My thoughts சிக்னல் இல்லை.
என்ன காரணம் என்று புரியவில்லை. இன்று modem signal கிடைக்கவில்லை. 10 நிமிஷமாகக் காத்திருக்கிறேன். இப்படித்தான் ஆகிறது. ஒன்று லிங்க் சரியாக இருப்பது இல்லை அல்லது மோடம் தகராறு. இத்தனை நிபுணத்துவம் பெற்றவர்களால் ஒரு internet connection ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை. என்ன நாடு இது என்று ஆற்றாமையில் கோபம் தான் வருகிறது. 2,3 நாட்களாக இது தகராறு ரொம்ப.எழுதும் எண்ணமே போய் விடுகிறது.
இன்று எழுதி சேமிப்பில் போட்டு விட்டுப் பின்னர் தான் பதிவில் போட வேண்டும்.
கர்நாடகாவில் உள்ள ரோடு வசதியைப் பார்த்தால் அரசாங்கம் ஜனங்களுக்கு இவ்வளவு வசதி கூடச் செய்து தருமா என்று பொறாமையாக இருக்கிறது. குஜராத்தில் இருந்த போதும், ராஜஸ்தானில் இருந்தபோதும் தண்ணீர் வசதிக்கு அரசு செய்யும் ஏற்பாடுகளைப் பார்த்தாலும் இந்த எண்ணம் தோன்றியது உண்டு. மாறி மாறி வந்த அரசுகள் எதுவும் இப்படி ஓர் அடிப்படை வசதியை நமக்குக் கொடுக்கவில்லை.கழிப்பறை வசதிகள் மற்றும் தண்ணீர் வசதிகள் எல்லாவற்றையும் பார்த்தால் நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்று புரியும். அதுவும் தர்மஸ்தலாவில் வரிசையில் நின்ற 3 மணி நேரத்தில் எத்தனை இடங்களில் பெரிய அண்டாக்களை வைத்துத் தண்ணீர் நிரப்பி 2 பெண்களைப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் இலவசம் தான். மக்களுக்கு எது அடிப்படைத்தேவையோ அதை இலவசமாகக் கொடுப்பது தான் உண்மையான அரசு.இங்கே காசு கொடுத்துப் போனால் கூட சுகாதாரம் இல்லாமல் தான் இருக்கிறது. அங்கே தண்ணீரும் இருக்கிறது. உபயோகிக்கவும் தெரிகிறது. வரிசையிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்கிறது. உண்மையில் நாம் தமிழ், இனம், மானம் என்று சொல்லிக்கொண்டு எதுவும் சாதிக்கவில்லை.மலை மேலே உயரத்தில் எல்லாம் தண்ணீர் வசதி கொண்டு போயிருக்கிறார்கள்.அதே போல மங்களூரில் போர்ட்டருக்குக் கூட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகள் தெரிந்திருப்பதால் வசதியாக உள்ளது. கோவில்களிலும் அநேகமாக எல்லாருக்கும் தமிழ் தெரிகிறது.நாம் சொல்லுவதைப் புரிந்து கொண்டு நமக்கும் எப்படியோ புரியவைத்து விடுகிறார்கள்.உள்ளூர் மக்கள் தமிழ் புரிந்து கொள்கிறார்கள். கொஞ்சம் படித்தவர்கள் என்றால்ஆங்கிலம் தெரிகிறது.மக்கள் வெகு தூரம் போய் வேலை பார்ப்பது அவ்வளவாக விரும்புவது இல்லை. அவர் அவர் ஊரிலேயே கிடைத்தால் நல்லது. அதிகம் போனால் கர்நாடகாவிற்குள்ளேயே பங்களூர், மங்களூர், மைசூர் போன்ற பெரிய ஊரில் கிடைத்தால் போதும்.வெளியில் போனால் இந்த மாதிரி ஒரு கிளைமேட்டோ, தண்ணீர் வசதியோ கிடைப்பதில் சந்தேகம் தான்.மேலும் பால் நல்ல பசுவின் பாலாக இருக்கிறது. பசும்பால் பழகியவர்களுக்கு மற்றப் பால் கொஞ்சம் கஷ்டம்தான்.நான்மதுரையில் இருக்கும்போது பசும்பாலில் பழகிவிட்டுப் பின் எருமைப்பாலுக்கு மாறும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.இப்போதும் மதுரையில் காபி, டீ, தயிர், மோர் என்றால் tasteஆக இருப்பது போல் தான் இருக்கிறது.எதுவோ எழுத ஆரம்பித்து எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறேன்.இன்னும் modem connection வரவில்லை. Tata Indicom Customer Careடன் இத்தனை சண்டை யாராவது போட்டிருப்பார்களா என்று ஆச்சரியம்தான். ஆனாலும் பொறுமையாகப் பதில் சொல்கிறார்கள்.நாம் என்ன கத்தினாலும் அவர்கள் அதைக்கேட்டுக்கொண்டு புகார் எண் தான் தர முடியும். Technical Department எப்போ முடியுமோ அப்போ தான் சரி செய்யும்.24 மணி நேரம் கொடுத்துவிட்டார்கள். எப்போது வருமோ தெரியாது.
பெங்களுர் ரோடுகளை (ஓசூர் ரோடு) வந்து பாருங்க. 100 அடிக்கு ஒரு குழி. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், பெங்களுர் ரோடுகள் நியாபகம்னு பாட்டு பாடி விடலாம்.
ReplyDeleteஎன் அம்மாவின் அம்மா (பாட்டி) ஊரு மதுரை. அம்மா வாக்கப்பட்டது நெல்லை ஜில்லா. லீவுக்கு கல்லிடையும், வழியில் மதுரையும் போவேன். மனசுல ஆச்சோ? I'm the school first in social science (History + geography).
ReplyDeleteபிரம்மாவுக்கே ப்ரணவ மந்திரம் விளக்கம் குடுத்தது முருகன் தானே! ஆகவே உங்களை மன்னிகிறேன்.
கீதா எனக்கும் இந்த ப்ரச்சினை இருந்தது. நான் மோடம் மாற்றி விட்டேன்.
ReplyDeleteஎன் மனசில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டீர்கள். கர்னாடகா பயணம் இனிதாக அமைந்தது பற்றீ நிரைய மகிழ்ச்சி.நாம் எவ்வளவு புலம்பினாலும் யாரும் கேட்பார்கள் என்றா நினைக்கிறீகள்? எத்தனை ஊர்களில் பயணியர் விடுதிகள் ஆரம்பித்து,நமது பயணம் முடியும் வரை சந்திக்கும் தொந்தரவு சொல்லி முடியாது.வி.வி.ஐ.பி ஆக இருந்தால் நல்ல சௌகர்யம் கிடைக்கும்.நல்ல இடஙகளும் இருக்கின்றன.எந்த விதத்திலும் நாம் தனி இடம்தான்.
கீதா,
ReplyDeleteஅடே, கோச்சுக்கிட்டீங்களா?
நான் ஊருக்கு முந்தி எழுதுடறேன். அதே போல ஊருக்கு முந்திப் படுக்கவும் போயிடறேன். இந்தக் கதை இப்ப என்னத்துக்கா?
அதான் நான் எழும்போது நீங்கெல்லாம் அர்த்தராத்திரி. அப்புறம் நீங்க எழூதிப் போஸ்ட் செய்யறப்ப எனக்கு அர்த்தராத்திரி.
இதுலே தமிழ்மணம் முதல் பக்கத்துலே பின்னூட்டங்கள் வந்த லிஸ்ட் மட்டும் அப்பப்பப் பார்த்துடுவேன். ஆனா உங்க போஸ்டிங்ஸ்
எல்லாம் 'சமீபத்துலே அளிக்கப்பட்ட இடுகைகள்' ன்னு ஒண்ணொண்ணா வந்து காணாமப் போயிருதுல்லே, அதுலே
'மிஸ்' ஆகிப்போயிடுது.
இப்பப் புரிஞ்சதா என்னோட ப்ராப்ளம்?
இனிமேக் கவனமா இருந்தாப் போகுது.
சந்தோஷமா? எங்கே மூஞ்சியை 'உம்'ன்னு வச்சுக்காம கொஞ்சம் சிரிங்க பாக்கலாம்.
ம்ம்ம்ம் அப்படித்தான்...:-)))))))))))))))))))))
கீதா அவர்களே,
ReplyDeleteஏன் தலைப்பே இல்லாது பதிவு போடுகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரொம்ப நன்றி துளசி,
ReplyDeleteடோண்டு சார், தலைப்புப் போட்டு எழுதும் அளவுக்கு என்ன இலக்கியமா என்ற எண்ணம்தான். இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்.
நீங்க துளசிகிட்ட புலம்பனதை பார்த்துட்டு உங்க வீட்டுக்கு வந்து பார்க்கலாமுன்னா, லிங்க் பிராபளம்,
ReplyDelete//பசும்பால் பழகியவர்களுக்கு மற்றப் பால் கொஞ்சம் கஷ்டம்தான்.நான்மதுரையில் இருக்கும்போது பசும்பாலில் பழகிவிட்டுப் பின் எருமைப்பாலுக்கு மாறும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.// டில்லி எருமை பால்ல காலி குடிச்சிருக்கீங்களா, அப்புறம் ராஜஸ்தான்ல ஒட்டகபால்ல காபி குடிச்சிருக்கீங்களா, ஏன் கேட்கிறேன்னா, நான் குடிச்சிருக்கிறேன், நீங்க சொன்ன மாதிரி பசும்பால் டேஸ்ட் வராது;)
வெளிகண்டநாதரே,
ReplyDeleteவருக, வருக, எல்லாம் ஒரு செலவில்லாத விளம்பரம்தான். புலம்பல் எல்லாம் இல்லை. அநுதாப அலை அடிக்கும் இல்ல, அதான்.
நான் டில்லி எருமைப்பால் மற்றும் ராஜஸ்தானிலும் முறையே எருமை மற்றும் பசும்பால் தான் குடித்து இருக்கிறேன். நீங்கள் கேட்டது போல எனக்குத் தெரிந்து அங்கெ ஒட்டகப் பால் விற்பதாகத் தெரியவில்லை. 7 வருஷம் ராஜஸ்தானில் இருந்தபோதும் 6 வருஷம் குஜராத்தில் இருந்தபோதும் அப்படித்தான். இதை நீங்கள் கிண்டல் செய்யக்கேட்டிருந்தாலும் நான் உண்மைதான் எழுதி உள்ளேன்.
குஜராத், ராஜஸ்தானில், ஒட்டக பாலை எருமை பாலோடு கலப்பதாக கேள்வி;)
ReplyDeleteநாங்கள் அநேகமாக மாடு கற்க்கும்போதே அந்த இடத்திற்கே போய்த் தான் பாலைப் பெறுவது வழக்கம். மேலும் நீங்கள் நினக்கும்படி அங்கே எல்லாம் மக்கள் நடந்து கொள்வதும் இல்லை.
ReplyDelete