எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 30, 2006

52. சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம்(தொடர்ச்சி)

"கிக்கா" என்று சொல்லப்படும் ரிஷ்யசிருங்கர் மலையில் இருந்து கிளம்பி நாங்கள் வந்து மடத்தின் அறையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டோம். பிறகு மறுபடி சாயந்திரம் துங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள சில நதிகள் இத்தனை சுத்தமாக இருக்குமா என்று எண்ணம் தோன்றியது. ஒரு காலத்தில் மிகச் சுத்தமான நதியாக இருந்த கூவம் நதி இப்போது சாக்கடையாக மாறி விட்டது. அது போலப் பெரிய நகரங்களில். எனக்குத் தெரிந்து மதுரை மேம்பாலத்தின் இரண்டு கரைகளும் எவ்வளவு சுருங்கி இருக்கிறது. அதனால் தான் நமக்கு இறைவன் தண்ணீருக்குக் கை ஏந்தும்படி வைத்திருக்கறான் போலும். எஙகு சென்றாலும் இந்த எண்ணம் தவிர்க்க முடிவது இல்லை. மறு நாள் காலை சிருங்கேரிக்குக் கிழக்கே உள்ள அன்னபூரணி கோயில் இருக்கும் ஹொரநாடு என்ற ஊர் போகக் கிளமபினோம். கார் வைத்துக் கொண்டு போகும்படி சிலர் சொன்னாலும் பஸ்சில் போக ஆசைப்பட்டு பஸ்சில் போனோம். அதிகம் மலைப் பிரதேசங்களில் போக வேண்டி இருப்பதால் நம்ம ஊர் மினி பஸ்ஸை விடச் சிறியதுதான் அந்த பஸ். ஆனால் பஸ்ஸின் நடத்துனர் எங்களுக்கு உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த மனிதாபிமான் செய்கை அங்கே எல்லா ஊர்களிலும் காணப்பட்டது. ஊருக்குப் புதியவர் என்றால் முதல் மரியாதை கொடுக்கிறார்கள். பஸ் முழுக்க முழுக்க மலை மேலேயே போகிறது. நல்ல உயரம் 8,000/ அடியில் இருந்து 10,000/அடி வரை இருக்கும்.கொண்டை ஊசி வளைவுகள் 15-க்கும் மேலே. 10 அல்லது 20 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போக முடியாது. அநேகமாக மலைவாழ் மக்களுக்கு இது ரொம்ப வசதியாக இருப்பதால் எல்லா ஊர்களிலும் நின்று ஏற்றிக் கொண்டே போகிறது. மலைவாழ்மக்கள் என்றால் பழங்குடியினர் என்று நினைக்க வேண்டாம். எல்லா ஊர்களிலும் "நவோதயா" பள்ளிகள் காணப்பட்டன. நாம் எதை இழந்தோம் என்று நமக்கு இன்னும் புரியவில்லை. மத்தியானம் 12 மணி அளவில் ஊர் வந்தது. மிகவும் கஷ்டமான பிரயாணம்.கோவில் மூடி இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் திறந்து இருந்தது.வாயிலில் இருந்தே அம்மனைப் பார்க்க முடிகிறது. ஆனால் கோவில் ஊழியர்கள் கிட்டே போய்ப் பார்க்கச் சொல்லக் கிட்டே போனோம். தங்க அன்னபூரணி நின்றகோ்லத்தில் கையில் அன்னக் கரண்டியுடன் உலகுக்கே உணவு அளிக்கத் தயாராக இருக்கிறாள். அவளின் அந்தக் கோலத்தைப் பார்த்ததும் நம் பசியே போய் விடுகிறது.நிதானமாக ஒரு 10 நிமிஷம் அம்மன் தரிசன்ம் நடை பெற்றதும் பிரசாதம் வாங்கிக்கொண்டோம். பின் கோவில் ஊழியரிடம் கேட்டதில் சாப்பாடு வெளியில் சரியான ஹோட்டல்கள் இல்லை என்றும் கோயிலில் போடுவார்கள் என்றும் சொல்லவே, அங்கே போய்ச் சாப்பிட்டு விட்டு வந்தோம். திரும்ப நாங்கள் வந்த அதே மாதிரி பஸ் தயாராக இருக்கவே அதிலேயே போக முடிவு செய்தோம். அஙகே ஒரு கடையில் ஏலக்காய், கிராம்பு, காபிப்பவுடர், டீத்தூள் போன்றவை வாங்கிக் கொண்டோம்.பிறகு பஸ்ஸில் ஏறித் திரும்ப சிருங்கேரி வந்தோம். சிருங்கேரியில் நண்பர் ஒருவர் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனின் நிர்மால்ய தரிசனத்தைப் பற்றிச் சொல்ல மீண்டும் உடுப்பி போக ஆசை வந்தது. ஆகவே மறுபடி உடுப்பி போக நினத்தோம். அதற்குள் ஒரு முறை மறுபடி மஹாஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. மறுநாள் காலை வேளையில் போக முடிவு செய்தோம்.

9 comments:

  1. கடவுளே, கடவுளே, இந்த ப்ளாக்கருக்கு என்ன ஆச்சு?could not connect to blogger.com என்று வந்தது. வெளியிட முடியாது என்று மறுத்தது உடனே வந்து விட்டதே, இது என்னுடைய கணினி தானா? அல்லது ஏதாவது அதிசய பூதம் வந்து விட்டதா? இது சோதனைப் பின்னூட்டம். ரெடி, ஸ்டார்ட், வருதா?

    ReplyDelete
  2. வெற்றி, வெற்றி, வெற்றிக்கு மேல் வெற்றி, அது மறு்க்கும்போது நாம் வெளியீடு செய்யவேண்டுமா? இது என்ன புது மாதிரி? நாளை பார்ப்போம். என்னைப் பைத்தியமாக ஆக்குகிறதே

    ReplyDelete
  3. //மதுரை மேம்பாலத்தின் இரண்டு கரைகளும் எவ்வளவு சுருங்கி இருக்கிறது.//


    இப்ப கரையோட இரண்டு பக்கமும் பிளாக் டாப் ரோடு வேற இருக்கு பார்க்கலயா....( விட்டா ஆத்துக்குள்ளயும் ரோடு வந்த்துடும்)

    ReplyDelete
  4. எங்கே, மதுரையைப் பார்த்தாலே மன்சை வேதனை பண்ணுதே? முன்னேற்றம் என்பது வாழ்வின் அழகை அழிக்கும் ஒன்றாக இருக்குமா? இப்போ எல்லாம் அந்தப் பக்கம் ஜாஸ்தி போறது இல்லை.பை-பாஸ் ரோடும், மீனாட்சி கோவிலும், ரெயில்வே ஸ்டேஷனும் தான். என் மதுரையும் சுருங்கி விட்டது.

    ReplyDelete
  5. maduraila ethanai bus stand & ethanai palamnsu quizee vaikallam..

    btw, another good post...

    ReplyDelete
  6. ஸிருங்கேரி ஆச்சாரியார்தான் எனக்கும் குரு. போனதில்லை.

    அனகோண்டா படத்தில் காட்டப்படும் இயற்கைக் காட்ஷிகளுக்காகவே அந்த படத்தை எங்க ஓர் கொட்டாயில் மூன்று முறை பார்த்தவன் நான்.

    ஸிருங்கேரி போனால் அந்த இடத்தின் அழகில் மயங்கி திரும்பி வரமாட்டேன். ப்ரக்ருதியும், ஸரஸ்வதியும் மயக்கி விடுவார்கள்.

    ReplyDelete
  7. ஆமாங்க, கீதா வர வர இந்த பிளாக்கர் ரொம்ப தான் படுத்தி எடுக்குது.

    could not connect to blogger.com --- if it comes like this there is some problem in net connection

    ReplyDelete
  8. ரொம்ப நன்றி,Muse, என் வலைப்பூவிற்கு முதன் முதல் வந்ததற்கு.

    ReplyDelete
  9. என்ன சிவா, இப்போது புரிந்ததா? ப்ளாக்கர் சொதப்பல் என்றால் என்ன என்று. அதனால் தான் நான் நிரந்தரத் தலைவலி. நீங்கள் வெறும் உறுப்பினர்.

    ReplyDelete