றால் இடுப்பு என்று அர்த்தமாம். கோவில் ஆற்றின் நடுவில் அதன் இடுப்புப் போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இந்தப்பெயர்.
ஜாபாலி முனிவரின் யாகத்திற்காக அவர் காமதேனுவின் உதவியை நாட அது தன் மகளான நந்தினியின் உதவியுடன் யாகத்தை முடிக்கச் சொல்கிறது. நந்தினியோ முனிவருக்கு உதவ மறுக்க முனிவர் அதைத் தண்ணீராக மாறும்படி சபிக்கிறார். மனம் வருந்திய நந்தினி சாபவிமோசனம் வேண்ட" நீ பூ உலகில் ஒரு நதியாக ஓடிக் கொண்டிரு. அப்போதுதேவியானவள் உன் இடுப்பில் குழந்தை வடிவில் உட்கார்ந்து கொள்ளும்போது உனக்கு சாபவிமோசனம்" என்கிறார் முனிவர். தேவியை நந்தினி வேண்ட தேவியும் அருள் பாலிக்கிறாள். குழந்தை ரூபத்தில் வரும் தேவியைத் தன் இரு கைகளாலும் எடுத்து அணைத்துத் தன் இடுப்பில் வைக்க நந்தினிக்குச் சாப விமோசனம் கிடைக்கிறது. ஆனால் பூ உலக மக்களின் நன்மைக்காக நந்தினியை அதன் சக்தியை ஆறாக மாற்றி ஓடும்படி தேவி கேட்டுக்கொள்கிறாள். தானும் இந்த வடிவிலேயே ஆற்றுக்கு நடுவில் கோயில் கொள்வதாகவும் சொல்கிறாள். அதன்படி ஏற்பட்டது தான் கட்டீல் ஸ்ரீ ஜலதுர்கா கோயில்.
கோயில் கேரள பாணியில் தான் உள்ளது. தென் கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கோயில்களும் கேரள பாணியில் தான் உள்ளது. இதையும் பரசுராம க்ஷேத்திரம் என்று தான் கூறுகிறார்கள். கோயில் மட்டுமில்லாமல் வழிபாடு முறைகளும் கேரளப்பாணிதான். நாங்கள் போன போது கோயில் ஊழியர்களையும் சில உள்ளூர் பக்தர்களையும் தவிர யாரும் இல்லை. ஆகவே தரிசனம் நன்றாக இருந்தது. எல்லாக் கோயில்களிலும் நாம் வரிசையில் வரும்போதே பிரஹாரம் சுற்றி விடும்படியான அமைப்புடன் உள்ளே விடுவதால் பிரஹாரமும் சுற்ற முடிகிறது. அம்பாள் தரிசனம் முடிந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம். அங்கேயே ஒரு ஹோட்டலில் காபி என்ற பெயரில் கொடுக்கப்பட்ட ஒரு திரவத்தைக் குடித்துவிட்டு அங்கிருந்து உடுப்பி நோக்கிப் புறப்பட்டோம். இதற்குப் பின் தான் உடுப்பி பற்றி எழுதினேன். இது என்ன தொழில் நுட்பகோளாறினாலோ பிரசுரம் ஆகவில்லை. இதைப் படித்து விட்டு உடுப்பி பற்றிப் படிக்குமாறு படிப்பவர்களை ( யாரும் இருந்தால்) கேட்டுக் கொள்கிறேன்.

10 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. arumaiyaana nadai, soll prayogam..
    durgai kovil irukkaa? next time pathukaren.
    btw, udipi history arumai. chinna payan thaane,(naan thaan) ithellam enakku theriyalai.
    so i missed these histories in my post. athuke "enna ambi, bakthi pazhameyitta"?nu ellarum kindal panitaanga.

    ReplyDelete
  3. மங்களூர் வந்துவிட்டு என்னை பார்க்காமல் போனதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. <---ஒரு internet connection ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை. என்ன நாடு இது என்று ஆற்றாமையில் கோபம் தான் வருகிறது. 2,3 நாட்களாக இது தகராறு ரொம்ப.எழுதும் எண்ணமே போய் விடுகிறது.---->

    உங்களுக்கு என்ன, உங்க சொந்த ப்லொக். நீங்க சொல்லலாம்/செய்யலாம்.நாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் அவ்வாறு சொல்ல முடியாதே

    ReplyDelete
  7. திரு சிவப்பிரகாசம்,
    சொந்த வலைப்பூ என்பதால் தான் வேலை செய்ய முடியாமல் போனால் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் என்ன Tata Indicom-ல் வேலை பார்க்கிறீர்களா? அல்லது VSNL ஆளா? எதுவாக இருந்தாலும் உங்களிடம் எனக்கு ஏற்படும் இணைய இணைப்புத் தொல்லைகளைச் சொல்ல வேண்டும்

    ReplyDelete
  8. சிவப்பிரகாசம்,
    உங்கள் வலைப்பூவின் பக்கங்களைப் பார்க்க முடியாமல் வைத்து இருக்கிறீர்கள். என் பதிலையாவது பார்ப்பீர்களா?

    ReplyDelete
  9. மயில் வருது பாருங்க.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete